30 வகை தயிர் -மோர் ரெசிபி !
நாக்குக்கு ருசியாக என்பதோடு... உடலுக்குப் பொருத்தமானதாகவும் சாப் பாடு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமல்லவா! அதனால், அதீத குளிர்ச்சி தேவைப்படும் இந்தக் கோடைக்கேற்ப 30 வகை தயிர்-மோர் ரெசிபிகளை இங்கே சமைத்திருக்கிறார் 'சமையல் கலை வித்தகி' கிருஷ்ண குமாரி ஜெயக்குமார்!ருசியாக சமைப்பதோடு, அதை ரசனையுடன் பரிமாறுவதிலும்தான் இருக்கிறது நளபாக சூட்சமம். அந்த வகையில், நாவில் நீர் ஊறவைக்கும் இந்த 30 வகை ரெசிபிகளை இங்கே அழகாக அலங்கரித்திருக்கிறார் 'செஃப்' ரஜினி (சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், திருமண வைபவங்கள், விழாக்கள், வீட்டு விசேஷங்களில் காய்கறி மற்றும் பழங்களை அலங் கரித்துத் தருவதோடு, காய்கறி, பழங்கள், ஐஸ், பட்டர், சாக்லேட் மற்றும் தெர்மகோலில் கார்விங் செய்வது பற்றிய பயிற்சியையும் கொடுக்கிறார்).
இருவரின் கை வண்ணத்தில் இங்கே மிளிரும் தயிர்-மோர் ரெசிபி கள், 'ஜில்லுனு ஒரு கோடைக்காலத்தை' உங்களுக்கு உரித்தாக்கட்டும்!
எப்போதும் காரசாரமாக சாப்பிடுபவர் கள், இந்த சீஸனில் காரத்தை முற்றிலும் குறைத்துக் கொள்வது நல்லது.வெங்காயம் உடலைக் குளிர்ச்சியாக் கும் தன்மை கொண்டது.
வெயில் காரணமாக நாம் அதிக அளவில் இழக்கும் சக்தியை திரும்பவும் மீட்டுத் தருவதில் எலுமிச்சைக்கு நிகர் இல்லை.
தக்காளி ஜூஸில் சிறிது தேன் கலந்து பருகும்போது வெயிலால் உண்டான உடல் உஷ்ணம் தணியும்.
கோடை வெயிலில் தவிர்க்க முடியாமல் சுற்ற வேண்டியிருந்தால்.. கையோடு இஞ்சியை அரைத்து சாறெடுத்து சிறிது தேன், தண்ணீர் ஊற்றி கலந்து பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள். பயணத்துக்கு ஏற்ற பானம் இது.
சூரிய உஷ்ணத்தால் உடலிலிருந்து வெளியேறக்கூடிய தாது உப்பு மற்றும் சக்தியை ஈடு செய்ய உதவுகிறது வெள்ளரிக்காய்.
உடல் சீதோஷணத்தை சீராக வைத்துக் கொள்வதில் வாழைப்பழத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
உடல் உஷ்ணத்தையும், தாகத்தையும் தணித்து, வயிற்றைக் குளுமையாக்கும் தர்பூசணி, கண்ணுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும்.
அதிக அளவு தாது உப்புக்கள் நிறைந்த இளநீர், தாகத்தை தணிப்ப துடன், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
ஸ்ரீகண்ட்

செய்முறை: தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தண்ணீர் வடியும் வகையில் 2 மணி நேரம் வைக்கவும். தண்ணீர் முழுவதுமாக வடிந்ததும் தயிரை ஒரு பாத்திரத்தில் போடவும். இதில் பொடித்த சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
பூசணி - தயிர் பச்சடி

செய்முறை: பூசணிக்காயைத் துருவி நீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூசணித் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாய், சீரகம் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். வதக்கிய பூசணியை, தயிர் கலவையுடன் கலந்து பரிமாறவும்.
மின்ட் கூலர்

செய்முறை: புதினா, இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, மோரில் கலக்கவும். நன்றாக குளிர வைத்துப் பரிமாறவும்.
மாம்பழ ஸ்மூத்தி

செய்முறை: மாம்பழத்தை நறுக்கி துண்டுகளாக்கவும். கொஞ்சம் துண்டுகளை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை கூழாக்கவும். இதில் சர்க்கரை, வடிகட்டிய தயிர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிய கப்களில் மாம்பழக் கலவையை ஊற்றி, மாம்பழத் துண்டுகளை மேலாகத் தூவி, குளிர வைத்துப் பரிமாறவும்.
வெள்ளரி மோர்

செய்முறை: வெள்ளரிக் காயை நறுக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி... தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வடிகட்டி குளிர வைத்துப் பரிமாறவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி - தயிர் பச்சடி

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய இஞ்சியை அதில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கி, வதக்கிய இஞ்சித் துருவல் கலவையுடன் கலந்து பரிமாறவும்.
இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
கார்ன் தயிர் வடை

செய்முறை: சோளத் துடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும். அரைத்த மாவை வடை போல் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தயிருடன் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து தயிரில் சேர்க்கவும். வடைகளின் மேலாக தயிரை ஊற்றி... மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சேமியா பகாளாபாத்

செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும். இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும். இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து... பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அப்படியே சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
பழ தயிர் பச்சடி

செய்முறை: பழங்களைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லாப் பழங்களையும் போட்டு, தயிர் சேர்த்து நன்றாகக் கிளறவும். மேலாக தேனை ஊற்றிப் பரிமாறவும்.
விருந்தில் பரிமாறுவதற்கு ஏற்ற ரிச்சான பச்சடி இது!
வெந்தய தயிர் பச்சடி

செய்முறை: முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் 5 முதல் 8 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வேக வைத்த வெந்தயத்தை சேர்த்துக் கிளறி... தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு ஏற்ற குளுமையான பச்சடி இது.
டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா

செய்முறை: நெய்யில் திராட்சையை வறுக்கவும். தயிரில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட்டை தயிர் கலவையுடன் சேர்க்கவும். பேரீச்சம்பழத் துண்டுகள், வறுத்த திராட்சையையும் அதில் சேர்த்துக் கலக்கவும்.
விருந்துக்கு ஏற்ற சுவையான டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா ரெடி!
மலாய் லஸ்ஸி

செய்முறை: தயிருடன் உப்பு, சீரகத்தூள், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி மேலாக பால் ஏடு, ரோஸ் வாட்டரை சேர்த்துப் பரிமாறவும்.
இது... ஜீரண சக்தியைக் கூட்டும்.
தயிர் மினி இட்லி

செய்முறை: தயிருடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலா சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மாதுளை முத்துக்கள், முளைப்பயறு, மினி இட்லி சேர்த்துக் கலந்து, கொத்துமல்லி தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் ஆப்பிள், திராட்சை, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சேர்க்கலாம்.
சத்தான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு இது.
ஜவ்வரிசி மோர் தோசை

செய்முறை: அரிசியைத் தண்ணீரிலும், ஜவ்வரிசியை மோரிலும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, முதலில் அரிசியைத் தனியே அரைக்கவும். மோரில் ஊறிய ஜவ்வரிசியுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து... வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.
காரச் சட்னி இதற்கு சரியான ஜோடி
புளி சேரி

செய்முறை: பூசணியைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர்,
மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். தேங்காயுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்த பூசணி, சின்ன வெங்காயம் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். தயிர் சேர்த்துக் கிளறவும். தேங்காய் எண்ணெயைக் காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெந்த பூசணி-தயிர் கலவையில் சேர்த்துப் பரிமாறவும்.
கேரளாவில் விருந்து, பண்டிகை நாட்களில் இந்த பதார்த்தம் கட்டாயம் இடம் பெறும், பெரிய வெள்ளரி அல்லது சுரைக்காய் பயன்படுத்தியும் செய்யலாம்.
கத்திரிக்காய் - தயிர் கிரேவி

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கிரேவிக்கு அரைக்க: பட்டை, இஞ்சி - தலா ஒரு சிறிய துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், மிளகு - 8, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 6.
செய்முறை: தயிருடன் இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி... அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் கலவை, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
உருளை - தயிர் கிரேவி

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் தயிர் சேர்த்துக் கலந்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவவும்.
தஹி பிண்டி

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு 3 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி... சீரகத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய வெண்டைக்காய், தயிர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
இது, சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்!
தஹி பக்கோடா

செய்முறை: பச்சைப் பயறு, உளுந்து இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து... இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக் கவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த வற்றை தண்ணீரில் போட்டு தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில், தயிரை விட்டு உப்பு, சேர்த்துக் கலக்கவும். இதில் பக்கோடாக் களைப் போட்டு... மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தஹி பூரி

செய்முறை: மைதாவில் ரவை, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து... சிறு சிறு பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கேரட் துருவல், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். தயிரில் மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும்.
பூரிகளின் நடுவே சிறு ஓட்டை போட்டு, அதனுள் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மேலாக தயிர் ஊற்றி... கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
மார்வாரி கடி

செய்முறை: தயிருடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு கலந்து, மிதமான தீயில் 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். மிளகாய்த்தூளை ஒரு டீஸ்பூன்
தண்ணீரில் கரைத்து, தயிர் கலவையில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
உருண்டை மோர்க்குழம்பு

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து... சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, தண்ணீர் விட்டு நீர்க்க கரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... உப்பு, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து ஒவ்வொரு உருண்டைகளாகப் போடவும். எல்லாம் சேர்ந்துக் கொதித்ததும், மோரில் சிட்டிகை உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, குழம்புடன் சேர்த்து, கொதித்து வரும்போது இறக்கவும். தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றவும்.
ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி

செய்முறை: பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக நுரை வரும்வரை மிக்ஸியில் அடிக்கவும். குளிர வைத்துப் பரிமாறவும்.
சூரத் கடி

செய்முறை: தயிரை நன்றாகக் கடைந்து, கடலை மாவு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர், சீரகம், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து, தயிர் கலவையை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். சூடான சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.
தஹி ரிங் சாட்

செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை கையில் எடுத்து சிறு சிறு வளையம் போல் வட்ட வடிவமாக (ரிங்) சுற்றிக் கொள்ளவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்த ரிங்க் துண்டுகள், கேரட் துருவல், வெங்காயம், சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், சாட் மசாலா, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஓமப்பொடி, கொத்த மல்லியை மேலாகத் தூவி பரிமாறவும்.
இன்ஸ்டன்ட் தயிர் வடை

செய்முறை: பிரெட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி எடுத்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தயிர், கேரட், வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, உதிர்த்த பிரெட்டை சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து வடை போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். பரிமாறும்போது தயிரை சிறிது சிறிதாக ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தஹி பனீர்

செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகம், கசகசா, பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி, பனீர் கலவையுடன் சேர்த்துக் கிளறி... புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, புலாவ் வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
கம்பு மோர்க்கூழ்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து... அதில் கம்பு மாவு, உப்பு, சீரகம் சேர்த்துக் கூழாக காய்ச்சவும். காய்ச்சிய கூழை ஆற வைத்து, மோர் சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பருகவும்.
மாம்பழ மோர்குழம்பு

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, கடைந்த தயிர், மாம்பழத் துண்டுகள் சேர்த்து, கொதித்து வந்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.
மோர் வடை

செய்முறை: அரிசியை மோரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து... இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து மீண்டும் அரைக்கவும். ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து, அரைத்த மாவுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து, சிறிய வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தொகுப்பு: ரேவதி, படங்கள்: எம்.உசேன்
Source - Vikatan Magazine



- என்.கணேசன்
ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை அடுத்த பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18 சுலோகங்களில் கீதையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம்.
அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து காலம் தள்ளும் இரவல் நாடுகளில் ஒன்று. இந்த இரண்டு நாடுகளின் ராணுவம், ஆயிரக்கணக்கான வீரர்கள், ஆயுதங்கள், பீரங்கிகள், விமானங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பல செயற்கைக்கோள்கள்... என்று அனைத்தையும் பயன்படுத்தி அமெரிக்கா, ஒசாமாவை சல்லடை போட்டுத் தேடியது. இருந்தும், அவரது இருப்பிடத்தை 10 வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சொல்லி இருக்கிறார். உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காக, நேர்முகத் தேர்வு நடத்தி க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது.
போலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு. இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவர இருக்கிறார்களாம்.

டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு. இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள். இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான் 

