நான் யாருடைய முகமூடியும் அல்ல: ராம்தேவின் சிறப்புப் பேட்டி

யோகா பயிற்சி மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைத் தன்பால் ஈர்த்தவர் பாபா ராம்தேவ்.
ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கப் போவதாக அண்மையில் நடத்திய போராட்டத்தின் மூலம் மிகவுப் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.
உண்ணாவிரதம் நடந்த ராம்லீலா மைதானத்திலிருந்து ஹரித்துவாருக்குத் தப்பிச் சென்ற அவர், கடந்த வாரம் மீண்டும் தில்லிக்குத் திரும்பினார்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் குழும இயக்குநர் பிரபு சாவ்லாவுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமது போராட்டங்கள் பற்றியும், நாடாளுமன்ற நடைமுறையில் தமக்குள்ள நம்பிக்கை பற்றியும் விவரிக்கிறார்...
பிரபு சாவ்லா: நான் உங்களது பல பரிமாணங்களைப் பார்த்திருக்கிறேன். இன்று உங்களது "அவதாரம்' என்ன? பாபா ராம்தேவ்: முதலில் நான் ஒரு சன்யாசி. இந்த நாட்டின் குடிமகன். நாட்டின் அரசியல் சட்டப்படி ஒரு குடிமகன் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டுமோ அந்தக் கடமைகளையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் செய்து வருகிறேன். நமது முன்னோர் எழுதிய சாஸ்திரங்களை மக்களுக்குப் போதித்து வருகிறேன். என்னால் முடிந்தவரை எனது கடமைகளைச் செய்து வருகிறேன். இறுதி மூச்சுவரை அப்படியே. சாவ்லா: லட்சக்கணக்கான மக்கள், தொண்டர்கள், பக்தர்கள், உங்களைக் காண வருகிறார்கள். உங்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...
பாபா: இன்றைக்கு மட்டுமல்ல வருங்காலத்திலும் என்னிடம் வருவார்கள்...
சாவ்லா: நான் ஏற்கிறேன். ஆனால் ராம்லீலா மைதானத்திலிருந்து நீங்கள் வெளியேறிய விதம், உங்களைப் பின்பற்றுவோரின் மனதில் உங்களைப் பற்றிய மதிப்பைக் குறைத்திருக்கக் கூடுமே...
பாபா: அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இருந்தது. இப்போது அப்படிப்பட்ட அறிவிப்பு ஏதும் இல்லை. ஆனால் நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டது. சர்வாதிகாரி போலச் செயல்பட்டு அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். இதையெல்லாம் உலகமே கண்டித்தது. இது துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் கூட கூற வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். எனது ஜூன் 4-ம் தேதி நள்ளிரவுக்கு முன் இருந்த எனது வாழ்க்கை இப்போதைய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முதலில் எங்களது கோரிக்கைகளை அரசு முன் வைத்தோம். அவர்கள் ஏற்க மறுத்தார்கள். ஆனால் அதற்குள் கறுப்புப்பண விவகாரம் 121 கோடி மக்களையும் எட்டிவிட்டது. உலகம் முழுவதும் சென்றடைந்தது. ஜூன் 4-ம் தேதி பல விஷயங்களுக்கு நிரூபணமாக அமைந்தது. அதில் ஒன்று, இவர்களிடமெல்லாம் கறுப்புப் பணம் இருக்கிறது என்பது. பிரபுஜி, நான் ஒன்றைச் சொன்னால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ரூ.4 லட்சம் கோடி பணம் சுவிஸ் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் யார் பதுக்கியது? சாவ்லா: 4-ம் தேதிக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டது என்று சொல்கிறீர்களா?
பாபா: ஆமாம்.
சாவ்லா: நீங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்போ, தொடங்கியபோது இந்தப் பணம் எடுக்கப்படவில்லை என்கிறீர்கள்...
பாபா: பணத்தை எடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போது நாட்டில் நிலம், தங்கம் விலையெல்லாம் பாருங்கள். எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 10, 50, 100 மடங்காக. பதஞ்சலி யோகபீடம் அருகே நாங்கள் பணிகளைத் தொடங்கும் முன்பு ஒரு பிகா நிலத்தின் விலை ரூ. 25 ஆயிரமாக இருந்தது. இப்போது ரூ.25 லட்சம். அதனால்தான் நான் சொல்கிறேன்...
சாவ்லா: ஆக, உங்களால் விவசாயிகளெல்லாம் செல்வந்தர்களாகிவிட்டார்கள். அதை விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறினீர்களே, அதைப் பற்றிச் சொல்லுங்கள்... பாபா: அவர்கள் எனக்கு நெருக்கடி தரலாம். எனக்கு எதிராகச் சதி செய்தார்கள். ஒடுக்க முயற்சித்தார்கள். அவதூறு பரப்பினார்கள். அதை வருங்காலத்திலும் செய்வார்கள்.
சாவ்லா: உங்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பதஞ்சலி யோக பீடத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது என அவர்கள் கேட்பார்கள். தயாராக இருங்கள்.
பாபா: நான் எப்போதோ தயார். இப்போதும் தயாராக இருக்கிறேன். எப்போதும் தயாராக இருப்பேன். அவர்கள் ஊழல்வாதிகள். திருந்துவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏமாற்றிவிட்டார்கள். எளிமையாக ஒன்றைச் சொல்கிறேன், 4-ம் தேதிக்கு முன்னரும் இந்தப் பிரச்னைகள் இருந்தன. நாங்கள் எழுப்பிய அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக பிரதமரே கூறியிருக்கிறார். சாவ்லா: இதை அவர் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
பாபா: நான் அவருக்கு 3 கடிதங்களை எழுதினேன். அவரும் எனக்கு எழுதினார். அதன் பிறகு நிதியமைச்சர் 2 முறை எழுதினார். அதன் பிறகு 4 அமைச்சர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போதெல்லாம் ராம்தேவ் தேசபக்தன். வன்முறையாளனாக அவர்களுக்குத் தெரியவில்லை.
சாவ்லா: ஆர்எஸ்எஸ் ஏஜென்டாகவும் தெரியவில்லை...
பாபா: ராம்தேவ் ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் அல்ல. பாஜகவின் முகமூடியும் அல்ல. நேரடியாகச் சொல்வதென்றால் அவர் மிகவும் நல்லவர். நேர்மையாளர். ஆனால் 4-ம் தேதிக்குப் பிறகு ராம்தேவ் என்றால் வன்முறையாளன் என்கிற அவதூறு பரப்பப்பட்டது. அவர் செய்யும் எல்லாம் குற்றமாகிவிட்டது.
சாவ்லா: நீங்கள் அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்தும்போது, உங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். நீங்கள் அரசியல்வாதி இல்லையென்பதால், அது உங்களுக்குத் தெரியவில்லை. கடைசியில் நீங்களே உங்களது மரியாதையைக் குறைத்துவிட்டீர்கள்.
பாபா: இல்லை. நான் என் மரியாதையைக் குறைக்கவில்லை.
சாவ்லா: நீங்கள் ஓடினீர்கள், பெண்களுடன் சென்று மறைந்துவிட்டீர்கள் என்று மக்கள்தான் சொல்கிறார்கள்... பாபா: இதோ பாருங்கள், என் மீது கூறப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் உண்மையாகப் பதிலளிக்க முடியும். நான் ஒரு அரசியல்வாதியல்ல. முதலில் இருந்து நான் இதைத்தான் கூறி வருகிறேன். சாவ்லா: அரசியல்வாதிகள் யாரையும் ஏமாற்றவில்லை என்று நினைக்கிறீர்களா?
பாபா: எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். ஒரு சன்யாசியைத் தவிர.
சாவ்லா: உங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும், யோகா முகாம் நடத்துவதற்குத்தான் அனுமதி பெற்றீர்கள் என்று தில்லி போலீஸôர் கூறுகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம் பற்றி கூறவில்லை என்கின்றனர். இது துரோகமில்லையா?
பாபா: நான் ஒரு தவறும் செய்யவில்லை. நாங்கள் பயிற்சி முகாம் நடத்துவோம் என்றோம். அதைத்தான் செய்தோம்.
சாவ்லா: 5000 பேர்தான் கலந்து கொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறீர்கள்...
பாபா: எத்தனை பேர் வருவார்கள் என்று அவர்கள் கேட்டார்கள். முதலில் எங்கள் அனுமானப்படி 5000 பேர் வருவார்கள் என்றுதான் தெரிந்தது. நான் காலை 5 மணி முதல் 8 மணி வரை யோகா பயிற்சியளித்தேன். அதை உலகமே பார்த்தது. நான் பொய் சொல்லவில்லை. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் அனுமதி வாங்கினோம். ஆனால் போலீஸôர் எங்களை அங்கு போகவிடவில்லை.
சாவ்லா: அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பாபா: ராம்லீலா மைதானத்திலேயே போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
சாவ்லா: போராட்டம் அல்ல... யோகா முகாம்.
பாபா: நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வாங்கினோமே.
சாவ்லா: ஜந்தர் மந்தரில்தானே, ராம்லீலா மைதானத்தில் இல்லையே...
பாபா: அவர்கள்தான் ஜந்தர் மந்தருக்கு போகாதீர்கள்; ராம்லீலா மைதானத்திலே போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். உச்ச நீதிமன்றத்தில் போலீஸôர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலேயே இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாவ்லா: நான் உங்களை ஒன்று கேட்க வேண்டும். ஏன் அரசியல்வாதிகளிடம் போய் பேச்சு நடத்த வேண்டும். அண்ணா ஹசாரேயும் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தினார். இப்போது அவர்கள் தரும் வரைவு மசோதாவைக் குறை சொல்கிறார். நீங்களும் அப்படித்தான். ஊழல்வாதிகள் என்று நீங்களே கூறும் அமைச்சர்கள், உங்களை வந்து சந்தித்தவுடன், பனிக்கட்டியாக உருகிவிடுகிறீர்கள். பேச்சு நடத்த நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்கிறீர்கள்...
பாபா: பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. நாடாளுமன்ற அமைப்பில் இதெல்லாம் தேவையான ஒன்று. நாடாளுமன்ற அமைப்பில் ஒரு அவசரச் சட்டம் போட்டு கறுப்புப் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து, அமைச்சர்களுடன்தான் பேச வேண்டியிருக்கிறது...
சாவ்லா: முன்பு நீங்கள் சொன்ன கருத்திலிருந்து இது முரண்பாடாக இருக்கிறது. நாடாளுமன்ற அமைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
பாபா: நாடாளுமன்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில், நாடாளுமன்ற அமைப்பு சரியில்லை என்றால், அதை மாற்றும் உரிமையை அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
சாவ்லா: அதற்குத்தான் தேர்தல் மூலம் வழி இருக்கிறதே. மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் மட்டுமே அரசை மாற்ற முடியும், வன்முறையால் அல்ல.
பாபா: ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தவறு. மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். சாவ்லா: கருத்துக் கூறலாம். ஆனால் அரசை பிளாக்மெயில் செய்யக்கூடாது.
பாபா: நாங்கள் எப்போது பிளாக்மெயில் செய்தோம்? சாவ்லா: ஆனால் அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் சொல்வதைச் செய்யுங்கள். அல்லது போராட்டம் நடத்துவேன் என்று கூறுவதை...
பாபா: நாங்கள் தனிப்பட்ட மனிதருக்காக எதையும் கேட்கவில்லை. எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என்று பிரதமரே கூறியிருக்கிறார்.
சாவ்லா: அவை நியாயமற்றவை அல்ல என்று யார் கூறுகிறார்கள். சொல்லுங்கள்.
பாபா: 4-ம் தேதிக்கு முன்பாக எல்லாம் நியாயமாகத்தான் இருந்தது.
சாவ்லா: நாடாளுமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறும் நீங்கள், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவற்றை எழுப்புவதற்கு முயற்சி செய்திருக்கலாமே. அண்ணா ஹசாரே அரசியல் கட்சிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல...
பாபா: நாங்களும் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். காங்கிரûஸத் தவிர. பாபாவின் கோரிக்கைகள் அனைத்தும் சரியானவை என்று கட்சிகள் கூறியிருக்கின்றன.
சாவ்லா: கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போராடும் உங்களுக்கு, நன்கொடையாகக் கறுப்புப் பணம் வருவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே. உங்களது கட்டடங்கள் கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டவை என்று கூறுகிறார்களே... பாபா: நான் பெறுவதெல்லாம் சட்டப்பூர்வமானதே.
சாவ்லா: நான் கூறுவது மொத்தமாக. கட்டடங்கள், ஏக்கர் கணக்கில் நிலம், அறிவித்த சொத்து மதிப்பு ரூ. ஆயிரம் கோடி...
பாபா: அறக்கட்டளைக்கு என்ன சொத்து இருக்கிறது என்று நாட்டுக்கு சொல்லியாகிவிட்டது. நாங்கள் செய்யும் சேவைக்காக எங்களுக்கு நன்கொடை வருகிறது. அதையெல்லாம் நாங்கள் வெளிப்படையாகக் கூறிவிட்டோம். காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதைச் செய்யுமா?
சாவ்லா: நீங்கள் யோகா குரு என்பதைவிட வியாபாரியாகவே இருக்கிறீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். பாபா: நான் முன்னரே கூறினேனே. இந்தக் குற்றசாட்டுகளெல்லாம் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகுதான்.
சாவ்லா: ஜூன் 4-ம் தேதிக்கு முன்பாக உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதன் பிறகு நீங்கள் ஊழல் செய்கிறீர்கள், கறுப்புப் பணம் வைத்திருக்கிறீர்கள் என்கிறார்கள். உங்கள் பக்கம் ஏதாவது தவறு இருக்கிறதா? பாபா: இல்லையில்லை. எந்தத் தவறும் இல்லை. சாவ்லா: உங்கள் மதிப்பு எந்த வகையிலும் குறையவில்லை என்கிறீர்கள். பிறகு ஏன், உங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அண்ணா ஹசாரே நிபந்தனைகளை விதிக்கிறார்? அந்த நிபந்தனைகளையெல்லாம் நீங்கள் ஏற்கிறீர்களா? உங்களை ஆர்எஸ்எஸ்காரர் என்கிறார்கள். பாபா: என்மீது கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் ஆர்எஸ்எஸ் மீதும், பாஜக மீதும் கூறினார்கள். சாவ்லா: ஹசாரேயின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டீர்களா?
பாபா: எந்த நிபந்தனையும் இல்லை. நான் எந்த அமைப்புக்கும் முகமூடி அல்ல. நான் விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் பேசுகிறேன். நான் நாட்டின் 121 கோடி இந்தியர்களின் முகம்.
சாவ்லா: லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால், ஆகஸ்ட் 16-ம் தேதி ஹசாரேயுடன் உண்ணாவிரதம் இருப்பீர்களா?
பாபா: முன்பே கூறிவிட்டேன். யாரெல்லாம் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராகப் போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் ஆதரிப்பேன். அவர்களது ஆதரவைப் பெறுவேன். எங்களுக்கு ஒரே நோக்கம்தான், ஒரே பிரச்னைதான்...
சாவ்லா: நான் அண்ணா ஹசாரே பற்றிக் கேட்கிறேன்...
பாபா: ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான யாருடனும் நாங்கள் சேர்ந்து செயல்படுவோம்...
சாவ்லா: ஹசாரேயுடன் இணைந்து ஏதாவது போராட்டத்தை நடத்துவீர்களா?
பாபா: நாங்கள் அவர்களுடன் இருப்போம். எங்களுடன் 121 கோடி இந்திய மக்களும் இருப்பார்கள்.
சாவ்லா: பாபா ராம்தேவின் பிரச்னைதான் என்ன?
பாபா: கறுப்புப் பணம், ஊழல், நிர்வாகச் சீர்கேடு.
சாவ்லா: அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது ஓடிவிட மாட்டீர்களே?
பாபா: இந்த முறையும் நான் எங்கும் ஓடவில்லை. இது வித்தியாசமான சம்பவம். அவர்கள் கைது செய்யத்தான் முயன்றார்கள் என்றால் நான் அங்கேயே இருந்திருப்பேன். கைது செய்யப்படுவதற்குத் தயாராகத்தான் இருந்தேன்.
சாவ்லா: அடுத்த முறை கைது செய்ய வரும்போது மைதானத்திலேயே அமர்ந்திருப்பீர்கள்?
பாபா: அவர்கள் என்னைக் கைது செய்ய வரவில்லை. கொல்ல வந்தார்கள். நான் அவர்களுக்கு இரையாக விரும்பவில்லை. நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. சாவ்லா: பேட்டியளித்ததற்கு மிக்க நன்றி.
பாபா: நன்றி பிரபுஜி.
Source : Indian Express-Dinamani-July 03,2011

No comments:
Post a Comment