Friday, June 3, 2011

ஆளுனர் உரையின் முக்கிய அம்சங்கள்!


ஆளுனர் உரையின் முக்கிய அம்சங்கள்!
சென்னை, ஜூன் 3,2011
புதிய தலைமைச்செயலக கட்டுமானம் குறித்து விசாரணை, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய முடிவு, இலவச மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் மற்றும் புதிய திட்டங்கள் ஆளுனர் உரையில் இடம்பெற்றுள்ளன.
14-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
ஆளுனர் உரையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
அரசு தேவையான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் அச்சமின்றி அமைதியான வாழ்க்கையை நடத்த வழிவகுக்கும்.
*
கடந்த ஆட்சியில் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி பலருடைய
சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க ஏதுவாக புதிய சட்டம் இயற்றப்படும்.
*
சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அதுவரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படுகிறது.
*
உள்ளூர் கேபிள் டிவி இயக்குபவர்கள் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமை ஆக்கப்படும். அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்படும்.
*
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு 2011 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் தொடங்கும். முதல் கட்டமாக 2011-2012 ஆம் ஆண்டில் 9.12 இலட்சம் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
*
இந்த அரசு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று மகளிருக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கும். 2011-2012 ஆம் ஆண்டு சுமார் 25 இலட்சம் 26 குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும்.
*
சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
*
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக் கழகங்களைச் சீரமைத்து உலகத் தரம் மிக்க
நிறுவனங்களாக மாற்றியமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும்.
*
கலைஞர் காப்பீடு, கான்கிரீட் வீடு திட்டங்கள் ரத்து...
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, அவற்றுக்கு மாற்றான திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.
கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் 'சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்' தொடங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 இலட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும்.
*
தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.
அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்.
தமிழுக்காக...
திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் புகழ் பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளிலும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.
*
கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் தனித் தன்மை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை மீட்டெடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
*
தமிழ் மொழியை இந்திய ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்கவும், நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்தவும் மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.
சட்டமேலவை தேவையில்லை...
இம்மாநிலத்தில் சட்ட மேலவை ஒரு தேவையற்ற அமைப்பாகக் கருதப்பட்டதால் 1.11.1986 அன்று எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்டது. எனவே, மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவரத்
தேவையில்லை என இந்த அரசு கருதுகிறது. சட்டப் பேரவையில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும்.
*
தமிழகத்தில் லஞ்ச ஊழல் அற்ற நிலைமையை உருவாக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
*
முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை, பயனாளிகள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலம் வங்கி சேவையாளர் உதவியுடன் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டம் வரும் 2011 செப்டம்பர் முதல் நாள் முதல் செயல்படுத்தப்படும்.
*
விலைவாசியை கட்டுப்படுத்த புதிய திட்டம்...
ரூபாய் 50 கோடி ஒதுக்கீட்டில் 'விலை கட்டுப்பாட்டு நிதி' உடனடியாக ஏற்படுத்தப்பட்டு வட்டியில்லாக் கடனாக கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கி அத்தியாவசியப் பொருட்களின்
விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அத்தகைய பொருட்களை உற்பத்தி மையங்களில் நேரடியாக வாங்கி அடக்க விலையிலேயே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும்.
*
நாட்டின் பொருளாதார உற்பத்தி மதிப்பில் மகாராஷ்டிரம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு
அடுத்தபடியாக மூன்றாவது அதிக பங்களிப்பு தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
*
'தமிழ்நாடு 2025 தொலைநோக்கு பார்வைத் திட்டம்' ஒன்றைத் தயாரித்து வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து களைவதுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய முக்கிய கட்டமைப்புத் திட்டங்களைக் கண்டறிந்து முன்னுரிமையில் செயல்படுத்தி தமிழகத்தை
வளர்ச்சிப் பாதையில் மீண்டும் கொண்டு செல்ல பாடுபடும்.
வேளாண்மைக்கு...
*
முதன்மை துறையான விவசாயம், கால்நடைத் துறை, மீனளம் போன்றவற்றின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தும். விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் தமிழ்நாட்டிலுள்ள 75 இலட்சம் சிறு குறு விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் வகையிலும் பண்ணைசார் சிறப்புத்
திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
*
வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் பங்களிப்புடன் விவசாய பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சந்தை வசதி, சேமிப்புக் கிட்டங்கிகள் மற்றும் குளிர் சாதன வசதிகளை உருவாக்குதல் போன்ற பணிகளையும் இந்த அரசு தீவிரமாக மேற்கொள்ளும்.
*
மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி பாசன ஆதாரத்தைப் பெருக்கும். இதனால்
வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன், இத்தகைய கால்வாய்கள் நீர்வழிப் போக்குவரத்திற்கும்
பயன்படுத்தப்படும்.
*
மத்திய அரசுடன் சுமுக உறவு...

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இருக்கும் வகையில் இந்த அரசு
செயல்படும். மாநில அரசின் தன்னாட்சி நிதி அதிகாரம் பாதிக்காத வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை உள்ளடக்கிய மறைமுக வரி முறைகளில் கொண்டுவரப்படும் வரிச் சீர்திருத்தத்தை இந்த அரசு வரவேற்கும்.
விற்பனை வரி மட்டுமே மாநிலத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள நிலையில், மாநில அரசுகளின் வருவாயை பாதிக்காத சரக்கு மற்றும் சேவை வரி முறையை பின்பற்ற வேண்டும் என
மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
நதிநீர் பிரச்னை...
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு
காணவே இந்த அரசு விரும்புகிறது. இதற்கு வாய்ப்பு கிட்டாத சூழ்நிலையில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அரசு தயங்காது.
முல்லைப் பெரியாறு மற்றும் பிற நதிநீர்ப் பிரச்சனைகள் நீதிமன்றங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில் ஒரு நிலையான தீர்வினை எட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு ஒரு நியாயமான முடிவு கிடைக்கும் என இந்த அரசு நம்புகிறது.
*
மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி பாதையை அனைத்து வசதிகளும் கொண்ட தன்னிறைவு வளர்ச்சிப் பாதையாக மாற்றி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
*
புதிதாக வளர்ச்சி பெற்று வரும் துறைகளான உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில் நுட்பம்
மற்றும் மருந்தியல் போன்ற துறைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு செயல்படும்.
*
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக தமிழகத்தை மாற்றும் நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். இரண்டாம் நிலை நகரங்களில் தொலை தொடர்பு பூங்காக்கள் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி இத்துறையின்
வளர்ச்சியை இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமப்பகுதிகளில் உள்ள வணிக வெளிப்பணி மையங்கள் வலுவாக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பரவலாக்கப்படும்.
மின்வெட்டு பிரச்னை..
மின்சாரம், சாலை வசதி, நகர்ப்புற கட்டமைப்புகள், வீட்டு வசதி ஆகிய உட்கட்டமைப்புகளில்
உள்ள குறைவைப் போக்க தொடர்ந்து திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி தமிழ்நாடு நீட்டித்த பொருளாதார வளர்ச்சியைப் பெற வழிவகை செய்யப்படும்.
* கடந்த ஆட்சி காலத்தில் மின் பற்றாக்குறையினால் இம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சி
வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மாநிலத்தின் மின் துறையை சீரமைத்து தமிழகத்தை உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்.
எதிர்கால கூடுதல் தேவையை எதிர்நோக்கி நீண்ட கால மின் செயல்முறை திட்டங்கள் வகுக்கப்பட்டு தொழில் துறைகள் மற்றும் பிற துறைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
உடனடித் தீர்வாக, சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்துதல், தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்பைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒரு நம்பகத்தன்மையுள்ள மாற்று எரிபொருள் ஆதாரமாக மரபுசாரா எரிசக்தியான காற்று, சூரிய ஒளி மற்றும் உயிரி எரிபொருள் மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக தனியாக ஒரு கொள்கையை இந்த அரசு வகுக்கும்.
மோனோ ரயில்...
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டர் அளவுக்கே
திட்டமிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவு அதிகமாக உள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர மிகுந்த காலமாகும்.
எனவே, இந்த அரசு சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்தும்.
முதற்கட்டமாக 111 கிலோமீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக 300 கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தப்படும்.
கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக்
குறைக்க மோனோ இரயில் திட்டம் செயல்படுத்த உரிய
ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
*
நாடாளுமன்றத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவை விரைவில் கொண்டு வரவேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.
*
கிராமப்புரங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, 24 மணிநேர மருத்துவ வசதி, தரமான கல்வி, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய சாலைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த அரசு பாடுபடும்.
*
சோதனை அடிப்படையில் கிராமப்புரங்களில் சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தும் தெருவிளக்குகள் அமைக்க இந்த அரசு முயற்சி மேற்கொள்ளும்.
* தமிழகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும்,
40 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கக்கூடிய வகையில் சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாலிதின் பைகளுக்கு தடை...
*
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க இந்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறப்பு தகவல் கல்வித் திட்டம் தொடங்கப்படும்.
*
முதன்முறையாகவோ அல்லது மறு சுழற்சி மூலமோ தயாரிக்கப்படும் 60 மைக்ரான் மற்றும் 8ஒ12 அளவுக்குக் குறைவான பாலிதின் பைகளுக்கு தடை விதிக்கப்படும். இந்திய தர நிர்ணயக் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான மறுசுழற்சிமுறை கடுமையாக ஒழுங்கு முறைபடுத்தப்படும்.
*
அரசு அலுவலர்கள் சுதந்திரமாகவும், ஊக்கமுடனும் செயல்பட உரிய சூழ்நிலையை ஏற்படுத்தித்
தந்தால்தான் அரசின் திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட இயலும் என இந்த அரசு கருதுகிறது.
இலங்கைத் தமிழர்கள்..
இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திலேயே கௌரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த முகாம்களில் தரமான இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை
செய்து தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான
சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
இலங்கைப் போரினால் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மாண்டு போன நிலையில்
மீதமுள்ள இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் அவர்கள் சொந்தப் பகுதிகளிலேயே மறுவாழ்வு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துமாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.

Source -Vikatan Magazine

விலைவாசியை கட்டுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!


விலைவாசியை கட்டுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!
சென்னை, ஜூன் 3,2011
விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில், 'விலை கட்டுப்பாட்டு நிதி'யை உருவாக்கி, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் உரையில் வெளியான அறிவிப்பு:
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் துயரத்தைப் போக்க இந்த அரசு எடுத்துவரும் உறுதியான முயற்சிகளுக்கு இது ஓர் உதாரணமாகும்.
பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப உத்திகள் புகுத்தப்பட்டு குடும்ப அட்டைகள் பராமரிப்பு, பொருட்களின் நகர்வு, அத்தியாவசியப் பொருட்களின் ஒதுக்கீடு, விநியோகங்கள் போன்றவற்றைக் கண்காணித்தல், கடத்தலைத் தடுத்தல் ஆகிய பணிகளை இந்த அரசு செவ்வனே செய்யும்.
விலைவாசியைக கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்துவதுடன் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை விற்பனையில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு
கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.
ரூபாய் 50 கோடி ஒதுக்கீட்டில் 'விலை கட்டுப்பாட்டு நிதி' உடனடியாக ஏற்படுத்தப்பட்டு வட்டியில்லாக் கடனாக கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கி அத்தியாவசியப் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அத்தகைய பொருட்களை உற்பத்தி மையங்களில் நேரடியாக வாங்கி அடக்க விலையிலேயே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும்.
நீண்டகாலத் திட்டமாக உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்து அதன் மூலம் தேவை மற்றும் வழங்கலுக்கு இடையே உள்ள
இடைவெளியை நீக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


Source - Vikatan Magazine

சமச்சீர் கல்வி பாடத்திட்டம்:மறுஆய்வு செய்ய அரசு முடிவு


சமச்சீர் கல்வி பாடத்திட்டம்:மறுஆய்வு செய்ய அரசு முடிவு
சென்னை, ஜூன் 3,2011
சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் உரையில் சமச்சீர் கல்வி பற்றி வெளியான அறிவிப்பு:
தரமான பள்ளிக் கல்வியை இலவசமாக அனைவருக்கும் வழங்குவது இந்த அரசின் முக்கிய
கொள்கைகளில் ஒன்றாகும்.
முக்கிய கல்வி சார்ந்த குறியீடுகளான பள்ளிச் சேர்ப்பு விகிதத்தை அதிகரித்தல், இடை நிற்றலைக் குறைத்தல் போன்றவற்றுடன் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக் கல்வியின் தரத்தைக் குறைத்து அதனால் மாணவர்களின்
எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை இந்த அரசு விரும்பவில்லை.
பள்ளிக் கல்விமுறை மாணவர்களின் செயல்முறை அறிவாற்றலையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்க இந்தக் கல்வி முறை வகை செய்யவேண்டும்.
ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டம் இந்த நோக்கத்தை எய்த போதுமானதாக இல்லை.
எனவே சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.


Source - Vikatan Magazine

கலைஞர் காப்பீடு, கான்கிரீட் வீடு திட்டங்கள் ரத்து


கலைஞர் காப்பீடு, கான்கிரீட் வீடு திட்டங்கள் ரத்து
சென்னை, ஜூன் 3,2011
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, அவற்றுக்கு மாற்றான திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் உரையில் வெளியான அறிவிப்பு:
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல குறைபாடுகளுடன் உள்ளது.
கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில் அத்திட்டத்தில் ஒரு அலகிற்கு வழங்கப்படும் நிதியான ரூபாய் 75 ஆயிரம் மிகக் குறைந்த அளவாக உள்ளது. இதனால் ஏழை எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர்.
இதன் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, இத்திட்டத்தினை கைவிடுவதென இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் 'சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்' தொடங்கப்படும்.
இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 இலட்சம் செலவில் அரசே வீடு கட்டிக்
கொடுக்கும். அதே போல், நகர்ப்புர ஏழைகளின் வீட்டுவசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும்
திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன வீடுகள்
வழங்கப்படும்.
காப்பீட்டுத் திட்டம்..
அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய தரமான மருத்துவச் சேவையை வழங்குவதே இந்த அரசின்
நோக்கமாகும். தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.
அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த
இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தும். நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் 24 மணி நேரம் செயல்படும் மையங்களாக மாற்றியமைக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவை ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய
மருத்துவ நகரங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
மருத்துவத் துறையில் தனியார் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில் தெளிவான
வழிமுறைகளை இந்த அரசு வகுக்கும்.

Source - Vikatan Magazine

பெரும் கனவான சமச்சீர் கல்வி!

பெரும் கனவான சமச்சீர் கல்வி!

சமஸ்
படம் : ஆ.வின்சென்ட் பால்
ச்சர்யமாகவும், அதைவிட அதிர்ச்சியாகவும் இருக்கிறது, நம் அரசியல்வாதிகளால் மிகப் பெரிய விஷயங்களில்கூட எவ்வளவு சர்வ சாதாரணமாகவும் வேகமாகவும் முடிவுகளை எடுக்க முடிகிறது என்பதைப் பார்க்கும்போது!
 புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே சமச்சீர் கல்வியை நிறுத்திவைப்பது உட்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன, அதிக விவாதம் இல்லாமலேயே!
ஒரு பாடத் திட்டம் என்பது வெறும் புத்தகங்கள் அல்ல. ஒரு தலைமுறையின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருவி. ஆனால், நாம் எந்த அளவுக்கு அதைப் புரிந்து கொண்டு இருக்கிறோம்?
சமச்சீர் கல்வி என்பது பெரும் கனவு! உலகிலேயே விசித்திரமான கல்வி முறை கடைப்பிடிக்கப்படும் இடம் தமிழகம்தான் என்றால், நீங்கள் நம்புவீர்களா? ஆம், உலகில் தமிழகத்தைப்போல, ஒரே அரசின் கீழ் நான்கு வகையான கல்வி வாரியங்கள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும்கூட மாநில வாரியம் (ஸ்டேட் போர்ட்), மத்திய வாரியம் (சி.பி.எஸ்.இ.) என இரு வாரியங்கள்தான் செயல்படுகின்றன. நிறையக் காசு உள்ளவனுக்கு ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள், கொஞ்சம் குறைவாக உள்ளவனுக்கு மெட்ரிக் பள்ளிகள், அடுத்த நிலையில் உள்ளவனுக்கு ஓரியன்டல் பள்ளிகள், ஒன்றுக்குமே வழி இல்லாதவனுக்கு அரசுப் பள்ளிகள் என்னும் 'சமூக நீதி’யை நாம் மட்டுமே கடைப்பிடிக்கிறோம். இந்த அநீதியை மாற்றவே சமச்சீர் கல்வி கோரிக்கை முளைத்தது.
தி.மு.க-வின் சாதனையா?
சமச்சீர் கல்வி என்பது தி.மு.க-வின் கண்டுபிடிப்பு அல்ல. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வியாளர்கள் வலியுறுத்தி வரும் 'பொதுப் பள்ளிமுறை’ கோரிக்கை அது. கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கையைச் சேர்க்கச் சொல்லி பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்தனர் கல்வியாளர்கள். பொதுப் பள்ளிமுறை கோரிக்கை தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் 'சமச்சீர் கல்வி’ என்ற பெயரில் இடம் பெற்றது இப்படித்தான்!
ஆட்சிக்கு வந்ததும் எழுத்தாளர்கள், கல்வியாளர்களின் தொடர் வலியுறுத்தல்களால், சமச்சீர் கல்வி குறித்து ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரனை நியமித்தது தி.மு.க. அரசு. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளைப் பலப் படுத்துவதில் தொடங்கி, தாய் மொழிக் கல்வி வரை 109 பரிந்துரைகளோடு அரசு கொண்டுவர வேண்டிய சமச்சீர் கல்விமுறைக்கு வழிகாட்டினார் முத்துக்குமரன். அந்த அறிக்கையை வாங்கவே தயக்கம் காட்டிய அரசு, கடைசியில் அதில் இருந்த 'எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம்’ என்கிற பரிந்துரையை மட்டும் ஏற்றது.
நல்ல சூழலில் பள்ளிக்கூடங்கள், போதுமான அளவுக்கு ஆசிரியர்கள், தாய் மொழி வழிக் கல்வி, குழந்தைகளுக்கு ஏற்ற மொழியில் பாடத்திட்டம், குழந்தைகள் பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கற்பித்தல் முறை, எல்லோருக்கும் ஒரே கல்வி என்னும் சமச்சீர் பெரும் கனவு, வெறுமனே ஒரே வகையான பாடப் புத்தகங்கள் என்பதாகச் சுருங்கிப்போனது!
நல்ல தொடக்கமும் மோசமான முடிவும்
தமிழகத்தில் காலங்காலமாக அரசுக்கு வேண்டிய - கட்டுப்பெட்டித்தனத்திலும் பிற் போக்குத்தனத்திலும் ஊறிய - பேராசிரியர்களே பாடப் புத்தகங்களை உருவாக்குபவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்படும் முறையே கடைப்பிடிக்கப்பட்டது. முதல்முறையாக சர்வதேச அணுகுமுறையில், கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு என்று பல்வேறு துறையினரும் பங்கேற்ற பாடத்திட்டத் தயாரிப்பு, சமச்சீர் பாடப் புத்தகங்கள் மூலம் சாத்தியமானது. இறுக்கமான வடிவமைப்பு மாறியது. குழந்தைகளிடம் வாசித்துக் காட்டி, அவர்களுடைய புரிதலுக்கு ஏற்ப மொழிநடை மாற்றப்பட்டது. ஓர் உயரிய இடத்தை நோக்கி நகர்ந்தன நம் பாடப் புத்தகங்கள். ஆனால், கடைசிக் கட்டத்தில் வழக்கமான அரசியல் உள்ளே புகுந்தது. ஒரு மூத்த அமைச்சர் சொன்னார் என்பதற்காக, 'நாட்டுப்புறம்’ என்கிற சொல் 'நாட்டுப்புரம்’ என்பதாக பாடப் புத்தகங்களில் மாறியது ஓர் உதாரணம். கட்டுப்பெட்டிப் பேராசிரியர்கள் உள்ளே நுழைய, எழுத்தாளர்கள் வெளியேறினர். சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் என்ற பெயரில், பழைய ஆட்களின் பல்லவியே புத்தகங்களில் நிரம்பியது. ஆனாலும், சில மாற்றங்கள் நடந்து இருக்கின்றன என்கிற குறைந்த பட்ச ஆறுதல் இருந்தது. அதையும் இப்போது குலைத்து இருக்கிறது புதிய அரசு!
கல்வித் துறையில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?
தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகப் பாடப் புத்தகங்கள் திருத்தப்படுவது இது முதல் முறை அல்ல. சொல்லப்போனால், அது இங்கு ஓர் அரசியல் கலாசாரமாகவே வளர்ந்துவிட்டது. காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாம் மாணவர்களுக்கு எதைத் தரப்போகிறோம் என்பதே கேள்வி!
முன்பு புளூட்டோ ஒரு கோள். இப்போதோ ஒரு குறுங்கோள். அதாவது, அது ஒரு கோளே இல்லை. 2006-ல் தயாரிக்கப்பட்ட நம்முடைய பழைய பாடப் புத்தகங்கள் புளூட்டோவையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கோள்கள் என்கின்றன. மீண்டும் பழைய புத்தகங்களைக் கொடுப்பதன் மூலம் புளூட்டோவும் ஒரு கோள் என்று கற்பிக்கப்போகிறோமா?
பழைய பாடப் புத்தகங்கள் பால் வீதியை (மில்கி வே கேலக்ஸி) 'பால்வெளி அண்டம்’, 'பால்வளித் திரல்’ என்றெல்லாம் குறிப்பிட்டுச் சிதைத்தன என்றால், புதிய பாடப் புத்தகங்கள் காமராஜரை 'அரசரை உருவாக்குபவர்’ (கிங் மேக்கர்) என்று கொல்கின்றன!
பன்னெடுங்காலமாக தாய் மொழி வழிக் கல்விக்காகப் பேசிக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் குழந்தைகளுக்குத் தாய் மொழியில் அவர்களுக்கு ஏற்ற எளிய மொழி நடையில் இன்னும் ஒரு பாடப் புத்தகத்தைக் கூடத் தர முடியவில்லை நம்மால்!  
தமிழக அரசுக்கு கல்வித் துறை சார்ந்து இப்படி நிறைய சவால்கள், பணிகள் காத்துக் கிடக்கின்றன. 'சமச்சீர் கல்வி’ என்பதற்குப் பாடப் புத்தகங்களைத் தாண்டி முழு அர்த்தம் கொடுப்பதும்கூட அவற்றுள் முக்கியமான பணிகளில் ஒன்று. ஆனால், அந்தப் பணிகளை முன்னெடுக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு கல்வித் துறையை அணுகும் முறை தேவை. அரசியல் பின்புலத்தோடு, கல்வித் துறையை ஆக்கிரமித்து இருக்கும் அதிகார வர்க்கத்தை அகற்றுவதில் இருந்துதான் பணியை தொடங்க வேண்டும்!
முதல்வரே! உங்களிடம் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். ஆனால், நிச்சயம் நாங்கள் எதிர்பார்த்ததில் இது இல்லை!

Source - Vikatan Magazine

''அம்மாவைத் திட்ட வேண்டாம் எனச் சொன்னதே கலைஞர்தான்!''

''அம்மாவைத் திட்ட வேண்டாம் எனச் சொன்னதே கலைஞர்தான்!''

வடிவேலு வெளியிடும் தேர்தல் ரகசியம்
இரா.சரவணன், படங்கள் : வீ.நாகமணி
தி மனிதனின் அடையாளமான ஹோமோசேப்பியன்ஸை அச்சு அசலாக வார்த்ததுபோல் 'உர்’ரென்று இருக்கிறார் வடிவேலு. ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகும் 'உலகம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடிக்கும் 25 வேடங்களில், இந்த ஹோமோசேப்பியன்ஸ் வேடமும் ஒன்று. ''எப்படி இருக்கு நம்ம கெட்டப்பு? இப்போ வரைக்கும் ஏழு கெட்டப்பு ரெடியாகி இருக்கு. மற்ற கெட்டப்பும் தயார்னா... தாரைத் தப்பட்டைகள் கிழியப் பயணத்தைத் தொடங்கிர வேண்டியதுதான்!'' - அரசியலில் எத்தகைய சூட்டை ஏற்படுத்தினோம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, பகபகவெனச் சிரிக்கிறார் வடிவேலு.
 கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர். 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை அவருடைய அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!
''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''
''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''
''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''
''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க. 'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்த ரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம். வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன். அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்? வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''
''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங் களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''
''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன். நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''
''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''
''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''
''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''
'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார். அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?
தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா? 'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க. அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''
''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''
''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன். பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''
''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''
''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க. நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''
'' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''
''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க? கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு பதில் சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது? எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''
''அரசியலில் அடுத்த கட்டம்?''
''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!''


Source - Vikatan Magazine

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!


பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள் பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.
எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?

கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி.,  போன்ற படிப்பு களுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன் வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.
எப்படி வாங்குவது?
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?
கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
எப்படி கடன் வாங்குவது?
கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
எப்போது கடனை திரும்பக் கட்டுவது?
படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.
விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்!
கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
இருப்பிடச் சான்றிதழ்.
பள்ளி மாற்று சான்றிதழ்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம்  உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை!
எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன் தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும் எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.
ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.
வரிச் சலுகை!
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம்
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.
'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் அதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.
கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது. படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஒருவர்.
- செ.திருக்குறள் அரசி

* நாணயம் விகடன் 29-மே-2011

Source - Vikatan Magazine

Thursday, June 2, 2011

இழி பிறப்பா இந்தியன்..?

இழி பிறப்பா இந்தியன்..?

தொடரும் இன வேற்றுமை வன்முறைகள்!
ந்தியர் என்ற ஒரே காரணத்தால், அமெரிக்காவில் இன்னும் ஓர் அடி விழுந்திருக்கிறது நமக்கு!
கிருத்திகா... 18 வயதுப் பெண். இந்தியத் தூதரக அதிகாரியின் மகள். குயின்ஸ் ஜான் ப்ரவுனி உயர் நிலைப் பள்ளியில் படித்தார். கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று அவருக்கு ஆரம்பித்தது பிரச்னை!
நியூயார்க் நகர அரசாங்கத்தால் திடீரெனக் கைது செய்யப்பட்டார். 'அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆபாசமான மின்னஞ்சல்கள் அனுப்பியதால் கைது!’ என்று காரணம் சொன்னார்கள். தனது தரப்பு வாதங்களை அவர் முன்வைப்பதற்கு முன்பே, அவருக்கு அடுத்தடுத்து நடந்தேறிய கொடுமைகள், அனைத்து இந்தியர்களையும் நிலை குலையவைப்பவை!
பள்ளியில் கிருத்திகா மேல் புகார் வந்ததை அடுத்து, விசாரணைகூட செய்யாமல் அவர் கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டி, தீவிரவாதியைப்போல இழுத்துச் சென்று இருக்கிறார்கள். நியூயார்க் நகரக் காவல் நிலையத்தில் 24 மணி நேரம் சிறை வைத்து, எய்ட்ஸ் நோயாளிகளுடனும் பாலியல் தொழிலாளர்களுடனும் அவரைக் கட்டாயமாகத் தங்கச் செய்தனர். வீட்டுக்குத் தொலைபேசியில் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்​பட்டது.
மேலும், அந்தச் சிறையில் ஒரே ஒரு கழிவறை. அதை மற்ற கைதிகள் ஆக்கிரமித்துக்கொள்ள... கிருத்திகாவுக்கு சிறுநீர் கழிக்கக்கூட இடம் இல்லை. தனது நிலையைக் காவலர்களிடம் சொன்னபோதும், அவர்கள் ஏற்றுக்கொள்ள​வில்லை.
இத்தனை சித்ர​வதைகளையும் அனுபவித்த கிருத்திகா, தவறு எதையும் செய்யவில்லை என்பதுதான் அதிர்ச்சி!
ஆபாச மின்னஞ்சல் என்பது, யாரோ ஒரு சீன மாணவன் செய்த தவறு! ''அந்தச் சீன மாணவன் பற்றி பள்ளிக்கும் தெரியும். ஆனால், என்ன காரணத்தாலோ அவனைக் கைது செய்யாமல், எந்த ஒரு ஆதாரமும் இன்றி என்னை ஏன் கைது செய்தார்கள்?'' என்பதுதான் கிருத்திகாவின் வேதனைக் கேள்வி. கிருத்திகா, இதை ஒரு வழக்காகவே தொடர்ந்திருக்கிறார் நியூயார்க் நீதிமன்றத்தில்!
மன்ஹாட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் திபாஷிஷ் பிஸ்வாஸின் மகள்தான் கிருத்திகா. 1961-ல் வியன்னா தூதரக உறவுகள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட சர்வதேசச் சட்ட உடன்படிக்கையின் கீழ், இந்தியத் தூதர் மற்றும் அவர் குடும்பத்தினர் அயல் நாட்டுக் காவலர்களால் சிறைபிடிக்கப்படாமல் இருப்பதற்கான தகுதி உண்டு. அதுபற்றி காவல் துறையினரிடம் கிருத்திகா சொன்னபோது, 'அந்த விதி, தூதரகத்தில் பணியாற்றுபவருக்குத்தானே தவிர, குடும்ப உறுப்பினர்களுக்குப் பொருந்தாது’ என்றனராம்.
மேலும், கிருத்திகா கைது செய்யப்பட்டதை, அவரது தந்தைக்கோ அல்லது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பிரபு தயாளுக்கோகூட தெரிவிக்கவில்லை. 'அயல்நாட்டினர் ஒருவரை 24 மணி நேரம் சிறையில் வைத்திருக்கக் கூடாது’ என்கிற அடிப்படையையும் நியூயார்க் நகர காவலர்கள் மீறி இருக்கிறார்கள். ''குற்றத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுடன் இருக்க வேண்டும் என்றும் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள்!'' என்கிறார் கிருத்திகா.
அடுத்த சில நாட்களில் கிருத்திகா, சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்களின் உதவியுடன் தான் குற்றம் அற்றவர் என்று தன் பள்ளிக்கு நிரூபிக்க... பள்ளி மற்றும் மாகாண சிறைப் பதிவேடுகளில் இருந்து அவர் மீதான அவதூறுகள் சட்டப்படி நீக்கப்பட்டன. ஆனாலும் அந்தப் பள்ளி, கிருத்திகாவை ஒரு மாதம் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
''குற்றவாளிகள்தானே சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நான் என்ன குற்றம் செய்தேன் அங்கு செல்ல?'' என்று கிருத்திகா எழுப்பிய கேள்விக்கும், பள்ளியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. ஒரு மாதம் முடிந்த நிலையில், 'தன் மீது களங்கம் ஏற்படுத்தியதற்காக நியூயார்க் அரசு 1.5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கடந்த 25-ம் தேதி புதன்கிழமை அன்று நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் கிருத்திகா.
நடந்த விஷயங்கள் இப்படி இருக்க, ''1963 வியன்னா தூதரக விவகாரங்கள் கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, அமெரிக்க அதிகாரிகள் சொல்வது சரிதான். அமெரிக்காவாக இருந்ததால், ஒரே ஒரு நாளில் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதுவே இந்தியச் சிறையில் ஓர் அமெரிக்கப் பெண்ணோ அல்லது ஓர் இந்தியப் பெண்ணோ அகப்பட்டு இருந்தால், அவளின் நிலை என்ன என்று யோசித்துப் பாருங்கள்!'' என்று எல்லாம் இணைய அரட்டைக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து உள்ளன!
அமெரிக்காவில் இந்தியத் தூதரக அதிகாரியின் மகளுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண பிரஜைக்கு இனி என்னவெல்லாம் நடக்குமோ. இந்த விவகாரத்தில் இன்னும் வாய் திறக்காத இந்திய அரசைப்பற்றி என்ன சொல்வது?!
- ந.வினோத்குமார்

Source - Vikatan Magazine

கேரியர் அன்லிமிடட் -1 : சவால்களை வரவேற்போம்!

கேரியர் அன்லிமிடட் -1 : சவால்களை வரவேற்போம்!

- பிரிட்டோ

(எவ்விதப் பணிச் சூழலைக் கொண்ட இளைஞர்களையும் பக்குவப்படுத்த முனையும் வழிகாட்டித் தொடர்)
நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும்  உங்களால் எப்போதும் சரியாக கண்டறிய முடிகிறதா?

'ஆம்' என்று சொன்னால், கங்கிராட்ஸ்... நீங்கள் நன்றாக பொய் சொல்கிறீர்கள்!
உண்மை என்னவென்றால், பெரிய பெரிய (அரசியல்/தொழில்) தலைவர்கள் கூட  சில நேரம்  தடுமாறும் இடம் அது.
சரியான முடிவு எடுக்கும் திறன், அனுபவத்தால் வருகிறது. அந்த அனுபவமோ, தவறான முடிவு எடுத்ததால் வருகிறது.
சவால்களை வரவேற்போம்..!
பிரபல சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம். இதுவரை அவர்கள் சந்தித்திராத புதுப் பிரச்னை. தீர்வு காண வேண்டும்.
ஒரு கஸ்டமர் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடைக்கு போய் இவர்கள் தயாரித்த சோப்பை வாங்கி இருக்கிறார். சோப்பு பாக்கெட்டில் சோப்பு இல்லை. காலியாக இருந்திருக்கிறது. கம்பெனிக்கு போன் செய்து புகார் செய்துவிட்டார்.
"ப்ச்.. அவர் பொய் சொல்றார்பா," என்று இதை அலட்சியமாக ஒதுக்கி விட்டு, சமோசா சாப்பிட போகவில்லை அந்த சோப்பு கம்பெனி நிர்வாக அதிகாரி. மீட்டிங் கூட்டினார்.
சகலமும் இயந்திரமயம் ஆக்கப்பட்ட சோப்பு தொழிற்சாலை அது. சோப்பு தயாராகி, வரிசையாக வந்து, தானாகவே பேக் செய்யப்பட்டு தானாகவே பெரிய அட்டைப் பெட்டிகளில் அடுக்கப்படும்படியாக இருந்தது அவர்கள் இயந்திர அமைப்பு.
தயாரித்து பேக் செய்யப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு சோப்பு பாக்கெட்டிலும் சோப்பு இருப்பதை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்று முடிவு செய்யத்தான் இந்த அதிகாரிகளின் அவசர மீட்டிங்.
மீட்டிங்கில், புதிதாக வேறு பேக்கிங் இயந்திரங்கள் வாங்கலாம், சோப்புகள் அடுக்கிய அட்டைப் பெட்டியை கடைகளுக்கு அனுப்பும் முன் வேலையாட்களை வைத்து எடை போட்டு பார்த்து அனுப்பலாம் உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக புதிதாக வேலைக்கு எடுக்கப்பட வேண்டிய ஆட்களும் செலவினங்களும் பரிசீலிக்கப்பட்டன.
இறுதியில் அங்கே வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி சொன்ன யோசனையை அமல்படுத்தினார்கள். என்ன அது?
சோப்பு பாக்கெட்டுகள் அட்டைப்பெட்டியை அடையும் இடத்துக்கு அருகில் ஒரு மேசையை வைத்தார்கள். அதன் மீது ஒரு பெரிய சைஸ் டேபிள் ஃபேனை வைத்தார்கள். பாக்கெட்டில் சோப்பு இல்லாவிட்டால், காலி பாக்கெட் காற்றில் பறந்துவிடும். சோப் இருக்கும் பாக்கெட்டுகள் மட்டுமே அட்டைப் பெட்டியை வந்தடையும்.
மிக எளிமையான யோசனை. ஆனால் பெரிய செலவில்லாமல், பிரச்னைக்கு தீர்வு தருகிறது.
இந்த யோசனை ஏன் மற்ற அதிகாரிகளுக்கு உடனே தோன்றவில்லை..?
காரணம், அவசரம்.
பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதற்றமே அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது.  அவசரப்பட்டு புது இயந்திரமோ, வேலையாட்கள் நியமனமோ செய்திருந்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?
பல நேரங்களில் பிரச்னைக்கான தீர்வு மிக எளிதானதாக இருக்கும். பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.
பிரச்னை என்பது ஒரு சவால். அதற்கான தீர்வு தேடுவதை நம்மை மேம்படுத்திக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், தினம் தினம் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்கலாம்.
சவால்கள் கூடக் கூட உங்களது தீர்வு காணும் திறன் கூடும். புத்தி கூராகும்; வாழ்க்கை நேராகும்.
உங்களுக்கான சவாலை "கமான் கமான்" என வரவேற்று எதிர்கொள்ள நீங்கள் தயாரா?


Source - Vikatan Magazine

கீதை காட்டும் பாதை 8 : ஆசையிலிருந்து அழிவு வரை..!

கீதை காட்டும் பாதை 8 : ஆசையிலிருந்து அழிவு வரை..!

- என்.ணேசன்

நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து விடுகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.
"புலன்களுக்கான சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அவற்றில் பற்றுதல் எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது; ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது.  மனமயக்கத்தால் மறதி ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி பாழானால் மனிதன் அடியோடு அழிகிறான்."
எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உயர்வுக்கும் அழிவுக்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே. புலன்கள் வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு சக்தி இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன் வழிப் பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது இயற்கை. அவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை அடைய ஆசை பிறக்கிறது. இந்த தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று விடுகிறது.
விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான். தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான்.
எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.
மலை மீதிருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீழே வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில் இருந்து தள்ளி விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம். தள்ளி விட்ட பின் கல்லைத் தடுக்க முயற்சிப்பது வீண். கல் தன் பயணத்தை முடித்தே நிற்கும். எனவே, கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள் எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீது கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கிறது.
புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே மனிதனின் துன்பங்களிற்குக் காரணம் என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே பூர்த்தியடையாத, திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே சந்திக்கிறான் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் விளக்குகள் எரியும் போது திருடர்கள் உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத இருட்டு வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம் கூறுகிறார். இங்கு விழிப்பு உணர்வு தான் விளக்காக உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக சித்திரிக்கப்படுகின்றன. வீட்டு எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள் நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.
விழிப்பு உணர்வு என்பது நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக இருக்க முடியும். அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க ஆரம்பிக்கும் முதல் கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள் பலப்படும் முன்னர் அவற்றை அழித்து விடுகின்றான். களைகளை முளை விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை வேர்விட்டு பலமடைந்த பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான் எண்ணங்கள் தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.
ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார். "புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவனது அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறது." இது மிக அழகான உதாரணம். புயல்காற்றில் சிக்கிய படகு எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல ஆசைவழி சென்ற பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறான்.
கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும் கூறுகின்றார். "சுக்கானில்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன"
இந்த படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை படகும், கப்பலும். அந்தப் பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப் பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அப்படி இருக்கையில் ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம் பயணத்தின் வழி மாறி அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். 'ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே' என்று கவிஞர் பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி செல்லாமல் சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள ஆரம்பித்த அந்த இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத காரியமாகி விடும்.
சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக் கூறுகிறார். "மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை.
அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்".
ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம் ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை உதறி விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும் போது, தூண்டிலை வீசும் போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன் மூலமாகவே ஒருவன் துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகக் கூறுகிறார்.
சிலசமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்துக்கும், அழிவுக்கும் மூலகாரணமாகி விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப் பொன்மானைக் கண்டு ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின் காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும் துக்கத்தில் ஆழ நேரிட்டது. சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா வலிமைகளையும் போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.
மேலும் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து, இனி போதும் என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக இன்பங்களை பல்லாண்டுகள் சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய  இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல காலம் சுகங்களை அனுபவித்தும் நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை இல்லை என்பதை இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான யயாதி.
எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும் சக்தியை விட அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து எல்லைக்கு வந்த போது அங்கிருந்த துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும், அமைதியையும், சாந்தியையும் கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது.
கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து இமயம் வரை கடந்து வந்த இடங்களையெல்லாம் வென்ற மாவீரன். அவன் வாழ்நாள் நீடித்திருந்தால் உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த துறவிகளிடம் கண்ட போது அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு உண்மையான வெற்றி எது என்று புரிந்திருக்கும். இந்த உண்மையான வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும் நிலைத்த அறிவுடையவனாலேயே பெற முடியும்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை - 7 : நிலைத்த அறிவுடையவன் யார்?

Tuesday, May 31, 2011

தாக்குப் பிடிப்பாரா உளவுத்துறை ராமானுஜம்?

தாக்குப் பிடிப்பாரா உளவுத்துறை ராமானுஜம்?

ளவுத் துறையின் டி.ஜி.பி. என்கிற மகுடத்தை ராமானுஜத்துக்கு சூட்டி உள்ளார் ஜெயலலிதா. கூடவே, காவல் துறையின் நம்பர் ஒன் பதவி (சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி)யையும் கூடுதலாக கவனிக்கும்படி உத்தரவு. கடந்த சில பல ஆண்டுகளாக உளவுத் துறை அரசியல் சாயம் பூசப்பட்டுக்கிடந்தது. அந்த இடத்துக்கு ராமானுஜம் வந்திருப்பது, அந்தக் களங்கத்தை ஓரளவாவது துடைக்கும் என்கிறார்கள் காவல் துறையில்!
தமிழக போலீஸின் உரை கல் என்று அழைக்கப் படுபவர் ராமானுஜம். 33 வருடங்களாகப் பணியில் இருக்கும் இவர், உளவுத் துறையில் 14 வருடங்கள் பணி புரிந்த அனுபவசாலி. 2000-ம் ஆண்டில், சென்னையில் சிறைத் துறைத் தலைவர் அலுவலக வாசல் உட்பட ஐந்து ஊர்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வைத்திருந்ததை முன்னரே கண்டறிந்து, உரிய நேரத்தில் துப்பு கொடுத்தவர். தனி நாடு கோஷங்களை முழங்கிய பல்வேறு தீவிரவாதக் குழுக்களை தலை தூக்கவிடாமல் அடக்கியதில் ராமானுஜத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டரால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரத் திட்டம் வகுத்தவரும் இவர்தான்!
ஆரம்பத்தில் வங்கி அதிகாரியாகத் பணியைத் துவக்கியவர் ராமானுஜம். சவால் எதுவும் இல்லாமல் வாழ்க்கை நகர்வதை ரசிக்காமல்,  ஐ.பி.எஸ். தேர்வு எழுதினார். 1978-ம் வருட பேட்ச்சில் 'ஆல் ரவுண்டர்’ விருது பெற்று தமிழகக் காவல் பணியில் சேர்ந்தார்.
தன்னுடன் பணிபுரியும் அனைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்க விரும்புவார். இக்கட்டான தருணங்களில், கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் ஒப்பிட்டு, 'இதுதான் சரியான தீர்வு' என்று ஆணித் தரமாக சொல்வார். அதற்கான ஆதாரங்களையும் தன் லேப்டாப்பில் தயாராக வைத்திருப்பார். 'அவர் மூளை ஒரு கம்ப்யூட்டர் என்றால், அவரது லேப்-டாப் ஒரு தகவல் லாக்கர்!' என்று வர்ணிக்கிறார்கள், அதி காரிகள். ''தனிமை விரும்பி. லேட்டரல் திங்கிங் மேன். எப்போதும் ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டை யோசித்துக்கொண்டே இருப்பார்...'’ என்கிறார்கள் சக ஊழியர்கள்.
வார்த்தைகளை அளந்து பேசும் ராமானுஜம், கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அவர் சிரித்துப் பார்த்த வர்களை, விரல்விட்டு எண்ணலாம். வீட்டுக்குப் போன மறு நிமிடமே, அரசு காரை அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்.  பெரும்பாலும் லேப்-டாப்பில் மூழ்கிவிடுவார். ராமானுஜத்தின் திறமைக்கு உதாரணமாக இரண்டு சம்பவங்கள்: 
* கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது, காட்டுக்குள் தகவல் பரிமாற்றத்துக்காக சென்ற ஒரு நபர் கொண்டுபோன பார்சலில் ஜி.பி.எஸ். வசதி உள்ள கருவியை ராமானுஜம் ரகசியமாக அனுப்பிவிட்டாராம். இதன்படி வீரப்பனின் நடமாட்டத்தை, வான் வழியாக, ராணுவ வரைபடங்கள் உதவியுடன் கண்காணித்தாராம். ராஜ்குமாரை விடுவித்ததும், வீரப்பன் இருக்கும் இருப்பிடம் பற்றிய துல்லியமான தகவலை அதிரடிப் படையினருக்குத் கொடுத்தாராம். செவ்வந்திமலை என்கிற இடத்துக்கு அருகே போலீஸ் தன்னைச் சுற்றி வளைத்து விட்டதைக் கவனித்த வீரப்பன், சந்தேகப்பட்டு செக் பண்ணியபோது அந்தக் கருவி சிக்க... அதை உடைத்துப் போட்டுவிட்டுத் தப்பிவிட்டான்.
* ஊழல் ஒழிப்புத் துறையில் ராமானுஜம் இருந்தபோது, 'சாதாரணப் பதவியில் உள்ள அரசு ஊழியர்களைப் பிடிப்பதைவிட, உயர் பதவிகளில் லஞ்சம் வாங்குபவர்களைப் பிடியுங்கள்!' என்பாராம். மருத்துவத் துறை இயக்குநர், போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குநர் போன்ற நூற்றுக்கும் அதிகமானவர்களைப் பொறிவைத்து பிடித்தார்களாம். வீடியோ பைரஸி போலீஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், வெளியூர் அதிகாரிகளை மாதாமாதம் சென்னைக்கு வரழைத்துக் கூட்டம் போடுவதாகச் சொல்லி, மாமூல் வசூலிப்பாராம். இதைக் கேள்விப்பட்டு, கூட்டம் நடந்த நாளில், லஞ்ச ஒழிப்பு போலீஸை அதிரடியாக உள்ளே அனுப்பி ரெய்டு நடத்த... மாமூல் கொண்டுவந்த அதிகாரிகள் சுவர் ஏறி குதித்துத் தலை தெறிக்க ஓடினார்களாம். இதுமாதிரி பல உயர் அதிகாரிகளை பீதியில் நடுங்கவைத்தவர்.
ராமானுஜத்தை நன்கு தெரிந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ''நேர்மை, கண்டிப்புக்கு உதாரணமே அவர்தான். உளவுத் துறையின் முக்கிய அதிகாரியாக ராமானுஜம் இருந்த காலகட்டத்தில் வந்த தேர்தல்களில், அப்போதைய ஆளும் கட்சியினர் தோல்வியை சந்தித்தார்கள். இதை ராமானுஜத்தின் தேர்தல் சென்டிமென்ட் என்றுகூட  சொல்வார்கள். ஆனால், அவரது ஸ்டைல், அரசியல் உளவு வேலை பார்க்க மாட்டார். அவருக்கு வரும் தகவல்கள் அடிப்படையில், அலசி ஆராய்ந்து தன் மனதுக்குப் பட்டதை அப்படியே ஆட்சியாளர்களிடம் சொல்லிவிடுவார். அதுவே அரசியல் தலைவர்களுக்குப் பிடிக்காது. தி.மு.கழக ஆட்சியின்போது உளவுத் துறையில் இருந்த காரணத்துக்காக அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, முதல் வேலையாக ராமானுஜத்தைத் தூக்கி, திருச்சி மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாகப் போட்டார்கள். ம.தி.மு.க. தலைவர் வைகோ, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, ஜெயலலிதாவிடம் போய் சேர்ந்ததற்கு ராமானுஜமும் ஒரு காரணம் என்று யாரோ பொறியைக் கொளுத்திப்போட... கடந்த தி.மு.கழக ஆட்சியின் ஆரம்பத்தில் டம்மியான பதவிகளிலே போட்டார்கள். பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவியில் நியமித்தனர். மதுரையில் 'பவர்' ஆன போலீஸ் அதிகாரி ஒருவரின் ஆபீஸில், ரெய்டு நடத்தி லஞ்சப் பணத்தைக் கைப்பற்றிய இன்ஸ்பெக்டரை, திடீரென்று வேறு பிரிவுக்கு மாற்றினார்கள். தன்னைக் கேட்காமல், அந்த இன்ஸ்பெக்டரை மாற்றியதை தட்டிக் கேட்டார். விளைவு, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து டம்மியான துறைக்கு அனுப்பப்பட்டார்.
ராமானுஜத்தின் குணம் முதல்வரின் அணுகுமுறையோடு எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரும் என்று தெரியவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் ஓய்வுபெறப்போகிறார் ராமானுஜம்!'' என்றார்.
'ஹானஸ்ட் குப்புசாமி’ என்று திருச்சி மாவட்ட மக்களிடத்தில் பெயர் வாங்கியவர் ராமானுஜத்தின் அப்பா. ரிட்டயர்டு டி.எஸ்.பி. மகனோ... சின்சியர் டி.ஜி.பி.!
- சூர்யா

Source - Vikatan Magazine

2ஜி... ரத்தன் டாடாவின் கோபமும் நீராவுடனான உரையாடல் பதிவும்! (ஆடியோவுடன்)


2ஜி... ரத்தன் டாடாவின் கோபமும் நீராவுடனான உரையாடல் பதிவும்! (ஆடியோவுடன்)
நவ.27,2010
மத்திய அமைச்சருக்கு 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க விரும்பாததால், இந்தியாவில் விமான சேவை நிறுவனத்தை தொடங்கவில்லை என்று பழைய நிகழ்வை அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் சுட்டிக்காட்டினார் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா.
ஊழலுக்கு எதிராக ஓர் அனுபவ உதாரணத்தைச் சொல்லி, செய்தி சேனல்களை பரபரப்பாக்கிய சூழலில், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான 'டேப்' விவரங்களில், ரத்தன் - நீரா ராடியா இடையிலான உரையாடல் பதிவுகளும் அவுட்லுக் இதழ் மூலம் வெளியானது.
ஒரு வார காலம் அதற்கு பதிலளிக்காத ரத்தன் டாடா, என்.டி.டி.வி.-க்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில், "ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்பது என்ன? அது சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 2ஜி ஸ்பெக்டரத்தை முறைகேடாக சுருட்டிக்கொண்ட மிகப் பெரிய ஊழல். ஆனால் ராடியா நடத்திய உரையாடல்களைக் கொண்டு ஒரு புகைத் திரையை மீடியாக்களைக் கொண்டு உருவாக்குகிறார்கள். ஆனால், உண்மையான ஊழல் இந்தத் திரைக்குப் பின்னால் உள்ளது," என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

 அத்துடன், "அதிகாரப்பூர்வமற்ற உரையாடல் பதிவுகள் வெள்ளமென ஓடுகின்றன. மீடியாக்கள் பைத்தியம் பிடித்து அதன் பின்னால் ஓடுகின்றன. அரசு ஒரு நிலை எடுத்து செயல்பட வேண்டும். தணிக்கையாளரை நியமித்து, தெளிவான புலனாய்வு செய்ய வேண்டும்.  குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அதை விட்டுவிட்டு யார் மீது வேண்டுமானாலும் யாரும் குற்றம்சாட்டாலாம் என்ற நிலை மோசமானது. கேரக்டர் அசாசினேஷனை ஏற்க முடியாது. நீதிமன்றத்தில்  ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை அவர் இந்தியாவின் சட்டங்களின்படி நிரபராதியே," என்றும் கூறினார். ரத்தன் டாடா கூறியுள்ளார்.
*
அவுட்லுக் இதழ் வெளியிட்ட அந்த டேப் விவரங்களில், நீரா ராடியா - ரத்தன் டாடா இடையே நடந்தது என  முன்வைக்கப்படும் உரையாடலின் சில பகுதிகளின் ஆடியோ வடிவமும், அதன் தமிழ் எழுத்து வடிவமும் இதோ...
(டேப் விவரங்களின் படி, இந்த உரையாடல்கள் ஜூன் 11,2009 - நேரம் 15:57:59 மற்றும் ஜூலை 07,2009 - நேரம் 20:29:07 ஆகிய இரண்டு முறை பதிவானவை)
ஆடியோ :


எழுத்து வடிவம்...
நீரா : அண்மைய வதந்தி என்னவென்றால், அவருக்கும் கனிமொழிக்கும் இடையே பழக்கம் இருப்பதே... ஆனால் அது உண்மை இல்லை.
ர.டாடா : யார்?
நீரா : அவருக்கும் கனிமொழிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது அவரது அண்மைய விஷயம்.
ர.டாடா : யாருடைய அண்மைய விஷயம்?
நீரா : டெல்லியின் புதிய வதந்தி.
ர.டாடா : ஓஹ்.. அப்படியா.
நீரா : ராசாவுக்கும் கனிமொழிக்கும் இடையே பழக்கம் இருக்கிறது என்பது உண்மை இல்லை.
ர.டாடா : சரி, ஆனால் பரப்புவது யார்?
நீரா : வேறு யார்.. மாறன், ஆனால்... ராசாவும் தான் காரணம். ஊடகமோ அல்லது வேறு யாராவதோ அவரை சந்திக்கும்போதேல்லாம், கனிமொழிக்காக சாஃப்ட் கார்னர் இருப்பதாக அவர் எப்போதும் கூறி வருகிறார்.. அவரைப் பற்றி பேசும்போதேல்லாம் வெட்கத்தில் அவர் முகமும் சிவக்கிறது...
ர.டா: (சிரிக்கிறார்)
நீரா : .... அவர் (ராசா) மீது அவருக்கு (கனிமொழி) துளியும் ஆர்வம் இல்லை. இருவரையும் இணைத்து வதந்தி கிளப்பப்படுகிறது.
ர.டா : (சிரிக்கிறார்)
நீரா : 'இந்த அனைத்து வதந்திகளுக்கும் நான் என்ன செய்வது?' என்று அவர் இன்று என்னிடம் சொன்னார். நானோ, 'கனிமொழிக்காக சாஃப்ட் கார்னர் இருப்பதாக ஆட்களிடம் சொல்லாதீர்கள். நீங்கள் தான் அவரைக் காக்க வேண்டும்,' என்று அவரிடம் சொன்னேன். 'உங்களுக்கு தெரியுமா, உங்களுக்கு வெட்கத்தில் முகம் சிவக்கிறது,' என்றேன். 'நான் வெட்கப்படுகிறேன் என்று நீங்கள் சொல்ல முடியாது," என்றார் அவர். அதற்கு, "மன்னியுங்கள், உங்கள் கண்களைப் பாருங்கள்," என்று நான் சொன்னேன். எதுவாயினும், அவர் மீது ஒரு பிடிப்பு இருக்கிறது என்ற உண்மையை அவரால் மறைக்க முடியாது. அப்புறம், 'இந்த மனிதரிடம் இருந்து கடவுள் தான் என்னை விலக்கி இருக்க வைக்க வேண்டும், நீரா' என்கிறார் கனி. இதெல்லாம் வாழ்க்கையின் இலகுவான தருணங்கள்.
ர.டாடா : ஓகே...
********
நீரா ராடியா : அப்புறம், இன்னும் மிடில் ஈஸ்டில் தான் இருக்கிறீர்களா?
ரத்தன் டாடா : ஆம், இன்னும் இஸ்ரேலில் தான் இருக்கிறேன்.
நீரா: பட்ஜெட் பரவாயில்லை. ஊரக வளர்ச்சி...
ர.டாடா : ஆம். என்னுடைய கவலையெல்லாம் ராசா இடத்துக்காக மாறன் சண்டையிடுவார் என்பது மட்டுமே. ராசா தடுமாறி விழமாட்டார் என நம்புகிறேன்.
நீரா : இல்லை. அவருக்கு அப்படி நேராது. ஏனென்றால், எந்த அமைச்சரும் ஐகோர்ட் நீதிபதியை மிரட்டவில்லை என்று தலைமை நீதிபதியே அறிக்கை வெளியிட்டுவிட்டார்.
ர.டாடா : ஓ, அப்படியா?
நீரா : இந்திய தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகவே, அது விளக்கப்பட்டுவிட்டது. மேலும், அப்படி நடக்கவில்லை.
ர.டாடா : சரி.
நீரா: அப்புறம், எதாவது ஒரு சூழலில் அப்படியாகிவிட்டால், கனிமொழியைத் தான் அந்த இடத்துக்கு கொண்டு வருவார்களே தவிர, மாறனை அல்ல.
ர.டாடா : சரி.
நீரா : இரண்டாவது சுற்று தொலைத்தொடர்பு யுத்தம் தொடங்கிவிட்டது. மேலும் எவ்வளவு யுத்தம் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
ர.டாடா : ராசாவுக்காக நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள், அப்படி இருந்தும் அவர் இப்படி விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
நீரா : கனியிடம் நான் விவரித்தேன். நேற்று மாலை வீடு திரும்பும்போது, அவரைச் சந்தித்தேன். கனி, இது தான் நடக்கிறது என்று அவரிடம் சொன்னேன். நான் அவரை அழைத்து பேசுகிறேன் என்று கனி சொன்னார். 'சொல்லுங்கள் நீரா, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக என்னால் எப்படி செயல்பட முடியும்,' என்று அவர் (ராசா) என்னிடம் சொன்னார். நானோ, 'ஹலோ மிஸ்டர் ராசா, நீங்கள் கோர்ட்டுக்கு எதிராக நடக்க முடியும். கோர்ட் என்ன சொல்லியதோ அதன்படி நீங்கள் நடக்க வேண்டியதில்லை, ஏனென்றால்... 4.4 (மெகாஹெர்ட்ஸ்) என்பதே உரிமத்தின் பெயர்.. நீதான் பொருள் விளக்க வேண்டும்,' என்றேன். ஆகவே, சின்ன விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது.
ர.டாடா : ஆனால் புதிய அட்டார்னி ஜெனரல் உடன்.. அவர் யாராக இருந்தாலும்...
நீரா : இல்லை, ரத்தன், அது நல்ல விஷயம். நான் ஏன் சொல்கிறேன் என்றால் - அவரால் மட்டுமே அரசியலமைப்பு விஷயத்தை கையாள முடியும். சொலிசிட்டர் ஜெனரல் ஒரு ஜென்டில் மேன் கோபால் சுப்ரமணியம். அவர் தான் பொருள் விளக்கம் தரும் விஷயங்களை பார்த்து வருகிறார். அவரை நான் பார்க்கப் போகிறேன். அவருக்கு மெசேஜ் அனுப்பினேன்.  5.30 - 6க்கு வீட்டில் இருக்கும்போதோ, ஃப்ரீயாக இருக்கும் போதோ அழைக்கிறேன் என்று அவர் சொன்னார். ஆகவே, அவரிடம் விளக்குகிறேன்... உண்மையில், அவர்களை (அனில் அம்பானி குழுமம்) அவர் வெறுக்கிறார். அவர்கள் சொல்வதை அவர் ஏற்பாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அவர் நேர்மையான நபர்... அட்டார்னி ஜெனரலை நுழைக்க ராசா முயற்சிப்பார் என்று நினைக்கிறேன். மத்திய அமைச்சர்கள் குழு தேவையில்லை; அமைச்சரைக் குறிப்பில் வைக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக 3ஜி பற்றி பிரதமரிடம் நேற்று அவர் விளக்கினார்... எல்லா நாடகங்களையும் அவர்கள் நடத்துவார்கள், ஆனால் அடுத்த ஆண்டு மார்ச்சிக்கு முன்பு வரை 3ஜி ஏலம் நடக்காது என்றே நம்புகிறேன். அதற்கு அவர்கள் அவசரப்பட மாட்டார்கள்.
ர.டாடா : அப்படியா..
******

Source - Vikatan Magazine

2ஜி ஸ்பெக்ட்ரம் : ஆ.ராசா - நீரா ராடியா உரையாடல் பதிவு முழுமையாக (ஆடியோவுடன்)


2ஜி ஸ்பெக்ட்ரம் : ஆ.ராசா - நீரா ராடியா உரையாடல் பதிவு முழுமையாக (ஆடியோவுடன்)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம்... அவுட்லுக் இதழ் வெளியிட்ட டேப் விவரங்களில், நீரா ராடியா - ஆ.ராசா இடையே நடந்தது என  முன்வைக்கப்படும் உரையாடலின் முக்கியப் பகுதிகளின் ஆடியோ வடிவமும், அதன் தமிழ் எழுத்து வடிவமும் இதோ...
ஆடியோ: (நான்கு பதிவுகளையும் தொகுத்து ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது)

மே 22, 2009, 09:48:51
நீரா ராடியா : ஹலோ?
ஆ.ராசா : ராசா ஹியர்.
நீரா : ஹாய்! பர்கா தத்திடம் இருந்து இப்போது தான் எனக்கு தகவல் வந்தது.
ராசா : ஆஹ்?
நீரா : பர்கா தத்.
ராசா : அவர் என்ன சொல்கிறார்?
நீரா : பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்றிரவு செய்திக்காக தொடர்பு கொண்டு இருப்பதாக அவர் சொல்கிறார். உண்மையில், அங்கே சோனியா காந்தி சென்றதாக அவர்தான் என்னிடம் தெரிவித்தார். உங்களுடன் அவருக்கு (பிரதமர்) பிரச்னை இல்லை; ஆனால், பாலுவுடன் தான் அவருக்கு பிரச்னை என்று சொன்னார்.
ராசா : ... ஆனால், அதுபற்றி தலைவர் (கருணாநிதி) உடன் விவாதிக்க வேண்டும்.
நீரா : ஆமாம், ஆமாம்.. தலைவருடன் அவர் விவாதிக்க வேண்டும். அவர் தான் சொல்ல வேண்டும்...
ராசா : அது பற்றி காலையில் விவாதிக்கப்படும்... தேவையில்லாம காங்கிரஸ் ஏன்.. (இரைச்சல்) கூட்டணியில் பிரச்னை.
நீரா : இல்லை, ஆனால் இப்போது அழகிரி பற்றி தானே கேள்வி, இல்லையா?
ராசா : ஆஹ்?
நீரா : அழகிரியே மூத்த தலைவராக இருக்கும்போது, மாறன் ஏன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அழகிரியின் ஆட்கள் சொல்கிறார்கள்.
ராசா : அது வேறு. ஆனால், இந்த எல்லா விஷயங்களையும் வெளிப்படுத்தியாக வேண்டும்.
நீரா : அதுதான் சரி. அதுதான் சரி. காங்கிரஸிடம் இருந்து தகவலைப் பெற அவரிடம் கேட்டேன்.
ராசா : இதனை தலைவரிடம் நேருக்கு நேராகவாவது வெளிப்படுத்த வேண்டும்.
நீரா : தனிப்பட்ட முறையிலா?
ராசா : தனியாகத்தான். எங்களுக்கு பாலுவுடன் சீரியசாக பிரச்னை இருக்கிறது என்று சீலிடப்பட்ட கவரின் மூலமாகவாவது, யாரையாவது அனுப்பி அவரிடம் தகவலை கொண்டு சேர்க்க வேண்டும்.
நீரா : காங்கிரஸிடம் இருந்து தானே, இல்லையா?
ராசா : ஆம்.
நீரா : சரி, அவரிடம் நான் சொல்கிறேன். இப்போது, அகமது படேலிடம் அவர் (பர்கா) பேசிக்கொண்டிருக்கிறார். அவரிடம் (அகமது படேல்) நான் பேசுகிறேன்.
ராசா : சார், இதுதான் எங்க பிரச்னை... எங்களுக்கு உயர் மதிப்பு இருக்கிறது, ராசாவிடம் பிரச்னை இல்லை, ஆனால், பாலுதான் பிரச்னை என்று தொலைபேசி மூலமாவது அவர் அழைக்கலாம் என்று சொல்லுங்கள்.
நீரா : பிறகு, மற்ற பிரச்னையை நீங்கள் எப்படி தீர்ப்பீர்கள்?
ராசா : தலைவர் இறங்கி வருவதால், மற்ற பிரச்னைகள் மெள்ள தீர்ந்துவிடும்.
நீரா : ஓஹ் ஆஹ்.
ராசா : கவலைப்படாதீர்கள்.
நீரா : தலைவர் இப்போது மூன்றுக்கு இறங்கி வந்திருக்கிறார். இல்லையா?
ராசா : மூன்றுக்கு இறங்கி வந்திருக்கிறார்.
நீரா : ம்.
ராசா : கட்டுமானத் துறைக்கு மாறன் சரி வர மாட்டார்... அவரிடம் சர்ச்சை உள்ளது என்று நீங்களும் சொல்கிறீர்கள். பரவாயில்லை, இப்போதைய அமைச்சகத்திலேயே அவர் இடம்பெறட்டும்... நாமாவது கருத்து தெரிவிப்போம்.
நீரா : மாறன்?
ராசா : ம்... நீங்கள் சொல்லுங்க, நீங்கள் தகவல் அனுப்புங்கள்.
நீரா : ஓஹ், ஆஹ்.
ராசா : ஓகே
நீரா : ஓகே.

******
மே 22, 2009, 13:20:29
(ராசாவை நீரா அழைக்கிறார்.)
ராசா : சொல்லுங்க, நீரா.
நீரா : விஷயம் என்னவென்றால், யாரிடம் பேசுவது என்பதில் காங்கிரஸ் முழுமையாக குழம்பியிருக்கிறது.
ராசா : ஆஹ்?
நீரா : திமுகவில் யாரிடம் அவர்கள் பேசவேண்டும்.
ராசா : ஆஹ்... யாராவது தலைவரை பார்க்க விமானத்தில் புறப்படலாமே.
நீரா : இல்லை, இல்லை... அதனால் தான், நான் இப்போது இருக்கிறேன்... இன்னும் சிறிது நேரத்தில் கனியிடம் அவர்கள் பேசுவார்கள், அப்புறம் தலைவரிடம் அவர்களை கனி நேரடியாக பேசச் செய்வார்.
ராசா : அதுதான் நல்லது, அதுதான் நல்லது.
நீரா : ஆமாம், நான் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். ஏனென்றால், யாரிடம் பேசுவது என்று அவர்கள் முழு குழப்பத்தில் இருக்கிறார்கள், ஆஹ்?
ராசா : கனியிடம் அவர்கள் பேசட்டும்.
நீரா : ஆம், ஆனால் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு கனிக்கு பக்குவம் வேண்டும், இல்லையா? நான் அவரிடம் சொல்லிவிட்டேன்...
ராசா : ம்ம்
நீரா : ... ஆனால் நீங்களும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ராசா : நோ ப்ராப்ளம்.
நீரா : அவர்களிடம் சொல்லிவிட்டேன். நான் அவர்களிடம் எதுவாக இருந்தாலும்...
ராசா : இதுதான் பிரச்னை. எனவே, அவர்களை அழைத்து வரட்டுமா என தலைவரிடம் சொல்ல வேண்டும் என்று கனியிடம் சொல்லுங்கள்.
நீரா : சரி. ஏனென்றால், பாலுவுக்கோ அல்லது மாறனுக்கோ கட்டுமானத் துறை கொடுக்கப்பட மாட்டாது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதை தலைவரிடம் அவர்கள் நேரடியாக சொல்ல வேண்டும், இல்லையா?
ராசா : பிரச்னையே இல்லை. பாருங்க... கனியுடன் அவர்கள் சென்று, இந்த ஆட்களுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சொல்லட்டும்.
நீரா : அதுதான் சரி. அதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும்... என்ன நடந்திருக்கிறது என்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம் என்றால் மாறன் தான் உடன் செல்கிறார்... அதனால் மாறனிடம் தான் தகவலை பரிமாற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு குழப்பம்..
ராசா : ஒருபோதும் இல்லை. உதவி செய்வதற்குத்தான் அவர் வந்தார். அவ்வளவுதான்.

*********
மே 23, 2009, 14:29:41
நீரா : எப்படி இருக்கிறீர்கள் ராசா?
ராசா : ஹாங், அவர் என்ன சொல்கிறார், கனி என்ன சொல்கிறார்?
நீரா : தனக்கு ஏற்புடையதாக அவர் சொல்கிறார். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை...
ராசா : ம்.
நீரா : ... ஆனால், ஒரே விஷயம் என்னவென்றால், அழகிரியிடம் எவராவது போய் பேச வேண்டும். அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.
ராசா : ம்
நீரா : அப்புறம், மாறன் எப்படிப் போய் எல்லா இடத்திலும் சொல்லி வைத்திருக்கிறார் என்று அவரிடம் சொல்லுங்கள்.
ராசா : ஹாங், நான் ஏற்கெனவே அவருடன் பேசிவிட்டேன், நான் ஏற்கெனவே அவருடன் பேசிவிட்டேன்...
நீரா : காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் (மாறன்) என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதை அவரிடம் சொல்லிவிட்டீர்களா?
ராசா : எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை காங்கிரஸாரின் மனத்தில் விதைத்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும்... எனக்குத் தெரியும்...
நீரா : இல்லை. இல்லை. இல்லை. இல்லை. அதுமட்டுமில்லை. அதுமட்டுமில்லை. தலைவருக்கு வயதாவதால் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதிக நாட்களுக்கு தாங்காது. அதன் பிறகு, கட்சியை நடத்துவது தானும் (மாறன்) ஸ்டாலினும் தான் என்றும், அப்போது ஸ்டாலினை கட்டுக்குள் வைத்திருப்பது தாம் தான் என்பதால்,  தன்னுடன் காங்கிரஸ் நெருக்கம் காட்டிக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறது என்றும் அவர் சொல்லி வருகிறார்.
ராசா : ம்ம்ம்...
நீரா : இதைத் தான் அவர் சொன்னார்.
ராசா : ஓஹோ! ஓஹோ!
நீரா : அப்புறம், அந்த அழகிரியை கிரிமினல் என்றும்...
ராசா : ம்ம்...
நீரா : அப்புறம் அவர் 5ம் வகுப்புக்கு மேல் கூட அவர் படிக்வில்லை என்றும்.
ராசா : ஓஹ்...
நீரா : இதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
ராசா : ஓகே, ஓகே.
நீரா : நீங்கள் போய் அவரிடம் இதை சொல்வீர்கள், இல்லையா?
ராசா : இல்லை. அழகிரிடம் நான் பகிர்ந்துகொண்டேன்... அவர் போய் தலைவரிடம் பேசப் போனார்.
நீரா : நான் மட்டும் தான் எந்த விஷயத்திலும் அணுகுவேன். ஏனென்றால், ஸ்டாலின் மாநிலத்திலேயே தான் இருப்பார் என்றும் அவர் டெல்லியில் சொல்லி வருகிறார்.
ராசா : எனக்குத் தெரியும். அவர் எந்த மாதிரியான பிரசாரம் செய்கிறார் என்று எனக்குத் தெரியும்...
******
மே 24, 2009, 11:05:11
நீரா : ஹாய்!
ராசா : ஹலோ?
நீரா : ஹாய்!
ராசா : சொல்லுங்க.
நீரா : மிஸ்டர் ராசா?
ராசா : ஆமா?
நீரா : நீரா
ராசா : சொல்லுங்க நீரா, ஏதாவது?
நீரா : உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். கனியிடம் பேசினேன். அதனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், அடிப்படையில் நீங்கள் அங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ராசா : ஹாங்.
நீரா : நீங்கள் அங்கு இருக்க வேண்டும் என்று தலைவர் பொதுவாகச் சொல்கிறார். ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், தலித் டிஸ்பென்ஷன், திராவிடர், கட்சி என்று எல்லாம்... தலைவர் சொல்வது எல்லாம்... உங்களுக்குத் தெரியும். அவரிடம் விட்டுவிட்டால், கட்சி மீது மட்டும் முதலில் கவனம் செலுத்துவார். அவரது குடும்பம் உள்ளே வருவது துரதிஷ்டவசமானது.
ராசா : ஓகே
நீரா : ஆனால், கனியுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். "தனி இலாகா இல்லை" என்று அவர் சொன்னார். அவர்கள் தனி இலாகா தர மாட்டார்கள்...
ராசா : என் விஷயம் சரியாகிவிட்டது, அல்லவா?
நீரா : உங்களுடையது தெளிவாகிவிட்டது. ஆமாம். நேற்று இரவு தான் உங்கள் விஷயம் சரியானது.
ராசா : ஓகே
நீரா : இல்லை, ஆனால் தயாவுக்கு என்ன ஆச்சு?
ராசா : என்ன?
நீரா : தயா?
ராசா : மீதமிருப்பது என்றால்... ஜவுளி அல்லது உரம்
நீரா : தயாவுக்கு இல்லை..?
ராசா : இருவரில் ஒருவருக்கு.
நீரா : ஆனால், அழகிரி அல்லது தயா? ஒருவர் தானே வர முடியும், இல்லையா?
ராசா : இல்லை. இரண்டு. இரண்டு பேருமே வர முடியும்.
நீரா : இருவருமா?

ராசா : பாலுதான் தான் பிரச்னைன்னு, நம்புகிறேன்.
நீரா : மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்வது என்பது தலைவருக்கு கடினம் தான் என்று நினைக்கிறேன்.
ராசா : அதுதான், அதேதான்... (சிரிக்கிறார்) எல்லாருக்குமே தெரியும்.
நீரா : இல்லை, இல்லை, அவர் சொன்னார். தன்னிடம் நேற்றிரவு அப்பா என்னச் சொன்னாரோ அதை என்னிடம் கனி கூறினார்.
ராசா : ஓஹ்.
நீரா : மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் சரியாகச் செய்வது என்பது அவருக்கு மிகவும் கடினமாகிறது. அந்தப் பிரச்னையை அவர் உணர்ந்துள்ளார்.
ராசா : நீங்கள் என்ன செய்வீர்கள்? பார்க்கலாம். காத்திருப்போம்.
நீரா : ஆம், அதுபற்றி அவர் மறுபடியும் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரை இப்போது நீங்கள் எல்லாரும் தனியாக சந்திக்கிறீர்களா? அல்லது கூட்டம் போய்க் கொண்டிருக்கிறதா?
ராசா : ஒருபோதும் இல்லை. ஒருபோதும் இல்லை.
நீரா : நாராயணனுடனான சந்திப்பு போய்க்கொண்டிருக்கிறதா?
ராசா : நாராயணனுடன் சந்திப்பு முடிந்துவிட்டது. அவர் 'கவர்' உடன் டெல்லி சென்றுவிட்டார்.
நீரா : அவர் சென்றுவிட்டாரா?
ராசா : அவர் 'கவர்' உடன் விமானத்தைப் பிடிக்கச் சென்றுவிட்டார்.
நீரா : நாராயணனா?
ராசா : லிஸ்ட், லிஸ்ட்... லிஸ்ட் உடன் அவர் சென்றுவிட்டார்.
நீரா : லிஸ்ட் உடன் அவர் சென்றுவிட்டார், இல்லையா?
ராசா : அந்த கவர் உள்ளே என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது.
நீரா : அப்புறம் கனி? அப்பாவுடன் இருக்கிறாரா?
ராசா : இருக்கலாம்.. அவருக்கு தெரிந்திருக்கலாம்.
நீரா : அவருக்கு இப்போது நான் அழைக்கிறேன். அப்புறம், அங்கே நீங்கள் இல்லையா?
ராசா : நான் இன்னும் அங்கே போகவில்லை.
நீரா : நீங்கள் அங்கே இல்லையா? அப்புறம் மாறன்? மாறன் அங்கே இருக்கிறார், இல்லையா?
ராசா : (அவர்) அங்கே, ஆமாம்.
நீரா : நீங்கள் ஏன் போகவில்லை?
ராசா : நான் போகவில்லை.
நீரா : ஹாங்?
ராசா : சரி... நான் ஏன் போகனும்?
நீரா : நீங்கள் அங்கே இருக்க வேண்டும், இல்லையா?
ராசா : நோ ப்ராப்ளம்.. காலையில் சந்தித்தேன். அப்புறம், வேறு வேலைக்குத் திரும்பிவிட்டேன்.
நீரா : அப்புறம் அழகிரி... தன்னைப் பற்றி மாறன் சொன்ன விஷயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியுமா?
ராசா : ... இதேல்லாம் அழகிரிக்கு தெரிந்ததே.
நீரா: இது தெரியும், இல்லையா?
ராசா: இது அழகிரிக்குத் தெரியும், ஆனால் அவரால் தன்னுடைய தந்தையுடன் இதுபற்றி பேச முடியாது. சரியான நேரத்தில்... அவர் பேசுவார். ஒரு விஷயம் என்னவென்றால், எனக்கு எதிராக மாறன் பிரசாரத்தை தொடங்குவார்...
நீரா : ம்.
ராசா: ... அதை விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீரா: வேறுவிதமாக நீங்கள் சண்டை போட வேண்டும்.
ராசா: ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார்... அப்படி இப்படி... ஸ்பெக்ட்ரம்... என அவர் பத்திரிகைகளிடம் சொல்லக் கூடும்...
நீரா: இல்லை, இல்லை... நாங்கள் கையாண்டு கொள்கிறோம்... கவலைப்பட வேண்டும். நாங்கள் நிறைய பெற வேண்டியிருக்கிறது, உங்களுக்குத் தெரியும், காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, இல்லையா? சுனில் மிட்டலுடன் நான் பேசினேன்... உங்களிடம் சந்தோலியா சொன்னாரா?
ராசா: எனக்குத் தெரியாது.
நீரா: அவரை நிறுத்தச் சொன்னேன். யாருக்கும் உபயோகமில்லை என்று அவரிடம் நான் சொன்னேன்...
ராசா: ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் பணிபுரிய வேண்டும் என்று சுனில் மிட்டலிடம் சொல்லுங்கள். அதனால்..
நீரா: நான் அவரிடம் சொன்னேன். அவரிடம் சொல்லிவிட்டேன். ஆனால், நீங்களும் அனிலிடம் சற்று தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருந்தாக வேண்டும்.
ராசா : ஆஹ் அது நாம பார்த்துக்கலாம்.
******

Source - Vikatan Magazine

2ஜி.. கனிமொழி-ராடியா உரையாடல் பதிவு (ஆடியோவுடன்)...


2ஜி.. கனிமொழி-ராடியா உரையாடல் பதிவு (ஆடியோவுடன்)
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு... இந்த விவகாரத்துக்கு அறிமுகம் தேவையில்லை. இது தொடர்பான வழக்குக்கு ஆதாரமாக கருதப்படும் டேப் விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களை தீர்மானிக்கும் மனிதராக வலம் வந்ததாக நம்பப்படும் லாபியிஸ்ட் நீரா ராடியா, அந்தச் சூழலில் ஆ.ராசா, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பத்திரிகையாளர்கள் வீர் சங்வி, பர்கா தத், தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோருடன் பேசியதாக கூறப்படும் பேச்சுகள் அடங்கிய டேப் விவரங்கள் தான் அந்த ஆதாரங்கள்.

அவுட்லுக் இதழ் வெளியிட்ட அந்த டேப் விவரங்களில், நீரா ராடியா - கனிமொழி இடையிலான உரையாடலின் முக்கியப் பகுதிகளின் ஆடியோ வடிவமும், அதன் தமிழ் எழுத்து வடிவமும் இதோ...
ஆடியோ... (ஏழு பதிவுகளையும் தொகுத்து ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது)


எழுத்து வடிவில்...
மே 22, 2009, நேரம் - 10:45:06
கனிமொழி : ஹலோ.
நீரா ராடியா : கனி, உங்கள் அப்பாவிடம் அவர்கள் நேற்று தெளிவாக விவரித்தார்களே...
கனி: ம்-ம்.
நீரா : எந்த கட்டுமானத் துறையையும் பாலுவுக்கோ அல்லது மாறனுக்கோ கொடுக்கக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்...
கனி : ஆமாம். ஆனால் யார் சொன்னார்கள்?
நீரா : இல்லை. இல்லை. அவரிடம் மிக மிகத் தெளிவாகவும் விவரமாகவும் சொல்லப்பட்டது...
கனி: இல்லை. அவரிடம் அப்படிச் சொல்லப்படவில்லை. அதுதான் பிரச்னையே. யார் வந்து அவரிடம் சொன்னது?
நீரா : அவர்கள் தான் வந்து அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். மேலும், அவரிடம் பிரதமர் பேசியிருக்கிறார்.
கனி: இல்லை. பிரதமர் பேசவில்லை. பிரதமருடன் நான் தான் பேசிக் கொண்டிருந்தேன். பிரதமருடன் தொலைபேசியில் நான் தான் பேசினேன். அவர் ஒரு சில வார்த்தைகள் மட்டும் சொன்னார். அவ்வளவுதான். அப்பாவிடம் பிரதமரால் தொலைபேசியில் தகவலைச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால், அவரோ மெள்ளப் பேசுவார்; அப்பாவுக்கோ காது சரியாக கேட்காது.
நீரா : ம்-ம்.
கனி: உரையாடலும் நீண்ட நேரம் இல்லை என்பதால் எல்லாவற்றையும் தெரிவித்திருக்க முடியாது.
நீரா : ம்-ம். ம்-ம். ம்-ம்.
கனி : வேறு யாரிடமாவது சொல்லப்பட்டிருக்க வேண்டும், அந்த நபர் பகிர்ந்துகொண்டாரா என்பது உங்களுக்குத் தெரியாது. (இரைச்சல்) (0:01:02)
நீரா : ரைட். ரைட். ரைட். ரைட். ரைட். ஓகே. யார் சொன்னது என்று தெரிந்துகொள்கிறேன். இதில் எவ்வளவு பேர் இயங்குகிறார்கள், நம்பவே முடியவில்லை.
கனி : ஆம். பாருங்க சிலர் கூட (இரைச்சல்).. கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் கூட பகிர்ந்திருக்கக் கூடும், அவர்களால் வந்து தகவல் சொல்லியிருக்க முடியாது.
நீரா : ஓகே. ஓகே.
கனி : தகவல் சொல்லும் நபரின் நம்பகத்தன்மையைப் பொருத்தே தகவல் நம்பப்படுகிறது.
நீரா : ரைட். ரைட். ரைட்.
கனி : நான் கூட இதுபோல செய்தியை கேட்டறிந்தேன் - மூத்தவர்கள் எவரேனும் சொல்லியிருக்கக் கூடும், இல்லையா?
நீரா : அதான் சரி. அதான் சரி. ஆமாம் ஆமாம். ஓகே. சரி. அவர்களிடம் மீண்டும் சொல்கிறேன். அதன் பிறகு, உங்களை அழைக்கிறேன்.
கனி : அப்புறம், இன்னொரு விஷயம். அவர்களில் யாரேனும் ஒருவர் குலாமை அழைத்து, என்னை அழைக்கலாம். சொல்லுங்கள்.
நீரா : அது சரி.
கனி : மேலும், நான் போய் அப்பாவிடம் சொல்லலாம். ஆனால், யாராவது வந்து அதை ஆமோதிக்க வேண்டும். இல்லையேல், அது எனக்கு பாதகமாகிவிடும்.
நீரா : ரைட். ரைட். ஓகே. ஓகே. கேட்டுக்கொள்ளுங்கள், உங்கள் அம்மாவை நாளை மதியம் 12:30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
கனி : ஓகே. நானும் இங்கேயேதான் இருப்பேன்.
நீரா : ஓகே.
கனி : இதை தயவு செய்து அம்மாவிடம் சொல்லிவிட வேண்டாம். அப்புறம், அவர் குழப்பிக்கொண்டு போய் எதையாவது தேவையில்லாததைச் சொல்லிவிடுவார்.
நீரா : இல்லை. இல்லை. இல்லை. இல்லை.
கனி : அப்படி நடக்காது, குலாமை என்னை அழைக்கச் சொல்லுங்கள். பிறகு, என்னுடன் பேசுங்கள். நான் இங்கே தான் இருப்பேன்.
நீரா : சரி. சரி.
*******        ***
மே 22, 2009, 14:46:15
கனி : ஹலோ.
நீரா : ஹாய். கேளுங்கள், அவர்கள் மீட்டிங்கில் இருக்கிறார்கள். உங்களிடம் அவர்கள் பேசுவார்கள்.
கனி : மன்னிக்கவும்.
நீரா : அந்தச் செய்தி அவர்களுக்கு சென்று சேர்ந்துவிட்டது, உங்களிடம் அவர்கள் பேசுவார்கள். நீங்கள் இல்லை, ராசா மட்டுமே பதவியேற்பார் என்று சற்று நேரத்துக்கு முன்பு தான் அவர்களிடம் சொன்னேன்.
கனி : சரி.
நீரா :அவர்களிடம் (இரைச்சல்) (0:00:49.0) ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதையே அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே, நான் அவர்களிடம் சொன்னேன்...
கனி : இல்லை, அவர்கள் வந்து, என்ன நடந்தாலும் நான் உங்கள் பக்கம் இருப்பேன் என்று சொல்ல வேண்டும்.
நீரா : யார் சொல்ல வேண்டும்?
கனி : யார் வேண்டுமானாலும்... அந்த நபர்... தயா போகிறார், இல்லையா?
நீரா : அகமது படேலிடம் தயா பேசவில்லை. அகமது படேலிடம் தயா பேசவில்லை, யாரிடம் தயா பேசுகிறார் என்பது எனக்குத் தெரியாது.
கனி : ஓகே. இல்லை, இல்லை, பதவியேற்புக்காக தயா போகிறார், இல்லையா?
நீரா : இல்லை, அவர் தனது பெயரைக் கொடுத்திருக்கிறார், அவர் பதவியேற்புக்குப் போகப் போகிறார் என்றே காங்கிரஸிடம் இருந்து கேட்டறிந்தேன்.
கனி: அவர், என்னுடன் திரும்பிவிடுவதாக திட்டம், எனக்குத் தெரியவில்லை. ஆகவே, நான் என்ன சொல்கிறேன் என்றால், தலைவர்கள் சொன்னதற்கு மாறாக, அவர் என்னென்னவெல்லாம் சொல்லப்போகிறார், நான் (இரைச்சல்) (0:01:32.4)
நீரா : ஆம், ஆனால், உங்கள் அப்பாவிடம் சொல்லியாக வேண்டும், இல்லையா?
கனி : அதான். அவர் வந்து அப்பாவிடம் சேவல்-எருது கதைகளை அளப்பார். அகமது படேல் சொன்னார் என்று அவர் - இல்லை. இல்லை. அகமது படேல் அவரை அழைத்ததாகவும், நீங்களாவது வரவேண்டும், நீங்கள் மட்டுமே திமுகவின் முகம் - பிரதிநிதி. நீங்கள் இல்லையென்றால், நன்றாக இருக்காது என்று கதை விடுவார்.
நீரா : ராசாவுக்கு தான் போவதற்கு அதிகாரம் தந்திருக்கிறேன் என்று உங்கள் அப்பா சொல்லலாம் இல்லையா? உங்கள் அப்பா அப்படிச் சொன்னால், ராசாவுக்கு மட்டுமே அதிகாரம், உனக்கு இல்லை என்று மாறனிடம் சொன்னால்.
கனி : இல்லை. அப்பா அப்படிச் சொல்ல மாட்டார், அதற்கு வழியே இல்லை. (இரைச்சல்) (0:02:09.5) அப்பாவை அழைத்துச் சொல்ல வேண்டும், அது என்னால் முடியாது.
நீரா : உங்களுக்கு மிகவும் அலுப்பு ஏற்பட்டு விட்டது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால், இது ஆரம்பம் மட்டும் தான், இல்லையா?
கனி : ஆமாம், ஆமாம்.
நீரா : அரசியல், மை டியர்.
கனி : மற்றவர்களுடன் அரசியல் செய்வது பற்றி கவலையில்லை, ஆம், (இரைச்சல்)
நீரா : எனக்குத் தெரியும். ஆனால், பரவாயில்லை. பரவாயில்லை, உனக்கு அவருடன் வெறுத்துவிட்டது என்பது எனக்குத் தெரியும். அவரை புறந்தள்ளுங்கள். அவர் விரைவில் தேவையில்லாதவராகி விடுவார். ஆனால், நீங்கள் தான்...
கனி : (இரைச்சல்) (0:02:38:6) அப்படியில்லை. இல்லை, இல்லை, அது அப்படி இல்லை. பாருங்கள் (இரைச்சல்) தனது சொந்த கட்சிக்கும் தலைவருக்கும் எதிராக சிலர், அதனால் தான்...
நீரா : ஆம், ஆனால் உங்கள் அப்பா இதை புரிந்துகொள்ள வேண்டும். அப்படி புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் தான் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
கனி : நான் எப்படி அவருக்குப் புரிய வைப்பது, தொடர்ந்து சொன்னாலும், அவர் புரிந்துகொள்ள மாட்டார்...
நீரா : வேறு யார் அவருக்கு புரியவைப்பது? உங்களைத் தவிர வேறு யாரால் முடியும், கனி. உங்களைத் தவிர வேறு யார் பேச்சையும் அவர் கேட்கமாட்டார். எல்லாரும் அவரிடம் நெருங்கவே பயப்படுகிறார்கள். நீங்கள் அவருடைய மகள், அதனால் நீங்கள் சொல்வதை அவர் கேட்கலாம். உங்கள் நிலையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், கனி. கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால், உங்கள் உரிமையைப் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
கனி : என்னால் முடிந்த வரையில் செய்கிறேன்.
நீரா : சரி, டேக் கேர், நான் பிறகு அழைக்கிறேன்...
கனி : எது எப்படியோ, 4 மணிக்கு விமான நிலையத்துக்கு கிளம்புவேன்...
நீரா : சரி, அது பிரச்னை இல்லை, அவர்கள் உங்களை சென்னையில் அழைப்பார்கள், ஆனால் உங்களிடம் அவர்கள் பேச வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
கனி : பிறகு, முடிந்தால் சுமார் 7.30க்கு எல்லாம் சென்னையை அடைவேன்.
நீரா : பிறகு, அவர்கள் அழைக்கும் போது, தேவையெனில் சென்னைக்கு வந்து பேசலாம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
******
மே 22, 2009, 20:04:19
நீரா : ஹலோ. இது உண்மை இல்லை கனி. ஆகவே, நாம் ஏன் அவருக்கு சொல்ல வேண்டும். அதற்கு அவசியமில்லை.
கனி : இல்லை, இல்லை, அந்த விஷயத்தை அவர் பரப்ப முயற்சிக்கிறார் என்பதால் தான்.
நீரா : இல்லை, இல்லை, இல்லை. உடன்பாடு முடிந்துவிடவில்லை... நாங்கள் விவாதத்த்ன் நடுவில் தான் இருக்கிறோம் என்று பிரதமரே விளக்கிவிட்டார்...
கனி : எங்களுக்கு அவர்கள் தொலைத்தொடர்பு கொடுப்பதாக உறுதியளித்தார்கள், ஆனால் அது இப்போது... (இரைச்சல்) (0:00:34.7) தொலைத்தொடர்பு கொடுப்பதாக அவர்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள், இப்போது அதை அவருக்கு கொடுக்கக்கூடாது. ஏனென்றால்,  அவர் கண்ட கதைகளை எல்லா இடத்திலும் விதைத்து வருகிறார்...
நீரா : ஆனால் அதை விடுங்கள். நீங்கள் விமானத்தில் இருந்தபோது, அவர் சேனல்களிடம் பேசியிருந்தார்.
கனி : ஆம், ஆம் எனக்கு தெரியும்.
நீரா : ஆம், எனக்குத் தெரியும், ராசாவிடம் பேசினேன். சென்னையிலும் பேசினேன். என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. உடன்பாடு முடிந்துவிடவில்லை என்று சேனல்களிடம் சொன்னேன். திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், நாங்கள் சென்னைக்கு பயணிக்க வேண்டியதில்லை என்றும் ஜனார்தன் த்விவேதி தான் அறிவித்தார். பிறகே, பிரதமரிடம் சேனல்கள் கேட்டன.
கனி : ஆமாம், ஆமாம், அது எனக்குத் தெரியும். இல்லை, இல்லை. நான் அதைச் சொல்லவில்லை. கவனமாக இருக்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன். ஏனென்றால், ராசாவுக்கு எதிராக காங்கிரஸில் இருந்து அப்பாவிடம் சொல்வதற்கு யாராவது கிடைப்பார்களா என்று அவர் முயற்சிக்கிறார்.
நீரா : எதையும் யாரும் சொல்லவில்லை; பிரதமரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கனி : பிரதமர் அல்ல. அப்பாவை அவர்கள் சந்திக்க வரும்போது...
நீரா : ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கனி, ராசாவும் பாலுவும் தனது மதிப்புக்குரிய சகாக்கள் என்றும், அவர்களுடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் இப்போது தான் பிரதமர் ஒரு அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். சற்று முன் தான் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
கனி : அவர் அறிவிக்கலாம், ஆனால், அப்பாவை வந்து சந்தித்துப் பேசுபவர்கள் அதற்கு மாறாகச் சொல்லலாம். ஏனெனில், மக்கள் வெளியயே சொல்லிக் கொள்வதற்கும், உள்ளுக்குள் கருதப்படும் அர்த்தமும் வெவ்வேறானது. உங்களை நண்பர் என்று சொல்லிக் கொண்டு எவரேனும் எப்போது வேண்டுமானாலும் வந்து விவாதிக்கலாம், பிறகு, இந்த நபர் வேண்டாம் என்று அவர்களே சொல்லலாம். பொதுத் தோற்றத்துக்காக நாங்கள் பல விஷயங்களையும் செய்கிறோம். ஆகவே, எவர் வந்து சந்தித்துப் பேசினாலும், இவருக்கு எதிராகப் பேசக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால், நான் வேறொரு வட்டாரத்தில் இருந்து தெரிந்துகொண்டேன்...
நீரா : நல்லது. ஆமாம், சரி, நான் ராசாவுடனும் பேசினேன்.
கனி : பாருங்கள், எல்லாமே பிரனையில்லை; எல்லாமே சரிதான் என்று சொல்பவர், ராசா.
நீரா : ஆமாம், ஆமாம், ஆமாம். இரண்டு தரப்பில் இருந்தும் கேட்டதில் இருந்து... இலாகா பற்றி காங்கிரஸ் பேசும் மனநிலையில் இல்லை. உங்கள் அப்பாவிடமே அதை விட்டுவிடுவார்கள்.
கனி : இல்லை. இல்லை. எல்லாம் நல்லபடி நடக்கும் என்றே சொல்கிறேன். ஆனால், அவர்கள் வந்து எதிராகப் பேசக் கூடாது என்றே சொல்கிறேன். ஏனென்றால், அவர்கள் கண்டிப்பாக பாலுவுக்கு எதிராக பேசுவார்கள் என்பது உறுதி.
நீரா : ஆம், பாலு, அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் பாலுவுக்கு எதிராகச் சொல்கிறார்கள்.
கனி : இல்லை, ஆனால் ராசாவுக்கு எதிராகவும் அவர்கள் சொல்வார் என்றே நினைக்கிறேன்.
நீரா : அப்படி சொல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
கனி : இவரைப் பற்றி எதிராக ஒரு வரிச் சொன்னாலும் அது பெரிதாகிவிடும். உண்மையில், ராசா நன்றாக பணிகளைச் செய்துள்ளார் என்பதால் நாங்கள் அவருக்கு கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி என்றே அவர்கள் சொல்கிறார்கள். இது, அவருக்கு சாதகமாக இருக்கும். அவர்கள் பின்வாங்கவில்லை என்றால் கூட பரவாயில்லை தான். ஆனால், ஒரு வரியில் கூட அவருக்கு எதிராகப் போய்விடக் கூடாது.(இரைச்சல்) (0:03:28.3)
நீரா : உங்கள் கூட்டம் நாளை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என திமுகவினர் சொல்வதை கேட்டீர்களா?
கனி : ஆமாம்.
******
மே 23, 2009, 09:59:02
கனி : ஹலோ.
நீரா : ஹலோ கனி.
கனி : ஹாய், நீரா
நீரா : முதல்வருடன் பேசி சில தகவல்களை சொல்லிவிட்டார்களா இல்லையா என்பதை கேட்பதற்காக அவர்களிடம் பேசினேன். ஆனால், அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. இப்போது என்ன செய்தி பரவி இருக்கிறது என்றால், கட்டுமானத் துறை பாலுவுக்கோ அல்லது ராசாவுக்கோ கூடாது என்பதுதான். உண்மையில், மாறனுக்கோ அல்லது பாலுவுக்கோ கொடுக்கக் கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. சோனியாவை அவர் சந்திக்கவில்லை என்பதாகவும் ஒரு தகவல் கசிந்தது. நானும் அதை  உறுதி செய்துவிட்டேன்.
கனி : ஆம், எனக்கு கூட தெரியும்.
நீரா : அவர் சந்திக்கவில்லை. ஆனால், உங்கள் அப்பாவை அவர் தனியாக சந்தித்ததாகவும், டெல்லி பயணம் பற்றி விளக்கியதாகவும், அப்போது டெல்லியில் தொடர்பில் இருக்குமாறு அப்பா கூறியதாகவும் சொல்லக் கேட்டேன்.
கனி : இல்லை. அது தவறு. ஏனெனில், அப்பா எல்லாரையும் அனுப்பிவிட்டு தனிமையில் சிலதை சொல்ல விரும்பினார். அது பற்றி அறியாத என் அம்மா, அப்பாவுக்கு டம்ளரில் மோர் எடுத்துச் சென்று கொடுத்தார். முழு விவாதத்தின்போது அம்மா அங்குதான் இருந்தார். அவர் (இரைச்சல்)...ஐ அவருக்கு கொடுக்க முயன்றார். ஏனெனில், அது மிகவும் முக்கிய, அங்கே நாம் இருக்க வேண்டும், என்ன, சரியா... இதைத் தான் அவர் சொன்னார்.  அவர் எதையும் தனிமையில் சொல்லவில்லை. அமைச்சரவையில் இடம்பெற விரும்பாத எவரும்  பேச்சுவார்த்தை நடத்தலாம் என அப்பாவிடம் இன்று சொல்லப்பட்டிருக்கிறது.
நீரா : கரெக்ட். கரெக்ட். மிகச் சரி.
கனி : அவர் (மாறன்) வெறும் பொய்களை பரப்பி வருகிறார்...
நீரா : இல்லை, அப்படித்தான் அவர் சொன்னதாத தகவல் வந்தது... காங்கிரஸ் வட்டத்திடம் மீண்டும் பேசினேன். அமைச்சரவையில் இடம் தருவது உறுதி, ஆனால் வேறு எதையும் சொல்லவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
கனி : பாருங்கள், தொலைத்தொடர்பை பொருத்தவரை, நாங்கள் ராசாவுக்குதொலைத்தொடர்பை கேட்கிறோம்.
நீரா : கரெக்ட், கரெக்ட்.
கனி : அவர்களுக்கு பிரச்னை இருந்தால், எங்களுக்கு அவர்கள் திருப்பித் தர மாட்டார்கள்.
நீரா: அவர்கள் (காங்கிரஸ்) அதைத்தான் சொன்னார்கள். அதைத்தான் சொன்னார்கள். நான் தான் தொலைத்தொடர்புக்கு பொருத்தமானவர் என்று அவர் சொல்கிறார். ஏனென்றால், தொழிலாளர் துறை அல்லது உரத் துறை தனக்கு வேண்டாம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
கனி : அவர் தனது இமேஜுக்கு நன்றாக இருக்காது என்பதால் அப்படிச் சொல்கிறார்.
நீரா : அது சரி. அதுதான் சரி. அவர் அப்படித்தான் புத்திசாலித்தனமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்... காங்கிரஸ்...
கனி: நீங்கள் கண்டிப்பாக (இரைச்சல்). நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் நீரா. பாதி பிரச்னைகளை கிளப்புவதே அவர் (மாறன்) மட்டும் தான்.
நீரா : நான் அதை செய்துவிட்டேன். ஆம். அவர் மட்டும் தான் என இன்று காலையே எல்லாருக்கும் என் தகவலை அனுப்பிவிட்டேன். அழகிரி எதிர்பார்ப்பு குறித்த மொத்த விஷயங்களையும் விவரித்து விட்டேன். அவர் மக்கள் தலைவர் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொன்னேன். எந்தச் சுழலிலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்கள் தலைவருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கனி : மிகச் சரி.
நீரா: ஆம், ஆகவே, அவர் மக்கள் தலைவர் இல்லை. ஆகையால், அவருக்கு முக்கியத்துவம் இருக்காது, அவர் முயற்சி செய்து வருகிறார்.
கனி : எங்களுக்கு மற்ற தேர்தல்கள் வருகின்றன (இரைச்சல்) (0:04:06:6). அவரது அனைத்து தொண்டர்களையும் நாங்கள் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
நீரா : ஆம், கரெக்ட்.
கனி : ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். அவர்களிடமும் நீங்கள் சொல்லலாம். அவர்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்திலும் கூட, லாலு செய்ததை நீங்கள் செய்யலாம். அவருக்கு (அழகிரிக்கு) கீழே, யாருடனும் அணுகக் கூடிய, பதிலளிக்கக் கூடிய நல்ல இணை அமைச்சரை கிடைக்கச் செய்யலாம்.
நீரா : கரெக்ட். மிகச் சரி, முழுமையாகச் சரி. ஆம், ஆம், அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிகிறது. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அவருடன் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
கனி : இல்லை, இல்லை. அதுதான் பிரச்னையே. ஆனால், அந்த நபருக்கு தொலைத்தொடர்பு வேண்டும். அதற்காகத்தான் அவர் வதந்திகளைப் பரப்பி வருகிறார். ஆனால், அவருக்கு தொலைத்தொடர்பு கொடுப்பதில் திமுகவுக்கும் விருப்பம் இல்லை என்றே நினைக்கிறேன்.
நீரா : நான் அப்படி நினைக்கவில்லை.
*****
மே 24, 2009, 09:27:31
கனி : ஹலோ.
நீரா : ஹாய். குட் மார்னிங்.
கனி : உங்களை எழுப்பியதற்கு மன்னிக்கவும்.
நீரா : இல்லை, இல்லை. (இரைச்சல்) (0:00:17) ஆம், சில நிமிடம் முன்பு தான் எழுந்தேன்.
கனி. நான் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளவே அழைத்தேன். அதாவது, எனக்கு என்ன ஒதுக்குவதற்கு அவர்கள் (காங்கிரஸ்) திட்டமிட்டிருக்கிறார்கள்.?
நீரா : ம்-ம்?
கனி : எனக்கு என்ன கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்?
நீரா : நான் நேற்றிரவு உங்களிடம் சொன்னேன். நாம் பேசிய பிறகு நான் அழைத்துப் பேசினேன். சுகாதாரத் துறை வாய்ப்பு குறித்து கேட்டேன். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, சிவில் விமானப் போக்குவரத்து. இந்த மூன்று துறை தான் சொன்னேன். வேறு என்ன அங்கே இருக்கிறது. ஆகையால், அவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. (இரைச்சல்) (0:00:52) தகவலை அனுப்புங்கள். அவர்கள் உங்களிடம் பேசுவார்கள். அவர்களுக்கு..
கனி : சுற்றுலாத் துறை கூட மதிப்பு மிக்கதுதானே.
நீரா : அது தனிப் பொறுப்பு. அதை உங்களிடம் கொடுக்க மாட்டார்கள். குலாம் நபி ஆசாத்துக்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை. அவரிடம் நாடாளுமன்ற விவகாரம் மட்டும்தான் இருக்கிறது, தெரியுமா.
கனி : ஓகே.
நீரா : அதைத் தவிர எம்.பி.க்கு அதிகமாக அவர்கள் தரமாட்டார்கள்.
கனி : சரி.
நீரா : அதனால் தான் சுற்றுலாத் துறையைக் குறிப்பிட்டேன்.
கனி : சரி
நீரா : அவர்கள் முன்வருவார்களா என்று... (இரைச்சல்) (0:01:22) ஏனென்றால், சுற்றுலாவும் கலாசாரமும் ஒன்றாக இருந்தால்..
கனி : ஆம்.
நீரா : இது இரண்டும் (இரைச்சல்) (0:01:35) உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்களிடம் இப்போது சொல்லுங்களேன். ஆனால், அவர்களிடம் நான் தெரிவிக்கவில்லை...
கனி : இல்லை, இல்லை, நான் ஒரு பட்டியல் அவர்களிடம் கொடுத்துள்ளேன்...
நீரா : பட்டியலை ஏன் கொடுத்தீர்கள், அவர்களிடம் என்ன சொன்னீர்கள்?
கனி : நான் சுற்றுச்சூழல், சுகாதாரம், சுற்றுலா மற்றும் கலாசாரம் மட்டும் தான் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் பார்ப்பதாகச் சொன்னார்கள்.
நீரா : ம்-ம்.
கனி : சுற்றுச்சூழலை நான் கேட்டாலும், அவர்கள் சுற்றுச்சூழலைத் தரமாட்டார்கள், சுகாதாரமும் கொடுக்க மாட்டார்கள் தெரியுமா.
நீரா : சுகாதாரத்தை ஏற்கெனவே அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள். அப்படித்தான் நான் உணர்கிறேன்.
கனி : சுற்றுச்சூழல் தருவார்களா, உங்களுக்குத் தெரியுமா?
நீரா : தனிப் பொறுப்பு? ஆமாம், இன்று காலை தான் பட்டியலைக் கொடுத்தீர்கள் இல்லையா.
கனி : ஆம், பட்டியலை கொடுத்தேன்.
நீரா : சிவில் விமானப் போக்குவரத்தை நீங்கள் குறிப்பிடவில்லையா, கனி.
கனி : உங்களுக்கு தெரியுமா, சிவில் விமானப் போக்குவரத்து கிடைத்தாலும் பரவாயில்லை.
நீரா : ம்-ம். ம்-ம். வேறு ஏதாவது சொன்னார்களா?
கனி : ஒன்றுமில்லை. அவர்கள் மீண்டும் வந்து சொல்வதாகச் சொன்னார்கள்.
நீரா : அவர்களால் என்ன தர முடியும்?
கனி : சரி, சரி, பார்ப்போம்.
*****