30 வகை பிக்னிக் ரெசிபி !
பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்?'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த 'சமையல் கலைஞர்' தேவிகா காளியப்பன்.பெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்!
சரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.


சத்துமாவு மிக்ஸ்
தேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.
தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
இதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
ரவா தோசை மிக்ஸ்
தேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ், உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து இதில் சேர்க்கவும்.
சூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேங்காய் பொடி
தேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.

சேமியா பகாளாபாத் மிக்ஸ்
தேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.பகாளாபாத் செய்ய: உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

சேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்), கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ்
தேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ்
தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
மோர்க்குழம்பு மிக்ஸ்
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.
மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.
மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.
ரெடிமேட் சாம்பார் மிக்ஸ்
தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ரவா உப்புமா மிக்ஸ்
தேவையானவை: வெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.

உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.
தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
அரிசி உப்புமா மிக்ஸ்
தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேங்காய் சட்னி மிக்ஸ்
தேவையானவை: தேங்காய் துருவல் - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
இது... புளி சாதம், தயிர் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்ற ஜோடி.
குறிப்பு: தேவைப்படும் போது தண்ணீரைச் சேர்த்து சட்னியாக தயார் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்தி ருந்து பயன்படுத்த லாம்.
கோதுமை தோசை மிக்ஸ்
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 150 கிராம், சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.தோசை செய்ய: கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சட்னி சரியான சைட் டிஷ். மாதக்கணக்கில் இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம். .
வெண் பொங்கல் மிக்ஸ்
தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், பாசிப்பருப்பு - 75 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, உலர்ந்த கறிவேப்பிலை, காய்ந்த இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
பொங்கல் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் பொங்கல் கலவையுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து (ஒரு பங்கு கலவைக்கு நான்கு பங்கு தண்ணீர்) குக்கரில் வைத்து, 5 அல்லது 6 விசில் வந்ததும் இறக்கவும். மேலாக நெய் விட்டு பரிமாற வும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
மிளகு ரச மிக்ஸ்
தேவையானவை: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெயிலில் காயவைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 
ரசம் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, தேவையான தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்றாக நுரை வந்ததும் இறக்கி, நெய்யில் பூண்டை வதக்கிச் சேர்க்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
வெந்தயக் குழம்பு
தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள், குழம்பு வடகம் - தலா 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
குழம்பு கொதிக்கும்போது வீடே மணக்கும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
குறிப்பு: சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
இஞ்சி புளி
தேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 10, கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
இதை தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
எலுமிச்சம்பழ சாத மிக்ஸ்
தேவையானவை: வேர்க்கடலை, நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 1.எலுமிச்சம்பழ சாதம் செய்ய: எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.

எலுமிச்சம்பழ சாதம் தேவைப்படும்போது, சாதத்தை உதிராக வடித்து... அதில் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் கலந்து பரிமாறவும்.
ஒரு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
புளிக் காய்ச்சல்
தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால், தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
தக்காளி சாத மிக்ஸ்
தேவையானவை: பழுத்த தக்காளி - 10, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு..jpg)
இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம். தேவைப்படும் போது, சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.
சீரக குழம்பு
தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, குழம்பு மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்தக் குழம்பை விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட லாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பஜ்ஜி மிக்ஸ்
தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பஜ்ஜி தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
குறிப்பு: சோடா உப்புக்கு பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் புளித்த தோசை மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்தாலும் உப்பலாக வரும். இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ரவா இட்லி மிக்ஸ்
தேவையானவை: ரவை - 100 கிராம், முந்திரி - 10, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கி காய வைத்த இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு. 
செய்முறை: ரவையை கடாயில் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சேர்த்து வறுத்து, ரவையுடன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
ரவா இட்லி தேவைப்படும்போது அரை மணி நேரத்துக்கு முன்பாக, ரவை கலவையில் தயிர், உப்பு, சோடா உப்பு கலந்து கொத்தமல்லி போட்டு கலக்கவும். இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, வெந்ததும் எடுக்கவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
தனியா குழம்பு
தேவையானவை: தனியா - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய பூண்டுப் பல் - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
இது பத்திய குழம்பு. பசி எடுக்க வைக்கும். ஜீரணத்துக்கு நல்லது.
குறிப்பு: இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வறுத்துப் பொடிக்க நேரமில்லாதவர்கள், தனியாத் தூள், மிளகாய்த்தூள் வாங்கி சேர்க்க லாம்.
அடை மிக்ஸ்
தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 75 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.அடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

அடை தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அடை மாவு மிக்ஸ், உப்பு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு அடை மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, சூடான தோசைக்கல்லில் மாவை சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மொறுமொறுவென எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லம், வெண்ணெய், தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இந்த மிக்ஸை மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.
குழம்பு பவுடர்
தேவையானவை: மிளகு - 75 கிராம், சீரகம், தனியா - தலா 50 கிராம்.குழம்பு செய்ய: புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 10, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும்
சூடான சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம். இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
அரிசி - பருப்பு சாதம்
தேவையானவை: சாப்பாட்டு புழுங்கலரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயம், குழம்பு வடகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு - 3 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
இதற்கு வறுத்த வெங்காய வடகம், அப்பளம் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
அரிசி - பருப்பு தோசை மிக்ஸ்
தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை, சீரகம் - சிறிதளவு. தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தோசை தேவைப்படும்போது, அரைத்த மாவை தேவையானஅளவு எடுத்து... உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 2 மணி நேரம் கழித்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
சட்னியுடன் சூடாகப் பரிமாறலாம். இந்த தோசையை செய்வதும் ஈஸி... சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆறு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
வெங்காய குழம்பு
தேவையானவை: பொடி யாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 50 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
உளுந்து வடை மிக்ஸ்
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு (அ) காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊற வைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பருப்பு வடை மிக்ஸ்
தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த இஞ்சி, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.வடை செய்ய: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வடை தேவைப்படும்போது, அரைத்த மிக்ஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசையவும். பதினைந்து நிமிடத்தில் வடை மாவு நன்றாக ஊறிவிடும். இந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தொகுப்பு: ரேவதி,
படங்கள்: எம்.உசேன்,
வி.செந்தில்குமார்
படங்கள்: எம்.உசேன்,
வி.செந்தில்குமார்
No comments:
Post a Comment