உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
'என் குழந்தை, கிளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கணும். எங்க யும், எதுலயும் அவதான் ஃபர்ட்ஸ்டா வரணும்’ என்கிற ஆசையில் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் இருக்கிற குறைபாடு களைக் கண்டு உணர்வது இல்லை.
''ஏண்டா... எப்பப் பார்த்தாலும் 'கரி’னு எழுத வேண்டிய வார்த்தையை 'கறி’னு மாத்தி மாத்தி எழுதறே? எத்தனை முறை சொல்லித் தர்றது?'’ என்று அலுத்துக்கொள்ளும் முன், ஏன் அவன் அப்படி எழுது கிறான் என்று யோசித்தது உண்டா? யோசித்திருந்தால்... அந்தக் குழந்தைக்குக் 'கற்றலில் குறைபாடு’ உள்ளது என்பதைக் கண்டறிந்து இருக்கலாம்.
ஆம், 5-10 சதவிகித குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இந்தக் குழந்தைகள் படிப்பில் பின் தங்கியே இருப்பார்கள். இந்தக் 'கற்றலில் குறைபாடு’ பிரச்னை யில் பல வகைகள் உண்டு. நன்றாக எழுதத் தெரிந்த குழந் தைக்கு, அதை வாசிப்பதில் பிரச்னை இருந்தால், குழந் தைக்கு 'டிஸ்லெக்ஸியா' (Dyslexia) எனும் குறைபாடு இருக் கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
'கிஸீபீ’ என்பதை ‘Dna’ என்றும், ‘Diary’ என்பதை ‘Dairy’ என்றும், ‘Trial’ என்பதை ‘Trail’ என்றும்... இப்படிச் சில வார்த்தைகளுக்குத் தொடர்ந்து ஸ்பெல்லிங்கை மாற்றி எழுதினால், 'டிஸ்லெக்ஸியா கிராபியா' (Dyslexia graphia) எனப்படும் 'எழுதுவதில் குறைபாடு' நம் குழந்தைக்கு உள்ளது என்று உணர வேண்டும். சிம்பிளான கூட்டலும், கழித்தலும் தெரியும். ஆனால், அதையே கொஞ்சம் யோசிக்கும் வகையில் கொடுத்தால், உதாரணமாக, கடன் வாங்கிக் கழிக்கும் கழித்தல் முறை கணக்கு போடும்போது தடுமாறிக் கொண்டே இருந்தால்... அது 'டிஸ்லெக்ஸியா கால்குலியா' (Dyslexia calculia)’ எனப்படும் 'கணக்கிடுவதில் குறைபாடு' என்று உணர வேண்டும்.
வீட்டில் பேசும் தாய்மொழி ஒன்றாக இருந்து, படிக்கும் மொழி வேறாக இருந்தால்... அவர்கள் படிப்பதிலும், படித்ததை எழுதுவதிலும், சொல் வதிலும் பிரச்னைகள் இருக்கும். உதாரணமாக, 'இந்த பேனாவைப் பற்றி இரண்டு வரி எழுது' என்று ஆசிரியர் சொன்னால், குழந்தை எழுதத் தெரியாமல் திருதிருவென விழிக்கும். ஆனால், 'இந்த பேனா என்ன கலர், என்ன வகை ரீஃபில், எத்தனை ரூபாய்?' என்று ஒவ்வொரு கேள்வியாக தாய்மொழியில் கேட்டால், 'டக் டக்’ பதில் வந்துவிழும்.
ஆக, இந்தக் குழந்தைக்கு அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. ஆனால்... வேற்று மொழியில் எழுதி வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல், 'எனது லட்சியம் மருத் துவர்’ என்ற வாக்கியத்தை படிக்கத் தெரிந்து இருக்கலாம். ஆனால், அதனை புரிந்து படிக் கிறார்களா என்பதுதான் பிரச்னை. வாசிக்கத் தெரிந்து இருக்கிறது என்பதே புரிந்து இருக்கிறது என்று அர்த்தம் ஆகாது.
சரி... இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியாதா..? இந்தப் பிரச்னை நம் மூளையில் 'மொழி’ சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்படும் குறைபாட்டால் வருவதால்... இதனை சரிசெய்ய இயலாது. இம்மாதிரி குறைபாடு உடைய குழந்தைகள், தாய்மொழியிலேயே கற்பது நல்லது; சிரமத்தின் அளவு குறையும்.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு படிப்பது மட்டும்தான் சிரமமே தவிர, வரைவது, விளையாடுவது, இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸில் 'கிங்’ ஆகவும், மற்ற எல்லா விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இன்றி வெகு இயல்பான, ஸ்மார்ட்டான குழந்தைகளாகவும் இருப்பார்கள். படிப்பில் பின்தங்கி இருந்தாலும், இவர்கள் சராசரி குழந்தைகளைவிடவும் மேலான 'ஐ.க்யூ’ உடைய குழந்தைகள்.
'ஆனாலும், இயற்கையால் வந்த இந்தக் குறை பாட்டால்... எனது குழந்தை படிப்பில், பரீட்சை யில் தோற்க வேண்டுமா?’ என்பவர்களுக்கு, ஆறுதலான, ஆதரவான பதில் இருக்கிறது. பொதுவாக எல்லாக் குழந்தைகளும் மூன்று மணி நேரம் பரீட்சை எழுதுவார்கள். ஆனால், இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருப்பதால், அரசு இக்குழந் தைகளின் சிரமத்தை உணர்ந்து 14 வருடங்களுக்கு முன் சில சலுகைகளைக் கொடுத்துள்ளது.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பரீட்சையின்போது எக்ஸ்ட்ராவாக 1 மணி நேரம் வழங்கப்படும். இக்குழந்தைகளின் பதிலில் 'கன்டென்ட்’ இருக்கிறதா என்று பார்க்க வேண் டுமே தவிர, ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக் எல்லாம் பார்க்கத் தேவையில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கணக்கில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு, கால்குலேட்டரை பயன் படுத்தலாம் என்றும் அனுமதி அளித்துள்ளார்கள்.
இவர்கள் இரண்டாம் மொழியாக என்ன பாடத்தை எடுத்துள்ளார்களோ, அதற்குத் தேர்வு எழுத வேண்டாம் என்றும், தேர்வை இவர்கள் சொல்ல, இன்னொருவர் எழுதக் கூடிய 'ஸ்க்ரைப்’ முறையையும் பின்பற்றலாம் என்றும் சலுகை அளித்துள்ளது அரசு. தகுதி வாய்ந்த குழந்தைநல மருத்துவரிடம் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளது என்று சான் றிதழ் வாங்கி, அதனை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து, அவர்கள் கொடுக்கும் சான்றிதழை வைத்து இந்த சலுகைகளைப் பெற முடியும். எனவே, கவலை மறந்து உங்கள் குழந்தைகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் ஆதர்ஷ மூளையாக இருங்கள் தோழிகளே!
குழந்தைகள் 'நம்பர் ஒன்’ ஆவது அவர்கள் கைகளில் பாதியும், உங்கள் அன்பில் மீதியும் பொதிந்து இருக்கிறது. அவர்களை அன்பால் வழிநடத்துங்கள். உங்கள் குழந்தை 'நம்பர் ஒன்’ என விளங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பு வதுபோல, தங்கள் பெற்றோர்தான் 'நம்பர் ஒன்’ எனக் கொண்டாட அவர்கள் மனதும் ஏங்கும்தானே?! அதற்கும் உங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ளுங்கள்... குழந்தைகள் உடனான உங்கள் புரிதலால்!
பெற்றோர்களே... நீங்கள் நம்பர் 1 ஆகுங்கள்!
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
'என் குழந்தை, கிளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கணும். எங்க யும், எதுலயும் அவதான் ஃபர்ட்ஸ்டா வரணும்’ என்கிற ஆசையில் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் இருக்கிற குறைபாடு களைக் கண்டு உணர்வது இல்லை.''ஏண்டா... எப்பப் பார்த்தாலும் 'கரி’னு எழுத வேண்டிய வார்த்தையை 'கறி’னு மாத்தி மாத்தி எழுதறே? எத்தனை முறை சொல்லித் தர்றது?'’ என்று அலுத்துக்கொள்ளும் முன், ஏன் அவன் அப்படி எழுது கிறான் என்று யோசித்தது உண்டா? யோசித்திருந்தால்... அந்தக் குழந்தைக்குக் 'கற்றலில் குறைபாடு’ உள்ளது என்பதைக் கண்டறிந்து இருக்கலாம்.
ஆம், 5-10 சதவிகித குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இந்தக் குழந்தைகள் படிப்பில் பின் தங்கியே இருப்பார்கள். இந்தக் 'கற்றலில் குறைபாடு’ பிரச்னை யில் பல வகைகள் உண்டு. நன்றாக எழுதத் தெரிந்த குழந் தைக்கு, அதை வாசிப்பதில் பிரச்னை இருந்தால், குழந் தைக்கு 'டிஸ்லெக்ஸியா' (Dyslexia) எனும் குறைபாடு இருக் கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் பேசும் தாய்மொழி ஒன்றாக இருந்து, படிக்கும் மொழி வேறாக இருந்தால்... அவர்கள் படிப்பதிலும், படித்ததை எழுதுவதிலும், சொல் வதிலும் பிரச்னைகள் இருக்கும். உதாரணமாக, 'இந்த பேனாவைப் பற்றி இரண்டு வரி எழுது' என்று ஆசிரியர் சொன்னால், குழந்தை எழுதத் தெரியாமல் திருதிருவென விழிக்கும். ஆனால், 'இந்த பேனா என்ன கலர், என்ன வகை ரீஃபில், எத்தனை ரூபாய்?' என்று ஒவ்வொரு கேள்வியாக தாய்மொழியில் கேட்டால், 'டக் டக்’ பதில் வந்துவிழும்.
ஆக, இந்தக் குழந்தைக்கு அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. ஆனால்... வேற்று மொழியில் எழுதி வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல், 'எனது லட்சியம் மருத் துவர்’ என்ற வாக்கியத்தை படிக்கத் தெரிந்து இருக்கலாம். ஆனால், அதனை புரிந்து படிக் கிறார்களா என்பதுதான் பிரச்னை. வாசிக்கத் தெரிந்து இருக்கிறது என்பதே புரிந்து இருக்கிறது என்று அர்த்தம் ஆகாது.
சரி... இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியாதா..? இந்தப் பிரச்னை நம் மூளையில் 'மொழி’ சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்படும் குறைபாட்டால் வருவதால்... இதனை சரிசெய்ய இயலாது. இம்மாதிரி குறைபாடு உடைய குழந்தைகள், தாய்மொழியிலேயே கற்பது நல்லது; சிரமத்தின் அளவு குறையும்.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு படிப்பது மட்டும்தான் சிரமமே தவிர, வரைவது, விளையாடுவது, இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸில் 'கிங்’ ஆகவும், மற்ற எல்லா விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இன்றி வெகு இயல்பான, ஸ்மார்ட்டான குழந்தைகளாகவும் இருப்பார்கள். படிப்பில் பின்தங்கி இருந்தாலும், இவர்கள் சராசரி குழந்தைகளைவிடவும் மேலான 'ஐ.க்யூ’ உடைய குழந்தைகள்.
'ஆனாலும், இயற்கையால் வந்த இந்தக் குறை பாட்டால்... எனது குழந்தை படிப்பில், பரீட்சை யில் தோற்க வேண்டுமா?’ என்பவர்களுக்கு, ஆறுதலான, ஆதரவான பதில் இருக்கிறது. பொதுவாக எல்லாக் குழந்தைகளும் மூன்று மணி நேரம் பரீட்சை எழுதுவார்கள். ஆனால், இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருப்பதால், அரசு இக்குழந் தைகளின் சிரமத்தை உணர்ந்து 14 வருடங்களுக்கு முன் சில சலுகைகளைக் கொடுத்துள்ளது.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பரீட்சையின்போது எக்ஸ்ட்ராவாக 1 மணி நேரம் வழங்கப்படும். இக்குழந்தைகளின் பதிலில் 'கன்டென்ட்’ இருக்கிறதா என்று பார்க்க வேண் டுமே தவிர, ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக் எல்லாம் பார்க்கத் தேவையில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கணக்கில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு, கால்குலேட்டரை பயன் படுத்தலாம் என்றும் அனுமதி அளித்துள்ளார்கள்.
இவர்கள் இரண்டாம் மொழியாக என்ன பாடத்தை எடுத்துள்ளார்களோ, அதற்குத் தேர்வு எழுத வேண்டாம் என்றும், தேர்வை இவர்கள் சொல்ல, இன்னொருவர் எழுதக் கூடிய 'ஸ்க்ரைப்’ முறையையும் பின்பற்றலாம் என்றும் சலுகை அளித்துள்ளது அரசு. தகுதி வாய்ந்த குழந்தைநல மருத்துவரிடம் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளது என்று சான் றிதழ் வாங்கி, அதனை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து, அவர்கள் கொடுக்கும் சான்றிதழை வைத்து இந்த சலுகைகளைப் பெற முடியும். எனவே, கவலை மறந்து உங்கள் குழந்தைகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் ஆதர்ஷ மூளையாக இருங்கள் தோழிகளே!
குழந்தைகள் 'நம்பர் ஒன்’ ஆவது அவர்கள் கைகளில் பாதியும், உங்கள் அன்பில் மீதியும் பொதிந்து இருக்கிறது. அவர்களை அன்பால் வழிநடத்துங்கள். உங்கள் குழந்தை 'நம்பர் ஒன்’ என விளங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பு வதுபோல, தங்கள் பெற்றோர்தான் 'நம்பர் ஒன்’ எனக் கொண்டாட அவர்கள் மனதும் ஏங்கும்தானே?! அதற்கும் உங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ளுங்கள்... குழந்தைகள் உடனான உங்கள் புரிதலால்!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நிறைவடைந்தது
தொகுப்பு: நாச்சியாள்
நிறைவடைந்தது
தொகுப்பு: நாச்சியாள்
No comments:
Post a Comment