| தமிழக சட்டப்பேரவை தலைவரானார் டி.ஜெயக்குமார்! | |||||
சென்னை, மே 27,2011 தமிழக சட்டப்பேரவைத் தலைவராக டி.ஜெயக்குமாரும், துணைத் தலைவராக ப.தனபாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள 14-வது சட்டப் பேரவையின் தலைவர் பதவிக்கான தேர்தலில், ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. தனபால் ஆகியோர் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால், சட்டப்பேரவைத் தலைவராக டி.ஜெயக்குமாரும், துணைத் தலைவராக ப.தனபாலும், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் இன்று அறிவித்தார். | |||||
Friday, May 27, 2011
தமிழக சட்டப்பேரவை தலைவரானார் டி.ஜெயக்குமார்!
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக டி.ஜெயக்குமாரும், துணைத் தலைவராக ப.தனபாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment