வானில் ஒரு சாதனை!
5, 4, 3, 2, 1, 0 என்று கவுன்ட் டவுன் ஒலிக்க... பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
தகதகவென நெருப்பைக் கக்கியபடி விண்ணுக்குப் பறந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த சிக்கலும் இன்றிக் கடந்து செல்லவே, ஸ்ரீஹரிகோட்டா முழுவதும் உற்சாகமான கைதட்டல்களால் அதிர்ந்தது!
ஆனால், கட்டுப்பாட்டு அறையில், விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் திரையில் சீரியஸாக ராக்கெட்டை அவதானிக்க ஆரம்பித்தார்கள். சில நிமிடங்கள் டென்ஷனாக இருந்த விஞ்ஞானிகள், ராக்கெட் இரண்டாம் உயரத்தைக் குறிப்பிட்ட மணித் துளிகளுக்குள் எட்டிப் பிடிக்கவே, சந்தோஷப்பட்டார்கள். 17 நிமிடங்கள் கழிந்த பிறகு, ராக்கெட்டில் இருந்த ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைக்கோள் தனியாகப் பிரிந்து பூமியில் இருந்து 822 கி.மீ. தூரத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. விஞ்ஞானிகள்
திட்டமிட்டது 820 கி.மீட்டர். இதற்கு 20 கி.மீ. வரை கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம். ஆனால், திட்டமிட்டதற்கு மிக நெருக்கமாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனாலும், விஞ்ஞானிகளின் டென்ஷன் குறையவில்லை. அதற்கு அடுத்த நிமிடம், இந்திய - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான யூத் சாட் செயற்கைக்கோளும் சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்-சாட் செயற்கைக்கோளும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்று, அதனதன் சுற்றுப்பாதையில் தங்களை வெற்றிகரமாக நிலை நிறுத்திக்கொண்ட பிறகுதான் விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கைகுலுக்கிக்கொண்டார்கள்.
இயற்கை வளங்களைக் கண்டு அறிவதற்காகச் செலுத்தப்பட்ட 1,206
கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ் சாட் - 2 செயற்கைக்கோளில் சக்தி வாய்ந்த மூன்று கேமராக்கள் உள்ளன. இது குறித்துப் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராதாகிருஷ்ணனிடம், ''செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு சி.ஏ.ஜி. குற்றம் சுமத்தியதே?'' என்று கேட்கப்பட, அவர், ''சி.ஏ.ஜி. கொடுத்த மிகப் பெரிய அறிக்கையின் இடையில் இருந்து இரண்டு வரிகளை எடுத்து, அதற்குத் தனியாக அர்த்தம் கொடுத்து பூதாகாரப்படுத்திவிட்டார்கள். எங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, எங்களைப் பாராட்டி இருக்கிறார்கள்!'' என்றார்.
''செயற்கைக்கோள்கள் அனுப்பும் படங்கள் எல்லாம் எந்த அளவுக்குப் பயன்படுகின்றன?'' என்று மீண்டும் கேட்கப்பட்டது.
''பருவ நிலையில் மாற்றங்கள் நிகழ்வது பற்றி ஆராய வேண்டும் என்றால், 50 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட தகவல்களும் புகைப்படங்களும் வேண்டும். அவை ஆவணக் காப்பகம் போன்றது. எது, எப்போது எந்த ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் என்று சொல்ல முடியாது. செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பும் அத்தனை புகைப்படங்களையும் இன்றே பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது!'' என்றார்.
விஞ்ஞானிகளுக்கு இந்த வெற்றி, சின்ன இளைப்பாறுதல் மட்டுமே. இந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் மூன்று ராக்கெட்டுகள் விண்ணில் பாய இருக்கின்றன. சந்திராயன் - 2, விண்ணுக்கு மனிதனை அனுப்புவது போன்ற ஏராளமான திட்டங்களும் இருக்கின்றன.
வெற்றிகள் தொடரட்டும்!
- பி.ஆரோக்கியவேல்
படங்கள்: என்.விவேக்
Source - Vikatan Magazine
ஆனால், கட்டுப்பாட்டு அறையில், விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் திரையில் சீரியஸாக ராக்கெட்டை அவதானிக்க ஆரம்பித்தார்கள். சில நிமிடங்கள் டென்ஷனாக இருந்த விஞ்ஞானிகள், ராக்கெட் இரண்டாம் உயரத்தைக் குறிப்பிட்ட மணித் துளிகளுக்குள் எட்டிப் பிடிக்கவே, சந்தோஷப்பட்டார்கள். 17 நிமிடங்கள் கழிந்த பிறகு, ராக்கெட்டில் இருந்த ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைக்கோள் தனியாகப் பிரிந்து பூமியில் இருந்து 822 கி.மீ. தூரத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. விஞ்ஞானிகள்
திட்டமிட்டது 820 கி.மீட்டர். இதற்கு 20 கி.மீ. வரை கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம். ஆனால், திட்டமிட்டதற்கு மிக நெருக்கமாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.ஆனாலும், விஞ்ஞானிகளின் டென்ஷன் குறையவில்லை. அதற்கு அடுத்த நிமிடம், இந்திய - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான யூத் சாட் செயற்கைக்கோளும் சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்-சாட் செயற்கைக்கோளும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்று, அதனதன் சுற்றுப்பாதையில் தங்களை வெற்றிகரமாக நிலை நிறுத்திக்கொண்ட பிறகுதான் விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கைகுலுக்கிக்கொண்டார்கள்.
இயற்கை வளங்களைக் கண்டு அறிவதற்காகச் செலுத்தப்பட்ட 1,206
கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ் சாட் - 2 செயற்கைக்கோளில் சக்தி வாய்ந்த மூன்று கேமராக்கள் உள்ளன. இது குறித்துப் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராதாகிருஷ்ணனிடம், ''செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு சி.ஏ.ஜி. குற்றம் சுமத்தியதே?'' என்று கேட்கப்பட, அவர், ''சி.ஏ.ஜி. கொடுத்த மிகப் பெரிய அறிக்கையின் இடையில் இருந்து இரண்டு வரிகளை எடுத்து, அதற்குத் தனியாக அர்த்தம் கொடுத்து பூதாகாரப்படுத்திவிட்டார்கள். எங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, எங்களைப் பாராட்டி இருக்கிறார்கள்!'' என்றார்.''செயற்கைக்கோள்கள் அனுப்பும் படங்கள் எல்லாம் எந்த அளவுக்குப் பயன்படுகின்றன?'' என்று மீண்டும் கேட்கப்பட்டது.
''பருவ நிலையில் மாற்றங்கள் நிகழ்வது பற்றி ஆராய வேண்டும் என்றால், 50 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட தகவல்களும் புகைப்படங்களும் வேண்டும். அவை ஆவணக் காப்பகம் போன்றது. எது, எப்போது எந்த ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் என்று சொல்ல முடியாது. செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பும் அத்தனை புகைப்படங்களையும் இன்றே பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது!'' என்றார்.
விஞ்ஞானிகளுக்கு இந்த வெற்றி, சின்ன இளைப்பாறுதல் மட்டுமே. இந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் மூன்று ராக்கெட்டுகள் விண்ணில் பாய இருக்கின்றன. சந்திராயன் - 2, விண்ணுக்கு மனிதனை அனுப்புவது போன்ற ஏராளமான திட்டங்களும் இருக்கின்றன.
வெற்றிகள் தொடரட்டும்!
- பி.ஆரோக்கியவேல்
படங்கள்: என்.விவேக்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment