| 2ஜி ஊழல்: ஆ.ராசா, 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி! | |||||
புதுடெல்லி, ஏப்.2,2011 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 9 பேர் மீதும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (சனிக்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையொட்டி, திஹார் சிறையில் இருந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆ.ராசா கொண்டுவரப்பட்டார். சிபிஐ தாக்கல் செய்த இந்த 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா உள்ளிட்ட 9 நபர்கள் மற்றும் 3 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், ஆ.ராசா ஒருவரால் மட்டுமே ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டது என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராசா உள்ளிட்ட குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக சிபிஐ-யின் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. டி.ஏ.ஜி. அதிகாரிகள் கெளதம் ஜோஷி, விரேந்திர திதாரா, ஹரி நாயர் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற 'யுனிடெக்' நிறுவனம், தகுதியின்மை காரணமாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குற்றச்சதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 125 சாட்சிகளின் பெயர்கள், 654 ஆதார ஆவணங்கள் ஆகியவையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற நபர்கள், நிறுவனங்களின் பெயர்களும், குற்றச்சாட்டு விவரமும்: 1. ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி. 2. ஷாகித் பால்வா, ஸ்வான் நிறுவனர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி. 3. வினோத் கோயங்கா, டி.பி.ரியால்டி இயக்குனர் (பால்வாவின் பார்ட்னர்) - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி. 4. சஞ்சய் சந்திரா, யுனிடெக் ஒயர்லெஸ் தலைவர் - எமாற்றுதல் 5. சித்தார்த் பெகுரா, முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி. 6. ஆர்.கே.சந்தோலியா, ராசாவின் முன்னாள் உதவியாளர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி. 7. கவுதம் தோஷி, அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் நிர்வாக அதிகாரி - ஏமாற்றத் தூண்டுதல் 8. விரேந்திர திதாரா, அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் நிர்வாக அதிகாரி - ஏமாற்றத் தூண்டுதல் 9. ஹரி நாயர், அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் நிர்வாக அதிகாரி - ஏமாற்றத் தூண்டுதல் நிறுவனங்கள்... 1. ரிலையன்ஸ் டெலிகாம் - குற்றச்சதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் 2. ஸ்வான் டெலிகாம் - குற்றச்சதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் 3. யுனிடெக் ஒயர்லெஸ் - தகுதியில்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமை பெற்றது. தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், தீவிர விசாரணையின் கீழ் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் பால்வாவின் நிறுவனத்திடம் இருந்து பணம் பரிமாறப்பட்ட கலைஞர் டிவி, சினியுக் ஃபிலிம்ஸ், கிரீன் ஹவுஸ் பிரைவட் லிமிடட், மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர். சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. Source - Vikatan Magazine | |||||
Wednesday, April 27, 2011
2ஜி ஊழல்: ஆ.ராசா, 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி!
Labels:
2ஜி குற்றப்பத்திரிகை
Subscribe to:
Post Comments (Atom)
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 9 பேர் மீதும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (சனிக்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
No comments:
Post a Comment