''பேருந்து நிலையத்தை அரசே ஏற்கும்!''
அதிரடி சகாயம்... ஆடிப்போன மாநகராட்சி!
.jpg)
ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தி.மு.க-வினரின் ஆதிக்கம்தான். மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தி.மு.க-வின் கையிலேயே இருப் பதால், இவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போனது. ஆரம்பத்தில் சுமார் 156 கடைகள்தான் இருந்தன. பயணிகள் வசதிக்காக போஸ்ட் ஆபீஸ், ஓய்வெடுக்கும் அறை, சுகாதாரமான டாய்லெட் வசதி இருந்ததைப் பார்த்துவிட்டு (ஏமாந்து!) ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால், இந்தச் சான்றிதழ் வாங்கிய பிறகு, இஷ்டத்துக்கு புகுந்து விளையாடிய தி.மு.க-வினர், நடைபாதைகளை மட்டுமில்லாமல் பயணிகள் தங்கும் அறையையும் கடைகளாக்கிக் காசு பார்த்துவிட்டார்கள். இவர்களின் ஆக்கிரமிப்புக்கு போஸ்ட் ஆபீஸும் தப்பவில்லை!

ஒரு கடைக்கு மாத வாடகை யாகக் குறைந்தபட்சம்

என்பார்கள் நக்கலாக. 'இதற்கு எப்படி ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள்?’ என்று வியக்கும் அளவுக்கு குடிநீர், சுகாதாரம் எல்லாமே இங்கு மகாமட்டமாக இருக்கும். இந்த அவலங்களுக்குத்தான் சாவு மணி அடித்து இருக்கிறார் சகாயம்!இது குறித்து சகாயத்திடம் பேசியபோது, ''மாட்டுத்தாவணி பேருந்து நிலைய அவலங்கள் குறித்து எனக்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள். என்னதான் நடக்குதுன்னு பாக்குறதுக்காக நான் மக்களோடு மக்களாக யாருக்கும் தெரியாமல் தனியே அங்கே விசிட் போனேன். கழிப்பறையில் என் கண் முன்னாடியே
பேருந்து நிலையத்துக்கு ஆர்.டி.ஓ. மூணு வருடங்களுக்கு ஒரு முறை உரிமம் கொடுக்கணும். ஆனா, அதைக்கூட கடந்த ஆறு வருடங்களாக வாங்காமல் இருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தால், ஆர்.டி.ஓ. மூலமாக அதை நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்னு விதி இருக்கு. அதன் அடிப்படையில்தான் 'ஒரு வாரத்துக்குள் பேருந்து நிலைய சீர்கேடுகளைச் சரிசெய்யவில்லை என்றால், அரசே ஏற்கும்’னு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தேன். 'சீர்கேடுகளைச் சரிசெய்துகொண்டு இருக்கிறோம்’னு பதில் கொடுத்து இருக்கிறார்கள். அதிகாரிகளை அனுப்பி சரிபார்ப்போம். திருப்தி இருந்தால் சரி... இல்லாவிட்டால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்!'' என்று உறுதியாகச் சொன்னவர்,
''எடை குறைவான பொருட்களை விற்பது சம்பந்தமான புகார்கள் தொடர்பாக நேற்றுக்கூட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சோதனை நடத்தி, தராசுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மாட்டுத்தாவணியில் மட்டும் இல்லாமல் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்கள். இதே போல் திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி நகராட்சிகளிலும் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்...'' என்றும் கூறினார்.
கலெக்டர் அனுப்பி இருக்கும் ஷோகாஸ் நோட்டீஸ் குறித்து மாநகராட்சி கமிஷனர் செபஸ்டியனிடம் கேட்டதற்கு, ''இத்தனை நாளும் ஆக்கிரமிப்புகள் குறித்து யாரிடம் புகார் செய்யவேண்டுமோ, அவர்களே ஆக்கிரமிப்புகளை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. அதனால் ஆக்கிரமிப்புகளை எடுக்க முடியாத சூழல்! இப்போது கலெக்டர் எங்களுக்குப் பக்கபலமாக இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நாங்களும் ஆர்வமாய் இருக்கிறோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார காலத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் காட்டுவோம்!'' என்றார் அழுத்தமாக!
'அந்தந்த சாமிக்கு அந்தந்த பூசாரிதான் சரிப்பட்டு வரும்’னு தெரிஞ்சுதானே சொல்லி இருக்காங்க!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Source - Vikatan
No comments:
Post a Comment