ஃபைவ் ஸ்டார் சமையல் !
நிக்கேத்தனா
'தோசைத் திருவிழா’, 'ஆப்பத் திருவிழா’ என்று ஓட்டல் முழுக்க கட் அவுட் வைத்தும், பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தும் சென்னை, லி மெரீடியன் ஓட்டலின் செஃப் சக்திவேல், நம்மூர் அயிட்டங்களுக்கு எடுக்கும் திருவிழாக்கள் ஏக பிரபலம்!.jpg)
''இட்லியை வைச்சு பர்கர் பண்ண முடியாதா?னு திடீர்னு ஒரு நாள் தோணும். பர்கர்ல ரெண்டு பன்னுக்கு நடுவுல சீஸ், தக்காளி, வெள்ளரிக்காய்னு வைக்கிற மாதிரி ரெண்டு இட்லிக்கு நடுவுல இட்லியோடு இயைந்து போகக் கூடிய அயிட்டங்களை செய்தா என்னனு தோணுச்சு. செஞ்சு பார்த்தேன். சூப்பரா வந்ததால அந்த 'இட்லி பர்கர்’ அயிட்டம் எங்க ஹோட்டல் மெனு கார்ட்லயும் இடம் பிடிச்சது.
இட்லி பர்கரைப் போட்டிப் போட்டுச் சாப்பிட்ட வாண்டூஸ், 'உங்களுக்கு இட்லியில பீட்ஸாவும் செய்யத் தெரியுமா.?’னு ஆசையா கேட்க, அதையும் செய்தேன்.
இப்படி ஏதாவது புதுசு புதுசா கிச்சன்ல கண்டுபிடிச்சுட்டு இருந்தாதானே வாழ்க்கை சுவையா இருக்கும்?''
- நம்மை 'ஆமாம்’ சொல்லத் தூண்டும் அளவுக்கு சுவாரஸ்யமாகப் பேசிய சக்திவேல், இட்லி பர்கர், பீட்ஸா இட்லி இரண்டையும் 'அவள்’ வாசகிகளுக்காக சுடச்சுட செய்து பரிமாறுகிறார்!
பீட்ஸா இட்லி
தேவையான பொருட்கள்: நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மஷ்ரூம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட் - தலா 25 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு..jpg)
இட்லி பர்கர்
தேவையான பொருட்கள்: வேக வைத்து தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - 50 கிராம், நறுக்கிய கேரட் - 20 கிராம், நறுக்கிய பீன்ஸ் - 25 கிராம், நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு..jpg)
பிறகு, இரண்டு இட்லிகளை எண்ணெயில் இட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுங்கள். பிறகு, ஜல்லிக் கரண்டி கொண்டு அதிலிருக்கும் எண்ணெயை வடிகட்டுங்கள். வட்டமாக தட்டி வைத்திருக்கும் உருளை மசாலாவை, இரண்டு இட்லிக்கு இடையே வைத்தால் இட்லி பர்கர் ரெடி.
லெட்டூஸ் இலை, சீஸ் ஆகியவற்றை இட்லிகளுக்கு இடையே வைத்து, இட்லிக்கு மேலே ஒரு செர்ரிப்பழத்தை வைத்தால் கிரீடம் சூட்டியதைப் போல ஒரு கம்பீரம் சேரும். பக்கத்தில் கொஞ்சம் ஃபிங்கர் சிப்ஸையும் சேர்த்து வைத்தால், பளிச்சென்று இருக்கும் இட்லி பர்கர்!
- பரிமாறுவோம்...
படங்கள்: கே.ராஜசேகரன், என்.விவேக்
படங்கள்: கே.ராஜசேகரன், என்.விவேக்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment