Thursday, August 25, 2011

ஊழலுக்கு எதிராக அண்ணா.. அண்ணாவுக்கு ஆதரவாக நான்!


ஊழலுக்கு எதிராக அண்ணா.. அண்ணாவுக்கு ஆதரவாக நான்!

ஏப்.9,2011
Updated ஆக.16,2011
ஏப்ரல் 2011...
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.
அண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

"இது, உங்களின் வெற்றி," என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, "இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்," என்று முழங்கினார்!
ஆகஸ்ட் 2011..
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை!

இமயம் முதல் குமரி வரை மட்டுமின்றி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் தீவிரம் அடைந்து வரும் அண்ணா ஹஜாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்க, ஆதரவு 'கருத்து'க்களை அள்ளித் தெளித்து அண்ணாவுடன் கைகோர்க்க வாருங்கள்...
(அறிமுகம்.. அண்ணா ஹஜாரே... ஆர்.டி.ஐ. முதல் லோக்பால் வரை)

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே...

ஏப்.7,2011

மகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் 'மாதிரி சிற்றூர்' என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.
ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை...
* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், 'அன்னா ஹசாரே' என்று அழைக்கப்படுபவர்.
* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.
* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.
கிராம மேம்பாட்டுப் பணி...
* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.
பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, 'ஷ்ரம்தன்' என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.
* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.
* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.
* 1998-ல் சிவசேனா - பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தகவல் அறியும் சட்டம்... 
* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்...
நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.
இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.
இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக்  கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.
லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.
அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.
"இது, உங்களின் வெற்றி," என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, "இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்," என்று முழங்கியிருக்கிறார்!
அன்னா ஹசாரேவின் வலைத்தளம் : http://www.annahazare.org/
Source - Vikatan Magazine

Monday, August 22, 2011

ஒரு பவுன் ரூ.36 ஆயிரம் ?

ஒரு பவுன் ரூ.36 ஆயிரம் ?

கல்யாண கனவுகளைக் காப்பாற்றுவது எப்படி ?
ம.பிரியதர்ஷினி
 'இருபத்தி நான்கு கேரட் தங்கம், ஒரு பவுன் 20,648 ரூபாயாக உயர்ர்ர்ர்ர்ர்ந்திருக்கிறது....'
தலைப்புச் செய்திகளில் தொடங்கி தெரு பெண்களின் குழாயடிச் சந்திப்பு வரை இப்போது பேசப்படுகிற விஷயம்... இதுவரை காணாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை உயர்வு பற்றித்தான்.
நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே தோடு, செயின், மூக்குத்தி, மோதிரம்... என்பது போன்ற நகைகள்தான். ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்கவும் உதவும் என்பதால், இந்த மக்களின் முழு முதலீடும் தங்கமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அதிலும் ஆடி மாதம் முடிந்து, திருமண மாதமான ஆவணி தொடங்க இருக்கிற இந்நிலையில் வயிற்றில் அடுத்தடுத்து இடியை இறக்கிக் கொண்டே இருக்கும் 'தங்க விலை உயர்வு' செய்தி... மக்களை மிகுதியாகவே கலங்கிப் போகச் செய்திருக்கிறது!
எந்த ஒரு விஷயத்துக்கும் முடிவு என்று ஒன்று கணிக்கப்படும். ஆனால், கணிப்புக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது தங்கத்தின் விலை. 'கண்டிப்பா ஒருநாள் சடார்னு தங்கத்தோட விலை குறையும் பாருங்க... அப்போ தங்கத்துக்கு மதிப்பே இல்லாமப் போகப்போகுது’ என்பது மாதிரியான 'நம்பிக்கை’ பேச்சுக்கள், தங்கம் விலையேறும் சமயத்தில் எல்லாம் எழுகிறது. ஆனால், 'அதற்கெல்லாம் சான்ஸே இல்லை' என்று சொல்லிச் சிரிக்கிறது தங்கம்!
'நிலைமை இப்படியேதான் போகுமா... இதன் எதிர்காலம் எப்படி?' என்பது பற்றி கோயம்புத்தூரில் இருக்கும் 'ஏஞ்ஜல் புரோக்கிங் லிமிடெட்’ நிறுவனத்தின் வட்ட மேலதிகாரியான சிவகுமாரிடம் பேசினோம்.
''தங்கம் விலை உயர்ந்திருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 'ஒரு பவுன் தங்கத்தின் விலை இருபதாயிரத்தைத் தொடும்' என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எதிர்பார்த்தோம். அது இன்று நடந்திருக்கிறது'' என்று அதிரடியாக ஆரம்பித்தவர்,
''அத்தியாவசியப் பொருட்களில் இருந்து பள்ளிக் கட்டணம் வரை அனைத்தும் முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்காக அதையெல்லாம் நாம் வாங்காமல் இருப்பதில்லை. தங்கமும் அப்படித்தான். விலை உயர்கிறது என்பதற்காக யாரும் வாங்காமல் இருக்கப் போவதில்லை. வாங்கும் அளவு வேண்டுமானால் குறையலாம்.
உலகளவில் தங்கச் சுரங்கங்கள் சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிகமாக இருக்கின்றன. தங்கச் சுரங்கங்களில் வேலை பார்ப்பது மிகக்கடினம் மற்றும் ஆபத்தான வேலையும்கூட. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சம்பளம் குறைவு என்பதால், சம்பள உயர்வு கேட்டு அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் அந்நாட்டு மக்கள். இதனால் தங்கம் எடுக்க முடியாமல் போய், கையிருப்புத் தங்கத்தை அதிகம் பேருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது... விலையும் அதிகரிக்கிறது.
இதுபோன்ற காரணங்களால்தான், தங்கத்தை கண்ணில் காட்டாமலே நடத்தப்படும் 'ஆன் லைன் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ அறிமுகமாகியிருக்கிறது. கூடிய விரைவில் இது எல்லா வங்கிகளிலும் வந்துவிடும். இன்னொரு பக்கம், 'உனக்குப் போட்டியாக நானும் வருகிறேன்’ என்று துள்ளிக் கொண்டிருக்கும் வெள்ளியின் விலை ஏற்றத்தால், தங்கத்துக்கு இணையாக வெள்ளியில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது'' என்ற சிவகுமார், அடுத்துச் சொன்ன தகவல்... அதிர்ச்சி ரகம்.
''நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க முதலீடு காரணமாக 2014-ல் ஒரு பவுன் தங்கம் 36 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்பது நிச்சயம். இது கற்பனையோ, சாத்தியமில்லாத யூகமோ இல்லை. கண்டிப்பாக இனி தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பே இல்லை. உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான்'' என்று ஆணித்தரமாகச் சொன்னார்.
தங்கம் விலை ஏறிக் கொண்டிருக்கிற இந்நிலையில், தங்க நகைக் கடைகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிய சென்னை, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் மேனேஜிங் டைரக்டர் அனந்த பத்மநாபனிடம் பேசினோம். ''இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை ஏறிக்கொண்டு இருந்தாலும், முன்பைவிட அதிகமாக மக்கள் வாங்கத் துவங்கிஇருக்கிறார்கள் என்பதும் உண்மை. தங்கம் என்பது மதிப்புமிக்க விஷயம் என்பதால் மக்களிடம் எப்போதும் அதற்கு மதிப்பு உண்டு. விலை ஏற ஏற... எந்தெந்த வழிகளில் எல்லாம் தங்கத்தை வாங்கலாம் என்று மிடில் கிளாஸ் மக்கள் யோசிக்க துவங்கிவிட்டார்கள். அதற்கெனவே தங்க நகைச் சீட்டு போன்ற விஷயங்கள் இருப்பதால், விலை ஏறும்போதும் சிறுகச் சிறுக சேமித்து அதற்கேற்ப தங்கம் வாங்கி விடுகிறார்கள்'' என்று தன்னுடைய பார்வையைச் சொன்னார்.
பொதுவாக அப்பர் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் சமூகத்து மக்களுக்கு, தங்கம் விலை ஏறினாலும் அதற்கேற்ப தங்கள் வருமானமும் ஏறுவதால், அங்கே பாதிப்பு தெரிவதில்லை. ஆனால்... மிடில் கிளாஸ் மற்றும் லோயர் மிடில் க்ளாஸ் மக்களின் நிலை?
கோவையைச் சேர்ந்த வளர்மதி பேசியது... அந்த மக்களின் பிரதிநிதித்துவமாகவே தோன்றியது நமக்கு. அவர் சொன்னது... ''என் கணவர் டிரைவரா இருக்கார். நான் அக்கவுன்டன்ட்டா இருக்கேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. 'தங்கம் விலை கிடுகிடு உயர்வு’னு நியூஸ்ல கேட்கற அன்னிக்கு ராத்திரி எல்லாம் என் தூக்கம் தொலைஞ்சு போயிடுதுங்க. பசங்க ஸ்கூல் ஃபீஸ், காலேஸ் பீஸ், வீட்டு செலவுனு எல்லாத்தையும் சமாளிச்சு நிமிர்ந்தா... விலைவாசி உயர்வு, தங்கம் விலை உயர்வுனு அப்பப்போ குண்டைத் தூக்கி போடுறாங்க. ஒவ்வொரு தடவையும் சிறுகச் சிறுக ஒரு பத்தாயிரம் ரூபா அளவுக்கு சேர்த்து தங்கம் வாங்கலாம்னு நினைச்சுட்டு இருப்பேன். சேர்த்து முடிக்கறதுக்குள்ள கூடுதலா ஆயிரம், ரெண்டாயிரம் விலை கூடியிருக்கும். இப்போ நான் சேமிக்கற பணத்துல கிராம்லதான் தங்கம் வாங்க முடியும் போல'' என்றவர்,
''தங்கம் எவ்வளவு விலை கூடினாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கிறதை குறைச்சுக்க மாட்டாங்களே?!'' என்று வருந்தினார் மிடில் கிளாஸ் அம்மாவாக.
வரும் காலங்களில், 'வாடி என் தங்கம்!’ என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மட்டுமே தங்கம் மாறிப் போகுமோ?!

இப்படிச் சேமிக்கலாம்... எளிதாக!
 'அப்படி இப்படி சேமிச்சு... கொஞ்சம் கொஞ்சமா தங்கம் வாங்கலாம்னா... பங்கத்தை ஏற்படுத்துதே இந்த விலை ஏத்தம்!' என்று கவலைப்படுகிறீர்களா?
டோண்ட் வொர்ரி...
முகம் தெரியாத மனிதர்களிடம் 'தங்கச் சீட்டு' என்று ஏமாறாமல், அரசாங்கத்தின் ஒப்புதலோடு கூடிய பல திட்டங்கள் இருக்கின்றன... தைரியமாக முதலீடு செய்வதற்கு! உங்கள் ஊர்களில் இருக்கும் ஷேர் புரோக்கர்கள் அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்களை அணுகினாலே போதும்!
இ.டி.எஃப்(Exchange Trader Fund)கோல்ட்:  இது, சிறுசேமிப்பு போல தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கான அற்புத பிளான். 'கோட்டக் கோல்ட்’, 'கோல்ட் பீஸ்’, 'ஸ்டேட் பேங்க் கோல்ட்’ என நல்ல ஸ்கீம்கள் இருக்கின்றன. இவற்றில் சேர்வது எளிது.  (மார்க்கெட் நிலையைப் பொறுத்து) குறைந்தது மாதம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயை  மேற்சொன்ன கம்பெனிகளின் இ.டி.எஃப் பிளானில் இன்வெஸ்ட் செய்யலாம். விரும்பும்போது, மார்க்கெட் விலைக்கு விற்றுப் பணமாக்கி, கடைகளில் தங்கம் வாங்கிக் கொள்ளலாம். பெண்ணின் கல்யாணத்துக்கு சேர்க்கத் துவங்கிவிட்டால், தங்கம் விலையேறினால்கூட கவலைப்பட தேவையில்லை.
நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச்: ஈ கோல்ட், ஈ சில்வர், ஈ காப்பர் என எதில் வேண்டுமானாலும் நீங்கள் இன்வெஸ்ட் செய்யலாம். (மார்க்கெட் நிலையைப் பொறுத்து) குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வீதம் இன்வெஸ்ட் செய்யலாம். விற்கும்போது, தங்கமாகவே வாங்கிக் கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்: பல கம்பெனிகளில் கோல்ட் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் இருக்கின்றன. குறைந்தபட்சம் நூறு ரூபாயில் இருந்து மாதாமாதம் இன்வெஸ்ட் செய்து கொண்டே வாருங்கள். தேவையின்போது மார்க்கெட் விலைக்கு விற்றுப் பணமாக வாங்கிக் கொள்ளலாம்.
படங்கள்: தி.விஜய்
 Source - Vikatan Magazine

ஊழலுக்கு எதிரான அண்ணா போராட்டம்

ஊழலுக்கு எதிரான அண்ணா போராட்டம்

சிலிர்த்து எழுந்தது இந்தியா!
'இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்’ - அண்ணா ஹஜாரே உண்ணா​​விரதத்தைத் தொடங்கும் முன் தன் போராட்டத்தை இப்படி வர்ணித்தபோது, அவர் சற்று அதிகமாகவே பேசுவதாகக் கூறியவர்கள் உண்டு. ஆனால், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கு இந்த நாடு எவ்வளவு மோசமான எதிரியாக மாறி இருக்கிறது என்பதையும், தங்கள் பதவி​களைக் காப்பாற்றிக்​கொள்ள நம்முடைய ஆட்சி​யாளர்கள் எந்த அளவுக்கு அடக்கு​முறை​களைப் பிரயோகிப்பார்கள் என்பதையும், அண்​ணாவின் கைது அவர்​களுக்குச் சொல்லி இருக்கும்!
கடந்த இரு வாரங்​களாகவே டெல்லி ஆட்சி​யாளர்​களின் முழுக் கவனமும் அண்ணா மீதுதான் இருந்தது. போராட்டத்துக்கு ஏகப்பட்ட அலைக்கழிப்பு கொடுத்த பிறகு, 'மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி; 5,000 பேருக்கு மேல் கூடக் கூடாது; 100 வாகனங்களுக்கு மேல் நிறுத்தக் கூடாது’ என்று 22 நிபந்தனைகளை விதித்தது டெல்லி காவல் துறை. 'சாத்தியமே இல்லாத இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது’ என்று அண்ணாவின் குழுவினர் அறிவித்ததையே சாக்காகச் சொல்லி, போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது. காவல் துறையின் அடாவடியான நிபந்தனைகளைக் குறிப்பிட்டு, பிரதமருக்கு அண்ணா கடிதம் எழுதியும் பிரயோஜனம் இல்லை.
உடனே அமைச்சர்களும் கட்சித் தலைவர்​களும் அண்ணாவுக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டனர். முதல் தாக்குதலை நடத்தியது அமைச்சர்கள் பிரணாப் - அம்பிகா - கபில் சிபல் அணி. அடுத்த தாக்குதலைத் தொடுத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ''அண்ணாவே ஓர் ஊழல்வாதி'' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், எதுவும் எடுபடவில்லை.
இதனிடையே, சுதந்திர தின விழாவில் பிரதமர் உரையும் அண்ணாவுக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தன. எந்த ஓர் அச்சுறுத்தலுக்கும் அண்ணா குழுவினர் அசரப்போவதில்லை என்று தெரிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர் ஆட்சியாளர்கள். அதிகாலையிலேயே அண்ணா குழுவினரைச் சுற்றிவளைத்த போலீஸார், போராட்டத்துக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா மட்டும் அல்லாமல் ஷாஹீத் பூங்கா, ராஜ்காட், ஜவஹர்லால் நேரு மார்க், அருணா ஆசப் அலி மார்க், டெல்லி கேட், திலக் மார்க் என்று பிரதான இடங்கள் பலவற்றிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்தினர். மேலும், அண்ணா குழுவினரைக் கைதுசெய்து உடனடியாக சிறைக்குக் கொண்டுசெல்ல ஏதுவாக இரண்டு சிறப்பு நீதிபதிகளையும், உள்துறை முதன்மைச் செயலர் மூலம் கேட்டுப் பெற்றனர். இவ்வளவு முடிவுகளுக்கும் பின்னணியில் இருந்தவர் ராகுல் காந்தி. காலை 9 மணிக்குள் சிறைக்குள் அண்ணாவைத் தள்ளி​விட்டால், போராட்டத்தை முடக்கிவிடலாம் என்று திட்டமிட்டது அரசு. ஆனால், அண்ணாவோ நாட்டையே போராட்டக் களமாக்கினார்.
அண்ணாவின் போராட்டம் தொடங்கிய செய்தியைக் கேட்க ஆவலோடு இருந்த மக்கள், அவர் கைது செய்யப்பட்டதைக் கேட்டதும் கொந்தளித்தனர். டெல்லியில் காவல் துறைக் கட்டுப்பாடுகளையும் மீறி அலை அலையாகக் குவிந்தனர். மகாராஷ்டிரத்தில் மக்கள் கொந்தளித்தனர். மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் மேதா பட்கர் பங்கேற்றார். அண்ணாவின் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் மக்கள் சாலையிலேயே நாள் முழுவதும் உட்கார்ந்திருந்தனர். உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் பிரமாண்டப் பேரணி நடத்தினர். ஆந்திரத்தில் மக்கள் பெரும் திரளாகக் கூடுவதை உணர்ந்த சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் தலைமையில் பேரணியை அறிவித்தார். தமிழகத்தில் சென்னையில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கால வரையறையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கினர். காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரை நாடு முழுவதும் மறியல்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள்...
இதற்குள் நாடாளுமன்றத்தில் பிரளயமேஏற்பட்டு இருந்தது.  'அண்ணா கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் ஒரே குரலில் கூறின. மக்களவைக் கூடியதும் பிரதமர் அறிக்கை வாசித்தார். ''ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. அமைதியை நிலைநாட்ட போலீஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர்'' என்று மன்மோகன் பேசியபோது அவை கொந்​தளித்தது. எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும், அத்வானியும் பிரதமரைக் கடுமையாகச் சாடினர். அவை ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மாநிலங்களவையிலும் தனது விளக்கத்தை அளித்தார். அங்கும் அவர் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. 'அண்ணா கைதுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று எதிர்க் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ''இந்தக் கைது, அடிப்படை மனித உரிமையையே மீறும் செயல்!'' என்றார் குருதாஸ் தாஸ் குப்தா. அரசு எதிர்பார்க்காத வகையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் நின்றன. அதனால் பெரும் சங்கடத்துக்கு உள்ளான அரசு, அண்ணாவை விடுவிப்பதாக அறிவித்தது. ஆனால், போராட்ட அனுமதி இல்லாமல் விடுதலையாக அவர் மறுத்தார். வேறு வழியின்றி அரசு இறங்கி வந்தது. டெல்லி ராம் லீலா மைதானத்தில் 15 நாட்கள் அனுமதியுடன் போராட்டத்தில் அமர்ந்தார் அண்ணா.
''என் உயிர் முக்கியம் இல்லை. இந்த நாடு ஊழலில் இருந்து விடுபட வேண்டும். அதுவரை போராடுவோம்!'' என்றார்.
''நீங்கள் எங்களுக்கு முக்கியம் அண்ணா!'' - மக்கள் முழக்கம் அதிர்கிறது!
- சமஸ்

Source - Vikatan Magazine

''உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!''

''உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!''

சீறிய ஜெ.! சிலுப்பும் அறிவாலயம்!
நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார்.
''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா என்று தி.மு.க-வும் சிலுப்பிக் கொண்டு தயாராகி வருகிறது!
தமிழ்நாடு முழுக்க நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை வந்த புகார்கள் 2,800-ஐத் தாண்டிவிட்டன. பெரும்பாலும் தி.மு.க. தொடர்புடையவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு. கடந்த மூன்று மாதங்களில் கைதான தி.மு.க. வி.ஐ.பி-கள் பற்றிய ஓர் அலசல் இது. போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன!
ஜெயலலிதா கோபமும்... வீரபாண்டியார் கைதும்...
சேலத்தில் உள்ள பிரீமியர் ரோலர் ஃபிளவர் மில்லை மிரட்டி வாங்கியதாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரில்தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல், நிலத்தை அபகரித்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் அவரைக் கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். அந்த சமயத்தில் வெளியில் இருந்த தி.மு.க-வினர் சிலர் பச்சை சேலை உடுத்திய ஒருவரை அசிங்கப்படுத்துவதைப்போன்று சில சம்பவங்களை அரங்கேற்றவே, கடுப்பானார் ஜெயலலிதா. தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆறுமுகம். இன்னும் ஜாமீன் வாங்கவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.
 ஆப்பு வைத்த அரவை மில் அதிபர்!
பெருந்துறையைச் சேர்ந்த கடலை அரவை மில் அதிபர் ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 'அந்தக் கடனுக்காக, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மில்லை என்.கே.கே.பி.ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மேயரான குமார் முருகேஷ் மிரட்டினார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அந்த அரவை மில்லை அபகரித்துக்கொண்டார்கள்!’ என்பதுதான் ராமசாமியின் புகார். தி.மு.க. ஆட்சியில் பயந்துகொண்டு இருந்த ராமசாமி, ஆட்சி மாறியதும் போலீஸில் புகார் கொடுக்க... கொலை மிரட்டல், நில அபகரிப்பு உட்படப் பல பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜாவையும், மேயர் குமார் முருகேஷையும் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தது ஈரோடு போலீஸ்.
கொலை மிரட்டல்.. ஆக்கிரமிப்பு.. மோசடி!
சென்னை, நொளம்பூரில் அண்ணாமலை அவென்யூ என்ற 20 ஏக்கர் நிலத்தில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ரங்கநாதன், அவர்களை மிரட்டிக் காலி செய்யவைத்தார் என்பதுதான் புகார். பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி ரங்கநாதன் மீது புகார் கொடுக்க, விடுமா போலீஸ்? கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு, மோசடி செய்தல் என 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனைத் தூக்கிவிட்டது. ரங்கநாதன் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த அத்தனை புகார்களும் தூசு தட்டப்படுகின்றன. இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரங்கநாதன்.
 
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 'பொட்டு’ சுரேஷ்!
மதுரை மாவட்டத்தில் உள்ள வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பாப்பா என்ற பெண்தான் பொட்டு சுரேஷ§க்கு முதல் கொட்டு வைத்தவர். 'எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை, வெறும் 40 லட்சத்துக்கு பொட்டு சுரேஷ§ம், மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதியும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க!’ என்று புகார் கொடுத்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பட்டது. இருவரும் எஸ்.பி. ஆபீஸுக்கு வர... ஏற்கெனவே போட்டுவைத்த திட்டப்படி இருவரையும் கைது செய்தது போலீஸ். ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் இடத்தை அபகரித்துக்கொண்டதாக பொட்டு மீது இன்னொரு வழக்கும் பதிவானது. உடனடியாக மதுரை கலெக்டர் சகாயம், 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில்வைக்க உத்தரவிடுகிறேன்!’ என்று ஆணை பிறப்பிக்க... வெளியில் வர முடியாதபடி சுரேஷ§க்குக் கிடுக்கிப்பிடி போடப்பட்டது.
 மதுரை குலுங்க.. குலுங்க..!
தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் 'அட்டாக்’ பாண்டி. மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார்  2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும்கூட, அதைக் காலி செய்யாமல் ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டு வதாகத்தான் 'அட்டாக்’ மீது புகார். இதேபோல கல்பனா என்ற பெண்ணும், வாடகைக்கு விட்ட தன்னுடைய வீட்டை 'அட்டாக்’ பாண்டி திருப்பித் தராமல் மிரட்டுவதாகப் புகார் கொடுக்கவே, நில ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு அமுக்கிவிட்டது போலீஸ். வீடு, கடைகளை அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மதுரை வி.கே.குருசாமி மீதும் புகார்கள் எழுந்தன. ஏற்கெனவே சில வழக்குகள் அவர் மீது இருக்கவே, குருசாமியையும் குண்டர் தடுப்புச் சட்டத்திலேயே கைது செய்துவிட்டது போலீஸ்.
திருமங்கலத்தை சேர்ந்த சிவனான்டி என்பவர், தன்னுடைய நிலத்தை எஸ்ஸார் கோபி அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை காரை ஏற்றிக் கொலை செய்ததாக அதிரவைக்கும் வழக்கு என அடுத்தடுத்த புகார்களால் கோபியின் தலையும் உருள ஆரம்பித்தது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான கோபியை உள்ளே தள்ளிவிட்டது போலீஸ்.
 சேப்பாக்கம் டு திருப்பூர்
உடுமலை சீனிவாசனுக்குச் சொந்தமான ஜியான் பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது புகார். இந்த வழக்கில் சன் டி.வி. சக்சேனா, அய்யப்பனும் சிக்க... எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகனை எழுப்பிக் கைது செய்து, திருப்பூருக்குப் பறந்தது, போலீஸ். கண்டிஷன் பெயிலில் வெளியில் வந்த அன்பழகன், திருப்பூ ரில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.
 நகராட்சித் தலைவர்களும் உள்ளே...
குளுகுளுப் பிரதேசமான கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். இவர் மீதும் பண்ணை வீடு ஆக்கிரமிப்பு புகார். கொடைக்கானலில் ஜான் ரோஷன் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை இடிச்சிட்டு அபகரிச்சுட்டாங்க. திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபருடன் சேர்ந்து முகமது இப்ராஹிம்தான் இதைச் செய்தார்.’ எனப் புகார் கொடுக்க... அதிரடி ஆக்ஷன்தான்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சித் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டின் பேரில் கட்டுமானப் பணிகளுக்காக  45 லட்சம் கடன் வாங்கினார். கடனைத் திருப்பி கேட்டு வங்கியில் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளவே இல்லையாம். கடனைக் கேட்கப் போன வங்கி அதிகாரிகளையும் கிருஷ்ணமூர்த்தி மிரட்டவே, அவர்கள் போலீஸில் புகார் கொடுக்க... அப்புறம் என்ன? ஜெயில்தான்!
 கரூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் இருவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். தளவாய்பாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கிரயம் செய்துகொண்டு, பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.
திருப்பூர் அருகே முருகம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பொங்கலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான மணி கைது செய்யப்பட்டதுதான் லேட்டஸ்ட்.
திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கம்பி எண்ணுகிறார். கடைகளைச் சேதப்படுத்தியது, பள்ளி மாணவன் விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் எனப் பல்வேறு வழக்குகள் கலைவாணன் மீது பாய்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க. நகரச் செயலாளரை கொலை செய்யத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது போலீஸ்.
''இத்தோடு முடியவில்லை... இன்னும் நிறை யவே இருக்கு. பார்க்கத்தானே போறீங்க..'' என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் காவல்துறை உயரதி காரி ஒருவர். தி.மு.க.வினர் வயிற்றில் இவை புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது!
- கே.ராஜாதிருவேங்கடம்