Saturday, May 21, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 2

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 2

 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள் : மணியம் செல்வன்
 'நான் சரி, நீ சரியல்ல’ (I am ok, you are not ok ) - பிரபல 'செக்ஸாலஜிஸ்ட்' கோத்தாரி வகைப்படுத்தும் மூன்று வகை மனிதர்களில் இவர்களும் ஒருவர். தாங்கள் முழுக்க முழுக்க மிகச் சரியானவர்கள், மற்றவர்கள் எல்லோருமே தப்பு செய்பவர்கள் எனும் எண்ணத்தில் வாழும் இவர்களைப் பற்றி சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
இவர்களின் மனதை ஆக்கிரமிப்பது காதலும் ரொமான்ஸும் அல்ல; தான் என்கிற அகம்பாவமும், தான் செய்வதுதான் சரி என்கிற ஈகோவும்தான். பிரபாவதியின் கேஸ் அதற்கு ஓர் உதாரணம்.
பிரபாவதி, அவளுடைய அம்மாவின் அச்சு வார்ப்பு. அம்மாவுக்கு அரசு உத்யோகம். கொஞ்சம்போல நிலபுலன்கள் உண்டு. ஆனால் ''நாம் பணக்காரர்...'' என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தார் பிரபாவதியை. உடை, உணவு, பயணம் எல்லா வற்றுக்குமே தகுதிக்கு மீறிச் செலவழிப்பாள். ஏழைப் பிள்ளைகளை அண்டவிட மாட்டார். பிரபாவதி அழகாக வேறு பிறந்துவிட்டதால், ''உலகிலேயே மிக அழகான பெண் நீதான்'' என்று அடிக்கடி சொல்வார். இவை எல்லாமே பிரபாவதியின் மனதில் நெகட்டிவாகப் பதிந்தன. அம்மா காண்பித்த உலகமும் சிந்தனைகளும்தான் வாழ்க்கை என்று அவள் சின்ன வயதிலேயே நம்ப ஆரம்பித்தாள்.
பிரபாவதியின் அப்பா, ஓர் அப்பாவி. நிரந்தரமான வேலைக்குச் செல்லா விட்டாலும், கிடைத்த வேலையைச் செய்து பணம் எடுத்து வருவார். அம்மா அதை என்றுமே மதித்ததில்லை. அப்பாவை உட்கார வைத்துக்கூட பேச மாட்டார். மகளின் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், தன் மனைவி தவறான வழியில் குழந்தையை வளர்ப்பது கண்டு மனம் வெதும்பிக் கொள்வார். ஒரு கட்டத்தில் குடிகாரராகிப் போனார். பிரபாவதியின் அம்மாவுக்கு, லோக்கல் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவருடன் கம்பேர் செய்து, கணவனை அடிக்கடி கிண்டல் செய்ததால், வீட்டுக்கு வருவதை அறவே நிறுத்திய கணவர், ஒரு நாள் மின்சார ரயிலின் முன் பாய்ந்து இறந்து போனார். ''நம்ம மேல எந்தத் தப்பும் இல்ல பிரபா. அந்தக் குடிகாரன் வீணா செத்துப் போனா... நாமளா பொறுப்பு?'' என்று நியாயம் பேசி விஷயத்தை முடித்தார் அம்மா.
இந்நிலையில்தான் கல்லூரியில் படிக்கும்போது காதல் வயப்பட்டாள் பிரபாவதி. அவள் அழகைக் கண்டு மயங்கிக் காதலித்த ரவிக்குமார், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பையன். கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் மாஸ்டர் டிகிரி வாங்கி, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தான். இடையே, பிரபாவதியின் காதல், அவனை தடுமாற வைத்தது.
காதலை, அம்மாவிடம் சொல்லிவிட்டு, ரவிகுமாரை வீட்டுக்கு அழைத்து வந்தாள். அவள் அம்மாவின் தோரணையும், தன் குடும்பத்தைப் பற்றி விசாரித்து அடித்த கமென்ட்டுகளும் ரவிக்குமாரை எரிச்சல் அடைய வைத்தன. பிரபாவதிக்காகப் பொறுத்துக் கொண்டான். பிரபா எதை ஆசைப்பட்டாலும் அதை 'என்ன விலை கொடுத்தாலும்’ வாங்கித் தந்துவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மா, ரவிக்குமாரின் சம்பந்தத்தை வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார்.
திருமணம் முடிந்தது. உள்ளப் பகிர்தல்களைவிட, உடல் ரீதியாக ரவிக்குமாரை ஏறக்குறைய தன் அடிமையாகவே ஆக்கினாள் பிரபாவதி. அவள் தரும் நீண்ட முத்தங்களில் தன் வாழ்க்கை, கனவு, குடும்பம், லட்சியம், வேலை எல்லாவற்றையும் மறந்து போனான். அம்மா கொடுத்த பணத்தில் சென்ற 'ஹனிமூன்’ டிரிப்களில் ரவிக்குமாரை முழுக்க முழுக்க தன் அரவணைப்பில் கரைத்துக் கொண்டாள் பிரபாவதி. நாட்கள் நகர்ந்தன. பிரபாவதியின் திமிர் பிடித்த பிஹேவியர் ரவிக்குமார் குடும்பத்தை மிரளச் செய்தது. ஒரு கட்டத்தில், 'ஏண்டா இவளைச் சந்தித்தோம்’ என்று ரவிக்குமாரே நொந்து போகும் அளவுக்கு பந்தாக்கள் எல்லை மீறின.
தனியாக வீடு பார்த்து அவர்களைக் குடியமர்த்தினார் பிரபாவதியின் அம்மா. வாழ்க்கை இன்னும் கலவரமாக ஆரம்பித்தது. வீட்டில் பிரபாவதி வைத்ததுதான் சட்டம். அவள் நினைத்ததுதான் சாப்பாடு. அவள் சொன்ன உடையைத்தான் ரவிக்குமார் அணிய வேண்டும். அலுவலகத்துக்கு லீவு போட வேண்டும் என்றால் போட வேண்டும். அவனுடைய தாய், தந்தை உறவினர்களிடம் பேசக்கூடாது. அவர்களும் வீட்டுக்கு வரக் கூடாது. ஆனால், பிரபாவதியின் அம்மா மட்டும் தினமும் வருவாள். அம்மாவும் மகளும் தனியே சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
செக்ஸ்கூட அவள் விருப்பத்தின் மேல்தான் நிகழ வேண்டும். அது காலையோ, மதியமோ, நள்ளிரவோ, அதிகாலையோ அவள் விரும்பினால் அவன் தயாராக இருக்க வேண்டும். இருவருக்கும் சண்டை வரும் போதெல்லாம், ''நான் செய்றதெல்லாம் சரிதான். ஆனா, நீதான் எதுலயுமே சரியில்ல. யோசிச்சுப் பாரு... உனக்கென்ன குறைச்சல்? அழகான பொண்டாட்டி கிடைச்சிருக்கேன். எதிர்காலத்துல என் சொத்தும் உனக்குத்தான் வரப்போகுது. ஆனா, நீ எதுக்காச்சும் லாயக்கா..? அழகும் இல்ல, சொத்தும் இல்ல. அந்த விஷயத்துலகூட உன் மேல எனக்கு திருப்தி இல்ல. எல்லாம் என் தலையெழுத்து...'' என்று ஒரு நாள் அவள் உச்சகுரலில் கத்தியபோது உள்ளுக்குள் உடைந்து போனான் ரவிக்குமார்.
'பொறுத்தது போதும்' என்று பொங்கி எழுந்து, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினான். அப்போதும் கலங்கவில்லை பிரபாவதியும் அவளுடைய தாயும். ''நாம 'ஓ.கே’தான். அவன்தான் சரியில்ல. உன் அழகையும், அந்தஸ்தையும் அவனால தாக்குப் பிடிக்க முடியல. நமக்கெல்லாம் பணக்காரங்கதான் சரி. இந்த மாதிரி ஜென்மங்கள் சரிப்படாது...'' என்று அம்மா சொன்னதை ஏற்றுக் கொண்ட பிரபாவதி, இன்று தனி மரமாக... நோய்வாய்ப்பட்ட அம்மாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இது, வளர்ப்புக் கோளாறு அவளுக்கு தந்த பரிசு!
ரவிக்குமாரோ... மொத்தத்தையும் கெட்ட கனவாக மறந்து, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 'நான் சரி, நீ சரியல்ல’ என்ற வகைப் பெண்ணான பிரபாவதியைப் போல், பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் காதலும் இருக்காது, ரொமான் ஸும் இருக்காது. உண்மையில் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3


Source - Vikatan Magazine

Friday, May 20, 2011

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது... திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்!

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது... திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்!
புதுடெல்லி, மே 20,2011
ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
கனிமொழியை உடனடியாக கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதேபோல், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
கனிமொழி, சரத்குமார் இருவரும் மாலை 4 மணிக்கு மேல் திகார் சிறைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளளனர். (தொடர்புடையச் செய்தி: கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்! )
மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக, நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டால் ரூ.1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில், முக்கியப் பங்கு உள்ளது என சிபிஐ-யின் முதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த முறைகேட்டில் கனிமொழிக்கும் பங்கு உள்ளது என்ற சிபிஐ, அவரது பெயரை துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. கூட்டு குற்றச்சதி செய்ததாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டது. கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பெண் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் அளித்தாக வேண்டும் என்றும் ராம் ஜெத்மலானி வாதிட்டார்.
அதேநேரத்தில், கலைஞர் டிவி நிர்வாகத்தில் துவக்கம் முதல் மூளையாக இருந்து செயல்பட்டவர் கனிமொழியே என்றும், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிமன்றம், முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை வருமான வரி அலுவலகத்தில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜரான பிறகு, கனிமொழியும் சரத்குமாரும் மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 14-ல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, மே 20-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர்.
கலைஞர் டிவியின் செயல்பாடுகளின் பின்னணியில் கனிமொழி முக்கியப் பங்கு வகிக்கிறார் என்றும்,
2009-ல் ஆ.ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக மீண்டும் நியமிப்பது தொடர்பாக திமுக தலைமையகம் மற்றும் இடைத்தரகர்களுடன் கனிமொழி தொடர்ந்து தொடர்புகொண்டு பேசிவந்துள்ளார் என்றும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய ரூ.214 கோடி பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே சிபிஐ-யின் குற்றச்சாட்டு.
ஆனால், பால்வாவின் நிறுவனம் மூலம் பெற்றது கடன் தொகையே என்றும், அதனை திருப்பித் தந்துவிட்டோம் என்றும் கலைஞர் டிவி தரப்பு விளக்கம் அளித்து வந்தது கவனத்துக்குரியது.



Source - Vikatan Magazine

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்!

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்!
புதுடெல்லி, மே 20,2011
ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
கனிமொழியை உடனடியாக கைது செய்ய நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதையடுத்து, கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.
தனது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதும், நீதிபதியின் உத்தரவைக் கேட்கும்போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் கனிமொழி.
"நான் வியப்படையவில்லை. உத்தரவை எதிர்ப்பார்த்தேன். சட்ட ரீதியாக போராடுவேன்," என்றார் கனிமொழி.
பின்னர், கனிமொழி தனது கணவர் அரவிந்தனை ஆறுதலுக்காக கட்டிப் பிடித்தார். அப்போது, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அப்போது, அருகிலிருந்த ஆ.ராசாவின் மனைவி எம்.ஏ.பரமேஸ்வரி கனிமொழி தோளில் கைவைத்து ஆறுதல் கூறினார்.

Source - Vikatan News

கனிமொழி கைது.. திமுக அதிர்ச்சி; எம்.பி.க்கள் கண்ணீர்

கனிமொழி கைது.. திமுக அதிர்ச்சி; எம்.பி.க்கள் கண்ணீர்
புதுடெல்லி, மே 20,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழியை கைது செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் திமுக அதிர்ச்சி அடைந்ததுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
இந்த உத்தரவின் போது, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியுடன் இருந்தவர்களில் திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலுவும் ஒருவர்.
அப்போது அவர் கருத்து கூறுகையில், "ரியாக் செய்வதற்கு என்ன இருக்கிறது? திமுக அதிர்ச்சியுற்ற நிலையில் உள்ளது," என்றார் டி.ஆர்.பாலு.
அவருடன் இருந்த மூன்று திமுக எம்.பி.க்கள் மனமுடைந்து கண்ணீர் விட்டனர். ஏனையோர் செல்பேசி வழியாக பத்தற்றத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.

Source - Vikatan

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 1

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 1

புதிய பகுதி
அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்

உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ இனி இதழ்தோறும் பேச வருகிறார், எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' என்றபடி...அகிலன் இனி உங்களுடன்..!
'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!
நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள். ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.
இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
செல்வகுமார் - சமிக்ஷா... காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஓர் ஆண் குழந்தை. இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள். என்ன ஆச்சு?
குழந்தை பிறக்கும் வரை ரொமான்டிக்கான விஷயங்களுக்கு இருவருக்குமே நிறைய நேரம் இருந்தது. அடிக்கடி கிளம்பி எங்காவது ரிஸார்ட்டுக்குப் போய்விடுவார்கள். செக்ஸ் என்பதை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அனுபவிக்காமல்... வெவ்வேறு லொகேஷன்களில் ருசித்தார்கள். 'முத்தம்’ என்பதில் கிடைக்கும் எனர்ஜியும், எலெக்ட்ரி சிட்டியும் உற்சாகத்தைத் தரக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து முத்தங்களாவது கொடுத்துக் கொள்வார்கள்.
செல்வகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகள் கொடுப்பதில் வல்லவன். முக்கியமாக வகை வகையான வண்ணங்களைக் கொண்ட உள்ளாடை களைப் பரிசாகக் கொடுத்து, மனைவியைச் அணியச் சொல்லி ரசிப்பான். அந்த இரவு உடைகள் எல்லாம் 'ஸீ த்ரூ’ பாணியில் மிகவும் செக்ஸியாக இருக்கும். முதலில் சமிக்ஷா வெட்கப்பட்டாலும், உள்ளூர அதில் மிகவும் மகிழ்ந்தாள். பதிலுக்கு அவளும் செல்வ  குமாருக்கு நிறைய பரிசுகளை வழங்குவாள். அவனைக் குளிக்க வைத்து, தானும் நனைவாள். செக்ஸில் முழு ஈடுபாடு காட்டுவாள். காதலர்கள் போல் சினிமா தியேட்டர் இருட்டறைகளில் அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிக் கொள்வாள்.
ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவரவர் அலுவலகங்களில் புரமோஷன் பெற்று, ஹவுஸிங் லோன், பிரசவ நெருக்கடிகள், குழந்தை பறித்துக் கொண்ட நேரம் போன்றவற்றால் அந்நியோன்யத்துக்கான நேரம் மெள்ள குறைந்து போனது- பேச்சும்கூட! இரவு வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துவிட்டு உடனே தூங்குவதற்குத்தான் மனமும் உடலும் அவர்களுக்கு இடம் தந்தன. இருவருக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்ள தேவைப்பட்ட ரொமான்ஸ் இல்லாமல் போனதால், அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. முக்கிய மான பிரச்னையே, இருவரும் பேசிக் கொள்ளாமல் போனதுதான்.
பிரபல செக்ஸாலஜி டாக்டர் கோத்தாரி, 'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஓபனாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!' என்கிறார்.
மற்றொரு தம்பதி, பிருந்தா - சரவணன். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே காதலும் இல்லை, ரொமான்ஸும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ். இயந்திர மயமாக உடலுறவில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். ஆனால், பரஸ்பர வெறுப்பும், மனதில் வெறுமையும் இருவரை யும் பாதித்துக் கொண்டே இருந்தது. கோர்ட் படி ஏறாமலே தனித்தனி யாகப் பிரிந்துவிட்டனர். குழந்தைகளையும் பிரித்துக் கொண்டார்கள்.
'ஓர் உண்மையான பாராட்டு என்னைப் பல மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்' என்றார் எழுத்தாளர் மார்க் ட்வைன். இது கணவன் - மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.
மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும். அப்படி ஒரு கேஸ் ஹிஸ்டரியை அடுத்த இதழில் பார்க்கலாம்.


- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

Thursday, May 19, 2011

கவிழக் காரணம் கருணாநிதியே!

கவிழக் காரணம் கருணாநிதியே!

ப.திருமாவேலன்
படம் : என்.விவேக்
ருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!
எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்... மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் - எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ''எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!'' - இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது. இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராத வராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணா நிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ''என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்... பார்த்தீங்கள்ல... அதுதான் நடந்திருக்கு!'' என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!
எல்லா மனிதனுக்கும் முதலில் இருக்க வேண்டியது குற்ற உணர்ச்சி! தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தேவை இல்லை. தன் மனதளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டுவதுதான் குற்ற உணர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி, தவறு களைப் பகிரங்கமாகச் செய்தார்.
அதைக் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப்படுத்தினார். துளி வருத்தமும் அவரது வார்த்தைகளில் இல்லை. விமர்சனங்கள் குறித்துக் கவலையே படவில்லை.  மன்னராட்சிகளில்கூட லேசான கிண்டலால் உணர்த்த 'கோமாளிகள்’ இருந்தார்கள். ஆனால், இன்று மந்திரிகளே... தந்திரிகளாக மாறி கருணாநிதியின் ஜாடிக்கு ஏற்ற மூடிகளாக உருமாறிப்போனார்கள். இவர்கள் அனைவருமே வெளி யதார்த்தங்களை மறைத்து, திரை மறைவில் தி.மு.க-வைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். கட்சியில், ஆட்சியில், கருணாநிதி வீட்டில் நடந்தது எதுவுமே தொண்டனுக்குத் தெரியாது. 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று கருணாநிதியும் சொல்ல முடியாது.
விலைவாசி, மின்சாரம் இரண்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு எழுதி யாருக்கும் தெரிய வேண்டிய நிலை இல்லை. ஆனால், இவை இரண்டையும் ஒரு பிரச்னையாகவே கருணாநிதி நினைக்கவில்லை என்பதுதான் வேதனைக்கு உரியது. கோடிகளைக் கொட்டி கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதற்காக... ஐந்து நாள் கூத்துக்காக... 1008 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திய கருணாநிதி, 'விலைவாசி இப்படி அநியாயமாகப் போய்க்கொண்டு இருக்கிறதே... என்ன செய்யலாம்?’ என்று விவாதிக்கவே இல்லை. மின் தட்டுப்பாடு குறித்து, ஒரே ஒரு முறை விவாதித்ததாக நினைவு. ஒரு முதலமைச்சர் தீர்க்க வேண்டிய பிரச்னையாக இவை இரண்டையும் கருணாநிதி நினைக்கவே இல்லை. கேட்டால், ஆந்திரா, கர்நாடகா விலைவாசியை வாசிப்பார். மேற்கு வங்கத்தில் மின்சாரம் இல்லை, எல்லோருமே இருட்டில்தான் இருக்கிறார்கள் என்பார். விலைவாசியைக் குறைக்க முடியவில்லையே, தடை இல்லாமல் மின்சாரம் தர முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது குரலில் இருந்து வெளிப்படவே இல்லை. 'இதெல்லாம் என் வேலை இல்லை’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, பாராட்டு விழாக்களில் திளைத்தார்.
கருணாநிதி, முதல்வர். அவரது மகன் ஸ்டாலின், துணை முதல்வர். மூத்த மகன் அழகிரி, மத்திய அமைச்சர். பேரன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர். பேத்தி கயல்விழி, கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். பேத்தி எழிலரசி, செம்மொழி மாநாட்டில் வீணை வாசிக்கிறார். திரைத் துறையில் சன் டி.வி-யின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து, அழகிரி மகனும் ஸ்டாலின் மகனும் வந்தார்கள். அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டி.வி. மூலமாக வருகிறார். தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்களாக மகன் தமிழரசுவும், மகள் செல்வியும் என கருணாநிதியின் குடும்பம் அரசியலில், தொழில் துறையில், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கதையை எத்தனையோ முறை எழுதி ஆகிவிட்டது.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தினர் மேடையில் அமர்ந்தபடி பார்க்க... தமிழறிஞர்கள் உட்கார இடம் இல்லாமல் நின்றபடி தவிக்கும் அளவுக்குக் குடும்ப ஆதிக்கம் தூள் கிளப்பியது. இது எங்கே வந்து நிற்கிறது தெரியுமா... கருணாநிதியின் அக்கா மகன் சொர்ணத்தின் பேத்தி மதுரம், 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் புகழும் படம் 'முரசொலி’யில் கால் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் இது. அதாவது, குடும்பத்தின் குதூகலத்துக்காகவே கருணாநிதி இயங்கலாம். நல்ல குடும்பத் தலைவரின் பொறுப்பும் அதுதான். ஆனால் கட்சியை, ஆட்சியை, முரசொலியையும் பலியிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கருணாநிதிக்கு இல்லை. குடும்ப ஆதிக்கம் குறித்துக் குறை சொல்லும்போது எல்லாம், 'என்ன செய்ய... எனக்குக் குடும்பம் இருக்கிறதே!’ என்றார் கருணாநிதி. 'கத்தி இருக்கிறது வெட்டுகிறேன், துப்பாக்கி இருக்கிறது சுடுவேன்’ என்று யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?
தனக்கு இயற்கையாக அமைந்த வாதத் திறமையையும் தமிழ் வளத்தையும், சுயநலனுக்காக மட்டுமே என்று சுருக்கினார். இது தொடர்பான கருணாநிதியின் வாக்குமூலங்கள்... புகைப்படங்கள்... விழாக்கள் அனைத்துமே தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தன.
இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு பூதாகாரமாகக் கிளம்பியது. 'ஆ.ராசா குற்றமற்றவர்... அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை’ என்ற கருணாநிதியே... அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவரை நியாயப்படுத்தி தீர்மானம் போட்டார். காமன் வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியை, 'போஃபர்ஸ் கறை படிந்த காங்கிரஸ்’கூட கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால், ராசாவை கருணாநிதி நீக்கவும் இல்லை. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் இல்லை. அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன், தனது துணைவி ராஜாத்தியும் மகள் கனிமொழியும் பேசியது குறித்தும் கருணாநிதி கவலைப்படவில்லை. அவரது பெயரால் உருவாக்கப்பட்ட டி.வி-யே ஸ்பெக்ட்ரம் ஊழலின் லஞ்சப் பணத்தால் வந்தது என்று சி.பி.ஐ. சொன்னபோதும் வாய் திறக்கவில்லை. மனைவி தயாளு அம்மாளை அறிவாலயத்துக்கு உள்ளேயே வந்து சி.பி.ஐ. விசாரிக்கிறது. மகள் கனிமொழி, 'கஸ்டடி குற்றவாளி’யாக நித்தமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்.
இது எதுபற்றியும் கருணாநிதிக்குக் குற்ற உணர்ச்சி வரவே இல்லை. 'சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறதே!’ என்று கேட்டால், 'இது வழக்கமானதுதானே!’ என்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டில் எல்லார் வீட்டுக்கும் பேப்பர் பையன் வந்து போவதுபோல், சி.பி.ஐ. வந்து போகிறதா என்ன? அறிவாலயத்தின் மேல் தளத்தில் சி.பி.ஐ. இருக்க... தரைத் தளத்தில் கருணாநிதி - காங்கிரஸுடன் மன சஞ்சலம் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்க முடியுமானால், அது அதிர்ச்சிக்கு உரியது!
இவை அனைத்துக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்னை! 2008 நவம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தி, தங்கள் கட்சி எம்.பி-க்கள் பதவி விலகப்போகிறார்கள் என்று அறிவித்தது முதல்... இன்றைக்கு வரை கருணாநிதி நித்தமும் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களின் பின்னணியில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானதுதான் மிச்சம். தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக... தனக்கு 'தமிழினத் தலைவர்’ என்ற அங்கீகாரம் எதனால் கிடைத்ததோ, அந்தக் கொள்கையையே காவு கொடுக்க கருணாநிதி தயாரானார். கொத்துக் கொத்தாகச் செத்தது குறைந்து... தனித் தனியாகப் பலரும் மரணித்தபோது, 'மழைவிட்டாலும் தூவானம் விடாது அல்லவா’ என்று கருணாநிதி சொன்னதைப்போன்ற கல் நெஞ்ச வாக்குமூலம் உலகச் சர்வாதிகாரிகளின் வரிசையில் பொறிக்கத்தக்கது.
போர்க் குற்றவாளியாக ஐ.நா. இன்று சொல்லும் ராஜபக்ஷேவைக் கோபப்படுத்துவது மாதிரி எதுவும் பேசக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி. அரசியல் அதிகாரப் பதவி ஒரு மனிதரை இப்படி எல்லாமா மாற்றிவிடும் என்று சந்தேகப்படத்தக்க வார்த்தைகள் இவை.
இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழக வாக்காளனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது.
'உதவாது இனி தாமதம்’ என்று வாக்கு இயந்திரத்தில் அழுந்தக் குத்தி இருக்கிறார்கள்.
தனி நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, 'வேட்டுக்களால் தீர்மானிக்க முடியாததை, ஓட்டுக்களால் செய்ய முடியும்’ என்றார் அண்ணா. பாதை தவறிய தம்பியைப் பதம் பார்த்து இருக்கிறது ஓட்டு.
பொதுவாகவே, வீழ்ந்துபட்டவர்களை விமர்சிப்பது தவறானதுதான். ஆனால், வீழ்த்தப்பட்ட காரணங்களை உணர்ந்து சொல்வது தேவையானது. இது கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெயலலிதாவுக்கும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரை!

Source - Vikatan Source

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

எம்.பரக்கத் அலி
படங்கள்: சு.குமரேசன், பொன்.காசிராஜன், என்.விவேக், கே.கார்த்திகேயன்
'இனி எல்லாம் ஜெயமே!’- வெள்ளிக் கிழமை காலையில் ஜெயலலிதா கேட்ட முதல் வாசகமே இதுதான்!
'சிம்ம ராசி நேயர்களே! மக நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் இன்று நினைத்தது நடக்கும். காரியங்கள் கைகூடும்’ என்று சன் டி.வி-யில் வாசித்த பெண், ஜெயலலிதாவுக்காகவே தேர்ந்தெடுத்துச் சொன்னது மாதிரி இருந்தது அன்றைய ராசி பலன். அடுத்த மூன்று மணி நேரத்தில் வேதா நிலையத்தின் பால்கனிக்கு கை காட்ட வந்துவிட்டார் ஜெயலலிதா.
அவரை அரசியல் தலைவியாக அங்கீகரித்த இடம் அந்த பால்கனிதான். 'பால் கனிப் பாவை’ என்று இதை வைத்துத்தான் அவரது அரசியல் எதிரிகள் கிண்டல் அடித்தார்கள். அரசியலில் அத்தனை அவமானங்களையும் புறம் தள்ளி, மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்துள்ளார் ஜெ.
புத்தம் புது சட்டசபையை கருணாநிதி கட்டிவைத்து இருக்க, அதைப் புறக்கணித்துவிட்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!
தேர்தல் முடிவு வெளியான நிமிடம் முதல் ஜெயலலிதாவின் பதவியேற்பு வைபவம் வரையிலான ரிலே ரேஸ் கவரேஜ் இங்கே...
போயஸ் கார்டன்!
வாக்கு எண்ணிக்கை துவங்கிய முதல் ஒரு மணி நேரம் வரை போயஸ் கார்டனில் அமைதி. முன்னணி நிலவரம் எகிறத் துவங்கிய சமயம், உற்சாக முகத்துடன் ஜெயலலிதாவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) திருமலைசாமி வெளியே வந்து நின்றார். தொடர்ந்து வீட்டுக்குள் இருந்தே பட்டாசுப் பெட்டிகள் அணி வகுத்து வந்தன. போயஸ் கார்டனில் முந்தைய நாளே வாங்கிவைக்கப்பட்டு இருந்தது பட்டாசு.
பெரும்பான்மைத் தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியாக, 'ஆட்சி உறுதி’ என்று தெரிந்ததும், போயஸ் கார்டனின் இரும்புக் கதவு திறந்து தொண்டர்களுக்கு வழிவிட்டது. இப்படி இதற்கு முன் தொண்டர்களை உள்ளே அனுமதித்ததே இல்லை. தொடர்ந்து தொண்டர்களுக்கு பால்கனி தரிசனம் கொடுத்தார் ஜெயலலிதா. 1989-க்குப் பிறகு இப்போதுதான் பால்கனியில் நின்று போஸ் கொடுத்து இருக்கிறார் ஜெயலலிதா!
தலைவர்களுக்கு மரியாதை!
று நாள் லாயிட்ஸ் சாலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வெயில் தணிந்த நேரத்தில் வந்தார். உடல் எடை காரணமாக, சிறிது நாட்களாக நடப்பதற்கே சிரமப்படுகிறார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உயரம் குறைந்த படிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து, அண்ணா சாலை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அருகே இருக்கும் அண்ணா சிலைக்கு மலர் தூவினார். அப்போது மறந்தும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தின் மீது அவர் பார்வை திரும்பவில்லை. அப்படியே, அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதி களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். பெரியார் சிலைக்கும் மாலை போட்டார்.  இந்த மரியாதை நடைமுறையில் ஒன்று மட்டும் மிஸ்ஸிங். கடந்த முறை பெரியார் திடல் பெரியார் சமாதிக்குச் சென்ற ஜெயலலிதா, இந்த முறை வீரமணி மீதான கோபத்தில் பெரியா ரையும் புறக்கணித்தார்!
கவர்னர் மாளிகை!
முதல்வராக ஒரு மனதாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கார்டனுக்கு ஓ.பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் எடுத்துச் சென்றார்கள். கொஞ்ச நேரத்திலேயே கவர்னர் பர்னாலாவைச் சந்திக்க காரில் கிளம்பினார் ஜெயலலிதா. கவர்னருக்குப் பூங்கொத்து கொடுத்தார். கவர்னரும் அவருடைய உறவினர்களும் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துகள் வழங்கினார்கள். விழாக்களில் கலந்துகொள்ளும்போது ஜெயலலிதாவுக்குத் தனியாகப் பெரிய நாற்காலியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். கவர்னர் மாளிகைக்கு ஜெயலலிதா வந்தபோது, அங்கே இருந்த சின்ன நாற்காலியில் கொஞ்சம் சிரமப்பட்டு தான் அமர்ந்தார்.
ஆறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பர்னாலாவைச் சந்தித்தார். சில நிமிடங்களி லேயே இந்த சந்திப்பு முடிந்து, ஜெயலலிதா உடனே கிளம்பினார். கவர்னரின் செயலாளர் தயங்கியபடி, ''புரோட்டோகால்படி கவர்னர் எழுந்து நின்ற பிறகுதான் நீங்கள் எழுந்து செல்ல வேண்டும். இது மரபு'' என்று சொல்ல... உடனே மீண்டும் பர்னாலா அருகில் போய் அமர்ந்தார் ஜெயலிதா. பர்னாலா எழுந்து உள்ளே சென்ற பிறகு, ஜெயலலிதா கிளம்பினார்.
பதவியேற்பு வைபவங்கள்!
 மேடையில் அமைச்சர்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான நாற்காலிகள் போட, ஜெயலலிதாவுக்கு மட்டும் ஸ்பெஷல் குஷன் நாற்காலி. விழா தொடங்குவதற்கு முன்பு கீழே முன் வரிசையில் அமைச்சர்களாக பதவியேற்க வந்தவர்கள் அமர்ந்து இருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பு எல்லோரும் மேடை ஏறினார்கள். அவர்களிடம் ''யாரும் அம்மா வின் காலில் விழக் கூடாது'' என்று கிளாஸ் எடுத்துக்கொண்டு இருந்தார் ஓ.பி.
 போலீஸ் அதிகாரிகள் எல்லாம் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டார்கள். முன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம் மட்டும் கோட் சூட்டில் முன் வரிசையில் இருந்தார். தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சி.பி.ஐ. அகில இந்தியச் செயலாளர் பரதன், குஜராத் முதல்வர் மோடி, அஜித் சிங் என்று தமிழகத்தைத் தாண்டிய பிரபலங்களும் வந்திருந்தார்கள். மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா போனதால், ஜெயலலிதாவுக்காக மோடி வந்திருந்தார். ஆனாலும், மோடி வருகைக்கு இன்னொரு காரணம் சொல்கிறார்கள். தமிழகத்தில் மின் வெட்டுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, குஜராத்தில் உபரியாகக் கிடைக்கும் மின்சாரத்தை வாங்க ஜெயலலிதா நினைக்கிறாராம். ஜெயலலிதா, விஜயகாந்த்துக்கு அடுத்து கைதட்டல்களை அள்ளியவர் மோடிதான்.
 அரங்கத்தில் இருந்த நாற்காலிகளில் நம்பர்கள் எழுதி ஒட்டி இருந்தார்கள். முன் வரிசையில் நம்பர் 1 என்று எழுதப்பட்ட இருக்கையில் சசிகலா அமர்ந்தார். அவர் வருவதற்கு முன்பு, அந்த இருக்கையில் சோ உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு அவர் மூன்றாவது எண்ணுக்கு மாறினார். சசிகலா வுக்கும் சோவுக்கும் இடையே இருந்த இரண்டாவது எண் இருக்கை காலியாகவே இருந்தது. அந்த இருக்கையில் சசிகலாவும் சோவும் கைகளை ஊன்றியபடி கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த இரண்டாவது எண் இருக்கை,  விஜயகாந்த்துக்கு என்று பேச்சுகள் கிளம்பின. விஜயகாந்த் வந்தபோது,மோடி, நாயுடு, பரதன் ஆகியோரிடம் கை குலுக்கிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்து விட்டார். இரண்டாவது எண் இருக்கையில் கடைசியில் சுலோச்சனா சம்பத்தான் அமர்ந்தார்.
சோவும் சசிகலாவும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். ''இந்த ஆட்சியை உருவாக்கினவங் களே இவங்க ரெண்டு பேர் தான்'' என்று ஒருவர் கமென்ட் அடித்தார்.
'விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவந்தால்தான் வெற்றி சாத்தியம்’ என்று சொல்லி, ஜெயலலிதாவைச் சம்மதிக்கவைத்தவர் சோ. அதைப் பக்குவமாகப்  பல முறை புரியவைத்தவர் சசிகலா. இதனால் கருணாநிதியால் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் சோ. ''வெற்றிச் சூத்திரத்தை சோவும், கட்சியின் வேட்பாளர் தேர்வை சசிகலாவும் செய்து கொடுத்து, ஜெயலலிதாவை வெற்றி மனுஷியாக மாற்றினார்கள்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!
ஜெயலலிதா காதில் புது கம்மல்!
தவியேற்புக்காகப் புத்தம் புதுப் புடவையில் வந்திருந்தார் ஜெயலலிதா. அவருடைய தலை முடியின் முன் பகுதி கொஞ்சம் நரைத்து இருக்கும். ஆனால், பதவியேற்புக்காக டை அடித்து ஃப்ரெஷ் லுக்கில் வந்தார். இன்னொரு பெரிய மாற்றம்... ஜெ காதில் மின்னிய கம்மல். 1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு நகை அணிவதையே நிறுத்தி இருந்தார் ஜெயலலிதா. அதன் பிறகு, இன்றைக்குத்தான் ரொம்பவும் சிறிய சைஸில் கல் வைத்த கம்மல் அவருடைய காதில் டாலடித்தது.
அவரது முகம் அதைவிட டாலடித்தது!


Source - Vikatan Magazine

மண்ணைக் கவ்விய மந்திரிகள்!

மண்ணைக் கவ்விய மந்திரிகள்!

அவுட்... டவுட்!
டாவடிகளும் ஆணவப்போக்கும் அமைச்சர்களின் வெற்றியைக் காவு வாங்கத் தயங்காது என்பது குறித்து, '6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்!’ என்ற தலைப்பில் 3.4.11 தேதியிட்ட ஜூ.வி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டு இருந்தோம். வானில் மிதப்பவர்களாக வலம் வந்த தி.மு.க. அமைச்சர்கள், 'நாங்கள் வெற்றி பெறப்போகும் வித்தியாசத்தை ஜூ.வி. பார்க்கத்தானே போகிறது?’ என்று சவால் விட்டார்கள். வாக்கு எண்ணிக்கை வெளியான நாளில் நம் கணிப்பு அப்படியே நிகழ்ந்தது. 26 அமைச்சர்களில் 18 பேர் மண்ணைக் கவ்வினார்கள். அசைக்க முடியாத சக்திகளாக வலம் வந்த தி.மு.க. அமைச்சர்கள் செமத்தியாக வீழ்த்தப்பட்டதற்கு என்ன காரணம்?
'அய்யோ பாவம்’ அன்பழகன்!
'துறைமுகம் தொகுதியில் இருந்து வில்லிவாக்கத்துக்கு மாறினாலும் அன்பழகனுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை!’ எனச்  சொல்லி இருந்தோம். அது அப்படியே நிகழ்ந்தது. அடாவடி, முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அறவே இல்லை என்றாலும், ஆக்கபூர்வமான பணி எதுவுமே இல்லை என்பதால், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் இந்த பழுத்த அரசியல்வாதி!
'ஆறு கொலை’யால் வீழ்ந்த ஆறுமுகம்!
தடாலடிக்குக் குறைவு இல்லாத வீரபாண்டி ஆறுமுகம் தற்காப்பு முயற்சியாக இந்தத் தேர்தலில் சங்ககிரி தொகுதிக்கு மாறினார். ஆனாலும், மக்களின் ஆவேசத்தில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. சேலத்தில் ஒரே வீட்டில் நடந்த ஆறு படுகொலைகளும், அதில் வீரபாண்டியாரின் உறவின​ரான பாரப்பட்டி சுரேஷ் வளைக்கப்​பட்டதும், சொத்துக் குவிப்புகளும் மாவட்டத்தையே திகைக்கவைத்தது. போதாக் குறைக்கு ஸ்டாலினுடன் மோதல் வேறு. எல்லாமும் சேர்ந்து​தான் தலை குப்புறத் தள்ளி​விட்டது, இந்தத் தடாலடிப் புள்ளியை!
பொன்முடியைப் புரட்டிய 'எரிச்சல்!’
பொன்முடி, கட்சிக்காரர்களிடம் எரிந்து விழும் வழக்கம்கொண்டவர். இவரை வீழ்த்த சரியான ஆயுதமாக, மென்மைப் புள்ளியான சி.வி.சண்முகத்தை அ.தி.மு.க. நிறுத்தியது. அப்போதே உஷாராகி இருக்கவேண்டிய பொன்முடி, கரன்ஸியை நம்பினாரே தவிர, கட்சிக்காரர்களைக் கடுகளவும் மதிக்கவில்லை. தேர்தல் முடிந்த ஒரு மாத இடைவெளியில், பொன்​முடியின் கல்லூரிக்காக 30 பேருந்துகள் வாங்கப்பட்டன. 'மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆவார்’ என்கிற நம்பிக்​கையில் அவற்றை வாங்கி வந்தது பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி. மக்களின் மனநிலை புரியாமல் 'பெருக்குவதிலேயே’ தீவிரமாக இருந்ததால்தான், பொன்முடிக்கு இந்தப் பொளேர் அடி!
நெளிய முடியாத நேரு!
'ஊரையே வளைத்துப் போட்டுள்ள நேருவின் அடா​வடிகளே, திருச்சி மாவட்​டத்தில் அ.தி.மு.க-வை அமோகமா ஜெயிக்க​வெச்சி​டுவாங்கம்மா!’ என ஜெயலலிதாவிடம் சொன்னார் நேருவை எதிர்த்துக் களம் இறங்கிய மரியம் பிச்சை. 'திருச்சியில் மலைக்கோட்டையை மட்டும்தான் விட்டுவெச்சிருக்கியா நேரு?’ என கருணாநிதியே நேரடியாக நேருவை கிண்டல் அடித்ததாகச் சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் நேருவின் உறவினருக்குச் சொந்தமான எம்.ஜெ.டி. பேருந்தில், ஐந்தரை கோடி ரூபாய் பிடிபட்டது. நேருவின் சகோதரர்கள் சேர்த்து​வைத்த 'நல்ல’ பெயர்களும் சந்தி சிரித்தன. தொகுதி முழுக்கப் பண மழை பொழிந்தும் நேரு வெல்ல முடியாததற்குக் காரணம், அதே பணம்!
பரிதாபப் பரிதி!
பரபரப்பும் விறுவிறுப்புமாக பரிதியைப் பார்த்து பலவருடங்​களாகிவிட்டன. மிகச் சொற்​பமான வாக்குகள் முன்னும் பின்னுமாக ஏறி இறங்கியபோது, 'என் தொகுதி என்னைக் கைவிடாது’ என நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் பரிதி. கட்சியின் அடிமட்டத் தொண்​டன் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் தேர்தலுக்கு முன்னால் கண்டுகொள்ளவில்லை என்ற கோபம் இவர் மீது  இருந்​தது!
அடங்காத அன்பரசன்!
ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டே இருப்பது தா.மோ.அன்பரசனின் வழக்கம். அதனாலேயே இவருடைய பெயரை டவுட் பட்டியலில் எழுதி இருந்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பல்லாவரம் தொகுதி நிர்வாகிகளைச் சரிக்கட்டி,  பெரும் வெற்றிக்குத் தயாராக இருந்தார். தேர்தல் நேரத்திலும் தீராத பண மழை... ஆனாலும், ஸீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்த இ.கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளை, அன்பரசனால் சரிக்கட்ட முடியவில்லை.மணல் விவகாரம் தொடங்கி பல விவகாரங்கள், அவருடைய வெற்றிக்கு ஆப்புவைத்தன!
இடியில் சிக்கிய எம்.ஆர்.கே.!
'நிச்சயம் ஜெயிப்பார்!’ எனக் கட்சி இவரை உறுதியாக நம்பிய​போதும்,  இவர் தேறுவது கடினம் என்றே எழுதி இருந்தோம். கடுகடு முகம்... சிடுசிடு வார்த்தை... எனக் கட்சிக்காரர்களிடம் எம்.ஆர்.கே. சம்பாதித்த 'நல்ல’ பெயருக்கு அளவே இல்லை. 'அவரை வளர்ப்​பது... இவரை வளைப்பது’ எனக் கோஷ்டி அரசியலை கொம்பு சீவிவிட்டதிலும் எம்.ஆர்.கே-வுக்கு பெரிய 'புண்ணியம்.’ யாரையும் மதிக்காத 'மாண்பே’ இவரை இடியில் சிக்கவைத்தது!
ஒன்றும் செய்யாத உபயதுல்லா!
மூன்று முறை தொடர்ந்து தஞ்சாவூரில் வென்று இருந்தாலும், தொகுதிக்கு உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. 'நான் நிச்சயம் தோற்றுவிடுவேன்’ எனப் பிரசாரத்தின்போது வெளிப்​படையாகப் பேசி, பீதியைக் கிளப்​பினார். மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் உள்ளடி வேலைகளைத்தான் அப்படி சூசகமான வார்த்தைகளால் சொன்​னார். அது அப்படியே பலித்தது!
மன்றாடிய மதிவாணன்!
'மதிவாணனுக்கு பால் பொங்​குவது கஷ்டம்!’ என சொல்லி இருந்தோம்.  கீழ்வேளூர் தொகு​தியின் மீனவர் பகுதி வாக்குகள் இவரைத் தலைகுப்புறத் தள்ளித் தோற்கடித்தன. ஆரம்பத்தில் ஓலைக் குடிசையில் வாழ்ந்த மதிவாணன், பங்களா கட்டி பால் காய்ச்சியபோதே, அய்யாவின் செல்வாக்கு அவுட். 'அங்கே சொத்து... இங்கே ஃபேக்டரி...’ என எதிர்க் கட்சிகள் கிளப்பிய பிரசாரமும் நன்றாக எடுபட்டது!
செல்வாக்கு இழந்த செல்வராஜ்!
வனத் துறை அமைச்சராக இருந்த செல்வராஜ், கோஷ்டி அரசியலை தீவிரமாக முன்னெடுத்​தவர். நேருவுக்கும் இவருக்கும் நேரடி​யாகவே மோதல் நடந்தது. சாதிய வாக்குகளை மட்டுமே நம்பியதும், உள்ளடி வேலைகளும்தான் செல்​வராஜின் செல்வாக்கை ஓட்டை​யாக்கின!
சுறுசுறு இழந்த சுரேஷ்ராஜன்!
அசராத சுறுசுறுப்பாலேயே அமைச்சர் பதவி பெற்றவர். எளிமையும் சுறுசுறுப்பும் சைரன் கார் சத்தத்தில் சைலன்ட்டானது. உள்ளடிப் பூசல்களும் நிறைய. உறவு வட்டமும் கட்சியை ஆட்டிப் படைத்ததால், இவருடைய தோல்வியில் கட்சித் தலைமைக்கே பெரிய ஆச்சர்யம் இல்லை!
புகழ் இழந்த பொங்கலூர் பழனிசாமி!
அமைச்சர் ஆனது முதல் 'கோஷ்டி’ அக்கப்போரில் இறங்கியதும், கட்சி வேலைகளைவிடச் சொந்த சம்பாத்தியங்களில் கவனம் செலுத்தி​யதும்தான் இவரது தோல்விக்குக் காரணம். உள்ளடி உபத்திரவங்களே பழனிசாமியைப் பஞ்சராக்கின!
சக்தி இழந்த சாத்தூர் ராமச்சந்திரன்!
சாத்தூரைத் தவிர்த்துவிட்டு, அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார். கட்சிக்காரர்களுக்குப் பெரிதாக ஏதும் செய்யாததும், உறவினர்களைக் கட்சிக்குள் வளரவிட்டதும், சாத்தூராரின் சக்தியைக் குறைத்து​விட்டன!
வீழ்த்தப்பட்ட 'வெள்ளக்கோவில்’!
''சொல்லிக்கொள்ளும்படி என்ன செய்தார்?'' எனத் தொகுதிக்குள் பட்டிமன்றமே நடத்தலாம். தொகுதி மாறியதால், தொல்லை இருக்காது என நினைத்தார். பண இறைப்பை நிகழ்த்தினார். ஆனாலும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சண்முகவேலு கையே ஓங்கியதால் வீழ்ந்தார்!
தடுமாறிய தமிழரசி!
'உன்னைப்பற்றிய ரிப்போர்ட் சரி இல்லையே... அதனால், அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்!’ என கருணாநிதி பகிரங்கமாகச் சொன்னபோதே, தலைவரின் வார்த்தைகளை தமிழரசி ஏற்று இருக்கலாம். 'எப்படி இருந்த தமிழரசி இப்படி ஆயிடிச்சு?’ எனத் தென் மாவட்டமே திகைத்தது. அழகிரி பெயரை அதிகமாகப் பயன்படுத்தி தொகுதியைக் கவனிக்காததன் விளைவு இது!
சாமியை வீழ்த்திய தாட்பூட்!
கே.பி.பி.சாமி அமைச்சரான பிறகும், அவருடைய தடாலடி முகம் மாறாததுதான் ஆச்சர்யம். சாமியின் பேரைச் சொல்லி திருவொற்றியூர் தொகுதி முழுக்கக் கட்டப் பஞ்சாயத்து, வெட்டுக் குத்து என மிரட்டல்கள். சாமி தடுக்கவும் இல்லை; தட்டிக் கேட்கவும் இல்லை. இந்த நிலைகுலைவுக்கு அதுதான் காரணம்!
புஸ்ஸான பூங்கோதை!
'என்னதான் சிரமப்பட்டாலும் தேறுவது கடினம்!’ என்றே இவருடைய நிலவரம் குறித்து எழுதி இருந்தோம். அதன்படியே நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்து இருக்கிறார் பூங்கோதை. கட்சிக்காரர்கள் மத்தியிலான வெறுப்பு, தொகுதிக்குப் பெரிதாக ஏதும் செய்யாதது என மைனஸ் பட்டியலின் நீளம் அதிகம்!
'கிர்’ கீதா ஜீவன்!
முரட்டு பக்தர் பெரியசாமியின் மகள். தந்தையின் தலையீடுகளே கீதா ஜீவனைக் கிறுகிறுக்கவைத்தன. 'தொகுதிக்கு இன்னும் செய்திருக்கலாம்’ என்கிற ஏக்கமும் மீனவர்கள் விவகாரமும், கீதாவுக்குப் பின்னடைவைக் கொடுத்தன. தனிப்பட்ட புகார்கள் ஏதும் இல்லை என்றாலும், தாளித்து எடுத்த புயலுக்கு இவர் தப்பவில்லை!
- இரா.சரவணன்


Source - Vikatan Magazine

கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை!

கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை!

'ராஜினாமா' ராம.நாராயணன்
மிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததுமே, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
சங்கத்திலும் மாற்றங்கள். ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் ஆகியோர், தலைவர், செயலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய... புதிய தலைவராகி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். 
இது குறித்து டென்ஷனாகும் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார்,''தலைவர், செயலர் பதவியில் இருந்து விலகிய ராம.நாராய​​​​​ணனும், சிவசக்தி பாண்டியனும் அறக்கட்ட​ளையின் அறங்காவலர்கள் பதவியில் இருந்து இன்னமும் விலகவில்லை. இருவரும் ஒண்ணாம் நம்பர் ஊழல் பேர்வழிகள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு முதலில் 5 லட்சம் கேட்டார்கள். அதன் பிறகு, 1 லட்சம் கட்டினால் போதும்... ஏற்கெனவே கட்டியவர்களுக்கு 4 லட்சத்தைத் திருப்பித் தரப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், இதுவரை ஒருவருக்குக்கூட கொடுக்கவில்லை. அந்தப் பணம் எங்கே போனது?
'பருத்தி வீரன்’ தயாரிப்பாளருக்குத் தர வேண்டிய 9 லட்சத்தைத் தராமல் ராம.நாராயணன் ஏமாற்றியது ஏன்? வீடு கட்டுவதற்கு உறுப்பினர்களிடம் ஆளுக்கு 2,000 வசூல் செய்த பணத்துக்கு ரசீது எங்கே? புதுப் படங்களை கலைஞர் டி.வி-க்கு விற்றுத்தருவதாகச் சொல்லி, கோடி கோடியாக வாங்கிய கமிஷன் தொகை எங்கே போனது?
ஒரு சங்கத்தில் தலைவர், செயலர் பதவி விலகினால், ஒட்டுமொத்தக் குழுவையே மாற்ற வேண்டும். ராம.நாராயணன் தலைவராக இருந்தபோது, அவருக்குக் கீழ், துணைத் தலைவராக இருந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகரன். ராம.நாராயணன், பாண்டியன் தவறுகள் செய்தபோது, எதிர்த்துக் கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்த்தவர், சந்திரசேகரன். பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. அதன் பிறகு நடக்கும் தேர்தலில் முறைப்படி போட்டியிட்டு எஸ்.ஏ.சி. தலைவர் பதவியில் அமரட்டும்... வரவேற்கிறேன். சனிக்கிழமை இரவு அவர் பதவி ஏற்றபோது, 'என் மகனை முழுநேர அரசியல்வாதி ஆக்கப்போகிறேன்...’ என்றார். அவரது ஆசையைத் தீர்த்துக்கொள்ள, நாங்கள்தானா கிடைத்தோம்?' என்று கொந்தளித்தார்.
கேயார் புகார் குறித்து ராம.நாராயணனிடம் கேட்டோம், ''முதலில் தாராளமாகப் பணம் செலவு செய்யும் தயாரிப்பாளர்கள், கடைசியில் லேப் பணம் கட்டக்கூட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் அதனால், தயாரிப்பாளர்கள் உறுப்பினராக, 5 லட்சம் கட்ட வேண்டும் என்பது கமிட்டியில் எடுத்த முடிவு. படத்தை ரிலீஸ் செய்யச் சிரமப்படும் எத்தனையோ பேருக்கு, அந்த 4 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து இருக்கிறோம். 'பருத்தி வீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நான் பணமே தர வேண்டியது இல்லை. வீடு கட்டுவதற்கு வாங்கிய 2,000 சங்கத்தில்தான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இப்போதும், எடுத்து முடித்த படங்களை விற்க முடியாமல், எத்தனையோ தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். அவர்களிடம் கலைஞர் டி.வி-க்கு விற்றுத் தருவதாகச் சொல்லி, நான் பணம் சம்பாதித்தேன் என்று குற்றம் சுமத்துவது அபாண்டம். புதிதாக தலைவர் பொறுப்பு ஏற்று இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் என்னுடன்தான் துணைத் தலைவராக இருந்தார். எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்துதான் பார்த்தார். அதனால், அவரிடமே குற்றச்சாட்டுகளைக் கேளுங்கள்... உண்மைகள் புரியும். கோடம்பாக்கத்தில் என்னைப்பற்றியும், கேயார்பற்றியும் விசாரித்துப் பாருங்கள். யார் யோக்கியமானவர் என்பது ஊருக்கே தெரியும்!'' என்கிறார்.
சங்கத்தின் புதிய தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரன், ''சங்கத்தின் தலைவர் ராஜினாமா செய்யும்பட்சத்தில், அவருக்கு அடுத்த பதவியில் இருக்கும் துணைத் தலைவர், புதிய தலைவராகப் பதவி ஏற்கலாம் என்று கவுன்சிலின் சட்டம் சொல்கிறது. அதனால், செயற்குழு கூடி, என்னைத் தலைவராகத் தேர்வு செய்தது. பதவி ஏற்ற 25 நாட்களில் பொதுக் குழுவைக் கூட்டி, மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன். அப்போது வேண்டுமானால், என் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கேயார் கொண்டுவரட்டும். அதுவரை சங்கத்து விஷயங்களை, வெளியில் பேச வேண்டாம். இப்போது இவ்வளவு வீரமாகப் பேசுபவர், தி.மு.க. ஆட்சியின்போது, நடந்த கொடுமைகளை எல்லாம் கைகட்டி வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்தார்? விஜய்க்கும் கவுன்சிலுக்கும் சம்பந்தமே இல்லை. தேவை இல்லாமல் முடிச்சுப் போட வேண்டாம். இதுவரை கவுன்சிலில் அரசியல் ஆதிக்கம் இருந்தது. ஆனால், இனிமேல் கவுன்சிலுக்குள் அரசியலை நுழைய விட மாட்டேன்!'' என்றார்.
நல்லாத்தான் சண்டை போடுறாங்க!
- எம்.குணா


Source - Vikatan Magazine

ரஜினி?

ரஜினி?

கிளினிக்கல் ரிப்போர்ட்
'நிலவே முகம் காட்டு... எனைப் பார்த்து...’ என 'எஜமான்’ படத்​தில் சோகம் சொட்டும் ஒரு பாடலை, ரஜினி பாடுவார். இப்​போது அந்தச் சூழ்நிலையில்தான் அவரது அகில உலக ரசிகர்களும் உருகி வழிகிறார்கள். ரஜினி குறித்துப் பரவும் வதந்திகளால், ரசிகர்கள் மனம் உடைந்து​கிடக்கிறார்கள்.
உண்மையில் ரஜினி நிலை என்ன?
''கடந்த 13-ம் தேதி எல்லோரும் தேர்தல் முடிவை டி.வி-யில் ஆவலோடு பார்த்துக்​கொண்டு இருந்தபோது, ரஜினியும் தனது போயஸ் கார்டன் வீட்டில் சக நண்பர்களோடு கமென்ட் அடித்தபடி, தேர்தல் முடிவுகளைப் பார்த்​தார். இரவு 11 மணிக்கு லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தச் சூழலில், மீடியாக்கள் படையெடுப்பு அந்த மருத்துவமனையை நெருக்க... 'ரஜினி வந்தார்... சிகிச்சை செய்தோம். அவர் திரும்பிப் போய்விட்டார். இப்போது இங்கு இல்லவே இல்லை!’ என்று திருப்பி அனுப்பினர். ஆனால்,  ராமச்சந்திராவில் 7-வது தளத்தில்  இருக்கும் டீலக்ஸ் அறையில்தான் இருக்கிறார் ரஜினி.
'ரஜினிக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல், வயிற்றில் கோளாறு’ என்று லதா ரஜினிகாந்த் திரும்பத் திரும்பச் சொன்னாலும்... உண்மை அது அல்ல. ''ரஜினிக்கு முதலில் நுரை​யீரல் தொல்லையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பிறகு, ராமச்சந்தி​ராவில் ரஜினியின் உடல் முழுவதையும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தார்கள். வயிற்று வலியால் அவதிப்பட்ட ரஜினியின் கல்லீரல் சோதிக்கப்பட்டது. ஒருவேளை, இது கொடூரமான வியாதிக்கான அறிகுறி​யாக  இருக்குமோ என்ற சந்தேகத்தில் பயாப்ஸி எடுத்து, கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சாம்பிள் அனுப்பி இருக்கிறார்கள். சிறுநீரகத்திலும் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கை, கால்கள் அடிக்கடி வீங்கிக்கொள்கிறது. இதனால்  அவஸ்தையில் தவிக்கிறார்.  நடக்க முடியாமல், வீல் சேர் மூலம்தான் செல்கிறார். இதய நிபுணர் டாக்டர் தணிகாசலம், ராமசாமி உடையார் மகன் வெங்கடாசலம், ரஜினியின் இளமைக் காலத்து நண்பர் ராஜ்பகதூர் ஆகியோர் அருகில் இருந்து கவனித்துக்கொள்கின்றனர்.
ரஜினிக்கு 61 வயது. 'ராணா’ படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என்று மூன்று வேடங்கள். அதற்காக பட பூஜைக்கு முன்பில் இருந்தே, எடையைக் குறைத்தார். அதனால், அடிக்கடி மயக்கம் ஏற்பட்டதாம். ஆனால், அதைக் குடும்ப உறுப்பினர்களிடம்கூட சொல்லாமல் மறைத்தார் ரஜினி. அவருக்கு சர்க்கரை வியாதியும் இருப்பது இப்போது தெரிய வந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துப் போயிருந்​தால், இவ்வளவு தூரம் பிரச்னை ஆகியிருக்காது!'' என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் புலம்புகிறார்கள். 
ரஜினி, தன் அண்ணன் சத்யநாராயண ராவைத் தன் தந்தை ஸ்தானத்தில்வைத்து வணங்குகிறவர். அவராலேயே ரஜினியைப் பார்க்க முடியவில்லை என்று ஒரு செய்தி உலவ... பெங்ளூருவில் இருக்கும் சத்யநாராயண ராவிடம் பேசினோம்.
''என் தம்பிக்கு உடம்புல எனர்ஜியே இல்லை. ரொம்ப இளைச்சுப்போயிட்டான். ராமச்சந்திரா ஆஸ்பத்தியில அவனுக்கு ட்ரீட்​மென்ட் எடுக்குற டாக்டருங்க, கொஞ்ச நாள் தங்கிட்டு, அப்புறமாப் போகலாம்னு சொல்லி இருக்காங்க... வேற ஒண்ணும் பெருசா பிரச்னை இல்லை...'' என்றார் உறுதியாக.
அவரிடம், ''நீங்கள் உங்கள் தம்பியைப் பார்த்தீர்களா?'' என்று கேட்டோம். ''நான் அவரைப் பார்க்க பெர்மிஷன் இல்​லேன்னு சொல்லிட்டாங்கப்பா...'' என்றார் வருத்த​மாக!
''உப்பு, சர்க்கரையை பிரிக்கும் செயல்​பாடு சரிவர நடைபெறவில்லை என்பதால் உடம்பில் வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்கள் விரைவில் அமெரிக்காவில் இருந்து ரஜினிக்காக வர இருக்கிறார்கள்!'' என்கிறார்கள் மருத்துவமனை தரப்பில். எப்போதும் படுத்தே கிடக்கும் ரஜினி, கடந்த 16-ம் தேதி காலையில் மருத்துவ​மனை வளாகத்தில் வாக்கிங் கிளம்பி இருக்கிறார். அப்போது திடீரென்று மயக்கம் வரவே, கீழே விழுந்து விட்டார். உடனடியாக மருத்துவர்கள் பதறிப்போய் ரஜினியை சூழ்ந்துகொண்டு தீவிர சிகிச்சை அளித்தார்கள்.  அந்தக் காட்​சியை ஆஸ்பத்திரியில் பார்த்த ஒருசில ஊழியர்கள், 'ரஜினிக்கு ஆபத்து’ என்று தகவல் அனுப்ப, தமிழகம் முழுவதும் தவ​றான வதந்தி றெக்கைகட்டி பறந்தது.
''நான்கரை ஆண்டுகளுக்கு முன்​னால் ரஜினிக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது சிகரெட் போன்ற வஸ்துகளை தவிர்க்கச் சொன்னார்கள். ஆனால் டென்ஷன் காரணமாக அவரால் தவிர்க்க முடியவில்லை. இதுவே நோய் முற்றியதற்கு முழுக் காரணம். மூச்சுத்​திணறல் அதிகமாக இருப்பதால் வெளி​நாட்டுக்கு அழைத்துச் செல்வதிலும் சிரமம் இருக்கிறது!'' என்று சொல்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.
ஜெய​லலிதா பதவியேற்பு விழாவுக்கு வந்த நரேந்​திரமோடி, சந்திரபாபு நாயுடு இருவரும் அன்று மாலை 4 மணிக்கு, ரஜினியை நேரில் பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்கள். 
எம்.ஜி.ஆர். அமெரிக்கா, புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது தமிழ்​நாட்டில் பதற்றம் கிளம்பியது. அதனைத் தவிர்ப்பதற்காக வீடியோ ஷூட் செய்து, அந்தக் காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பினர். அதுபோலவே, ராமச்​சந்திரா மருத்துவமனையில் ரஜினி ஓய்வு எடுக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து சேனல்களுக்கு கொடுக்க இருக்கிறாராம், லதா ரஜினிகாந்த். 
இதற்கிடையில் 16-ம் தேதி ரஜினியோடு சேர்ந்து மதிய உணவு சாப்​பிட்டார், தனுஷ். இந்த தகவலை, தன்னுடைய டிவிட்டரில் பதிவு செய்து ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்து இருக்கிறார், தனுஷ்.     
- எம்.குணா
படம்: சு.குமரேசன்

Source - Vikatan Magazine

திகாருக்கா.. திரும்பவும் சென்னைக்கா?

திகாருக்கா.. திரும்பவும் சென்னைக்கா?

கனிமொழி!
ஸ்பெக்ட்ரம் 2ஜி வழக்கில் கனிமொழி​யின் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு, வரும் 20-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெளியாக இருக்கிறது. கடந்த 14-ம் தேதி இந்த வழக்கு வந்தபோது, ஜாமீன் மனு விவகாரத்தை நீதிபதி 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை!
கசியும் காரணங்கள்...
இதற்குக் சில காரணங்கள் சொல்லப்​படுகின்றன. ஏற்கெனவே ஜாமீன் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவித்து உள்ளார் நீதிபதி. அந்த முடிவே கனிமொழி விவகாரத்துக்கும் பொருந்தும் என்பதுதான் சி.பி.ஐ. கோர்ட்டின் முடிவு. ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு மறுநாள் தீர்ப்பு கொடுக்கும்போது, ஏற்கெனவே வந்த வதந்திகள் உண்மையாகும் என்கிற நிலைமை உறுதியாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல்தான், சிறப்பு நீதிமன்றம் விவகாரத்தை ஒத்திப் போட்​டுள்ளது. இதனால், கனிமொழியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவது உறுதி என்றே தெரிகிறது.
இன்னொரு முக்கிய விஷயம், குற்றம் சாட்டப்பட்டவர் தமிழகத்தின் முக்கியக் கட்சி சம்பந்தப்பட்டவர். அவர் கைது செய்யப்படும்போது, சில விஷமிகள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த​லாம். மேலும், தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்காத சூழ்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு மறுநாள் சட்டம்-ஒழுங்​குக்கு சிக்கல் வந்தால், கேட்பார் யாரும் இல்லை. இதை எல்லாம் நீதிமன்றம் கவனத்தில்கொண்டது என்றே கூறப்படுகிறது!
மற்ற குற்றவாளிகளின் வழக்கறிஞர்​களைவிட, ராம்ஜெத்மலானியின் வாதங்கள் நன்றாக இருந்தன. 'அவர் ஒரு பெண், நாடாளுமன்ற உறுப்பினர்’போன்ற அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் நன்றாக ஆய்வு செய்து முடிவு எடுக்கவே, இந்த விவகாரம் மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது!
டோனி ஜோசுதாஸ்...
ஏ.டி.ஏ.ஜி. ரிலையன்ஸ் நிறுவனத்​தின் அனில் அம்பானிக்கு நெருக்க​மானவரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெல்லி விவகாரங்களைக் கவனிப்​பவருமான டோனி ஜோசுதாஸ், இப்போது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்​துக்கு ரெகுலராக வந்து போகிறார். கைதுசெய்யப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உடல்​நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்​களுக்காக அவர் வருவதாகச் சொல்கிறார்கள்.
2ஜி வாகனம்...
காலை 8.30 மணிக்கு திகார் ஜெயிலில் இருந்து புறப்​படும் '2ஜி ஸ்பெக்ட்ரம்’ வாகனம் ஒன்று, 9.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. ஆ.ராசா உட்பட 12 பேரை ஏற்றி வருகிறது அது. 20 கி.மீ தூரத்தில் இருந்து வரும் வாகனம், மாலை 4.30-க்கு மீண்டும் திகார் ஜெயிலுக்குப் புறப்படும். நீதிமன்றத்துக்கு தினமும் வரும் 2ஜி புள்ளிகளுக்கு மதிய உணவு, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்பில்தான் வழங்கப்படுகிறது. தற்போது 2ஜி ஊழல் சம்பந்தப்பட்டவர்களிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றப் பத்திரிகை நகலை சரிபார்க்க சிறப்பு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால், இந்தக் குற்றவாளிகளில் ஒரு சிலர்தான் நகல்களைப் படிக்கின்றனர். கனிமொழியும் அவர் கணவர் அரவிந்தனும் ஆ.ராசாவோடு சேர்ந்து அமர்கின்றனர். இந்த சமயத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஆ.ராசாவின் மனைவி திடீரென நீதிமன்றத்துக்கு வர... அவருக்கு இடம் கொடுத்து உட்காரவைத்தார் கனிமொழி. அப்போது தன் மகளை மடியில் உட்காரவைத்துக்கொண்டு, ஒரு பாசத் தந்தையாகக் காட்சியளித்தார் ஆ.ராசா.
'நோ டென்ஷன்’ பேஸ்புக்!
அரவிந்தனும், கனிமொழியும் டெல்லி சம்பந்தப்பட்ட பிக்சர் டிக்ஷனரியோடு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் உட்கார்ந்து இருக்கும்போது, இதைப் புரட்டிப் படிக்கின்றனர். அதில் இருக்கும் வெவ்வேறு தாவரங்களைப்பற்றி கணவரும் மனைவியும் பேசிக்​கொள்கின்றனர். கலைஞர் டி.வி. சரத்குமார் வசம் ஒரு பிளாக்பெர்ரியும் ஒரு ஆப்பிள் ஹேண்ட் செட்டும் இருக்கிறது. அதில் ஃபேஸ்புக்கில் மேய்கிறார். கருணாநிதியுடன் கனிமொழி இருக்கும் ஒரு கலைநுணுக்கமான படத்தை ஃபேஸ்புக்கில் யாரோ பேஸ்ட் செய்து இருக்க... அதை கனிமொழிக்குக் காட்டினார் சரத்குமார். இந்த மாதிரியான விஷயங்கள், அவர்களை டென்ஷன் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது!
கனிமொழி சென்டிமென்ட்!
கனிமொழிக்கும் சில சென்டிமென்ட்கள்... நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நம்பர் 11 சௌத் அவென்யூ வீடு கனிமொழிக்கு ஒதுக்கப்பட்டது. 'இந்த வீட்டுக்கு வந்தது முதல் ராசி சரியில்லை’ என்பது கனிக்கு ஏற்பட்ட அனுபவம். இதையட்டி, மாதவ் சாலையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஸ்வர்ண ஜெயந்தி அபார்ட்மென்ட்டில் வீடு பார்த்தார். இந்த 601-ம் எண் வீட்டைப் புதுப்பிக்கும் பணி கடந்த பல வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்தப் பணி முற்றுப் பெற்று... இப்போது கனிமொழியும் அங்கே இடம் பெயர்ந்துள்ளார். இந்த வீட்டின் ராசி, வருகிற 20-ம் தேதி தெரியும்!
- சரோஜ் கண்பத்

Source - Vikatan Magazine

கொக்.. கொக்.. கொளத்தூர்!

கொக்.. கொக்.. கொளத்தூர்!
திக் திக்.. திணறல்!
மிழக சட்டசபைத் தேர்தலில், ஸ்டார் தொகுதியான மு.க.ஸ்டாலினின் கொளத்​தூர் மட்டும்தான் டைம் பாம் ஆகி, கடும் பரபரப்பைக் கிளப்பியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கையில் பார்டர் மார்க்கில் ப.சிதம்பரம் பாஸ் மார்க் வாங்கியதுபோல, தட்டுத் தடுமாறி வெற்றிக் கோட்டைத் தொட்டார் ஸ்டாலின்!
இந்தக் களேபரத்துக்கு உண்மையில் என்ன காரணம்?
சென்னை லயோலா கல்லூரியில் கவுன்ட்டிங் தொடங்குவதற்கு முன்பே, முதலில் வந்தவர் அ.தி.மு.க. வேட்​பாளர் சைதை துரைசாமி. கொளத்தூர் தொகுதிக்கான வாக்குகள் மொத்தம் 12 டேபிள்களில் எண்ணப்பட்டன. முதல் சுற்றில், வெறும் 145 ஓட்டுகளிலேயே முன்னணியில் இருந்தார் ஸ்டாலின். இதுவே, முடிவு இழுபறிதான் என்பதை சூசகமாகத் தெரிவித்தது.
2-வது சுற்றில் 351 ஓட்டுகள், 3-வதில் 255 ஓட்டுகள், 4-வதில் 555 ஓட்டுகள் என்று மூன்று இலக்கத்திலேயே ஸ்டாலின் ஓடிக்கொண்டு இருக்க.... நிழலாகத் தொடர்ந்​தார் சைதை துரைசாமி. இதனால் இரு கழகத்தினருக்கும் ஏக டென்ஷன். போலீஸ் படையும், மீடியா ஆட்களும், ஏஜென்ட்டுகளும் பரபரப்பாகக் குவிந்துவிட்டனர். 5-வது சுற்றில் சட்டென்று 273 ஓட்டுகளை சைதை துரைசாமி அதிகம் பெற, ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரம் செய்தனர். இதே நிலையில் தொடர, 8-வது சுற்றில் மீண்டும் ஸ்டாலின் 66 ஓட்டுகள் அதிகம் பெற, இரண்டு கட்சிகளுக்கும் ரத்தக் கொதிப்பு அதிகமானது.
இந்த சீசா விளையாட்டில், 9-வது சுற்றில் இரண்டு இயந்திரங்கள் மக்கர் செய்ய, அவற்றைத் தனியாகத் தூக்கிவைத்துவிட்டு, 10-வது ரவுண்ட்டுக்கு போனார்கள் அதிகாரிகள். 9-வது ரவுண்டில் துரைசாமியும், 10 மற்றும் 11-வதில் ஸ்டாலினும்... 12 மற்றும் 13-வதில் துரைசாமியும்... 14-வதில் ஸ்டாலினும்... 15-வதில் துரை​சாமியும் நுரை தள்ளி மூச்சுவாங்க ஓடிக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், 16-வது சுற்றில் ஓர் இயந்திரம் வேலை செய்யாமல் போக, ''இயந்திரத்தை ஒழுங்காக லாக் செய்யாததால், அது முடிவுகளைக் காட்டவில்லை...'' என்றார்கள் அதிகாரிகள். பிறகு 17 மற்றும் 18 வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆக, 18 சுற்றுகளின் மொத்த முடிவுகள்படி சுமார் 2,000 ஓட்டுகள் ஸ்டாலினுக்கு அதிகம். கடைசியாக, 19-வது சுற்று வாக்குகளை எண்ணத் தொடங்கியபோதுதான் ஆரம்பித்தது கலாட்டா!
இந்த சுற்றில், இயந்திரங்களின் எண்கள் மாற்றப்பட்டு இருப்பதாக புகார் கிளப்பிய அ.தி.மு.க-வினர், ''பிரச்னையைத் தீர்த்த பிறகே அடுத்த ரவுண்டுக்குப் போக வேண்டும்!'' என்று கறாராகச் சொன்னார்கள். அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
ஆனால் அதற்குள் கைகலப்பு தொடங்க, மாலை 5 மணிக்குப் பிரச்னை பூதாகாரமானது. இரண்டு தரப்பும் மோதிக்கொள்ள, சண்டைக் களமாகிவிட்டது லயோலா கல்லூரி ஏரியா. டியூப் லைட்டுகள், கம்ப்யூட்டர், கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மோதல் சீரியஸ் ஆனதும், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்டத் தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் ஆகியோர் ஸ்பாட்டுக்கு விரைந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க-வினர் சாலை மறியல் செய்ய, தவித்து அல்லாடினர் பொதுமக்கள். விஷயம் அறிந்ததும் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதா​கிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். ஜெயக்குமார் ''வேலை செய்யாத இயந்திரங்களின் வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும்...'' என்றார். தேர்தல் அதிகாரியோ, ''வாக்கு எண்ணிக்கை நடத்த மட்டுமே எனக்கு அதிகாரம் உண்டு!’ என்று மறுத்துவிட்டார்.
சுமார் இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி​வைக்கப்பட்டு இருந்தது. ஜெயக்​குமார், துரைசாமி ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் முறையிடக் கிளம்பிப் போனார்கள்.
19-வது சுற்று எண்ணுவதற்கு முன், முதலில் வேலை செய்யாமல் இருந்த மூன்று இயந்திரங்களை எண்ணுவதற்கு ஏற்பாடு நடந்தது. அந்த ரவுண்டில் மொத்தம் ஐந்து இயந்திரங்கள் எண்ணப்பட்டன. திக் திக் ஆவலில் மீடியாக்கள் குழம்பிக்கொண்டு இருந்த நிலையில், ஸ்டாலின் அங்கு வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தார். அவருடன் 'முரசொலி’ செல்வம், மருமகன் சபரீசன், நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். 'வேட்பாளர்கள், ஏஜென்ட்டுகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் தவிர, வேறு யாருமே உள்ளே நுழைய முடியாத நிலையில், இவர்களை மட்டும் போலீஸ் எப்படி அனுமதித்தது?’ என்று பத்திரிகையாளர்கள் கோபப்பட்டனர்.
18-வது சுற்று முடிவில் 2,000 ஓட்டுகளுக்கு மேல் வாங்கியிருந்த ஸ்டாலின், 19-வது சுற்று முடிவில் 2,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அப்போதுதான் தி.மு.க-வினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். சான்றிதழை வாங்கிக்கொண்டு வெளியே வந்த ஸ்டாலினிடம் பத்திரிகையாளர் கருத்துக் கேட்டபோது, பதில் சொல்லாமல், சான்றிதழை மட்டும் காட்டி போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டார்!
- எம்.பரக்கத் அலி
படங்கள்: கே.கார்த்திகேயன், என்.விவேக்

Source - Vikatan Magazine

அழகிரி கோட்டையில் ஓட்டை!

அழகிரி கோட்டையில் ஓட்டை!

பத்துக்குப் பத்தும் அவுட்
துரை சத்யசாயி நகரில் இருக்கிறது மு.க.அழகிரியின் வீடு. சாதாரணமாக இந்த
ஏரியாவில் எந்த வாகனமும் நுழைய முடியாது; அவ்வளவு கெடுபிடிகள். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோதே, மூன்று ஆட்டோக்களில் வலம் வந்தவர்கள், அ.தி.மு.க. வெற்றிக்கு ஆதரவு கோஷம் எழுப்பிவிட்டுப் போனார்கள். சத்யசாயி நகருக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது! 
திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றிக்குப் பரிசாக, மு.க.அழகிரிக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தது கட்சித் தலைமை. தென் மண்டலத்தில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அழகிரிதான் பொறுப்பாளர். திருமங்கலம் ஃபார்முலாவைப் பயன்படுத்தி, தெற்கில் அடுத்தடுத்து நடந்த நான்கு இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியை ஜெயிக்கவைத்து, 'இடைத் தேர்தல் நாயகர்’ ஆனார் அழகிரி. அதனால், பொதுத் தேர்தலிலும் அவரை மலைபோல் நம்பியது தி.மு.க. தலைமை. அதற்காகவே, அவர் அடையாளம் காட்டிய நபர்களுக்கு எல்லாம் ஸீட் கொடுக்கப்பட்டது. ''தென் மாவட்டங்களில் 45 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்!'' என வாக்குச் சாவடி வாசலிலேயே வாக்குக் கொடுத்தார் அழகிரி. ஆனால், 12 தொகுதிகளைப் பிடிப்பதற்கே, தி.மு.க. கூட்டணிக்கு நுரை தள்ளிவிட்டது. தென் மண்டலத்தில், மற்ற எட்டு மாவட்டங்களில் குறைந்தது ஒரு தொகுதியிலாவது தி.மு.க. ஜெயித்து இருக்கிறது. ஆனால், அழகிரியின் தலைமை பீடமான மதுரை மாவட்டத்தில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மண்ணைக் கவ்வியது.
பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களான சுப.தங்கவேலன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி போன்றவர்கள் எல்லாம் ஜெயித்து இருக்கும்போது, மதுரை மாநகர், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் இருவரையும் கங்கணம்கட்டி தோற்கடித்து இருக்கிறார்கள் மதுரை மக்கள்.
இது அழகிரி கனவிலும் எதிர்பார்க்காத முடிவு.
''மதுரை மாவட்டத்தில், மேலூர், மதுரை கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய தொகுதிகளில் வெற்றி நிச்சயம்!'' என்று முழங்கினார்கள் அழகிரியின் விசுவாசிகள். ஆனால், அழகிரி வசிக்கும் மதுரை மேற்குத் தொகுதியில்கூட தி.மு.க. ஜெயிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அழகிரி, ''அரசு ஊழியர்களை நம்பினோம். அவங்க நமக்கு தேனைத் தடவிட்டாங்க. பணத்தை வாங்கிக்கிட்டு எல்லோரும் துரோகம் பண்ணிட்டாங்க. என்கிட்ட உண்மை நிலவரத்தைச் சொல்லாம மறைச்சிட்டாங்க...'' என்று சத்தம் போட்டாராம்.
''காலம் கடந்து ஞானம் பிறந்து இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு 500 கொடுத்தார்கள். ஆனாலும், அழகிரி எதிர்பார்த்த ஓட்டு விழவில்லை. அந்தத் தேர்தலுக்குப் பிறகு தன்னை மக்கள் தொண்டனாகக் காட்டிக்கொள்ள, மனு வாங்கும் படலம் உள்ளிட்ட வைபோகங்களை நடத்தினார் அழகிரி. சில மனுக்களுக்கு தீர்வும் சொல்லப்பட்டது. அழகிரியிடம் மாற்றம் தெரிந்தாலும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் மாறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அழகிரியை முன்னிலைப்படுத்தித் தங்களை வளப்படுத்திக்கொண்டவர்கள், ஒசைப்படாமல் அவரது அரசியல் அஸ்திவாரத்துக்கும் ஆப்படித்தார்கள்!'' என்கிறார்கள் மதுரையின் விவரமான உடன்பிறப்புகள்,
சொத்துகளை மிரட்டி வாங்க ஒரு கூட்டம் அலைந்தது. தனியாக வசிக்கும் தம்பதியைத் தேடிப் பிடித்து அவர்களிடம், 'உனக்கென்ன புள்ளையா குட்டியா... பேசாம நாங்க குடுக்குறதை வாங்கிக்கிட்டு கையெழுத்தைப் போடு!’ என்று மிரட்டியே மதுரைக்குள் ஏகப்பட்ட சொத்துகளை அடித்துப் பறித்தது இந்தக் கூட்டம். மதுரை மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பத்திரப் பதிவு நடந்தாலும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் கமிஷன் வாங்க ஒரு கூட்டம். 25 லட்சத்துக்கு மேல் சொத்து வாங்கினால், அதற்கான 'கட்டிங்’கை இந்தக் கும்பலுக்குக் கொடுத்தால்தான் பத்திரம் பதியவே முடியும்.
தென் மண்டல ஐ.ஜி. அலுவலகம் மதுரையில் இருப்பது பலருக்குத் தெரியும். ஆனால், தி.மு.க-வினரால் நடத்தப்பட்ட தென் மண்டல டி.ஜி.பி. அலுவலகம் ஒன்றும் மதுரையில் இருந்தது. தென் மாவட்டங்களில் எந்த போலீஸ் அதிகாரியை எந்த ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் போட வேண்டும்; எந்த அதிகாரியை மதுரைக்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுப்பது இங்குதான். நேர்மையான அதிகாரிகள் பலர் பந்தாடப்பட்டார்கள்.
மதுரை வடக்குத் தொகுதியில் அரசு ஊழியர் ஓட்டுகள் 30 சதவிகிதம் இருக்கிறது. போலீஸ் குடியிருப்புகளும் இதற்குள்தான் வருகின்றன. போலீஸ் குடும்பங்களும் அரசு ஊழியர்களில் கணிசமானவர்களும் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால்தான், அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
எதற்கெடுத்தாலும் அழகிரியின் பெயர் 'மிஸ்யூஸ்' பண்ணப்படுவதால், போலீஸில் கொடுக்கப்படும் புகார்களுக்கும் நடவடிக்கை இல்லாமல் போனது. எந்தப் பிரச்னை என்றாலும், புகார் கொடுத்தவர்களை போலீஸே மிரட்டி பைசல் பண்ணிவிடும். பொதுமக்களுக்கு மட்டும் அல்ல... போலீஸுக்குப் பிரச்னை என்றாலும் இப்படித்தான் நடந்தது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு தெற்கு வாசல் அருகே பள்ளிவாசல் ஏரியாவில் பணியில் இருந்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் ஒருவர், குடிபோதையில் ஒரே பைக்கில் வந்த மூவரைப் பிடித்து வழக்குப் போட முயன்றார். விஷயம் தெரிந்து அடியாட்களுடன் காரில் வந்த தி.மு.க. அதிரடிப் பிரமுகர், இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துக் கீழே தள்ளிவிட்டு, குடிபோதை ஆட்களை மீட்டுப்போனார். உடனே, விஷயத்தை அப்போது இருந்த கமிஷனரிடம் கொண்டுபோனார், இன்ஸ்பெக்டர். ''இதென்ன கொலை கேஸாய்யா..? அந்தாளுதான் கட்சிக்காரன்னு சொல்லி இருக்கான்ல. பேசாம விட வேண்டியதுதானே?'' என்று ஏச்சு விழுந்ததாம்.
இது இப்படி என்றால்... மாநகராட்சி கவுன்சிலர்களும் பண வேட்டையில் இறங்கினார்கள். விளம்பர நிறுவனங்​கள்கூட தொழில் செய்ய முடியாதபடி, அண்ணன் பெயரைச் சொல்லி ஆட்டம் போட்டது ஒரு கூட்டம். மாநகருக்குள் அழகிரி பெயரைச் சொல்லி தி.மு.க-வினர் செய்த அடாவடிகளை, புறநகரில் ஒன்றியச் செயலாளர்கள் அந்தஸ்தில் இருப்பவர்களும் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த சமாசாரங்களை எல்லாம் கண்டும், காணாததுபோல் இருந்ததால்தான் அழகிரிக்கு இப்படி ஒரு பின்னடைவு!
அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலத்தில்தான் வாக்கு வித்தியாசம் 30,000, 40,000 என்று இருக்கும். இந்தத் தேர்தலில் மதுரை மாவட்டத்திலும் அ.தி.மு.க-வுக்கு அவ்வளவு பெரிய ஓட்டு வித்தியாசம் கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் 16,000 முதல் 48,000 வரை வித்தியாசத்தில் வென்று இருக்கிறது அ.தி.மு.க. கூட்டணி.
மதுரை தெற்குத் தொகுதியில், புதுமுக வேட்பாளரான சி.பி.எம். கட்சியின் அண்ணாதுரை, சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்திலும், திருப்பரங்குன்றம் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜா சுமார் 48,000 வாக்குகள் வித்தியாசத்திலும் ஜெயித்து இருப்பது அழகிரிக்கு விடப்பட்ட சவால். யார் வேட்பாளர், எந்தச் சின்னத்தில் போட்டி இடுகிறார் என்றெல்லாம் பார்க்காமல், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக யார் நின்றாலும், அவர்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து இருக்கிறார்கள் மதுரை மக்கள். கருணாநிதியே மதுரையில் நின்று இருந்தாலும் இதுதான் கதி!
அந்த அளவுக்கு நடந்தது, மௌனப் புரட்சி. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை அழகிரிக்கு 1.40 லட்சம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 2.30 லட்சம் வாக்குகள் கூடுதல்!
மதுரைக்குள் தனது பெயர் கெட்டுக்கிடப்பது தெரிந்தோ என்னவோ மதுரைக்குள் அழகிரி ஓட்டு கேட்டுப் போகவே இல்லை. பணம் மட்டுமே கட்சியை ஜெயிக்கவைக்கும் என்று நம்பினார். ஆனால், ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தது... வாக்காளர்களை வசவு பாட வைத்ததே தவிர, வாக்காக மாறவில்லை.
தன்னைச் சுற்றி இத்தனை வில்லங்கங்களை வைத்துக்கொண்டு, ''தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது!'' என்று எந்த தைரியத்தில் சொன்னார் அழகிரி? உண்மையில் காணாமல்போனது அழகிரி தி.மு.க-தான்!
- குள.சண்முகசுந்தரம்


Source - Vikatan Magazine

தமிழக சட்டசபை 2011 - தேர்தல் முடிவுகள்





வெற்றி
அ.தி.மு.க. கூட்டணி - 203
தி.மு.க.கூட்டணி - 31
மற்றவை - 0











எண் தொகுதி தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி மற்றவை
திருவள்ளூர் மாவட்டம்
1 கும்மிடிப்பூண்டி கே.என்.சேகர் ( பா.ம.க.)
சி.எச்.சேகர் (தே.மு.தி.க.)

2 பொன்னேரி (தனி) அ.மணிமேகலை (தி.மு.க.)
பொன். ராஜா (அ.தி.மு.க.)

3 திருத்தணி இ.எஸ்.எஸ். ராமன்( காங்.)
மு.அருண் சுப்பிரமணியம் (தே.மு.தி.க.)

4 திருவள்ளூர் இ.ஏ.பி.சிவாஜி(தி.மு.க.)
ரமணா (அ.தி.மு.க.)

5 பூந்தமல்லி (தனி) ஜி.வி. மதியழகன் (காங்.)
இரா. மணிமாறன்(அ.தி.மு.க.)

6 ஆவடி ஆர். தாமோதரன்(காங்.)
எஸ். அப்துல் ரஹீம் (அ.தி.மு.க.)

7 மதுரவாயல் செல்வம் (பா.ம.க.)
பீமாராவ் ( மார்க். கம்யூ)

8 அம்பத்தூர் ப.ரங்கநாதன் (தி.மு.க.)
எஸ். வேதாச்சலம் (அ.தி.மு.க.)

9 மாதவரம் கனிமொழி (தி.மு.க.)
வி. மூர்த்தி (அ.தி.மு.க.)

10 திருவொற்றியூர் கே.பி.பி.சாமி(தி.மு.க.)
கே. குப்பன் (அ.தி.மு.க.)

சென்னை மாவட்டம்
11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பி.கே.சேகர் பாபு(தி.மு.க.)
பி. வெற்றிவேல் (அ.தி.மு.க.)

12 பெரம்பூர் என்.ஆர்.தனபாலன் (பெ.ம.க.)
செளந்தர்ராஜன் ( மார்க்.கம்யூ.)

13 கொளத்தூர் மு.க.ஸ்டாலின்(தி.மு.க.)
சைதை சா. துரைசாமி (அ.தி.மு.க.)

14 வில்லிவாக்கம் க.அன்பழகன்(தி.மு.க.)
பிரபாகர் (அ.தி.மு.க.)

15 திரு.வி.க. நகர் (தனி) சி.நடேசன்(காங்.)
வ. நீலகண்டன் (அ.தி.மு.க.)

16 எழும்பூர் (தனி) பரிதி. இளம்வழுதி(தி.மு.க.)
கு.நல்லதம்பி (தே.மு.தி.க.)

17 ராயபுரம் மனோ(காங்.)
டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.)

18 துறைமுகம் அல்தாப் உசேன் (இ.யூ.மு.லீ.)
பழ. கருப்பையா (அ.தி.மு.க.)

19 சேப்பாக்கம் & -திருவல்லிக்கேணி ஜெ.அன்பழகன் (தி.மு.க.)
எம்.தமிமுன் அன்சாரி(ம.நே.ம.க)

20 ஆயிரம் விளக்கு அசன் முகமது ஜின்னா (தி.மு.க.)
பா. வளர்மதி (அ.தி.மு.க.)

21 அண்ணாநகர் வி.கே. அறிவழகன் (காங்.)
எஸ். கோகுல இந்திரா (அ.தி.மு.க.)

22 விருகம்பாக்கம் க.தனசேகரன்(தி.மு.க.)
ப.பார்த்தசாரதி (தே.மு.தி.க.)

23 சைதாப்பேட்டை மு.மகேஷ் குமார் (தி.மு.க.)
ஜி. செந்தமிழன் (அ.தி.மு.க.)

24 தியாகராயநகர் செல்வகுமார் (காங்.)
வி.பி. கலைராஜன் (அ.தி.மு.க.)

25 மயிலாப்பூர் கே.வீ.தங்கபாலு(காங்.)
ஆர். ராஜலட்சுமி (அ.தி.மு.க.)

26 வேளச்சேரி மு.ஜெயராமன் ( பா.ம.க.)
எம்.கே. அசோக் (அ.தி.மு.க.)

காஞ்சிபுரம் மாவட்டம்
27 சோழிங்கநல்லூர் எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி)
கே.பி. கந்தன் (அ.தி.மு.க.)

28 ஆலந்தூர் காயத்திரி தேவி (காங்.)
பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் (தே.மு.தி.க.)

29 ஸ்ரீபெரும்புதூர் (தனி) டி.யசோதா (காங்.)
இரா. பெருமாள் (அ.தி.மு.க.)

30 பல்லாவரம் தா.மோ.அன்பரசன்(தி.மு.க.)
ப. தன்சிங் (அ.தி.மு.க.)

31 தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா(தி.மு.க.)
சின்னையா (அ.தி.மு.க.)

32 செங்கல்பட்டு ரங்கசாமி (பா.ம.க.)
டி.முருகேசன் (தே.மு.தி.க.)

33 திருப்போரூர் திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.)
கே. மனோகரன் (அ.தி.மு.க.)

34 செய்யூர் (தனி) பார்வேந்தன் (வி.சி)
வி.எஸ். ராஜி (அ.தி.மு.க.)

35 மதுராந்தகம் (தனி) ஜெயக்குமார் (காங்.)
எஸ். கணிதா சம்பத் (அ.தி.மு.க.)

36 உத்திரமேரூர் பொன்குமார்(தி.மு.க.)
பா. கணேசன் (அ.தி.மு.க.)

37 காஞ்சிபுரம் உலகராட்சகன் ( பா.ம.க.)
வி. சோமசுந்தரம் (அ.தி.மு.க.)

வேலூர் மாவட்டம்
38 அரக்கோணம் (தனி) செல்லப்பாண்டியன்(வி.சி)
சு. ரவி (அ.தி.மு.க.)

39 சோளிங்கர் அருள் அன்பரசு (காங்.)
பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க.)

40 காட்பாடி துரைமுருகன் (தி.மு.க.)
ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)

41 ராணிப்பேட்டை ஆர்.காந்தி(தி.மு.க.)
அ. முஹம்மத்ஜான் (அ.தி.மு.க.)

42 ஆற்காடு இளவழகன் (பா.ம.க.)
ஆர். சீனிவாசன் (அ.தி.மு.க.)

43 வேலூர் ஞானசேகரன் (காங்.)
டாக்டர் வி.எஸ். விஜய் (அ.தி.மு.க.)

44 அணைக்கட்டு மா.கலையரசு (பா.ம.க.)
வி.பி. வேலு (தே.மு.தி.க.)

45 கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) கே.சீத்தாராமன்(தி.மு.க.)
செ.கு.தமிழரசன்(இ.கு.க.)

46 குடியாத்தம் (தனி) க.ராஜமார்த்தாண்டன்(தி.மு.க.)
லிங்கமுத்து (இ.கம்யூ)

47 வாணியம்பாடி அப்துல் பாசித் (இ.யூ.மு.லீ.
) கோவி. சம்பத்குமார் (அ.தி.மு.க.)

48 ஆம்பூர் ஜே. விஜய இளஞ்செழியன் (காங்.)
அஸ்லம் பாட்ஷா(ம.நே.ம.க)

49 ஜோலார்பேட்டை பொன்னுசாமி (பா.ம.க.)
கே.சி. வீரமணி (அ.தி.மு.க.)

50 திருப்பத்தூர் எஸ்.ராஜேந்திரன்(தி.மு.க.)
கே.ஜி. ரமேஷ் (அ.தி.மு.க.)

கிருஷ்ணகிரி மாவட்டம்
51 ஊத்தங்கரை (தனி) முனியம்மாள் கனியமுது(வி.சி)
மனோரஞ்சிதம் நாகராஜ் (அ.தி.மு.க.)

52 பர்கூர் ராசா ( பா.ம.க.)
கே.இ. கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)

53 கிருஷ்ணகிரி சையத் கியாஸ் அல்ஹக் (காங்.)
கே.பி. முனுசாமி (அ.தி.மு.க.)

54 வேப்பனஹள்ளி டி.செங்குட்டுவன்(தி.மு.க.)
எஸ்.எம்.முருகேசன் (தே.மு.தி.க.)

55 ஓசூர் கோபிநாத் (காங்.)
ஜான் திமோதி(தே.மு.தி.க.)

56 தளி ஒய்.பிரகஷ்(தி.மு.க.)
ராமச்சந்திரன் (இ.கம்யூ)

தர்மபுரி மாவட்டம்
57 பாலக்கோடு பாடி.வெ.செல்வம் ( பா.ம.க.)
கே.பி. அன்பழகன் (அ.தி.மு.க.)

58 பென்னாகரம் இன்பசேகரன்
நஞ்சப்பன் (இ.கம்யூ)

59 தர்மபுரி பெ.சாந்தமூர்த்தி ( பா.ம.க.)
ஏ.பாஸ்கர் (தே.மு.தி.க.)

60 பாப்பிரெட்டிப்பட்டி முல்லைவேந்தன்
பி. பழனியப்பன் (அ.தி.மு.க.)

61 அரூர் (தனி) நந்தன்(வி.சி)
டில்லி பாபு ( மார்க். கம்யூ)

திருவண்ணாமலை மாவட்டம்
62 செங்கம் (தனி) செல்வ பெருந்தொகை (காங்.)
டி.சுரேஷ் குமார் (தே.மு.தி.க.)

63 திருவண்ணாமலை எ.வ.வேலு (தி.மு.க.)
எஸ். இராமச்சந்திரன் (அ.தி.மு.க.)

64 கீழ்பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி(தி.மு.க.)
ஏ.கே. அரங்கநாதன் (அ.தி.மு.க.)

65 கலசப்பாக்கம் சி.எஸ். விஜய குமார் (காங்.)
கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)

66 போளூர் எதிரொலி மணியன் (பா.ம.க.)
எல். ஜெயசுதா (அ.தி.மு.க.)

67 ஆரணி ஆர்.சிவானந்தம்(தி.மு.க.)
பாபு முருகவேல் (தே.மு.தி.க.)

68 செய்யார் எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங்.)
என். சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)

69 வந்தவாசி (தனி) எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன்(தி.மு.க.)
வே. குணசீலன் (அ.தி.மு.க.)

விழுப்புரம் மாவட்டம்
70 செஞ்சி அ.கணேஷ்குமார் ( பா.ம.க.)
சிவலிங்கம் (தே.மு.தி.க.)

71 மயிலம் இரா. பிரகாஷ் ( பா.ம.க.)
கே.பி. நாகராஜன் (அ.தி.மு.க.)

72 திண்டிவனம் (தனி) மொ.ப.சங்கர் ( பா.ம.க.)
த. அரிதாஸ் (அ.தி.மு.க.)

73 வானூர் (தனி) செ.புஷ்பராஜ்(தி.மு.க.)
ஐ. ஜானகிராமன் (அ.தி.மு.க.)

74 விழுப்புரம் க.பொன்முடி(தி.மு.க.)
சி.வி. சண்முகம் (அ.தி.மு.க.)

75 விக்கிரவாண்டி கு.ராதாமணி(தி.மு.க.)
ராமமூர்த்தி ( மார்க். கம்யூ)

76 திருக்கோயிலூர் மு.தங்கம்(தி.மு.க.)
வெங்கடேசன் (தே.மு.தி.க.)

77 உளுந்தூர்பேட்டை முகமது யூசுப்(வி.சி)
இரா. குமரகுரு (அ.தி.மு.க.)

78 ரிஷிவந்தியம் சிவராஜ் (காங்.)
விஜயகாந்த் (தே.மு.தி.க.)

79 சங்கராபுரம் தா.உதயசூரியன்(தி.மு.க.)
ப. மோகன் (அ.தி.மு.க.)

80 கள்ளக்குறிச்சி (தனி) பாவரசு(வி.சி)
பா. அழகுவேல் (அ.தி.மு.க.)

சேலம்
81 கொங்கவல்லி (தனி) கு.சின்னதுரை(தி.மு.க.)
ஆர். சுபா (தே.மு.தி.க.)

82 ஆத்தூர் (தனி) அர்த்த நாரி (காங்.)
எஸ். மாதேஸ்வரன் (அ.தி.மு.க.)

83 ஏற்காடு (தனி ) சி.தமிழ்செல்வன்(தி.மு.க.)
செ. பெருமாள் (அ.தி.மு.க.)

84 ஓமலூர் அ.தமிழ ரசு ( பா.ம.க.)
சி. கிருஷ்ணன் (அ.தி.மு.க.)

85 மேட்டூர் ஜி.கே.மணி (பா.ம.க.)
பார்த்திபன் (தே.மு.தி.க.)

86 எடப்பாடி மு.கார்த்திக் ( பா.ம.க.)
கே. பழனிசாமி (அ.தி.மு.க.)

87 சங்ககிரி வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்(தி.மு.க.)
விஜயலட்சுமி பழனிச்சாமி (அ.தி.மு.க.)

88 சேலம் மேற்கு இரா.ராஜேந்திரன்(தி.மு.க.)
ஜி. வெங்கடாஜலம் (அ.தி.மு.க.)

89 சேலம் வடக்கு ஜெயபிரகாஷ் (காங்.)
மோகன் ராஜ் (தே.மு.தி.க.)

90 சேலம் தெற்கு எஸ்.ஆர்.சிவலிங்கம்(தி.மு.க.)
எம்.கே. செல்வராஜ் (அ.தி.மு.க.)

91 வீரபாண்டி ஆ.இராஜேந்திரன்(தி.மு.க.)
எஸ்.கே. செல்வம் (அ.தி.மு.க.)

நாமக்கல்
92 ராசிபுரம் (தனி) வி.பி.துரைசாமி(தி.மு.க.)
ப. தனபால் (அ.தி.மு.க.)

93 சேந்தமங்கலம் (தனி & பழங்குடியினர்) கே.பொன்னுசாமி(தி.மு.க.)
சாந்தி் (தே.மு.தி.க.)

94 நாமக்கல் ஆர்.தேவராசன் (கொ.மு.க)
கே.பி.பி. பாஸ்கர் (அ.தி.மு.க.)

95 பரமத்திவேலூர் வடிவேல் கவுண்டர் ( பா.ம.க.)
தனியரசு(கொ.இ.பே)

96 திருச்செங்கோடு ஆர்.எம்.சுந்தரம் (காங்.)
பி.சம்பத்குமார் (தே.மு.தி.க.)

97 கொமாரபாளையம் ஜி.செல்வராஜ்,(தி.மு.க.)
பி. தங்கமணி (அ.தி.மு.க.)

ஈரோடு மாவட்டம்
98 ஈரோடு கிழக்கு சு.முத்துசாமி(தி.மு.க.)
சந்திரகுமார் (தே.மு.தி.க.)

99 ஈரோடு மேற்கு யுவராஜ் (காங்.)
கே.வி. ராமலிங்கம் (அ.தி.மு.க.)

100 மொடக்குறிச்சி பழனிசாமி (காங்.)
ஆர்.என். கிட்டுசாமி (அ.தி.மு.க.)

103 பெருந்துறை கே.கே.சி.பாலு ( கொ.மு.க)
என்.டி. வெங்கடாச்சலம் (அ.தி.மு.க.)

104 பவானி கா.சு.மகேந்திரன் ( பா.ம.க.)
பி.ஜி. நாராயணன் (அ.தி.மு.க.)

105 அந்தியூர் என்.கே.கே.பி.ராஜா(தி.மு.க.)
எஸ்.எஸ். ரமணீதரன் (அ.தி.மு.க.)

106 கோபிசெட்டிபாளையம் சி.என்.சிவராஜ்( கொ.மு.க)
கே.ஏ. செங்கோட்டையன் (அ.தி.மு.க.)

107 பவானிசாகர் (தனி) லோகேஸ்வரி,(தி.மு.க.)
சுந்தரம் (இ.கம்யூ)

திருப்பூர்
101 தாராபுரம் (தனி) இரா.ஜெயந்தி(தி.மு.க.)
கே. பொன்னுசாமி (அ.தி.மு.க.)

102 காங்கேயம் விடியல் எஸ். சேகர் (காங்.)
என்.எஸ்.என். நடராஜ் (அ.தி.மு.க.)

112 அவினாசி (தனி) ஏ.ஆர். நடராஜன் (காங்.)
ஏ.ஏ. கருப்புசாமி (அ.தி.மு.க.)

113 திருப்பூர் (வடக்கு) சி.கோவிந்தசாமி(தி.மு.க.)
ஆனந்தன் (அ.தி.மு.க.)

114 திருப்பூர் (தெற்கு) கே.செந்தில் குமார் (காங்.)
கே.தங்கவேலு ( மார்க். கம்யூ.)

115 பல்லடம் பாலசுப்ரமணியன்( கொ.மு.க)
கே.பி. பரமசிவம் (அ.தி.மு.க.)

125 உடுமலைப்பேட்டை இளம்பரிதி ( கொ.மு.க)
ஏ. ஜெயராமன் (அ.தி.மு.க.)

126 மடத்துக்குளம் மு.பெ.சாமிநாதன்(தி.மு.க.)
சி. சண்முகவேலு (அ.தி.மு.க.)

நீலகிரி மாவட்டம்
108 உதகமண்டலம் கணேசன் (காங்.)
புத்தி சந்திரன் (அ.தி.மு.க.)

109 கூடலூர் (தனி) மு.திராவிட மணி(தி.மு.க.)
எஸ்.செல்வராஜ் (தே.மு.தி.க.)

110 குன்னூர் கா.ராமச்சந்திரன்(தி.மு.க.)
தெள்ளி (இ.கம்யூ)

கோவை மாவட்டம்
111 மேட்டுப்பாளையம் பா.அருண்குமார்,(தி.மு.க.)
ஓ.கே. சின்னராஜ் (அ.தி.மு.க.)

116 சூலூர் ஈஸ்வரன் ( கொ.மு.க)
கே.தினகரன் (தே.மு.தி.க.)

117 கவுண்டம்பாளையம் டி.பி.சுப்ரமணியன்(தி.மு.க.)
வி.சி. ஆறுக்குட்டி (அ.தி.மு.க.)

118 கோவை வடக்கு எம்.வீரகோபால்(தி.மு.க.)
தா. மலரவன் (அ.தி.மு.க.)

119 தொண்டாமுத்தூர் எம்.எஸ்.கந்தசாமி (காங்.)
எஸ்.பி. வேலுமணி (அ.தி.மு.க.)

120 கோவை தெற்கு பொங்கலூர் நா.பழனிசாமி(தி.மு.க.)
துரை ((அ.தி.மு.க.)

121 சிங்காநல்லூர் மயூரா ஜெயகுமார் (காங்.)
ஆர். சின்னசாமி (அ.தி.மு.க.)

122 கிணத்துக்கடவு மு.கண்ணப்பன்(தி.மு.க.)
செ. தாமோதரன் (அ.தி.மு.க.)

123 பொள்ளாச்சி நித்யானந்தம் கொ.மு.க)
முத்துகருப்பண்ணசாமி (அ.தி.மு.க.)

124 வால்பாறை (தனி) கோவை தங்கம் (காங்.)
எம்.ஆறுமுகம்(இ.கம்யூ)

திண்டுக்கல் மாவட்டம்
127 பழனி இ.பெ.செந்தில்குமார் (தி.மு.க.)
வேணுகோபாலு (அ.தி.மு.க.)

128 ஒட்டன்சத்திரம் அர.சக்கரபாணி(தி.மு.க.)
பி. பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)

129 ஆத்தூர் இ.பெரியசாமி(தி.மு.க.)
பாலசுப்பிரமணியம் (தே.மு.தி.க.)

130 நிலக்கோட்டை (தனி) ராஜாங்கம் (காங்.)
இரா.ஆ.ராமசாமி (பு.த.க)

131 நத்தம் க.விஜயன்(தி.மு.க.)
இரா. விசுவநாதன் (அ.தி.மு.க.)

132 திண்டுக்கல் ஜே.பால்பாஸ்கர் ( பா.ம.க.)
பாலபாரதி ( மார்க்.கம்யூ.)

133 வேடச்சந்தூர் தண்டபானி (காங்.)
ச. பழனிச்சாமி (அ.தி.மு.க.)

கரூர் மாவட்டம்
134 அரவக்குறிச்சி கே.சி.பழனிசாமி(தி.மு.க.)
வி. செந்தில்நாதன் (அ.தி.மு.க.)

135 கரூர் ஜோதி மணி (காங்.)
வி. செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.)

136 கிருஷ்ணராயபுரம் (தனி) பெ.காமராஜ்,(தி.மு.க.)
எஸ். காமராஜ், (அ.தி.மு.க.)

137 குளித்தலை இரா. மாணிக்கம்(தி.மு.க.)
ஹ. பாப்பாசுந்தரம் (அ.தி.மு.க.)

திருச்சி மாவட்டம்
138 மணப்பாறை டாகர். சுப. சோமு (காங்.)
ஆர். சந்திரசேகர் (அ.தி.மு.க.)

139 ஸ்ரீரங்கம் என்.ஆனந்த்(தி.மு.க.)
ஜெ ஜெயலலிதா (அ.தி.மு.க.)

140 திருச்சி மேற்கு கே.என்.நேரு(தி.மு.க.)
என். மரியம்பிச்சை (அ.தி.மு.க.)

141 திருச்சி கிழக்கு அன்பில் பெரியசாமி(தி.மு.க.) ஆர். மனோகரன் (அ.தி.மு.க.)
142 திருவெறும்பூர் கே.என்.சேகரன்(தி.மு.க.)
எஸ்.செந்தில்குமார் (தே.மு.தி.க.)

143 லால்குடி அ.செளந்திரபாண்டியன்(தி.மு.க.)
செந்தூர்ரேஸ்வரன் (தே.மு.தி.க.)

144 மணச்சநல்லூர் என்.செல்வராஜ்(தி.மு.க.)
பூனாட்சி (அ.தி.மு.க.)

145 முசிறி எம். ராஜ சேகரன் (காங்.)
என்.ஆர். சிவபதி(அ.தி.மு.க.)

146 துறையூர் (தனி) எஸ்.பரிமளா தேவி(தி.மு.க.)
இந்திராகாந்தி (அ.தி.மு.க.)

பெரம்பலூர் மாவட்டம்
147 பெரம்பலூர் (தனி) எம்.பிரபாகரன்,(தி.மு.க.)
இரா. தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.)

148 குன்னம் எஸ்.எஸ். சிவசங்கர்(தி.மு.க.)
துரை காமராஜ்(தே.மு.தி.க.)

அரியலூர் மாவட்டம்
149 அரியலூர் தீ அமரமூர்த்தி (காங்.)
துரை. மணிவேல் (அ.தி.மு.க.)

150 ஜெயங்கொண்டம் ஜெ.குரு (பா.ம.க.)
பா. இளவழகன் (அ.தி.மு.க.)

கடலூர் மாவட்டம்
151 திட்டக்குடி (தனி) சிந்தனைச் செல்வன்(வி.சி)
தமிழ்அழகன் (தே.மு.தி.க.)

152 விருத்தாசலம் நீதிராஜன் (காங்.)
முத்துகுமார் (தே.மு.தி.க.)

153 நெய்வேலி வேல்முருகன் (பா.ம.க.)
சிவசுப்பிரமணியன் (அ.தி.மு.க.)

154 பண்ருட்டி சபா. ராஜேந்திரன்(தி.மு.க.)
பி.சிவக் கொளுந்து (தே.மு.தி.க.)

155 கடலூர் இள.புகழேந்தி, (தி.மு.க.)
எம்.சி. சம்பத், (அ.தி.மு.க.)

156 குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், (தி.மு.க.)
இரா. இராஜேந்திரன் (அ.தி.மு.க.)

157 புவனகிரி அறிவுச்செல்வன் ( பா.ம.க.)
செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.)

158 சிதம்பரம் ஸ்ரீதர் வாண்டையார் ( மூ.மு.க.)
பாலகிருஷ்ணன் ( மார்க். கம்யூ)

159 காட்டுமன்னார்கோயில் (தனி) துரை ரவிக்குமார்(வி.சி)
என். முருகுமாறன் (அ.தி.மு.க.)

நாகை மாவட்டம்
160 சீர்காழி (தனி) உஞ்சை அரசன்(வி.சி)
ம. சக்தி (அ.தி.மு.க.)

161 மயிலாடுதுறை எஸ். ராஜ்குமார் (காங்.)
அருட்செல்வம் (தே.மு.தி.க.)

162 பூம்புகார் அகோரம் ( பா.ம.க.)
எஸ். பவுன்ராஜ் (அ.தி.மு.க.)

163 நாகப்பட்டினம் முகமது ஷேக்தாவூது (இ.யூ.மு.லீ.)
கே.ஏ. ஜெயபால் (அ.தி.மு.க.)

164 கீழ்வேலூர் (தனி) உ.மதிவாணன்,(தி.மு.க.)
நாகை மாளி ( மார்க்.கம்யூ.)

165 வேதாரண்யம் சின்னதுரை( பா.ம.க.)
என்.வி. காமராஜ் (அ.தி.மு.க.)

திருவாரூர் மாவட்டம்
166 திருத்துறைப்பூண்டி (தனி) சி. செல்லத்துரை (காங்.)
உலக நாதன் (இ.கம்யூ)

167 மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா(தி.மு.க.)
ராஜமாணிக்கம் (அ.தி.மு.க.)

168 திருவாரூர் மு.கருணாநிதி(தி.மு.க.)
எம். இராசேந்திரன் (அ.தி.மு.க.)

169 நன்னிலம் ஆர். இளங்கோவன்(தி.மு.க.)
ஆர். காமராஜ் (அ.தி.மு.க.)

தஞ்சை மாவட்டம்
170 திருவிடைமருதூர் (தனி) செழியன்,(தி.மு.க.)
பாண்டியராஜன் (அ.தி.மு.க.)

171 கும்பகோணம் க.அன்பழகன்(தி.மு.க.)
இராம. இராமநாதன் (அ.தி.மு.க.)

172 பாபநாசம் ராம்குமார் (காங்.)
இரா. துரைக்கண்ணு (அ.தி.மு.க.)

173 திருவையாறு எஸ்.செல்லக்கண்ணு(தி.மு.க.)
எம். ரெத்தினசாமி (அ.தி.மு.க.)

174 தஞ்சை உபயதுல்லா(தி.மு.க.)
எம். ரெங்கசாமி (அ.தி.மு.க.)

175 ஒரத்தநாடு மகேஷ் கிருஷ்ணசாமி(தி.மு.க.)
ஆர். வைத்திலிங்கம் (அ.தி.மு.க.)

176 பட்டுக்கோட்டை என்.ஆர். ரங்கராஜன் (காங்.)
செந்தில் குமார் (தே.மு.தி.க.)

177 பேராவூரணி கே. மகேந்திரன் (காங்.)
சி.அருண் பாண்டியன் (தே.மு.தி.க.)

புதுக்கோட்டை மாவட்டம்
178 கந்தர்வக்கோட்டை (தனி) கவிதைப்பித்தன்,(தி.மு.க.)
ந. சுப்ரமணியன் (அ.தி.மு.க.)

179 விராலிமலை எஸ்.ரகுபதி,(தி.மு.க.)
சி. விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)

180 புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு,(தி.மு.க.)
முத்துகுமரன் (இ.கம்யூ)

181 திருமயம் ராம சுப்புராவ் (காங்.)
பி.கே. வைரமுத்து (அ.தி.மு.க.)

182 ஆலங்குடி டாக்டர் அருள்மணி (பா.ம.க.)
கு.ப. கிருஷ்ணன் (அ.தி.மு.க.)

183 அறந்தாங்கி எஸ். திருநாவுக்கரசர் (காங்.)
மு. ராஜநாயகம் (அ.தி.மு.க.)

சிவகங்கை மாவட்டம்
184 காரைக்குடி கே.ஆர். ராமசாமி (காங்.)
சித. பழனிச்சாமி (அ.தி.மு.க.)

185 திருப்பத்தூர் கே.ஆர்.பெரியகருப்பன்(தி.மு.க.)
ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.)

186 சிவகங்கை வி.ராஜசேகரன் (காங்.)
குணசேகரன் (இ.கம்யூ)

187 மானாமதுரை (தனி) ஆர்.தமிழரசி தி.மு.க.)
ம. குணசேகரன் (அ.தி.மு.க.)

மதுரை மாவட்டம்
188 மேலூர் ராணி (தி.மு.க.)
ஆர். சாமி (அ.தி.மு.க.)

189 மதுரை கிழக்கு பி.மூர்த்தி(தி.மு.க.)
கே. தமிழரசன் (அ.தி.மு.க.)

190 சோழவந்தான் (தனி) மு.இளஞ்செழியன் (பா.ம.க.)
எம்.வி. கருப்பையா (அ.தி.மு.க.)

191 மதுரை வடக்கு ராஜேந்திரன் (காங்.)
ஏ.கே. போஸ் (அ.தி.மு.க.)

192 மதுரை தெற்கு எஸ்.பி.வரதராஜன் (காங்.)
அண்ணாதுரை ( மார்க்.கம்யூ.)

193 மதுரை மத்தி எஸ்.எஸ்.கவுஸ் பாட்சா(தி.மு.க.)
ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.)

194 மதுரை மேற்கு கோ.தளபதி(தி.மு.க.)
செல்லூர் கே. ராஜூ (அ.தி.மு.க.)

195 திருப்பரங்குன்றம் சி.ஆர்.சுந்தர ராஜன் (காங்.)
ஏ.கே.டி.ராஜா (தே.மு.தி.க.)

196 திருமங்கலம் மு.மணிமாறன்(தி.மு.க.)
ம. முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.)

197 உசிலம்பட்டி எஸ்.ஓ.ராமசாமி(தி.மு.க.)
கதிரவன் (ஃபா.பி.க.)

தேனி மாவட்டம்
198 ஆண்டிப்பட்டி எல்.மூக்கையா(தி.மு.க.)
தங்க தமிழ்செல்வன் (அ.தி.மு.க.)

199 பெரியகுளம் (தனி) வீ.அன்பழகன்(தி.மு.க.)
ஏ.லாசர் (மார்க். கம்யூ)

200 போடி லெட்சுமணன்(தி.மு.க.)
ஓ. பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)

201 கம்பம் நா.ராமகிருஷ்ணன்(தி.மு.க.)
பி.முருகேசன் (தே.மு.தி.க.)

விருதுநகர் மாவட்டம்
202 ராஜபாளையம் எஸ்.தங்கபாண்டியன்(தி.மு.க.)
கே. கோபால்சாமி (அ.தி.மு.க.)

203 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆர்.வி.கே.துரை(தி.மு.க.)
பொன்னு பாண்டியன் (இ.கம்யூ)

204 சாத்தூர் அ.கடற்கரை ராஜ்(தி.மு.க.)
உதயகுமார் (அ.தி.மு.க.)

205 சிவகாசி வனராஜா(தி.மு.க.)
ராஜேந்திர பாலாஜி (அ.தி.மு.க.)

206 விருதுநகர் நவீன் ஆம்ஸ்ராங் (காங்.)
க.பாண்டியராஜன் (தே.மு.தி.க.)

207 அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
வைகைச்செல்வன் (அ.தி.மு.க.)

208 திருச்சுழி தங்கம் தென்னரசு(தி.மு.க.)
ச.இசக்கிமுத்து (அ.இ.மூ.மு.க.)

ராமநாதபுரம் மாவட்டம்
209 பரமக்குடி (தனி) ரா.பிரபு (காங்.)
எஸ். சுந்தர்ராஜ் (அ.தி.மு.க.)

210 திருவாடானை சுப.தங்கவேல்(தி.மு.க.)
முஜிபுர் ரகுமான் (தே.மு.தி.க.)

211 ராமநாதபுரம் கே.என். அசன் அலி (காங்.)
ஜவாஹிருல்லா (ம.நே.ம.க)

212 முதுகுளத்தூர் வ.சத்தியமூர்த்தி(தி.மு.க.)
மு. முருகன் (அ.தி.மு.க.)

தூத்துக்குடி மாவட்டம்
213 விளாத்திகுளம் பெருமாள்சாமி (காங்.)
மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.)

214 தூத்துக்குடி பி.கீதா ஜீவன்(தி.மு.க.)
செல்ல பாண்டியன் (அ.தி.மு.க.)

215 திருச்செந்தூர் அனிதா ஆர்.ராதாகிஷ்ணன்(தி.மு.க.)
பி.ஆர். மனோகரன், (அ.தி.மு.க.)

216 ஸ்ரீவைகுண்டம் சுடலையாண்டி (காங்.)
எஸ்.பி. சண்முகநாதன் (அ.தி.மு.க.)

217 ஒட்டப்பிடாரம் (தனி) செள.இராஜா(தி.மு.க.)
டாக்டர் கிருஷ்ணசாமி(பு.த.க)

218 கோவில்பட்டி கோ.ராமச்சந்திரன் (பா.ம.க.)
கடம்பூர் செ. ராஜு (அ.தி.மு.க.)

திருநெல்வேலி மாவட்டம்
219 சங்கரன்கோயில் (தனி) மு.உமா மகேஸ்வரி(தி.மு.க.)
சொ. கருப்பசாமி (அ.தி.மு.க.)

220 வாசுதேவநல்லூர் (தனி) எஸ்.கணேசன் (காங்.)
எஸ். துரையப்பா (அ.தி.மு.க.)

221 கடையநல்லூர் பீட்டர் அல்போன்ஸ் (காங்.)
பி. செந்தூர்பாண்டியன் (அ.தி.மு.க.)

222 தென்காசி வீ.கருப்பசாமி பாண்டியன்(தி.மு.க.)
சரத்குமார் (இ.ச.ம.க)

223 ஆலங்குளம் பூங்கோதை (தி.மு.க.)
பி.ஜி. ராஜேந்திரன் (அ.தி.மு.க.)

224 நெல்லை லெட்சுமணன்(தி.மு.க.)
நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.)

225 அம்பாசமுத்திரம் இரா.ஆவுடையப்பன்(தி.மு.க.)
இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.)

226 பாளையங்கோட்டை டி.பி.எம்.மைதீன்கான்(தி.மு.க.)
பழனி ( மார்க். கம்யூ)

227 நாங்குநேரி வசந்தகுமார் (காங்.)
எர்ணாவூர் நாராயணன் (இ.ச.ம.க)

228 ராதாபுரம் வேல்துரை (காங்.)
மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)

கன்னியாகுமரி மாவட்டம்
229 கன்னியாகுமரி என்.சுரேஷ் ராஜன்(தி.மு.க.)
பச்சைமால் (அ.தி.மு.க.)

230 நாகர்கோவில் ஆர்.மகேஷ்(தி.மு.க.)
ஏ. முருகேசன் (அ.தி.மு.க.)

231 குளச்சல் ஜெ.ஜி.பிரின்ஸ் (காங்.)
பி. லாரன்ஸ் (அ.தி.மு.க.)

232 பத்மநாபபுரம் புஷ்பலீலா ஆல்பன்(தி.மு.க.)
எஸ்.ஆஸ்டின் (தே.மு.தி.க.)

233 விளவங்கோடு விஜய தரணி (காங்.)
லிமா ரோஸ் ( மார்க்.கம்யூ.)

234 கிள்ளியூர் ஜான் சேக்கப் (காங்.)
ஆர். ஜார்ஜ் (அ.தி.மு.க.)