.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் நடத்திய முறைகேடு இது
வீட்டுவசதி வாரியம் மீது அடுத்த புகார்!
நீதித் துறையினர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல் புள்ளிகள், எம்.எல்.ஏ-
க்கள் என்று 'சமூக சேவகர்’, 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்ற பிரிவுகளில் 'அரசு விருப்புரிமை கோட்டா’வில் அரசுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கப்பட்ட விவகாரம், சமீபத்தில்தான் வெடித்தது. 'நில’ நடுக்கம் என்ற தலைப்பில் இதுபற்றி ஜூ.வி. தொடர்ந்து எழுதியது. இப்போது, இன்னொரு ரூபத்தில் அரசுப் பணத்தை வாரிச் சுருட்ட களம் இறங்கி இருக்கிறார்கள் சிலர். இதுபற்றி சில வாரங்களுக்கு முன்பு கழுகார் பகுதியில் சொல்லியிருந்தோம். அதன் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் புலானாய்வு செய்ய, ஆடிப்போய்விட்டோம்!
'அனைவருக்கும் வீடு’ என்ற நோக்கத்தில், 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்’. பொதுமக்கள் தவிர, அரசு ஊழியர்களுக்காகவும் குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது. அப்படி உருவாக்கப்பட்ட அரசு ஊழியர் அடுக்கு மாடிக் குடியிருப்புத் திட்டத்தில்தான் ஏகப்பட்ட கோளாறுகள்.
சென்னை நெற்குன்றத்தில் நடேசன் நகர் ஏரியாவில் 17.09 ஏக்கர் பரப்பில்,
445 கோடி செலவில், அரசு ஊழியர்களுக்கு, 1,016 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிட்டது தமிழக அரசு. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு 608 வீடுகளும், குரூப் 1 பிரிவு ஊழியர்களுக்கு 120 வீடுகளும், மிகக் குறைந்த வருவாய் பிரிவு ஊழியர்களுக்கு 288 வீடுகளும் கட்டத் திட்டம். ஆனால், மொத்த நிலத்தில் 13 ஏக்கருக்கு மேல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது!
இதுபற்றி வீட்டு வசதி வாரிய ஊழியர்களிடம் பேசினோம். சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் புரட்டியபடியே விஷயங்களைக் கொட்ட ஆரம்பித்தார்கள். ''இந்தத் திட்டதில், விதி மீறல்களையே விதிகளாக்கிவிட்டார்கள். வீடுகளைக் கட்டி விற்பனை செய்வதோடு, வீடு வாங்க விரும்புபவர்களிடம் இருந்தே பணத்தை வாங்கி வாரியம் வீடுகளைக் கட்டியும் கொடுக்கும். இதற்கு, 'சுய நிதித் திட்டம்’ என்று பெயர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்காகக் கட்டப்படும் திட்டத்தில் 'ஒன் யுவர் ஸ்கீம்’ என்று சொல்லிவிட்டு, அதில் சுயநிதி திட்டத்தையும் புகுத்தி இருக்கிறார்கள். இதுவே விதி மீறல். சுய நிதித் திட்டம் அரசு நிலங்களில் மட்டும்தான் செயல்படுத்த முடியும். இப்போது வீடுகள் கட்டப்படும் நிலமோ, வாரியத்துக்குச் சொந்தமானது. இங்கே சுய நிதித் திட்டத்தை செயல்படுத்துவதும் விதி மீறல்தான். இப்படி வீடுகளை வாரியம் கட்டும்போது, மேற்பார்வை செலவினமாக 12.5 சதவிகிதம் வசூலிக்கப்படும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக இதை 5 சதவிகிதமாக்கி, அதிலும் வாரியத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உயர் வருவாய்க் குடியிருப்புகளைக் கட்டும்போது, வாரியத்துக்கு 9 சதவிகிதம் லாபம் கிடைக்கும். இதை 5 சதவிகிதமாக்கி இருக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்காகக் கட்டப்படும் 608 வீடுகளும், மொத்தம் நான்கு பிளாக்குகளாக 19 மாடி அளவுக்குக் கட்டத் திட்டம். 2,458 சதுர அடி, 1,923 சதுர அடி என்று இரண்டு விதமான வீடுகள் கட்டப்படும். இதுபற்றி வழக்கமாக விளம்பரம் செய்யும் வாரியம், இப்போது ரகசியமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மட்டும் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பினார்கள். நெற்குன்றம் ஏரியாவில் ஒரு கிரவுண்ட் நிலம் மட்டும்
1 கோடிக்கு மேல் விலை போகிறது. ரூலிங் ரேட், வழிகாட்டி மதிப்பு, மார்க்கெட் மதிப்பு இதில் எது அதிக தொகையோ, அதைத்தான் வாரியம் வசூலிக்கும். ஆனால், வெறும்
31 லட்சத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக் கொடுக்கப்போகிறார்கள். இதோடு, நிலம் ப்ளஸ் வீட்டையும் கட்டிக் கொடுக்க, வெறும்
65 லட்சம் என்று அடிமாட்டு விலைக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது வாரியம். நிலம், வீடு, பொழுதுபோக்கு வசதிகள் என்று எல்லாம் சேர்த்தால், 2,458 சதுர அடி வீட்டின் மார்க்கெட் மதிப்பு இரண்டரைக் கோடிகளுக்கு மேல் போகும்.
சில மாதங்களுக்கு முன்பு, பாடி ஏரியாவில் இதே பரப்பளவுகொண்ட வீடுகளை
90 லட்சத்துக்கு விற்றது வாரியம். அந்தத் தொகையைவிட குறைவாக விலை நெற்குன்றத்தில் நிர்ணயம் செய்து இருப்பது ஏன்? குரூப் 1 மற்றும் குறைந்த வருவாய் ஊழியர்களை புறக்கணித்து விட்டார்கள்.
இப்படி ஏகப்பட்ட அத்துமீறல்கள்... இதற்கு ஆணி வேர், வீட்டு வசதி வாரியத்தின் இயக்குநரும், வீட்டு வசதித் துறை செயலாளருமான அசோக் டோங்ரேதான். அரசுக்கு நட்டம் ஏற்பட்டாலும் சரி, எப்படியாவது வீடுகளைக் கட்டிவிட வேண்டும் என்று துடிக்கிறார். இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்களையும், ஒத்துழைக்காத அதிகாரிகளையும் டிரான்ஸ்ஃபர் என்று பந்தாடுகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி நிலம்
2,442-க்கு தந்திருக்கிறார்கள். ஆனால், குறைவான சம்பளம் வாங்கும் குறைந்த வருவாய் பிரிவு அரசு ஊழியர்களுக்கோ சதுர அடிக்கு
2,690 என நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். புரிந்துகொள்ளுங்கள், எந்த அளவுக்கு விதிகள் மீறப்பட்டு இருக்கின்றன!'' என்று புலம்பித் தீர்த்தனர்.
கோட்டை வட்டாரத்தில் வீட்டு வசதித் துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம் ''உமது கழுகார் பகுதியில் செய்தி வந்துமே, முதல்வர் கருணாநிதி தலையிட்டார். சம்பந்தப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியும், 'அரசுக்கு நட்டத்தையும், வாரியத்துக்கு வருவாய் இழப்பையும் உண்டாக்கும் இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும்’ என்றார். ஆனால், அதன் பிறகும் எப்படியாவது இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காக, அதிகார மையத்தை அணுகினார்கள் அதிகாரிகள். வீடுகளைக் கட்டும் கான்ட்ராக்ட் நிறுவனம் ஒன்று அதிகார மையத்துக்கு வேண்டப்பட்ட ஒருவரோடு ரொம்ப நெருக்கம். அவர் மூலம் அதிகார மையத்திடம் திட்டத்துக்கு ஓகே வாங்கிவிட்டது. இந்தத் திட்டத்தின் மதிப்பு
445 கோடி. நியாயமான விலைப்படி பார்த்தால்,
800 கோடி வரை கிடைக்கும்!'' என்றார்கள்.
பொதுமக்களுக்கு எப்போதும் கலிகாலம்தான்!
- எம்.பரக்கத் அலி, படம்: பொன் காசிராஜன்
'அனைவருக்கும் வீடு’ என்ற நோக்கத்தில், 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்’. பொதுமக்கள் தவிர, அரசு ஊழியர்களுக்காகவும் குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது. அப்படி உருவாக்கப்பட்ட அரசு ஊழியர் அடுக்கு மாடிக் குடியிருப்புத் திட்டத்தில்தான் ஏகப்பட்ட கோளாறுகள்.

இதுபற்றி வீட்டு வசதி வாரிய ஊழியர்களிடம் பேசினோம். சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் புரட்டியபடியே விஷயங்களைக் கொட்ட ஆரம்பித்தார்கள். ''இந்தத் திட்டதில், விதி மீறல்களையே விதிகளாக்கிவிட்டார்கள். வீடுகளைக் கட்டி விற்பனை செய்வதோடு, வீடு வாங்க விரும்புபவர்களிடம் இருந்தே பணத்தை வாங்கி வாரியம் வீடுகளைக் கட்டியும் கொடுக்கும். இதற்கு, 'சுய நிதித் திட்டம்’ என்று பெயர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்காகக் கட்டப்படும் திட்டத்தில் 'ஒன் யுவர் ஸ்கீம்’ என்று சொல்லிவிட்டு, அதில் சுயநிதி திட்டத்தையும் புகுத்தி இருக்கிறார்கள். இதுவே விதி மீறல். சுய நிதித் திட்டம் அரசு நிலங்களில் மட்டும்தான் செயல்படுத்த முடியும். இப்போது வீடுகள் கட்டப்படும் நிலமோ, வாரியத்துக்குச் சொந்தமானது. இங்கே சுய நிதித் திட்டத்தை செயல்படுத்துவதும் விதி மீறல்தான். இப்படி வீடுகளை வாரியம் கட்டும்போது, மேற்பார்வை செலவினமாக 12.5 சதவிகிதம் வசூலிக்கப்படும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக இதை 5 சதவிகிதமாக்கி, அதிலும் வாரியத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உயர் வருவாய்க் குடியிருப்புகளைக் கட்டும்போது, வாரியத்துக்கு 9 சதவிகிதம் லாபம் கிடைக்கும். இதை 5 சதவிகிதமாக்கி இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, பாடி ஏரியாவில் இதே பரப்பளவுகொண்ட வீடுகளை
இப்படி ஏகப்பட்ட அத்துமீறல்கள்... இதற்கு ஆணி வேர், வீட்டு வசதி வாரியத்தின் இயக்குநரும், வீட்டு வசதித் துறை செயலாளருமான அசோக் டோங்ரேதான். அரசுக்கு நட்டம் ஏற்பட்டாலும் சரி, எப்படியாவது வீடுகளைக் கட்டிவிட வேண்டும் என்று துடிக்கிறார். இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்களையும், ஒத்துழைக்காத அதிகாரிகளையும் டிரான்ஸ்ஃபர் என்று பந்தாடுகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி நிலம்
கோட்டை வட்டாரத்தில் வீட்டு வசதித் துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம் ''உமது கழுகார் பகுதியில் செய்தி வந்துமே, முதல்வர் கருணாநிதி தலையிட்டார். சம்பந்தப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியும், 'அரசுக்கு நட்டத்தையும், வாரியத்துக்கு வருவாய் இழப்பையும் உண்டாக்கும் இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும்’ என்றார். ஆனால், அதன் பிறகும் எப்படியாவது இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காக, அதிகார மையத்தை அணுகினார்கள் அதிகாரிகள். வீடுகளைக் கட்டும் கான்ட்ராக்ட் நிறுவனம் ஒன்று அதிகார மையத்துக்கு வேண்டப்பட்ட ஒருவரோடு ரொம்ப நெருக்கம். அவர் மூலம் அதிகார மையத்திடம் திட்டத்துக்கு ஓகே வாங்கிவிட்டது. இந்தத் திட்டத்தின் மதிப்பு
பொதுமக்களுக்கு எப்போதும் கலிகாலம்தான்!
- எம்.பரக்கத் அலி, படம்: பொன் காசிராஜன்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment