மலைக்க வைக்கும் பத்மநாப சுவாமி திருக்கோயில்
ஆக்ஸிஜன் செலுத்திய அறைக்குள் நுழைந்தால்.. அறை முழுக்க அத்தனையும் தங்கம்!
கேரள உயர் நீதிமன்றத்தில், 'பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும். உள்ளே இருக்கும் நகைகளைக் கணக்கெடுக்க வேண்டும்!’ என அவர் அதிரடி வழக்கு தொடர... 'கோயிலை அரசே ஏற்று நடத்தலாம்’ என உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தப் பழைமையான கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளை, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள், கோயிலை அரசாங்கம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடை விதித்தனர். ஆனாலும், 'ரகசிய அறைகளில் பாதுகாக்கப்படும் ஆபரணங்களையும், மதிப்பு வாய்ந்த பொருட்களையும் மதிப்பீடு செய்யலாம்’ என உத்தரவிட்டனர். இதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் என்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோர் தலைமையில் ஏழு பேர்கொண்ட குழுவை நியமித்தனர். இதை அடுத்துதான், கோயிலின் பாதாள அறைகளில் டன் கணக்கில் கிடந்த தங்கமும் வைரமும் அம்பலம் ஆனது. இதைப்பார்த்து நாடே ஆச்சர்யத்தில் மூழ்கிக்கிடக்கிறது!
.jpg)

அதில் இடம் பெற்ற அதிகாரிகளிடம் பேசியபோது, ''முதல் இரண்டு அறைகள் கடந்த 160 வருடங்களாகத் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. அடுத்த நான்கு அறைகளை கோயிலில் பூஜைகளைக் கவனிக்கும் பெரிய நம்பி, தெக்கெடம் நம்பி ஆகியோர் அவ்வப்போது திறந்து, அதில் இருக்கும் நகைகளை சுவாமிக்கு அணிவிப்பார்கள். அதனால், நீண்ட காலம் திறக்கப்படாத அறைகளில் ஏதாவது விஷ ஜந்துகள் இருக்கலாம் என்பதால், அவற்றை ஒதுக்கிவிட்டு வழக்கமாகத் திறக்கும் அறைகளை ஆய்வு செய்தோம். முதல் நாளில் மூன்றாவது அறையைத் திறக்க, அதில், தங்கத்தால் தகதகத்த 20 பெரிய குடங்கள், 340 சிறிய குடங்கள் இருந்தன. தங்கத்தில் செய்யப்பட்ட எழுத்தாணி, சிலைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களும் சிலைகளும் கொட்டிக்கிடந்தன. அடுத்த நாளில் இரு அறைகளில் இருந்த பொருட்களை மதிப்பீடு செய்தபோது... தங்க நகைகள், வைரம் பதிக்கப்பட்ட ஆசனங்கள், குடம் குடமாகப் பொற்காசுகள், வைரம் பதிக்கப்பட்ட கலை நயம்கொண்ட பொருட்களும் குவிந்துகிடந்தன...'' என்கிறார்கள் வியப்போடு.திருவாங்கூர் மன்னர் பரம்பரை குறித்து அறிந்த வரலாற்று ஆய்வாளரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''அந்தக் காலத்தில் திருவாங்கூருக்குப் பக்கத்தில் இருந்த காயம்குளம், செம்பகசேரி, கோட்டயம், கொச்சி ஆகிய இடங்களின் மன்னர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றபோது, இந்த நகைகளை அள்ளிக்கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர். இடையில் மொகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் படையெடுப்பின்போது, அவர்களிடம் இருந்து இவற்றைப் பாதுகாக்க ரகசிய அறைகளில்வைத்து இருக்கிறார்கள்!'' என்றார்.
சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ்ண அய்யர், ''கோயிலில் கிடைத்து இருக்கும் நகைகளைத் தனி நபர்கள் யாரும் பயன்படுத்த உரிமை இல்லை. இவற்றைப் பாதுகாக்க தனியாக ஓர் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அதன் பலன், ஏழை, எளிய மக்களைச் சென்றடையும் வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி குறித்து முதலமைச்சர் உம்மன் சாண்டி, ''நகைகள் அனைத்தும் கோயிலுக்கே சொந்தம். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று நகைகளைப் பாதுகாப்பதுபற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்வோம்!'' என்றார்.
கோயிலில் செல்வம் குவிந்து இருக்கும் காரணத்தால், இப்போது மக்கள் கூட்டம் அலை மோதுகிறது!
- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
உள்ளே சில சுவாரஸ்யங்கள்...
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment