| 2ஜி குற்றப்பத்திரிகை.. இதயமற்று கேட்காதீர்: கருணாநிதி | |||||
சென்னை, ஏப்.25,2011 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிகை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார் முதல்வர் கருணாநிதி. மேலும், இந்தக் குற்றப்பத்திரிகையில் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோரது பெயர் இடம்பெறுமா என்று கேட்கப்பட்டதற்கு, இதுபோல் இதயமற்ற கேள்வியைக் கேட்காதீர் என்றார் அவர். சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் கருணாநிதியிடம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று பிற்பகல் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கலாவது குறித்து கேட்டதற்கு, "தாக்கலானால் அது பத்திரிகைகளில் வெளிவரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்," என்றார். அந்தக் குற்றப்பத்திரிகையில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு, "அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது," என்றார். அதைத் தொடர்ந்து, ஒருவேளை அப்படி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர் இடம்பெற்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திமுக அமைச்சர்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டா என்று ஒரு பெண் நிருபர் கேட்டார். அதற்கு, "நீங்கள் ஆசைப்பட்டால், அது பற்றி யோசிக்கலாம். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இதயத்தை எடுத்து வைத்துவிட்டு இதுபோன்ற கேள்வியைக் கேட்கக் கூடாது," என்றார் முதல்வர் கருணாநிதி. Source - Vikatan Magazine | |||||
Wednesday, April 27, 2011
2ஜி குற்றப்பத்திரிகை.. இதயமற்று கேட்காதீர்: கருணாநிதி
Labels:
2ஜி குற்றப்பத்திரிகை
Subscribe to:
Post Comments (Atom)
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிகை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார் முதல்வர் கருணாநிதி.
No comments:
Post a Comment