Thursday, August 25, 2011

ஊழலுக்கு எதிராக அண்ணா.. அண்ணாவுக்கு ஆதரவாக நான்!


ஊழலுக்கு எதிராக அண்ணா.. அண்ணாவுக்கு ஆதரவாக நான்!

ஏப்.9,2011
Updated ஆக.16,2011
ஏப்ரல் 2011...
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.
அண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

"இது, உங்களின் வெற்றி," என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, "இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்," என்று முழங்கினார்!
ஆகஸ்ட் 2011..
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை!

இமயம் முதல் குமரி வரை மட்டுமின்றி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் தீவிரம் அடைந்து வரும் அண்ணா ஹஜாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்க, ஆதரவு 'கருத்து'க்களை அள்ளித் தெளித்து அண்ணாவுடன் கைகோர்க்க வாருங்கள்...
(அறிமுகம்.. அண்ணா ஹஜாரே... ஆர்.டி.ஐ. முதல் லோக்பால் வரை)

No comments:

Post a Comment