Monday, May 30, 2011

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் கருணாநிதி - சென்னை, மே 30,2011


எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் கருணாநிதி
சென்னை, மே 30,2011
திமுக தலைவர் கருணாநிதி இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.
தமிழக சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 229 பேர் கடந்த 2-ம் தேதி பதவி ஏற்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியும், துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லி சென்றதால் பதவி ஏற்கவில்லை.
இந்த நிலையில், இருவரும் பதவியேற்பதற்காக, இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சபாநாயகர் அறைக்கு சென்றனர்.
அங்கு கருணாநிதிக்கும், துரைமுருகனுக்கும் சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தி.மு.க. நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடர்ந்து 12-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment