ரொமான்ஸ் ரகசியங்கள்!
பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர்.அகிலன் சித்தார்த்
லதா - சஷாங் ஜோடி, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்களின் ஃப்ளாஷ்பேக் காதலைப் பற்றி பரஸ்பரம் பிரஸ்தாபித்து, திருமணமே நின்று போன கதையை, கடந்த இதழில் பார்த்தோம். அதன் மூலம் வரும் நீதி... சில உண்மைகளைக் கல்லறைகளைத் தோண்டி வெளியெடுப்பதில் பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்!

'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன.
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
சரி, மேட்டருக்கு வருவோம். ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது.
உதாரணமாக... நித்யாவின் கதை. சென்னையைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் அவள். ஒரே ஒரு ஹால், சமையலறை கொண்ட சிறிய வீடு. அப்பா அரசாங்க வேலையில் குமாஸ்தா. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் எளிய ஹவுஸ் வொய்ஃப். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. கம்ப்யூட்டர் அறிவில் தேர்வுபெற்று ஒரு நல்ல வேலையில் சேர்ந்தாள் நித்யா.
ரவிச்சந்திரன் என்றொரு வாலிபன் அவள் வாழ்வில் வந்தான். ஆரம்பத்தில் மிகவும் பெருந்தன்மையான ஆண்மகன் போன்ற தோற்றத்தைக் காண்பித்தான். காதல் கவிதைகள் பேசினான். தன் ரத்தத்தால் காதல் கடிதங்கள் எழுதினான். நித்யாவும் காதல் வயப்பட்டாள். ரிட்டையர்ட் ஆகிவிட்ட நிலையில், நித்யாவின் வருமானத்தை மனதில் வைத்து குடும்பத்தைக் கொஞ்சமேனும் கரை சேர்த்துவிடலாம் என்று நினைத்த தந்தை, தடுமாறினார். ஆனாலும், மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கடமை என்பதை உணர்ந்து, ஏகப்பட்ட கடன் வாங்கி அவள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தினார்.
பெற்றோரின் விருப்பத்துக்காக வரதட் சணை பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரனை ஜீரணிக்க முடியவில்லை. என்றாலும், பொறுத்துக் கொண்ட நித்யாவுக்கு, ரவிச்சந்திரனின் முழு நிஜமுகம் பிற்பாடு தான் மெள்ள தெரிய ஆரம்பித்தது. 'நான், என் குடும்பம், என் அப்பா, என் அம்மா’ இதுதான் அவனுடைய எளிமையான ஃபிலாசபி. நித்யாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக என்றுமே அவன் ஏற்றுக் கொண்டதில்லை. தவிர்க்க முடியாது சந்திக்க நேரிட்டால்... போனால் போகிறது என்கிற தொனியிலேயே பேசி கட் செய்வான்.
கணவனின் குணம் கண்டு அதிர்ந்தாலும், எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டாள் நித்யா. தன் தங்கைகளின் பள்ளிக்கூட ஃபீஸுக்குக்கூட கணவனுக்குத் தெரிந்து உதவ முடியவில்லையே என்று நொந்து கொண்டவள், ஆபீஸில் லோன் போட்டு ஈடு செய்தாள். கணவனுக்குத் தெரிந்தால் ரணகளமாகும் என்பதால்... மறைத்தாள். இந்த நிகழ்வுகள் நீண்ட தொடர்கதை ஆகிவிட்டது. இன்று தன் குடும்பத்துக்குப் பல வகைகளில் உதவி செய்கிறாள் நித்யா. தன் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொள்கிறாள். ஆனால், எதுவுமே கணவனுக்குத் தெரியாமல்தான்.
இதையெல்லாம் 'பொய்' என்று சொல்வதா? 'பொய்' என்கிற வார்த்தை இதற்குப் பொருந்துமா? இல்லவே இல்லை. பெருந்தன்மையற்ற ஒரு கணவன் வாய்த்ததால், எதற்காக இப்படிப்பட்ட உன்னதமான விஷயங்களை அவனிடம் சொல்லி தன் குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற புரிதலால் நித்யா எடுத்த முடிவு இது.
அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற இத்தகைய களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ஜெயலலிதா நிம்மதியாகப் பதுங்கிக்கொண்ட ரோலை இப்போது விஜயகாந்த் கைப்பற்றிவிட்டதாகவே தெரிகிறது. எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், அது முதலமைச்சருக்கு இணை யான பொறுப்பு. சபையில் யார் பேசும் போதும் முதல்வர் குறுக்கிடலாம். முதல்வர் எழுந்தால், பேசிக்கொண்டு இருப்பவர் உடனடியாக உட்கார வேண்டும். அதைப் போலத்தான் எதிர்க் கட்சித் தலைவரும் யார் பேசும்போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால், மற்றவர்கள் உட்கார்ந்து விடுவார்கள். இன்னும் சொன்னால், முதல்வர் பேசும்போதும் தயக்கம் இல்லா மல் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்கக்கூடிய அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு. அவ்வளவு அதிகாரம் பொருந்திய பதவியை விஜயகாந்த் 'சும்மா’ வைத்திருப் பதன் சூட்சுமம் என்ன?
தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் கொந்தளித்தன. அ.தி.மு.க. கூட்டணியில் அசைக்க முடியாத வகையில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போராட்டத்தைத் தயக்கம் இல்லாமல் முன்னெடுத்தது. ஆனால், அப்போதும் விஜயகாந்த் மௌனமாகவே இருந்தார். கேப்டன் டி.வி-யின் மெயிலில் மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில்கூட, 'நாங்கள் கேட்டது குதிரை. கருணாநிதி தந்தது கழுதை.’ என்று மையமாகப் பதில் சொன்னார். சமச்சீர்க் கல்வியை அவர் ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது அந்தப் பதிலில்.
சொல்கிறார்கள் சிலர். பிளான் என்கிறார்கள் சிலர். எதுவாக இருந்தாலும் விஜயகாந்த்துக்கு நன்மைதான்'' என்றும் அவரது மனம் அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.

அவற்றைத் தரவல்லதுதான் மனவளக்கலைப் பயிற்சி. எத்தைத் தின்றால், பித்தம் தெளியும் எனத் தவிப்பவர்களுக்கான பயிற்சி இது! இந்தப் பயிற்சியை மேற்கொண்டால், உடலும் மனமும் தக்கையாகும்; வறட்டுப் பிடிவாதங்களும் முரட்டுக் குணங்களும் காணாமல் போகும். பிடிவாதம் இல்லையெனில், அங்கே விட்டுக்கொடுத்தல் வந்துவிடும். ஈகோ இல்லாத இடத்தில், அமைதியின் ஆட்சி சிறப்புற நடைபெறும். 'மனமது செம்மையானால்... மந்திரம் சொல்ல வேண்டாம்’ என்றாரே திருமூலர். மனத்தை மயிலிறகென வைத்துக் கொண்டால், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. மகிழ்ச்சியில் உள்ளம் நிறைந்திருந்தால், அந்த மகிழ்ச்சி வீடெல்லாம் நிறைந்திருக்கும். அதற்கான அனைத்தையும் வழங்கவல்லது, இந்த மனவளக்கலைப் பயிற்சி.
கோபால கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
''உலகத்தில் தங்கம் வெட்டி எடுப் பது குறைந்துகொண்டு வருவதும், பூமிக்கு அடியில் தங்க இருப்பு குறைவாக இருப்பதும் முக்கியக் காரணங்கள். பூமிக்குள் இருந்து இதுவரை சுமார் 1,70,000 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தோராயமான மதிப்பு 7.2 டிரில்லியன் (டிரில்லியன் என்பது லட்சம் கோடி) அமெரிக்க டாலர். ஆனால், உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்ஸிகள், நிறுவனப் பங்குகள், சேமிப்புகள், டெபாசிட்கள் போன்றவற்றின் மதிப்பு சுமார் 60 டிரில்லியன் டாலர். இது தங்கத்தின் மதிப்பைவிட சுமார் 8.5 மடங்கு அதிகம். அதாவது, உலக அளவில் மக்களி டம் அதிகப் பணம் இருக்கிறது. ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது என்பதால், அவர்கள் என்ன விலை என்றாலும் அதை வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள். இதனால்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை தங்கமாகப் பதுக்குகிறார்கள். இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் 1,500 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
உலக அளவில் பங்குச் சந்தை கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை கொடுத்த வருமானம் மைனஸ் 8 சதவிகிதம். அதே நேரத்தில், இதே காலத்தில் தங்கம் கொடுத்திருக்கும் வருமானம் 42 சதவிகிதம்.
ருக்கார். தா.கி. கொலை வழக்கில் எஸ்ஸார் உள்ளே இருந்தப்ப, அழகிரி வீட்டில் பாதுகாப்பைக் கவனித்த 'அட்டாக்’ பாண்டி, எஸ்ஸார் தரப்பினருக்கு எதிரான விஷயங்களை அழகிரி குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்தார். இதுவும் இன்னும் சில விஷயங்களுமாகச் சேர்ந்து அட்டாக்குக்கும் எஸ்ஸாருக்கும் இடையில் பகை ஏற்பட்டது.
இருந்ததால் தனக்கு நெருக்கமான உளவு அதிகாரியின் மூலமாக பாண்டியராஜனை தூக்கிட்டுப்போய் புதூரில் ரெண்டு நாள் அடைத்து வைத்தார்கள். அடிக்கவும் செய்தார்கள். அப்படியும் விடாம, 'இவன் கதைய முடிச்சாத்தான் அட்டாக் பயப்படுவான்’ன்னு கோபிக்கு சிக்னல் குடுத்துருக்காங்க என்பதாக எங்கள் விசாரணை தகவல் சொல்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த கோபி கோஷ்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்தல் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்த விவகாரத்தை வெச்சு, பாண்டியராஜனை அடிச்சு ரோட்ல போட்டு, காரை ஏத்திக் கொன்னுருக்கு. விஷயம் தெரிஞ்சு, எல்லாரையும் அப்பவே மதுரை பெரிய இடத்துல சத்தம் போட்டிருக்காங்க. அப்ப, 'எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்’னு சொல்லி தைரியம் கொடுத்த பொட்டு, அந்தக் கொலையை விபத்தா முடிச்சிருக்கார். அவனியாபுரம் இன்ஸ்பெக்டரா இருந்தவரும் இதுக்கு உடந்தை. விசாரணையில், கோபியே இதை எல்லாம் சொன்னான். பக்காவா வீடியோ எடுத்துருக்கோம்!'' என்று போலீஸ் தரப்பு சொல்லி அதிர்ச்சியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. அவர்களே தொடர்ந்து பேசினர்...
சொல்லுங்கம்மா’ன்னு பொட்டுவோட அம்மா காலில் விழுந்ததாலதான் மன்னனை மட்டும் அழகிரி பக்கத்துலயே விட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க கத்தி எடுத்துட்டு சுத்துவோம். ஆனா, அதை எடுக்காமலே காரியங்களை செய்வான் பொட்டு. இல்லாட்டி, இதுவரைக்கும் பிரச்னையே வராம இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’ன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்ஸார் கோபி. பாண்டியராஜன் கொலைக்குப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் எட்டு பேர் கை மாறி, திருச்சியில இருந்துச்சு. அதையும் கோபியோட கடிதத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சு இருக்கோம்...'' என்று முடித்தனர்.
கார்த்திகேயன்கிட்ட வருத்தப்பட்ட அழகிரி, தன் விசுவாசிகளை 'கோபியோட சகவாசம் வெச்சுக்க வேணாம்’னு சொல்லிட்டு, கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்சாரு.
விசாரணையின்போது, மதுரையை மையப்படுத்தி நடந்த கொலைகள், அடிதடிகள், கட்டப் பஞ்சாயத்துகள், பேரங்கள் உள்ளிட்டவை குறித்து ஒரு பெரிய பட்டியலே கொடுத்த கோபி, யாரைப் பிடித்தால் எதைக் கறக்கலாம் என்பதையும் போலீஸுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாராம். இதை வைத்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறது போலீஸ்.
அமைச்சர் அர்ஜுன்சிங், அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கை’யின்படி, புதிய பாடத்திட்டம் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 