உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா!
அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்
வாட்டர் கேட் ஊழலில் சிக்கி அமெரிக்க ஜனாதிபதி பதவியைப் பறிகொடுத்த நிக்ஸன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு அடுத்தபடியாக, இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் ஆ.ராசாவுக்கு.
''இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கிறது இந்த மெகா ஊழல். இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்குக் காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும், சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித் துறைக்கே உரிய நத்தை வேகத்தில் இந்த வழக்கு நடக்கிறது!'' என்று டைம் குறிப்பிட்டு இருக்கிறது.அடுத்ததாக யாரெல்லாம் இடம் பிடித்துள்ளார்கள் என்பதையும் படியுங்கள்...
'தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், நாட்டு மக்களைச் சுரண்டியும் நசுக்கியும் சுகம் கண்டவர். அவரை எதிர்த்து அங்கு சமீபத்தில் புரட்சி நடந்தது’ என்று லிபியாவின் கர்னல் கடாஃபியை பொறித்துள்ளது 'டைம்’.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மோஷே கேஸ்தவ், பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தார் என்பது துவங்கி, பல பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார் என நீள்கிறது கட்டுரை. 'இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, நீதியின் குரல்வளையையும் நெரிக்க முயற்சித்தார்’ என்று குற்றம் சாட்டுகிறது.மோஷே, இப்போது, ஏழு ஆண்டுகள் கம்பி எண்ணுகிறார்.


பெல்ஜியம் நாட்டின் மதத் தலைவர் ரோஜர், தன் உறவுக்கார சிறுவர்களிடம் பாலியல்ரீதியாக முறைகேடுகளில் ஈடுபட்டவர். கேட்டால்... ''இதெல்லாம் ஒரு மேட்டரா... நான் எந்த சிறுவனை அணுகினாலும், அதை அவனும் விரும்புவான். மற்றபடி அவர்களிடம் நான் மூர்க்கத்தனமாக நடக்கவில்லையே!'' என்று சமாளிக்கும் இவருக்கும் பட்டியலில் பெயர் இருக்கிறது.
ஜெங் ஜியா யூ... சீனாவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைத் தலைவராக இருந்த இவருக்கு, சீன அரசு மரண தண்டனை கொடுத்தது. காரணம், இவர் வாங்கிய கோடிக்கணக்கான லஞ்சம். அதனால் விற்பனைக்கு வந்த தரம் கெட்ட மருந்து மாத்திரைகளையும், உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு அந்த நாட்டில் பலர் உயிர் இழந்தனர்.

அமெரிக்காவின் ஒரு தனியார் கம்பெனியின் சி.இ.ஓ-வாக இருந்த டென்னிஸ், வேறு பாணியில் 'மோசமானவர்’. இவரது வீட்டு பாத்ரூமில் இருக்கும் ஒரு திரைச்சீலையின் விலை
நல்லவர்களை அறிமுகப்படுத்தும் 'டைம்’ மோசமானவர்களையும் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதுதான் 'நேரம்’ என்பது!
- வேல்ஸ்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment