தயாநிதிமாறன்.. ப.சிதம்பரம்.. அடுத்து?
சுவாமியின் குற்றப் பத்திரிகை
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம்.
''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்களேன்?''
''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஊழலில் சிக்கி இருக்கிறார்கள். இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரையும் சினிமாவில் வருவதுபோல், ஒரே ஃப்ரேமில் கைது செய்துவிட முடியாது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மூன்றாவதுகுற்றப் பத்திரிகையில் இடம்பெறுவார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்தடுத்து 11 குற்றப் பத்திரிகைகள் வரை தாக்கல் ஆகப்போகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் சிக்குவார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அடுத்து சிக்கப்போகிறவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இவருக்குப் பிறகு, மிகப் பெரிய பெயர் வரும். அது யார் என்று இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன்!''
''அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா?''

மத்தியில் நிதித் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயித்த கமிட்டியில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம், ஆ.ராசாவுடன் இணைந்துதான் முடிவு எடுத்து இருக்கிறார். இதை ஒரு ஃபைலில் ஆ.ராசாவே குறிப்பிட்டு இருக்கிறார். (அதன் நகல்களை நம்மிடம் காட்டுகிறார்) பல பேட்டிகளில் ஆ.ராசாவும், சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதற்கு, பத்திரிகை 'கட்டிங்'குகளே சாட்சிகள். இப்படி இருக்கும்போது, ஆ.ராசா மட்டும் திகார் ஜெயிலில் இருக்க... இன்னொரு காரணகர்த்தாவான அவர் மட்டும் மத்திய மந்திரியாக நீடிப்பது எந்த வகையில் நியாயம்? நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது வழக்குப் போட பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அந்தத் துறையில் இருந்து சிதம்பரம் மாற்றப்பட்டுவிட்டார். ஆகவே, எனக்கு இப்போது பிரதமரின் அனுமதி தேவைப்படாது. இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆகஸ்ட் 24-ல் வருகிறது. இதோ... நான் உங்களிடம் காட்டும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அவற்றைப் பரிசீலித்து நல்ல முடிவு சொல்வார்கள் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடக்கும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி, கோ-அக்யூஸ்டாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் வரப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள்!'' என்று சிரித்தார்.
இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் புயல் அடங்காதோ!
- ஆர்.பி.
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment