திகாருக்கா.. திரும்பவும் சென்னைக்கா?
கனிமொழி!
கசியும் காரணங்கள்...
இதற்குக் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏற்கெனவே ஜாமீன் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவித்து உள்ளார் நீதிபதி. அந்த முடிவே கனிமொழி விவகாரத்துக்கும் பொருந்தும் என்பதுதான்
சி.பி.ஐ. கோர்ட்டின் முடிவு. ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு மறுநாள் தீர்ப்பு கொடுக்கும்போது, ஏற்கெனவே வந்த வதந்திகள் உண்மையாகும் என்கிற நிலைமை உறுதியாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல்தான், சிறப்பு நீதிமன்றம் விவகாரத்தை ஒத்திப் போட்டுள்ளது. இதனால், கனிமொழியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவது உறுதி என்றே தெரிகிறது.இன்னொரு முக்கிய விஷயம், குற்றம் சாட்டப்பட்டவர் தமிழகத்தின் முக்கியக் கட்சி சம்பந்தப்பட்டவர். அவர் கைது செய்யப்படும்போது, சில விஷமிகள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். மேலும், தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்காத சூழ்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு மறுநாள் சட்டம்-ஒழுங்குக்கு சிக்கல் வந்தால், கேட்பார் யாரும் இல்லை. இதை எல்லாம் நீதிமன்றம் கவனத்தில்கொண்டது என்றே கூறப்படுகிறது!
மற்ற குற்றவாளிகளின் வழக்கறிஞர்களைவிட, ராம்ஜெத்மலானியின் வாதங்கள் நன்றாக இருந்தன. 'அவர் ஒரு பெண், நாடாளுமன்ற
உறுப்பினர்’போன்ற அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் நன்றாக ஆய்வு செய்து முடிவு எடுக்கவே, இந்த விவகாரம் மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது!டோனி ஜோசுதாஸ்...
ஏ.டி.ஏ.ஜி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு நெருக்கமானவரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெல்லி விவகாரங்களைக் கவனிப்பவருமான டோனி ஜோசுதாஸ், இப்போது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு ரெகுலராக வந்து போகிறார். கைதுசெய்யப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்களுக்காக அவர் வருவதாகச் சொல்கிறார்கள்.
2ஜி வாகனம்...
காலை 8.30 மணிக்கு திகார் ஜெயிலில் இருந்து புறப்படும் '2ஜி ஸ்பெக்ட்ரம்’ வாகனம் ஒன்று, 9.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. ஆ.ராசா உட்பட 12 பேரை ஏற்றி வருகிறது அது. 20 கி.மீ தூரத்தில் இருந்து வரும் வாகனம், மாலை 4.30-க்கு மீண்டும் திகார் ஜெயிலுக்குப் புறப்படும். நீதிமன்றத்துக்கு தினமும் வரும் 2ஜி புள்ளிகளுக்கு மதிய உணவு, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்பில்தான் வழங்கப்படுகிறது. தற்போது 2ஜி ஊழல் சம்பந்தப்பட்டவர்களிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றப் பத்திரிகை நகலை சரிபார்க்க சிறப்பு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால், இந்தக் குற்றவாளிகளில் ஒரு சிலர்தான் நகல்களைப் படிக்கின்றனர். கனிமொழியும் அவர் கணவர் அரவிந்தனும் ஆ.ராசாவோடு சேர்ந்து அமர்கின்றனர். இந்த சமயத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஆ.ராசாவின் மனைவி திடீரென
நீதிமன்றத்துக்கு வர... அவருக்கு இடம் கொடுத்து உட்காரவைத்தார் கனிமொழி. அப்போது தன் மகளை மடியில் உட்காரவைத்துக்கொண்டு, ஒரு பாசத் தந்தையாகக் காட்சியளித்தார் ஆ.ராசா.'நோ டென்ஷன்’ பேஸ்புக்!
அரவிந்தனும், கனிமொழியும் டெல்லி சம்பந்தப்பட்ட பிக்சர் டிக்ஷனரியோடு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் உட்கார்ந்து இருக்கும்போது, இதைப் புரட்டிப் படிக்கின்றனர். அதில் இருக்கும் வெவ்வேறு தாவரங்களைப்பற்றி கணவரும் மனைவியும் பேசிக்கொள்கின்றனர். கலைஞர் டி.வி. சரத்குமார் வசம் ஒரு பிளாக்பெர்ரியும் ஒரு ஆப்பிள் ஹேண்ட் செட்டும் இருக்கிறது. அதில் ஃபேஸ்புக்கில் மேய்கிறார். கருணாநிதியுடன் கனிமொழி இருக்கும் ஒரு கலைநுணுக்கமான படத்தை ஃபேஸ்புக்கில் யாரோ பேஸ்ட் செய்து இருக்க... அதை கனிமொழிக்குக் காட்டினார் சரத்குமார். இந்த மாதிரியான விஷயங்கள், அவர்களை டென்ஷன் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது!
கனிமொழி சென்டிமென்ட்!
கனிமொழிக்கும் சில சென்டிமென்ட்கள்... நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நம்பர் 11 சௌத் அவென்யூ வீடு கனிமொழிக்கு ஒதுக்கப்பட்டது. 'இந்த வீட்டுக்கு வந்தது முதல் ராசி சரியில்லை’ என்பது கனிக்கு ஏற்பட்ட அனுபவம். இதையட்டி, மாதவ் சாலையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஸ்வர்ண ஜெயந்தி அபார்ட்மென்ட்டில் வீடு பார்த்தார். இந்த 601-ம் எண் வீட்டைப் புதுப்பிக்கும் பணி கடந்த பல வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்தப் பணி முற்றுப் பெற்று... இப்போது கனிமொழியும் அங்கே இடம் பெயர்ந்துள்ளார். இந்த வீட்டின் ராசி, வருகிற 20-ம் தேதி தெரியும்!
- சரோஜ் கண்பத்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment