த.கதிரவன்
எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்?
தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை நோக்கி விஜயகாந்த் முன்னேறி வருவதாகவே செய்திகள் சொல்கின்றன! தேர்தலுக்கு முன்னால் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முன் பேசிய தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், ''புரட்சித் தலைவி முதலமைச்சராகவும், கேப்டன் பிரதான எதிர்க் கட்சித் தலைவராகவும் அமர்வார்வார்கள்!'' என்று அன்றே சொன்னார்!
இது நிகழ்ந்தால், இத்தனை கால தி.மு.க-வின் வரலாற்றில், மிக மோசமான பின்னடைவாக அமையும். 1991-ல் ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரலையில், தி.மு.க. இரண்டே இடங்களைப் பெற்றது. அந்த சட்டமன்றத்தில்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாமல் இருந்தது. மற்றபடி 1967 ஆட்சிக்குப் பிறகு ஆளும் கட்சியாகவோ, அல்லது எதிர்க் கட்சியாகவோ இல்லாமல் தி.மு.க. சபையில் இருந்ததே இல்லை. கடந்த தேர்தலில் தனி ஒரு மனிதராக உள்ளே சென்ற விஜய்காந்த், இந்த முறை பெரும் படையுடன் சென்று பிரதான இடத்தைப் பெற்று இருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது!
அறிவாலயம்...
காலை 8 மணி... சுமார் 200 தொண்டர்கள் மட்டும் திரண்டு இருந்தனர். செம உற்சாகம் தெரிந்தது. ஆனால், ஒரு மணி நேரத்தில் அந்தக் கூட்டம் அப்படியே கரைந்து காணாமல்போனது. பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு உசேன் ஆகிய மூவர்தான் முதலில் வந்தார்கள். பிறகு, கோபண்ணா, வசந்தி ஸ்டான்லி, பெ.வீ. கல்யாணசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்து வந்து, சில நிமிடங்களில் இறுக்கமான முகத்துடன் வெளியேறினார்கள். இன்னொரு பக்கம், செம பூஸ்ட்டில் வந்த உடன்பிறப்புகள் கூட்டம் ஒன்று, ஜெயலலிதாவையும் சசிகலாவையும் வாயில் வந்தபடி எல்லாம் திட்டி, தங்களது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார்கள். ராசா, கனிமொழி, ராஜாத்தி அம்மாளையும் வசை பாடியது ஒரு கும்பல்!
லாயிட்ஸ் சாலை...
காலை 8 மணிக்கு சுமாராக இருந்த கூட்டம் சிறிது நேரத்தில் கட்டுக்கடங்காமல் கூடியது. போலீஸ் பாதுகாப்பு குறைவாகப் போடப்பட்டு இருந்ததால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காக்கிகள் ரொம்பவே திணறினார்கள். உற்சாக மிகுதியில் போலீஸாரிடம் மல்லுக்கட்டிய சில தொண்டர்கள், 'மாமூ சண்டைக்கு வராத... இனிமே நீ நம்மாளு’ என்று கலாய்த்தார்கள். எம்.ஜி.ஆர். சிலைக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தண்ணீர் பந்தலில் ஆரம்பித்த உற்சாகம் நேரம் செல்லச் செல்ல மோர்ப் பந்தல், வெள்ளரி மோர்ப் பந்தல், மாங்காய் மோர்ப் பந்தல்... கடைசியாக கிர்ணிப் பழ ஜூஸ் பந்தல், ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ் பந்தல் எனக் களை கட்டியது!
வடிவேலு...
''ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனருங்களா?'' எனக் கலாய்ப்புக் காட்டி வயிறு குலுங்கவைத்தவர்
வடிவேலு. தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில், அந்த ஜோக் நம் நினைவுக்கு வர... அதே பாணியில் 'புயலுக்கு’ போன் போட்டோம். 'டைமிங்’குக்குத் தக்கபடி அவர் டபாய்ப்பு காட்ட... அது அப்படியே இங்கே...
காலை 9:15
''இப்போதானே சார் ரிசல்ட் வர ஆரம்பிச்சிருக்கு. போகப்போகப் பார்ப்போம். ரிசல்ட் வர்றதுக்கு முன்னாலேயே என்ன சொல்ல முடியும்?''
காலை 10:30
''முடிவு இந்த மாதிரி போய்க்கிட்டு இருக்கே சார்... சரி விடுங்க, நான் பிரசாரம் பண்ணியது விஜயகாந்த்தை எதிர்த்துத்தான். அ.தி.மு.க. அதிக இடங்களைப் பிடிக்கிற மாதிரித் தெரிஞ்சாலும், அந்தாளு (விஜயகாந்த்) 41 இடங்களில் குறைவான இடங்களில்தானே லீடிங் வர்றாரு... அப்போ, நம்ம பேச்சுக்கு மக்கள் மதிப்பு அளிச்சு இருக்காங்கன்னுதானே அர்த்தம்!''
காலை 11:35
''சார், முழு ரிசல்ட் வரட்டும். நான் அண்ணன் (அழகிரி) வீட்ல இருக்கேன்!''
மதியம் 12:00
''மக்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதனை மதிச்சு ஏத்துக்கிறதுதான் சரி. ஆனா, நான் அம்மாவைத் திட்டவே இல்லியே!''
குஷ்....பூ!
தேர்தல் ரிசல்ட் குறித்து குஷ்புவிடம் பேசினோம். ''கட்சியோட சாதனைகளைப் பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டியது தொண்டர்களின் கடமை. அதைத்தான் நான் தேர்தல் நேரத்தில் செய்தேன். மக்களுடைய தீர்ப்பு வேறு விதமாக இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!'' எனச் சொல்லி சட்டென கட் செய்தார்!
ஜாஃபர் சேட்...
13-ம் தேதி காலையில் 6.30 மணிக்கு கருணாநிதியிடம் இருந்து ஜாஃபர் சேட்டுக்கு போன்... 'எப்படிய்யா இருக்கும் ரிசல்ட்?’ எனக் கேட்க, 'நிச்சயம் 120 ஸீட்டாவது வந்திடும்!’ எனச் சொல்லி இருக்கிறார் ஜாஃபர். 'ஆரம்பத்தில் 145 ஸீட் சொன்னியேப்பா... இப்போ இழுபறியா?’ என கருணாநிதி இழுக்க, 'எப்படியும் வந்திடுவோம்!’ என மீண்டும் நம்பிக்கை வார்த்தாராம் ஜாஃபர். ஆனால், தி.மு.க-வுக்கு இறங்குமுகமான ரிசல்ட் வெளிவரத் தொடங்கியதும், ஜாஃபருக்கு முகம் வாடிவிட்டது. 'கருணாநிதியை அவர் நேரில் சந்திப்பார்!’ என கோபாலபுரத்தில் பேச்சுக் கிளம்பியது. ஆனால், ஜாஃபர் வரவே இல்லை!
ரஜினி...
தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டு இருந்த பரபரப்பான நேரத்தில், ரஜினி பற்றி விபரீத வதந்தி பரவியது. ''சார், ஜாலியா டி.வி பார்த்துட்டு இருக்கார். வதந்திக்குப் பதறி வர்ற போன் கால்களுக்குப் பதில் சொல்லி மாளலே!'' என்றார்கள் ரஜினி வீட்டில். 'அ.தி.மு.க-வினரின் கொண்டாட்டத்தை அடக்க தி.மு.க-வினரே கிளப்பிவிட்ட வதந்தி!’ என்றும் பேச்சு!
Source - Vikatan Magazine
தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை நோக்கி விஜயகாந்த் முன்னேறி வருவதாகவே செய்திகள் சொல்கின்றன! தேர்தலுக்கு முன்னால் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முன் பேசிய தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், ''புரட்சித் தலைவி முதலமைச்சராகவும், கேப்டன் பிரதான எதிர்க் கட்சித் தலைவராகவும் அமர்வார்வார்கள்!'' என்று அன்றே சொன்னார்!

காலை 8 மணி... சுமார் 200 தொண்டர்கள் மட்டும் திரண்டு இருந்தனர். செம உற்சாகம் தெரிந்தது. ஆனால், ஒரு மணி நேரத்தில் அந்தக் கூட்டம் அப்படியே கரைந்து காணாமல்போனது. பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு உசேன் ஆகிய மூவர்தான் முதலில் வந்தார்கள். பிறகு, கோபண்ணா, வசந்தி ஸ்டான்லி, பெ.வீ. கல்யாணசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்து வந்து, சில நிமிடங்களில் இறுக்கமான முகத்துடன் வெளியேறினார்கள். இன்னொரு பக்கம், செம பூஸ்ட்டில் வந்த உடன்பிறப்புகள் கூட்டம் ஒன்று, ஜெயலலிதாவையும் சசிகலாவையும் வாயில் வந்தபடி எல்லாம் திட்டி, தங்களது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார்கள். ராசா, கனிமொழி, ராஜாத்தி அம்மாளையும் வசை பாடியது ஒரு கும்பல்!
காலை 8 மணிக்கு சுமாராக இருந்த கூட்டம் சிறிது நேரத்தில் கட்டுக்கடங்காமல் கூடியது. போலீஸ் பாதுகாப்பு குறைவாகப் போடப்பட்டு இருந்ததால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காக்கிகள் ரொம்பவே திணறினார்கள். உற்சாக மிகுதியில் போலீஸாரிடம் மல்லுக்கட்டிய சில தொண்டர்கள், 'மாமூ சண்டைக்கு வராத... இனிமே நீ நம்மாளு’ என்று கலாய்த்தார்கள். எம்.ஜி.ஆர். சிலைக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தண்ணீர் பந்தலில் ஆரம்பித்த உற்சாகம் நேரம் செல்லச் செல்ல மோர்ப் பந்தல், வெள்ளரி மோர்ப் பந்தல், மாங்காய் மோர்ப் பந்தல்... கடைசியாக கிர்ணிப் பழ ஜூஸ் பந்தல், ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ் பந்தல் எனக் களை கட்டியது!
''ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனருங்களா?'' எனக் கலாய்ப்புக் காட்டி வயிறு குலுங்கவைத்தவர்
வடிவேலு. தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில், அந்த ஜோக் நம் நினைவுக்கு வர... அதே பாணியில் 'புயலுக்கு’ போன் போட்டோம். 'டைமிங்’குக்குத் தக்கபடி அவர் டபாய்ப்பு காட்ட... அது அப்படியே இங்கே...காலை 9:15
''இப்போதானே சார் ரிசல்ட் வர ஆரம்பிச்சிருக்கு. போகப்போகப் பார்ப்போம். ரிசல்ட் வர்றதுக்கு முன்னாலேயே என்ன சொல்ல முடியும்?''
காலை 10:30
''முடிவு இந்த மாதிரி போய்க்கிட்டு இருக்கே சார்... சரி விடுங்க, நான் பிரசாரம் பண்ணியது விஜயகாந்த்தை எதிர்த்துத்தான். அ.தி.மு.க. அதிக இடங்களைப் பிடிக்கிற மாதிரித் தெரிஞ்சாலும், அந்தாளு (விஜயகாந்த்) 41 இடங்களில் குறைவான இடங்களில்தானே லீடிங் வர்றாரு... அப்போ, நம்ம பேச்சுக்கு மக்கள் மதிப்பு அளிச்சு இருக்காங்கன்னுதானே அர்த்தம்!''
காலை 11:35
''சார், முழு ரிசல்ட் வரட்டும். நான் அண்ணன் (அழகிரி) வீட்ல இருக்கேன்!''
மதியம் 12:00
''மக்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதனை மதிச்சு ஏத்துக்கிறதுதான் சரி. ஆனா, நான் அம்மாவைத் திட்டவே இல்லியே!''
தேர்தல் ரிசல்ட் குறித்து குஷ்புவிடம் பேசினோம். ''கட்சியோட சாதனைகளைப் பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டியது தொண்டர்களின் கடமை. அதைத்தான் நான் தேர்தல் நேரத்தில் செய்தேன். மக்களுடைய தீர்ப்பு வேறு விதமாக இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!'' எனச் சொல்லி சட்டென கட் செய்தார்!
13-ம் தேதி காலையில் 6.30 மணிக்கு கருணாநிதியிடம் இருந்து ஜாஃபர் சேட்டுக்கு போன்... 'எப்படிய்யா இருக்கும் ரிசல்ட்?’ எனக் கேட்க, 'நிச்சயம் 120 ஸீட்டாவது வந்திடும்!’ எனச் சொல்லி இருக்கிறார் ஜாஃபர். 'ஆரம்பத்தில் 145 ஸீட் சொன்னியேப்பா... இப்போ இழுபறியா?’ என கருணாநிதி இழுக்க, 'எப்படியும் வந்திடுவோம்!’ என மீண்டும் நம்பிக்கை வார்த்தாராம் ஜாஃபர். ஆனால், தி.மு.க-வுக்கு இறங்குமுகமான ரிசல்ட் வெளிவரத் தொடங்கியதும், ஜாஃபருக்கு முகம் வாடிவிட்டது. 'கருணாநிதியை அவர் நேரில் சந்திப்பார்!’ என கோபாலபுரத்தில் பேச்சுக் கிளம்பியது. ஆனால், ஜாஃபர் வரவே இல்லை!
தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டு இருந்த பரபரப்பான நேரத்தில், ரஜினி பற்றி விபரீத வதந்தி பரவியது. ''சார், ஜாலியா டி.வி பார்த்துட்டு இருக்கார். வதந்திக்குப் பதறி வர்ற போன் கால்களுக்குப் பதில் சொல்லி மாளலே!'' என்றார்கள் ரஜினி வீட்டில். 'அ.தி.மு.க-வினரின் கொண்டாட்டத்தை அடக்க தி.மு.க-வினரே கிளப்பிவிட்ட வதந்தி!’ என்றும் பேச்சு!
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment