கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை!
'ராஜினாமா' ராம.நாராயணன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததுமே, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
சங்கத்திலும் மாற்றங்கள். ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் ஆகியோர், தலைவர், செயலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய... புதிய தலைவராகி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
இது குறித்து டென்ஷனாகும் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார்,''தலைவர், செயலர் பதவியில் இருந்து விலகிய ராம.நாராயணனும், சிவசக்தி பாண்டியனும் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பதவியில் இருந்து இன்னமும் விலகவில்லை. இருவரும் ஒண்ணாம் நம்பர் ஊழல் பேர்வழிகள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு முதலில்
5 லட்சம் கேட்டார்கள். அதன் பிறகு,
1 லட்சம் கட்டினால் போதும்... ஏற்கெனவே கட்டியவர்களுக்கு
4 லட்சத்தைத் திருப்பித்
தரப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், இதுவரை ஒருவருக்குக்கூட கொடுக்கவில்லை. அந்தப் பணம் எங்கே போனது?
'பருத்தி வீரன்’ தயாரிப்பாளருக்குத் தர வேண்டிய
9 லட்சத்தைத் தராமல் ராம.நாராயணன் ஏமாற்றியது ஏன்? வீடு கட்டுவதற்கு உறுப்பினர்களிடம் ஆளுக்கு
2,000 வசூல் செய்த பணத்துக்கு ரசீது எங்கே? புதுப் படங்களை கலைஞர் டி.வி-க்கு விற்றுத்தருவதாகச் சொல்லி, கோடி கோடியாக வாங்கிய கமிஷன் தொகை எங்கே போனது?
ஒரு சங்கத்தில் தலைவர், செயலர் பதவி விலகினால், ஒட்டுமொத்தக் குழுவையே மாற்ற வேண்டும். ராம.நாராயணன் தலைவராக இருந்தபோது, அவருக்குக் கீழ், துணைத் தலைவராக இருந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகரன். ராம.நாராயணன், பாண்டியன் தவறுகள் செய்தபோது, எதிர்த்துக் கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்த்தவர், சந்திரசேகரன். பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. அதன் பிறகு நடக்கும் தேர்தலில் முறைப்படி போட்டியிட்டு எஸ்.ஏ.சி. தலைவர் பதவியில் அமரட்டும்... வரவேற்கிறேன். சனிக்கிழமை இரவு அவர் பதவி ஏற்றபோது, 'என் மகனை முழுநேர அரசியல்வாதி ஆக்கப்போகிறேன்...’ என்றார். அவரது ஆசையைத் தீர்த்துக்கொள்ள, நாங்கள்தானா கிடைத்தோம்?' என்று கொந்தளித்தார்.
கேயார் புகார் குறித்து ராம.நாராயணனிடம் கேட்டோம், ''முதலில் தாராளமாகப் பணம் செலவு செய்யும் தயாரிப்பாளர்கள், கடைசியில் லேப் பணம் கட்டக்கூட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் அதனால், தயாரிப்பாளர்கள் உறுப்பினராக,
5 லட்சம் கட்ட வேண்டும் என்பது கமிட்டியில் எடுத்த முடிவு. படத்தை ரிலீஸ் செய்யச் சிரமப்படும் எத்தனையோ பேருக்கு, அந்த
4 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து இருக்கிறோம். 'பருத்தி வீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நான் பணமே தர வேண்டியது இல்லை. வீடு கட்டுவதற்கு வாங்கிய
2,000 சங்கத்தில்தான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இப்போதும், எடுத்து முடித்த படங்களை விற்க
முடியாமல், எத்தனையோ தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். அவர்களிடம் கலைஞர் டி.வி-க்கு விற்றுத் தருவதாகச் சொல்லி, நான் பணம் சம்பாதித்தேன் என்று குற்றம் சுமத்துவது அபாண்டம். புதிதாக தலைவர் பொறுப்பு ஏற்று இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் என்னுடன்தான் துணைத் தலைவராக இருந்தார். எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்துதான் பார்த்தார். அதனால், அவரிடமே குற்றச்சாட்டுகளைக் கேளுங்கள்... உண்மைகள் புரியும். கோடம்பாக்கத்தில் என்னைப்பற்றியும், கேயார்பற்றியும் விசாரித்துப் பாருங்கள். யார் யோக்கியமானவர் என்பது ஊருக்கே தெரியும்!'' என்கிறார்.
சங்கத்தின் புதிய தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரன், ''சங்கத்தின் தலைவர் ராஜினாமா செய்யும்பட்சத்தில், அவருக்கு அடுத்த பதவியில் இருக்கும் துணைத் தலைவர், புதிய தலைவராகப் பதவி ஏற்கலாம் என்று கவுன்சிலின் சட்டம் சொல்கிறது. அதனால், செயற்குழு கூடி, என்னைத் தலைவராகத் தேர்வு செய்தது. பதவி ஏற்ற 25 நாட்களில் பொதுக் குழுவைக் கூட்டி, மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன். அப்போது வேண்டுமானால், என் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கேயார் கொண்டுவரட்டும். அதுவரை சங்கத்து விஷயங்களை, வெளியில் பேச வேண்டாம். இப்போது இவ்வளவு வீரமாகப் பேசுபவர், தி.மு.க. ஆட்சியின்போது, நடந்த கொடுமைகளை எல்லாம் கைகட்டி வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்தார்? விஜய்க்கும் கவுன்சிலுக்கும் சம்பந்தமே இல்லை. தேவை இல்லாமல் முடிச்சுப் போட வேண்டாம். இதுவரை கவுன்சிலில் அரசியல் ஆதிக்கம் இருந்தது. ஆனால், இனிமேல் கவுன்சிலுக்குள் அரசியலை நுழைய விட மாட்டேன்!'' என்றார்.
நல்லாத்தான் சண்டை போடுறாங்க!
- எம்.குணா
இது குறித்து டென்ஷனாகும் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார்,''தலைவர், செயலர் பதவியில் இருந்து விலகிய ராம.நாராயணனும், சிவசக்தி பாண்டியனும் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பதவியில் இருந்து இன்னமும் விலகவில்லை. இருவரும் ஒண்ணாம் நம்பர் ஊழல் பேர்வழிகள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு முதலில்
தரப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், இதுவரை ஒருவருக்குக்கூட கொடுக்கவில்லை. அந்தப் பணம் எங்கே போனது?'பருத்தி வீரன்’ தயாரிப்பாளருக்குத் தர வேண்டிய
ஒரு சங்கத்தில் தலைவர், செயலர் பதவி விலகினால், ஒட்டுமொத்தக் குழுவையே மாற்ற வேண்டும். ராம.நாராயணன் தலைவராக இருந்தபோது, அவருக்குக் கீழ், துணைத் தலைவராக இருந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகரன். ராம.நாராயணன், பாண்டியன் தவறுகள் செய்தபோது, எதிர்த்துக் கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்த்தவர், சந்திரசேகரன். பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. அதன் பிறகு நடக்கும் தேர்தலில் முறைப்படி போட்டியிட்டு எஸ்.ஏ.சி. தலைவர் பதவியில் அமரட்டும்... வரவேற்கிறேன். சனிக்கிழமை இரவு அவர் பதவி ஏற்றபோது, 'என் மகனை முழுநேர அரசியல்வாதி ஆக்கப்போகிறேன்...’ என்றார். அவரது ஆசையைத் தீர்த்துக்கொள்ள, நாங்கள்தானா கிடைத்தோம்?' என்று கொந்தளித்தார்.
கேயார் புகார் குறித்து ராம.நாராயணனிடம் கேட்டோம், ''முதலில் தாராளமாகப் பணம் செலவு செய்யும் தயாரிப்பாளர்கள், கடைசியில் லேப் பணம் கட்டக்கூட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் அதனால், தயாரிப்பாளர்கள் உறுப்பினராக,
முடியாமல், எத்தனையோ தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். அவர்களிடம் கலைஞர் டி.வி-க்கு விற்றுத் தருவதாகச் சொல்லி, நான் பணம் சம்பாதித்தேன் என்று குற்றம் சுமத்துவது அபாண்டம். புதிதாக தலைவர் பொறுப்பு ஏற்று இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் என்னுடன்தான் துணைத் தலைவராக இருந்தார். எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்துதான் பார்த்தார். அதனால், அவரிடமே குற்றச்சாட்டுகளைக் கேளுங்கள்... உண்மைகள் புரியும். கோடம்பாக்கத்தில் என்னைப்பற்றியும், கேயார்பற்றியும் விசாரித்துப் பாருங்கள். யார் யோக்கியமானவர் என்பது ஊருக்கே தெரியும்!'' என்கிறார்.சங்கத்தின் புதிய தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரன், ''சங்கத்தின் தலைவர் ராஜினாமா செய்யும்பட்சத்தில், அவருக்கு அடுத்த பதவியில் இருக்கும் துணைத் தலைவர், புதிய தலைவராகப் பதவி ஏற்கலாம் என்று கவுன்சிலின் சட்டம் சொல்கிறது. அதனால், செயற்குழு கூடி, என்னைத் தலைவராகத் தேர்வு செய்தது. பதவி ஏற்ற 25 நாட்களில் பொதுக் குழுவைக் கூட்டி, மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன். அப்போது வேண்டுமானால், என் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கேயார் கொண்டுவரட்டும். அதுவரை சங்கத்து விஷயங்களை, வெளியில் பேச வேண்டாம். இப்போது இவ்வளவு வீரமாகப் பேசுபவர், தி.மு.க. ஆட்சியின்போது, நடந்த கொடுமைகளை எல்லாம் கைகட்டி வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்தார்? விஜய்க்கும் கவுன்சிலுக்கும் சம்பந்தமே இல்லை. தேவை இல்லாமல் முடிச்சுப் போட வேண்டாம். இதுவரை கவுன்சிலில் அரசியல் ஆதிக்கம் இருந்தது. ஆனால், இனிமேல் கவுன்சிலுக்குள் அரசியலை நுழைய விட மாட்டேன்!'' என்றார்.
நல்லாத்தான் சண்டை போடுறாங்க!
- எம்.குணா
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment