களை இழக்கிறதா ஐ.பி.எல்.?
- வா.கார்த்திகேயன்
"ஐ.பி.எல். என்பது மிகச்சிறந்த பிஸினஸ் மாடல் என்பதில் சந்தேகமில்லை. இதில் பெரும் பங்கு லலித் மோடிக்கு இருக்கிறது. ஆனால் இங்கு புழங்கும் எண்களை பார்க்கும் போது மிகவும் மலைப்பாக இருக்கிறது. இது வெறும் மாய எண்கள். இந்த எண்களை பிஸினஸாக மாற்றம் செய்ய முடியுமா, பார்த்துக்கொள்ளுங்கள் மோடி" என்று 2010-ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் நிபுணர்கள் எச்சரித்தனர்.

கூடவே பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் ஐ.பி.எல்.யின் மதிப்பு 18,000 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டிருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இன்று அதே பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஐ.பி.எல்.யின் மதிப்பு சுமார் 16,440 கோடி தான் என்று மதிப்பிட்டிருக்கிறது. (இதற்கு நடுவே மோடி மீது குற்றச்சாட்டு சுமத்தி, அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார் என்பது தனிக்கதை.)
ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் தொடங்கிய ஐ.பி.எல். அடுத்த மாதம் 28-ம் தேதி சென்னையில் முடிவடைக்கிறது. 58 நாட்களில் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 60 ஆட்டங்கள் தான். இருந்தபோதும் ஏன் பிராண்ட் மதிப்பு குறைவாக மதிப்பிட்டிருக்கிறோம் என்பதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ்.
ஐ.பி.எல். மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒவ்வொரு டீமின் வருமானம் மற்றும் செலவுகளை வைத்து அந்த டீமின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதே போல ஐ.பி.எல்.-ன் மொத்த மதிப்பு அதன் வருமானம் மற்றும் செலவுகளை வைத்து கணக்கிடப்படுகிறது. கூடவே ஒவ்வொரு அணியின் முந்தைய வெற்றி தோல்விகள், அணி நிர்வாகம், விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் யுக்திகளை வைத்து மதிப்பிடப்படுகிறது.
இதில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பூனே மற்றும் கொச்சி அணிகளை இப்போது தான் முதல் முறையாக விளையாடுகின்றன. அவற்றின் பிஸினஸ் மற்றும் முன் வரலாறு எதும் இல்லையென்பதால் அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
வருமானம் குறைய என்ன காரணம்?
கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது வீரர்களின் சம்பளம் மற்றும் ஏலத்தொகை அதிகம். இதனால் ஒரு போட்டியில் 30 முதல் 33% வரை இருந்த செலவுகள் இப்போது 40 முதல் 45% வரை உயர்ந்துவிட்டது. ஒரு வேளை குறைவான சம்பளம் கொடுக்கும் பட்சத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியாது. வீரர்கள் சரியில்லை என்றால் வெற்றி கிடைக்காது. வெற்றி கிடைக்கவில்லை என்றால் ஸ்பான்ஸர்கள் வரமாட்டார்கள், வருமானம் குறையும். இதன் காரணமாக அதிகமாக செலவு செய்து வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.
எப்படியிருந்தாலும் எதாவது ஒரு அணி தான் வெற்றி பெறும். கடைசி நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் புதிதாக விளையாட வரும் அணிகளுக்கு இது பெரும் பிரச்னையாக இருக்கும். அவர்கள் அடுத்த வருடமும் இதே தொகையை வீரர்களுக்கும் ஃப்ரான்ஸைக்ளுக்கும் செலுத்த வேண்டி இருக்கும். இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் தோல்வியடைந்து கொண்டே வரும அணிகள் தொடந்து அணியை நடத்த முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும்.
இப்படி அடுத்தடுத்த வருடங்களில் என்ன நடக்கும் சொன்னவர்கள் இதில் இருக்கும் சாதக அம்சங்களையும் சொன்னார்கள். எப்படி இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்கு ஐ.பி.எல். கான்செப்ட் இருக்கும். காரணம் இதை மிஞ்சும் அளவுக்கு இந்திய அளவிலே உலக அளவிலே இன்னொரு அமைப்பு வரப்போவதில்லை. அதனால் ஐ.பி.எல். இருக்கும் என்று சொல்லி இருக்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம்.
ஐ.பி.எல். தொடர்ந்து செயல்படும் என்பது சரிதான். ஆனால் இதே பொலிவோடு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஒவ்வொரு அணிகளின் பிராண்ட் மதிப்பு:
ஒவ்வொரு அணியின் வரவு / செலவு
ஐ.பி.எல்.க்கான வருமானம்
டிவி உரிமை மூலம் கிடைக்கும் வருமானம்
ஃப்ரான்ஸைசி கட்டணம்
டைட்டில் ஸ்பான்ஸர்(டி.எல்.எஃப். மற்றும் ஹீரோ ஹோண்டா)
மைதானத்தில் இருக்கும் விளம்ப்ரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம்
நடுவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம்
டிக்கெட் வருமானத்தில் கிடைக்கும் பங்கு
விளம்பரம்(ஆகாயவிமானம் போல் இருக்கும் பலூன்) வருமானம்
இணையதள உரிமை
தியேட்டர் வருமானம்
செலவுகள்
மார்க்கெட்டிங் செலவுகள்
நிர்வாக செலவுகள்
ஒளிபரப்பு உரிமையில் ஃபிரான்ஸைசிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு
ஸ்பான்ஸர் ஷிப் உரிமையில் ஃபிரான்ஸைசிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு
*

கிட்டத்தட்ட்ட இதே கருத்தை தான் தோனியும் யுவராஜ் சிங்கும் பதிவு செய்திருக்கிறார்கள். உலகக் கோப்பை வெற்றியை கூட எங்களால் சரிவர கொண்டாட முடியாமல் அடுத்த போட்டிக்கு தயாராகி விட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேளை நாட்கள் செல்ல செல்ல இதன் பார்வையாளர்கள் அதிகரிக்கலாம். |
ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் தொடங்கிய ஐ.பி.எல். அடுத்த மாதம் 28-ம் தேதி சென்னையில் முடிவடைக்கிறது. 58 நாட்களில் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 60 ஆட்டங்கள் தான். இருந்தபோதும் ஏன் பிராண்ட் மதிப்பு குறைவாக மதிப்பிட்டிருக்கிறோம் என்பதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ்.
ஐ.பி.எல். மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?
இதில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பூனே மற்றும் கொச்சி அணிகளை இப்போது தான் முதல் முறையாக விளையாடுகின்றன. அவற்றின் பிஸினஸ் மற்றும் முன் வரலாறு எதும் இல்லையென்பதால் அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
வருமானம் குறைய என்ன காரணம்?
கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது வீரர்களின் சம்பளம் மற்றும் ஏலத்தொகை அதிகம். இதனால் ஒரு போட்டியில் 30 முதல் 33% வரை இருந்த செலவுகள் இப்போது 40 முதல் 45% வரை உயர்ந்துவிட்டது. ஒரு வேளை குறைவான சம்பளம் கொடுக்கும் பட்சத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியாது. வீரர்கள் சரியில்லை என்றால் வெற்றி கிடைக்காது. வெற்றி கிடைக்கவில்லை என்றால் ஸ்பான்ஸர்கள் வரமாட்டார்கள், வருமானம் குறையும். இதன் காரணமாக அதிகமாக செலவு செய்து வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.
எப்படியிருந்தாலும் எதாவது ஒரு அணி தான் வெற்றி பெறும். கடைசி நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் புதிதாக விளையாட வரும் அணிகளுக்கு இது பெரும் பிரச்னையாக இருக்கும். அவர்கள் அடுத்த வருடமும் இதே தொகையை வீரர்களுக்கும் ஃப்ரான்ஸைக்ளுக்கும் செலுத்த வேண்டி இருக்கும். இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் தோல்வியடைந்து கொண்டே வரும அணிகள் தொடந்து அணியை நடத்த முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும்.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே பிரேக் ஈவனை அடைந்திருக்கின்றன. டெல்லி, ஹைதராபாத், கோல்கத்தா அணிகள் தகுதியும் திறமையும் இருந்தும் பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மிகுந்த போராட்டத்தில் இருப்பதாக பிராண்ட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது. |
இப்படி அடுத்தடுத்த வருடங்களில் என்ன நடக்கும் சொன்னவர்கள் இதில் இருக்கும் சாதக அம்சங்களையும் சொன்னார்கள். எப்படி இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்கு ஐ.பி.எல். கான்செப்ட் இருக்கும். காரணம் இதை மிஞ்சும் அளவுக்கு இந்திய அளவிலே உலக அளவிலே இன்னொரு அமைப்பு வரப்போவதில்லை. அதனால் ஐ.பி.எல். இருக்கும் என்று சொல்லி இருக்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம்.
ஐ.பி.எல். தொடர்ந்து செயல்படும் என்பது சரிதான். ஆனால் இதே பொலிவோடு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஒவ்வொரு அணிகளின் பிராண்ட் மதிப்பு:
| அணி | 2011ம் ஆண்டு | 2010ம் ஆண்டு |
| மும்பை இந்தியன்ஸ் | 251.94 கோடி | ரூ.182.82 கோடி |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ.244.18கோடி | ரூ.216.88 கோடி |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | ரூ.209.82 கோடி | ரூ.187.92 கோடி |
| கோல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ.202.86 கோடி | ரூ.206.53 கோடி |
| டெல்லி டேர்டெவில்ஸ் | ரூ.180.14 கோடி | ரூ.181.86 கோடி |
| ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் | ரூ.170.93 கோடி | ரூ.154.44 கோடி |
| கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ.157.65 கோடி | ரூ.161.68 கோடி |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.149.96கோடி | ரூ.202.54 கோடி |
| வரவு | செலவுகள் |
| ஒளிப்பரப்பு உரிமை | ஃபிரான்ஸைசி கட்டணம் |
| மத்திய ஸ்பான்ஸர்கள் | வீரர்களுக்கான சம்பளம் |
| அணியின் பிரத்யேக ஸ்பான்ஸர்கள் | ஸ்டேடியத்துக்கான கட்டணம் |
| டிக்கெட் வருமானம் | போக்குவரத்து மற்றும் தங்கும் கட்டணம் |
| ஸ்டேடியங்களில் வைக்கப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் | விளம்பரத்துக்கான கட்டணம் - மற்றும் இதர செலவுகள். |
| ஒப்பந்தங்கள் | பரிசு தொகை |
டிவி உரிமை மூலம் கிடைக்கும் வருமானம்
ஃப்ரான்ஸைசி கட்டணம்
டைட்டில் ஸ்பான்ஸர்(டி.எல்.எஃப். மற்றும் ஹீரோ ஹோண்டா)
மைதானத்தில் இருக்கும் விளம்ப்ரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம்
நடுவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம்
டிக்கெட் வருமானத்தில் கிடைக்கும் பங்கு
விளம்பரம்(ஆகாயவிமானம் போல் இருக்கும் பலூன்) வருமானம்
இணையதள உரிமை
தியேட்டர் வருமானம்
செலவுகள்
மார்க்கெட்டிங் செலவுகள்
நிர்வாக செலவுகள்
ஒளிபரப்பு உரிமையில் ஃபிரான்ஸைசிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு
ஸ்பான்ஸர் ஷிப் உரிமையில் ஃபிரான்ஸைசிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு
*
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே பிரேக் ஈவனை அடைந்திருக்கின்றன. டெல்லி, ஹைதராபாத், கோல்கத்தா அணிகள் தகுதியும் திறமையும் இருந்தும் பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மிகுந்த போராட்டத்தில் இருப்பதாக பிராண்ட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment