செங்கோட்டையனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா?
விவசாயத் துறையைக் கலக்கும் 'வில்லங்க' பொன்னுச்சாமி
யார் இந்தப் பொன்னுச்சாமி?
வேளாண்மை விதை சான்று இயக்குநர், வேளாண்மைக் கூடுதல் இயக்குநர் - பணி மேலாண்மை, வேளாண்மைக் கூடுதல் இயக்குநர் - இயற்கை விவசாயம் என மூன்று பதவிகளை வகித்துக்கொண்டு
இருக்கும் ஓர் அதிகாரி. இது எல்லாவற்றையும்விட, சசிகலாவின் சகோதரர் மனைவியான இளவரசிக்கு சொந்தக்காரர் என்பது இவரின் கூடுதல் தகுதி.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற விவசாயி, ''கடந்த வருடம் என்னோட தோட்டத்துக்குப் போடுறதுக்கு, 'பாஸ்போ பேக்டீரியா’ உரத்தை விவசாய ஆபீஸில் இருந்து வாங்கினேன். அதைப் பிரித்தபோது, உள்ளே சாம்பல்தான் இருந்தது. கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அதைப் பரிசோதனைக்கு அனுப்பினேன். 'அது உயிர் உரமே கிடையாது’ என ரிப்போர்ட் கொடுத்தார்கள். அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனம்தான், இப்படி லிக்னைட் பவுடருக்குப் பதிலாக சாம்பலை பாக்கெட் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தெரிய வந்தது.
வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு நான் புகார் அனுப்பினேன். என்னுடைய புகாரை விசாரிக்க, திருச்சியில் வேளாண்மைத் துறை இணை இயக்குநராக இருந்த பொன்னுச்சாமியை நியமித்தார்கள். ஆனால், என்னிடம் பொன்னுச்சாமி உரிய விசாரணை நடத்தாமலேயே,
'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது’ என சொல்லிவிட்டார். முன்னாள் அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர், இந்த பொன்னுச்சாமி. மேலும் நேருவின் தம்பி ராமஜெயத்தின் தோட்டத்தை இவர்தான் கவனிக்கிறார் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆட்சி மாறிய பிறகாவது நல்லது நடக்கும் என நினைத்தேன். ஆனால், இந்த ஆட்சியிலும் பொன்னுச்சாமியின் அதிகாரம் குறையவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி வகித்து வந்த பொறுப்பை, பொன்னுச்சாமிக்குக் கொடுத்து விட்டார்கள். சசிகலா குடும்பத்தைப் பிடித்துப் பெரிய பதவிக்கு வந்துவிட்டார். வேளாண்மைத் துறையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களைவிட, இந்த ஆட்சியில் அதிக ஊழல்கள் நடக்கப்போகின்றன. அதனால், உடனடியாக அந்த அதிகாரி மீது முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கேட்டுக்கொண்டார்.
வேளாண்மைத் துறை வட்டாரத்தில் பொன்னுச்சாமிபற்றி விசாரித்தோம். ''சின்னம்மாவின் தயவில்தான் ஏ.டி-யாக இருந்தவருக்கு பதவி உயர்வு என்ற பெயரில் பல பொறுப்புகளைக் கொடுத்து இருக்கிறார்கள். வேளாண்மைத் துறையில் அனைத்தையும் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போது பொன்னுச்சாமி கையில்தான் இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும், தமிழக விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, உலக வங்கி கோடிக்கணக்கில் நிதி உதவி செய்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஆண்டு ஒன்றுக்கு
சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பொன்னுச்சாமியை சந்தித்தோம். ''சதிஷ்குமார் அனுப்பிய புகாரில் உண்மை கிடையாது. ஏற்கெனவே அதைப்பற்றி முழுமையான விசாரணை நடத்திவிட்டேன். முன்னாள் அமைச்சர் நேருவும் அவர் சகோதரர் ராமஜெயமும், நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நண்பர்கள். ராமஜெயத்தின் தோட்டத்தை மாதிரிப் பண்ணையாக மாற்றி அமைக்கச் சொல்லிக் கேட்டார்கள், நானும் செய்து கொடுத்தேன். விதிகளை மீறி நான் எதுவுமே செய்யவில்லை. என் மகள் திருமணம் நடந்தபோது, நண்பர் என்ற முறையில் நேருவை அழைத்து இருந்தேன். உறவினர் என்ற முறையில், சசிகலாவையும் அழைத்து இருந்தேன். இரண்டு பேருமே திருமணத்துக்கு வந்தார்கள். இதை நான் எங்கேயும் மறைக்கவில்லை.
சொந்தம் என்பதற்காக, சசிகலா எனக்கு எந்த சலுகையும் செய்தது கிடையாது. நானும் என் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது இல்லை. எந்த விசாரணை கமிஷன் வேண்டுமானாலும் அமைக்கட்டும். நான் தப்பு செய்து இருந்தால்... தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்!'' என்று நிதானமாகச் சொல்லி முடித்தார்.
சமீபத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஒருவரை, அமைச்சருக்குத் தெரியாமலே மாற்றிவிட்டார் என்றும் பொன்னுச்சாமி மீது ஒரு புகார் சொல்லப்படவே, உளவுத் துறை மூலம் விசாரணை நடக்கிறதாம். அமைச்சரை டம்மி ஆக்க சசிகலா இவரை நியமித்துள்ளார் என்ற சந்தேகமும் கோட்டை வட்டாரத்தில் வலுவாக உள்ளது!
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: தி.விஜய், எஸ்.தேவராஜன்
No comments:
Post a Comment