கொக்.. கொக்.. கொளத்தூர்!
தமிழக சட்டசபைத் தேர்தலில், ஸ்டார் தொகுதியான மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் மட்டும்தான் டைம் பாம் ஆகி, கடும் பரபரப்பைக் கிளப்பியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கையில் பார்டர் மார்க்கில் ப.சிதம்பரம் பாஸ் மார்க் வாங்கியதுபோல, தட்டுத் தடுமாறி வெற்றிக் கோட்டைத் தொட்டார் ஸ்டாலின்!
இந்தக் களேபரத்துக்கு உண்மையில் என்ன காரணம்?
சென்னை லயோலா கல்லூரியில் கவுன்ட்டிங் தொடங்குவதற்கு முன்பே, முதலில் வந்தவர் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி. கொளத்தூர் தொகுதிக்கான வாக்குகள் மொத்தம் 12 டேபிள்களில் எண்ணப்பட்டன. முதல் சுற்றில், வெறும் 145 ஓட்டுகளிலேயே முன்னணியில் இருந்தார் ஸ்டாலின்.
இதுவே, முடிவு இழுபறிதான் என்பதை சூசகமாகத் தெரிவித்தது.
2-வது சுற்றில் 351 ஓட்டுகள், 3-வதில் 255 ஓட்டுகள், 4-வதில் 555 ஓட்டுகள் என்று மூன்று இலக்கத்திலேயே ஸ்டாலின் ஓடிக்கொண்டு இருக்க.... நிழலாகத் தொடர்ந்தார் சைதை துரைசாமி. இதனால் இரு கழகத்தினருக்கும் ஏக டென்ஷன். போலீஸ் படையும், மீடியா ஆட்களும், ஏஜென்ட்டுகளும் பரபரப்பாகக் குவிந்துவிட்டனர். 5-வது சுற்றில் சட்டென்று 273 ஓட்டுகளை சைதை துரைசாமி அதிகம் பெற, ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரம் செய்தனர். இதே நிலையில் தொடர, 8-வது சுற்றில் மீண்டும் ஸ்டாலின் 66 ஓட்டுகள் அதிகம் பெற, இரண்டு கட்சிகளுக்கும் ரத்தக் கொதிப்பு அதிகமானது.
இந்த சீசா விளையாட்டில், 9-வது சுற்றில் இரண்டு இயந்திரங்கள் மக்கர் செய்ய, அவற்றைத் தனியாகத் தூக்கிவைத்துவிட்டு, 10-வது ரவுண்ட்டுக்கு போனார்கள் அதிகாரிகள். 9-வது ரவுண்டில் துரைசாமியும், 10 மற்றும் 11-வதில் ஸ்டாலினும்... 12 மற்றும் 13-வதில் துரைசாமியும்... 14-வதில் ஸ்டாலினும்... 15-வதில் துரைசாமியும் நுரை தள்ளி மூச்சுவாங்க ஓடிக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், 16-வது சுற்றில் ஓர் இயந்திரம் வேலை செய்யாமல் போக, ''இயந்திரத்தை ஒழுங்காக லாக் செய்யாததால், அது முடிவுகளைக் காட்டவில்லை...'' என்றார்கள் அதிகாரிகள். பிறகு 17 மற்றும் 18 வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆக, 18 சுற்றுகளின் மொத்த முடிவுகள்படி சுமார் 2,000 ஓட்டுகள் ஸ்டாலினுக்கு அதிகம். கடைசியாக, 19-வது சுற்று வாக்குகளை எண்ணத் தொடங்கியபோதுதான் ஆரம்பித்தது கலாட்டா!
இந்த சுற்றில், இயந்திரங்களின் எண்கள் மாற்றப்பட்டு இருப்பதாக புகார் கிளப்பிய அ.தி.மு.க-வினர்,
''பிரச்னையைத் தீர்த்த பிறகே அடுத்த ரவுண்டுக்குப் போக வேண்டும்!'' என்று கறாராகச் சொன்னார்கள். அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
ஆனால் அதற்குள் கைகலப்பு தொடங்க, மாலை 5 மணிக்குப் பிரச்னை பூதாகாரமானது. இரண்டு தரப்பும் மோதிக்கொள்ள, சண்டைக் களமாகிவிட்டது லயோலா கல்லூரி ஏரியா. டியூப் லைட்டுகள், கம்ப்யூட்டர், கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மோதல் சீரியஸ் ஆனதும், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்டத் தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் ஆகியோர் ஸ்பாட்டுக்கு விரைந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க-வினர் சாலை மறியல் செய்ய, தவித்து அல்லாடினர் பொதுமக்கள். விஷயம் அறிந்ததும் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். ஜெயக்குமார் ''வேலை செய்யாத இயந்திரங்களின் வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும்...'' என்றார். தேர்தல் அதிகாரியோ, ''வாக்கு எண்ணிக்கை நடத்த மட்டுமே எனக்கு அதிகாரம் உண்டு!’ என்று மறுத்துவிட்டார்.
சுமார் இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. ஜெயக்குமார், துரைசாமி ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் முறையிடக் கிளம்பிப் போனார்கள்.
19-வது சுற்று எண்ணுவதற்கு முன், முதலில் வேலை செய்யாமல் இருந்த மூன்று இயந்திரங்களை எண்ணுவதற்கு ஏற்பாடு நடந்தது. அந்த ரவுண்டில் மொத்தம் ஐந்து இயந்திரங்கள் எண்ணப்பட்டன. திக் திக் ஆவலில் மீடியாக்கள் குழம்பிக்கொண்டு இருந்த நிலையில், ஸ்டாலின் அங்கு வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தார். அவருடன் 'முரசொலி’ செல்வம், மருமகன் சபரீசன், நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். 'வேட்பாளர்கள், ஏஜென்ட்டுகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் தவிர, வேறு யாருமே உள்ளே நுழைய முடியாத நிலையில், இவர்களை மட்டும் போலீஸ் எப்படி அனுமதித்தது?’ என்று பத்திரிகையாளர்கள் கோபப்பட்டனர்.
18-வது சுற்று முடிவில் 2,000 ஓட்டுகளுக்கு மேல் வாங்கியிருந்த ஸ்டாலின், 19-வது சுற்று முடிவில் 2,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அப்போதுதான் தி.மு.க-வினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். சான்றிதழை வாங்கிக்கொண்டு வெளியே வந்த ஸ்டாலினிடம் பத்திரிகையாளர் கருத்துக் கேட்டபோது, பதில் சொல்லாமல், சான்றிதழை மட்டும் காட்டி போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டார்!
- எம்.பரக்கத் அலி
படங்கள்: கே.கார்த்திகேயன், என்.விவேக்
Source - Vikatan Magazine
திக் திக்.. திணறல்!
இந்தக் களேபரத்துக்கு உண்மையில் என்ன காரணம்?
சென்னை லயோலா கல்லூரியில் கவுன்ட்டிங் தொடங்குவதற்கு முன்பே, முதலில் வந்தவர் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி. கொளத்தூர் தொகுதிக்கான வாக்குகள் மொத்தம் 12 டேபிள்களில் எண்ணப்பட்டன. முதல் சுற்றில், வெறும் 145 ஓட்டுகளிலேயே முன்னணியில் இருந்தார் ஸ்டாலின்.
இதுவே, முடிவு இழுபறிதான் என்பதை சூசகமாகத் தெரிவித்தது.2-வது சுற்றில் 351 ஓட்டுகள், 3-வதில் 255 ஓட்டுகள், 4-வதில் 555 ஓட்டுகள் என்று மூன்று இலக்கத்திலேயே ஸ்டாலின் ஓடிக்கொண்டு இருக்க.... நிழலாகத் தொடர்ந்தார் சைதை துரைசாமி. இதனால் இரு கழகத்தினருக்கும் ஏக டென்ஷன். போலீஸ் படையும், மீடியா ஆட்களும், ஏஜென்ட்டுகளும் பரபரப்பாகக் குவிந்துவிட்டனர். 5-வது சுற்றில் சட்டென்று 273 ஓட்டுகளை சைதை துரைசாமி அதிகம் பெற, ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரம் செய்தனர். இதே நிலையில் தொடர, 8-வது சுற்றில் மீண்டும் ஸ்டாலின் 66 ஓட்டுகள் அதிகம் பெற, இரண்டு கட்சிகளுக்கும் ரத்தக் கொதிப்பு அதிகமானது.
இந்த சீசா விளையாட்டில், 9-வது சுற்றில் இரண்டு இயந்திரங்கள் மக்கர் செய்ய, அவற்றைத் தனியாகத் தூக்கிவைத்துவிட்டு, 10-வது ரவுண்ட்டுக்கு போனார்கள் அதிகாரிகள். 9-வது ரவுண்டில் துரைசாமியும், 10 மற்றும் 11-வதில் ஸ்டாலினும்... 12 மற்றும் 13-வதில் துரைசாமியும்... 14-வதில் ஸ்டாலினும்... 15-வதில் துரைசாமியும் நுரை தள்ளி மூச்சுவாங்க ஓடிக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், 16-வது சுற்றில் ஓர் இயந்திரம் வேலை செய்யாமல் போக, ''இயந்திரத்தை ஒழுங்காக லாக் செய்யாததால், அது முடிவுகளைக் காட்டவில்லை...'' என்றார்கள் அதிகாரிகள். பிறகு 17 மற்றும் 18 வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆக, 18 சுற்றுகளின் மொத்த முடிவுகள்படி சுமார் 2,000 ஓட்டுகள் ஸ்டாலினுக்கு அதிகம். கடைசியாக, 19-வது சுற்று வாக்குகளை எண்ணத் தொடங்கியபோதுதான் ஆரம்பித்தது கலாட்டா!
இந்த சுற்றில், இயந்திரங்களின் எண்கள் மாற்றப்பட்டு இருப்பதாக புகார் கிளப்பிய அ.தி.மு.க-வினர்,
''பிரச்னையைத் தீர்த்த பிறகே அடுத்த ரவுண்டுக்குப் போக வேண்டும்!'' என்று கறாராகச் சொன்னார்கள். அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.ஆனால் அதற்குள் கைகலப்பு தொடங்க, மாலை 5 மணிக்குப் பிரச்னை பூதாகாரமானது. இரண்டு தரப்பும் மோதிக்கொள்ள, சண்டைக் களமாகிவிட்டது லயோலா கல்லூரி ஏரியா. டியூப் லைட்டுகள், கம்ப்யூட்டர், கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மோதல் சீரியஸ் ஆனதும், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்டத் தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் ஆகியோர் ஸ்பாட்டுக்கு விரைந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க-வினர் சாலை மறியல் செய்ய, தவித்து அல்லாடினர் பொதுமக்கள். விஷயம் அறிந்ததும் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். ஜெயக்குமார் ''வேலை செய்யாத இயந்திரங்களின் வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும்...'' என்றார். தேர்தல் அதிகாரியோ, ''வாக்கு எண்ணிக்கை நடத்த மட்டுமே எனக்கு அதிகாரம் உண்டு!’ என்று மறுத்துவிட்டார்.
சுமார் இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. ஜெயக்குமார், துரைசாமி ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் முறையிடக் கிளம்பிப் போனார்கள்.
19-வது சுற்று எண்ணுவதற்கு முன், முதலில் வேலை செய்யாமல் இருந்த மூன்று இயந்திரங்களை எண்ணுவதற்கு ஏற்பாடு நடந்தது. அந்த ரவுண்டில் மொத்தம் ஐந்து இயந்திரங்கள் எண்ணப்பட்டன. திக் திக் ஆவலில் மீடியாக்கள் குழம்பிக்கொண்டு இருந்த நிலையில், ஸ்டாலின் அங்கு வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தார். அவருடன் 'முரசொலி’ செல்வம், மருமகன் சபரீசன், நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். 'வேட்பாளர்கள், ஏஜென்ட்டுகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் தவிர, வேறு யாருமே உள்ளே நுழைய முடியாத நிலையில், இவர்களை மட்டும் போலீஸ் எப்படி அனுமதித்தது?’ என்று பத்திரிகையாளர்கள் கோபப்பட்டனர்.
18-வது சுற்று முடிவில் 2,000 ஓட்டுகளுக்கு மேல் வாங்கியிருந்த ஸ்டாலின், 19-வது சுற்று முடிவில் 2,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அப்போதுதான் தி.மு.க-வினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். சான்றிதழை வாங்கிக்கொண்டு வெளியே வந்த ஸ்டாலினிடம் பத்திரிகையாளர் கருத்துக் கேட்டபோது, பதில் சொல்லாமல், சான்றிதழை மட்டும் காட்டி போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டார்!
- எம்.பரக்கத் அலி
படங்கள்: கே.கார்த்திகேயன், என்.விவேக்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment