Monday, May 30, 2011

ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி!


ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூர், மே 28,2011
சிறுநீரக பாதிப்புக்கு நவீன டயாலிஸிஸ் சிகிச்சை பெறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவ மையத்தில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்டோருடன் சிங்கப்பூர் வந்தார்.
தற்போது அவர், ஆசியாவின் மிகச் சிறந்த மருத்துமனைகளில் ஒன்றாக கருதப்படும் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அம்மருத்துவமனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
நோயாளிகள் தங்களது பிரைவசி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முழுமையாக வேண்டுகோள் விடுக்கும்பட்சத்தில், அவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவது வழக்கம் இல்லை என்று அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 2009-ல் அரசியல் தலைவர் அமர் சிங்குக்கு இங்கு தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு ரஜினி பேசி பதிவு செய்த சிறிய உரையை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெளியிட்டார்.
அதில், "என் மேல நீங்க இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க, உங்களுக்கு நான் திரும்ப என்ன செய்யப்போறேன்? எனக்கு கடவுள் அருள் இருக்கு, நான் இப்ப ஜாலியா கிளம்புறேன், சீக்கிரமே திரும்பி வருவேன்," என்று தனது செய்தியை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பதிந்தது குறிப்பிடத்தக்கது.


Source - Vikatan Magazine

No comments:

Post a Comment