| 2ஜி... ரத்தன் டாடாவின் கோபமும் நீராவுடனான உரையாடல் பதிவும்! (ஆடியோவுடன்) |
| நவ.27,2010 மத்திய அமைச்சருக்கு 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க விரும்பாததால், இந்தியாவில் விமான சேவை நிறுவனத்தை தொடங்கவில்லை என்று பழைய நிகழ்வை அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் சுட்டிக்காட்டினார் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா. ஊழலுக்கு எதிராக ஓர் அனுபவ உதாரணத்தைச் சொல்லி, செய்தி சேனல்களை பரபரப்பாக்கிய சூழலில், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான 'டேப்' விவரங்களில், ரத்தன் - நீரா ராடியா இடையிலான உரையாடல் பதிவுகளும் அவுட்லுக் இதழ் மூலம் வெளியானது. ஒரு வார காலம் அதற்கு பதிலளிக்காத ரத்தன் டாடா, என்.டி.டி.வி.-க்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில், "ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்பது என்ன? அது சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 2ஜி ஸ்பெக்டரத்தை முறைகேடாக சுருட்டிக்கொண்ட மிகப் பெரிய ஊழல். ஆனால் ராடியா நடத்திய உரையாடல்களைக் கொண்டு ஒரு புகைத் திரையை மீடியாக்களைக் கொண்டு உருவாக்குகிறார்கள். ஆனால், உண்மையான ஊழல் இந்தத் திரைக்குப் பின்னால் உள்ளது," என்று காட்டமாகக் கூறியுள்ளார். ![]() அதை விட்டுவிட்டு யார் மீது வேண்டுமானாலும் யாரும் குற்றம்சாட்டாலாம் என்ற நிலை மோசமானது. கேரக்டர் அசாசினேஷனை ஏற்க முடியாது. நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை அவர் இந்தியாவின் சட்டங்களின்படி நிரபராதியே," என்றும் கூறினார். ரத்தன் டாடா கூறியுள்ளார். * அவுட்லுக் இதழ் வெளியிட்ட அந்த டேப் விவரங்களில், நீரா ராடியா - ரத்தன் டாடா இடையே நடந்தது என முன்வைக்கப்படும் உரையாடலின் சில பகுதிகளின் ஆடியோ வடிவமும், அதன் தமிழ் எழுத்து வடிவமும் இதோ... (டேப் விவரங்களின் படி, இந்த உரையாடல்கள் ஜூன் 11,2009 - நேரம் 15:57:59 மற்றும் ஜூலை 07,2009 - நேரம் 20:29:07 ஆகிய இரண்டு முறை பதிவானவை) ஆடியோ : எழுத்து வடிவம்... நீரா : அண்மைய வதந்தி என்னவென்றால், அவருக்கும் கனிமொழிக்கும் இடையே பழக்கம் இருப்பதே... ஆனால் அது உண்மை இல்லை. ர.டாடா : யார்? நீரா : அவருக்கும் கனிமொழிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது அவரது அண்மைய விஷயம். ர.டாடா : யாருடைய அண்மைய விஷயம்? நீரா : டெல்லியின் புதிய வதந்தி. ர.டாடா : ஓஹ்.. அப்படியா. நீரா : ராசாவுக்கும் கனிமொழிக்கும் இடையே பழக்கம் இருக்கிறது என்பது உண்மை இல்லை. ர.டாடா : சரி, ஆனால் பரப்புவது யார்? நீரா : வேறு யார்.. மாறன், ஆனால்... ராசாவும் தான் காரணம். ஊடகமோ அல்லது வேறு யாராவதோ அவரை சந்திக்கும்போதேல்லாம், கனிமொழிக்காக சாஃப்ட் கார்னர் இருப்பதாக அவர் எப்போதும் கூறி வருகிறார்.. அவரைப் பற்றி பேசும்போதேல்லாம் வெட்கத்தில் அவர் முகமும் சிவக்கிறது... ர.டா: (சிரிக்கிறார்) நீரா : .... அவர் (ராசா) மீது அவருக்கு (கனிமொழி) துளியும் ஆர்வம் இல்லை. இருவரையும் இணைத்து வதந்தி கிளப்பப்படுகிறது. ர.டா : (சிரிக்கிறார்) நீரா : 'இந்த அனைத்து வதந்திகளுக்கும் நான் என்ன செய்வது?' என்று அவர் இன்று என்னிடம் சொன்னார். நானோ, 'கனிமொழிக்காக சாஃப்ட் கார்னர் இருப்பதாக ஆட்களிடம் சொல்லாதீர்கள். நீங்கள் தான் அவரைக் காக்க வேண்டும்,' என்று அவரிடம் சொன்னேன். 'உங்களுக்கு தெரியுமா, உங்களுக்கு வெட்கத்தில் முகம் சிவக்கிறது,' என்றேன். 'நான் வெட்கப்படுகிறேன் என்று நீங்கள் சொல்ல முடியாது," என்றார் அவர். அதற்கு, "மன்னியுங்கள், உங்கள் கண்களைப் பாருங்கள்," என்று நான் சொன்னேன். எதுவாயினும், அவர் மீது ஒரு பிடிப்பு இருக்கிறது என்ற உண்மையை அவரால் மறைக்க முடியாது. அப்புறம், 'இந்த மனிதரிடம் இருந்து கடவுள் தான் என்னை விலக்கி இருக்க வைக்க வேண்டும், நீரா' என்கிறார் கனி. இதெல்லாம் வாழ்க்கையின் இலகுவான தருணங்கள். ர.டாடா : ஓகே... ******** நீரா ராடியா : அப்புறம், இன்னும் மிடில் ஈஸ்டில் தான் இருக்கிறீர்களா? ரத்தன் டாடா : ஆம், இன்னும் இஸ்ரேலில் தான் இருக்கிறேன். நீரா: பட்ஜெட் பரவாயில்லை. ஊரக வளர்ச்சி... ர.டாடா : ஆம். என்னுடைய கவலையெல்லாம் ராசா இடத்துக்காக மாறன் சண்டையிடுவார் என்பது மட்டுமே. ராசா தடுமாறி விழமாட்டார் என நம்புகிறேன். நீரா : இல்லை. அவருக்கு அப்படி நேராது. ஏனென்றால், எந்த அமைச்சரும் ஐகோர்ட் நீதிபதியை மிரட்டவில்லை என்று தலைமை நீதிபதியே அறிக்கை வெளியிட்டுவிட்டார். ர.டாடா : ஓ, அப்படியா? நீரா : இந்திய தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகவே, அது விளக்கப்பட்டுவிட்டது. மேலும், அப்படி நடக்கவில்லை. ர.டாடா : சரி. நீரா: அப்புறம், எதாவது ஒரு சூழலில் அப்படியாகிவிட்டால், கனிமொழியைத் தான் அந்த இடத்துக்கு கொண்டு வருவார்களே தவிர, மாறனை அல்ல. ர.டாடா : சரி. நீரா : இரண்டாவது சுற்று தொலைத்தொடர்பு யுத்தம் தொடங்கிவிட்டது. மேலும் எவ்வளவு யுத்தம் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ர.டாடா : ராசாவுக்காக நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள், அப்படி இருந்தும் அவர் இப்படி விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீரா : கனியிடம் நான் விவரித்தேன். நேற்று மாலை வீடு திரும்பும்போது, அவரைச் சந்தித்தேன். கனி, இது தான் நடக்கிறது என்று அவரிடம் சொன்னேன். நான் அவரை அழைத்து பேசுகிறேன் என்று கனி சொன்னார். 'சொல்லுங்கள் நீரா, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக என்னால் எப்படி செயல்பட முடியும்,' என்று அவர் (ராசா) என்னிடம் சொன்னார். நானோ, 'ஹலோ மிஸ்டர் ராசா, நீங்கள் கோர்ட்டுக்கு எதிராக நடக்க முடியும். கோர்ட் என்ன சொல்லியதோ அதன்படி நீங்கள் நடக்க வேண்டியதில்லை, ஏனென்றால்... 4.4 (மெகாஹெர்ட்ஸ்) என்பதே உரிமத்தின் பெயர்.. நீதான் பொருள் விளக்க வேண்டும்,' என்றேன். ஆகவே, சின்ன விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது. ர.டாடா : ஆனால் புதிய அட்டார்னி ஜெனரல் உடன்.. அவர் யாராக இருந்தாலும்... நீரா : இல்லை, ரத்தன், அது நல்ல விஷயம். நான் ஏன் சொல்கிறேன் என்றால் - அவரால் மட்டுமே அரசியலமைப்பு விஷயத்தை கையாள முடியும். சொலிசிட்டர் ஜெனரல் ஒரு ஜென்டில் மேன் கோபால் சுப்ரமணியம். அவர் தான் பொருள் விளக்கம் தரும் விஷயங்களை பார்த்து வருகிறார். அவரை நான் பார்க்கப் போகிறேன். அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். 5.30 - 6க்கு வீட்டில் இருக்கும்போதோ, ஃப்ரீயாக இருக்கும் போதோ அழைக்கிறேன் என்று அவர் சொன்னார். ஆகவே, அவரிடம் விளக்குகிறேன்... உண்மையில், அவர்களை (அனில் அம்பானி குழுமம்) அவர் வெறுக்கிறார். அவர்கள் சொல்வதை அவர் ஏற்பாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அவர் நேர்மையான நபர்... அட்டார்னி ஜெனரலை நுழைக்க ராசா முயற்சிப்பார் என்று நினைக்கிறேன். மத்திய அமைச்சர்கள் குழு தேவையில்லை; அமைச்சரைக் குறிப்பில் வைக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக 3ஜி பற்றி பிரதமரிடம் நேற்று அவர் விளக்கினார்... எல்லா நாடகங்களையும் அவர்கள் நடத்துவார்கள், ஆனால் அடுத்த ஆண்டு மார்ச்சிக்கு முன்பு வரை 3ஜி ஏலம் நடக்காது என்றே நம்புகிறேன். அதற்கு அவர்கள் அவசரப்பட மாட்டார்கள். ர.டாடா : அப்படியா.. ****** Source - Vikatan Magazine |
Tuesday, May 31, 2011
2ஜி... ரத்தன் டாடாவின் கோபமும் நீராவுடனான உரையாடல் பதிவும்! (ஆடியோவுடன்)
Labels:
2ஜி ஸ்பெக்ட்ரம்(ஆடியோவுடன்)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment