கீதை காட்டும் பாதை - 3 : சுதர்மமே சிறந்தது!
இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.
ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின் அழியும் தன்மையையும் கூறிய பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அரசகுலத்தவனான அர்ஜுனனுக்கு அறப் போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை என்றும், தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த
அறப்போரை நடத்தாமல் போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை அடைய நேரிடும், பழி வந்து சேரும் என்று எச்சரிக்கிறார்.இப்படி எல்லா கோணங்களிலும் கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும், மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன் திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி விடுதலோ கூடாது.
பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக் கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: "மீன்களிடம் 'நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து வாழுங்கள்' என்று எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? மீன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்".
அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக் கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய் விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் உண்மையாக சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும் மீறியல்லவா வெளிப்படும்.
இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான். நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரவரே அறிவார்கள். அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.
எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு படும் பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.
எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல வேண்டாம். மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக வாழ்கின்றான்.
கணித மேதை பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய மொழிகளில் பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால் பாஸ்கலுக்கோ கணிதம் என்றால் உயிராக இருந்தது. அவருடைய தந்தை கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்காதபடி செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப் பார்த்தார். பாஸ்கல் பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக் குறியீடுகளால் கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய தந்தை தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்துக்காகத் தன் கணித ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ கணித மேம்பாட்டை இழந்திருக்கும்.
ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின் படி, இயல்பாக அமைந்துள்ள திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும் நிறைவை உணர்கிறார்கள். அவர்களால் சமூகத்துக்கும் நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாமல் அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.
பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை எளிமையாக இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன. வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப் படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும் இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால் அவர் எப்படி சுதர்மத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்படி வருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு இயல்பாக திறமையும் ஆர்வமும் உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.
இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள். பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி பல ஆண்டுகள் நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால், அவர்கள் தினசரி வருமானத்துக்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல ஆண்டுகள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள் விமான ஆராய்ச்சிகளையும் செய்தார்கள். அதனாலேயே அவர்களால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.
எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை உள்ளவர்கள் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு தொழிலில் முழு நேரமும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல இடங்களில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை அடிக்கடி உணர்கிறார்கள் என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால் அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க முடியும். எது நமது உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவீதம் நாமாக இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு மறந்து விடக்கூடாது.
சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது. இதனாலேயே கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். இன்னொரு இடத்தில் "சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும் நல்லதே" என்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க எத்தனையோ காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்தக் காரணங்களில் ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.
இக்காலத்தில் தொழிலில் நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள் சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான். எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக் காரணமும் அது தான்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 2 - இந்த துக்கம் அர்த்தமற்றது!


உலகில் பலருடைய வாழ்வில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய புத்தகம் 'ஸ்மால் இஸ் பியூட்டிஃபுல்’. பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநரான ஷூமேக்கர் எழுதியது. வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சூழலியல் நலன் சார்ந்த பின்னணியில் அலசி எழுதப்பட்ட இந்தப் புத்தகம் சொல்லும் ஒரே செய்தி... சின்னதே அழகு!
இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்குக் குறைந்த செலவில் அதிக பலன் தரக் கூடிய ஒரு திட்டம் என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, அதற்கு ஷூமேக்கர் முன்வைத்த திட்டம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஆளுக்கு ஐந்து மரக்கன்றுகள் வைத்து ஐந்து ஆண்டுகள் வளர்ப்பது. ''இந்த ஐந்து ஆண்டுத் திட்டம் உங்களுடைய எந்த ஐந்து ஆண்டுத் திட்டத்தைவிடவும் செலவு குறைந்தது. மிக அதிகப் பலன் தரக் கூடியது!'' என்றார் ஷூமேக்கர்.
பட்டியலையும் அந்தப் பத்திரிகை வெளியிடத் தொடங்கியது. பிரபலங்களைத் தேர்ந்தெடுப்பதில், இணைய வாக்கெடுப்பின் மூலம் வாசகர்களும் பங்கேற்கலாம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் பட்டியல் வெளியாகும்.
'உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு போர்க் குற்றவாளியை முன்னிலைப் படுத்துவதா?’ என்று 'டைம்’ பத்திரிகைக்குக் கண்டனங்கள் குவிந்தன. தவிர, உலகம் வெறுக்கும் ஒரு நபர் இவ்வளவு வாக்குகளைப் பெற வாய்ப்பு இல்லை என்றும் ஏராளமானோர் சந்தேகம் எழுப்பினார்கள்.


வாதங்கள் நடந்தன. இறுதியில், கடந்த 20-ம் தேதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி, இவர்களது முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தததோடு, ஐந்து பேர்களையும் நீதிமன்றக் காவலில், திகார் ஜெயிலிலுக்கு அனுப்பினார்.
அனுபவ ரீதியில் வினோத் கோயங்காவின் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் வளர்ந்தது என்றால், சஞ்சய் சந்திராவும் அவரது தந்தையும் யுனிடெக் நிறுவனத்தை முறைப்படி தொழில்நுட்பத்தைப் படித்து வந்து உயர்த்தினார்கள். சஞ்சய் சந்திராவின் தந்தை ரமேஷ் சந்திரா, ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து, ரூர்க்கி அரசு ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர். தந்தை வழியிலேயே மண்ணியல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் படிப்பைப் படித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்து, அங்கேயே பணியாற்றினார் சஞ்சய். பின்னர் 1965-ல் தந்தையும் மகனும், மண்ணியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூடங்களைத் தொடங்கி, ரியல் எஸ்டேட்டில் இறங்கினார்கள். அதன் பின்னர் மின்சாரம், ஹோட்டல், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று ஒவ்வொன்றாகக் கால் பதிக்க, இவர்களின் சொத்து மதிப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்காக திமுகஉயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்பட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிகை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார் முதல்வர் கருணாநிதி.
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 9 பேர் மீதும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (சனிக்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. .jpg)
.jpg)
.jpg)
ராகுல் சென்... கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நான்கு வயது சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். ''குட்டி ராகுலுக்கு என்ன ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்?'' என தமிழில் கேட்டேன். பதில் சொல்லத் தடுமாறினான். அதையே ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கும் பதிலில்லை. அவன் தாய்மொழியான பெங்காலியில் கேட்டபோதும் தடுமாற்றமே!
கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். 
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே பிரேக் ஈவனை அடைந்திருக்கின்றன. டெல்லி, ஹைதராபாத், கோல்கத்தா அணிகள் தகுதியும் திறமையும் இருந்தும் பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மிகுந்த போராட்டத்தில் இருப்பதாக பிராண்ட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் உடனான இறுதிகட்டப் போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியானதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
திட்டமிட்டது 820 கி.மீட்டர். இதற்கு 20 கி.மீ. வரை கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம். ஆனால், திட்டமிட்டதற்கு மிக நெருக்கமாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ் சாட் - 2 செயற்கைக்கோளில் சக்தி வாய்ந்த மூன்று கேமராக்கள் உள்ளன. இது குறித்துப் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராதாகிருஷ்ணனிடம், ''செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு சி.ஏ.ஜி. குற்றம் சுமத்தியதே?'' என்று கேட்கப்பட, அவர், ''சி.ஏ.ஜி. கொடுத்த மிகப் பெரிய அறிக்கையின் இடையில் இருந்து இரண்டு வரிகளை எடுத்து, அதற்குத் தனியாக அர்த்தம் கொடுத்து பூதாகாரப்படுத்திவிட்டார்கள். எங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, எங்களைப் பாராட்டி இருக்கிறார்கள்!'' என்றார்.